Home Top Ad

திராட்சையை கருப்பு, சிவப்பு மற்றும் பச்சை நிறம் போன்ற நிறங்களின் அடிப்படையில் 3 வகைகள் உள்ளது. இந்த மூன்று வகை திராட்சைகளிலுமே நம் ஆரோக்கிய...

ஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்

திராட்சையை கருப்பு, சிவப்பு மற்றும் பச்சை நிறம் போன்ற நிறங்களின் அடிப்படையில் 3 வகைகள் உள்ளது. இந்த மூன்று வகை திராட்சைகளிலுமே நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்கள் நிறைந்துள்ளது.

அதிலும் கருப்பு நிற திராட்சையை அன்றாடம் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
கருப்பு திராட்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

    கருப்பு திராட்சையில் உள்ள பாலிஃபீனால்கள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அல்சைமர் நோய் வராமல் தடுக்கிறது.

    மார்பக புற்றுநோய் மற்றும் இதர வகை புற்றுநோய்களையும் எதிர்த்து போராடி புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.

    செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வயிற்றில் ஏற்படும் எரிச்சல், வயிற்று உப்புசம், அஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

    கருப்பு திராட்சை யூரிக் அமில அளவைக் குறைத்து, சிறுநீரகங்களில் கொடுக்கப்படும் அழுத்தத்தில் இருந்து விடுவித்து, சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

    அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுத்து, கழிவுகள் எளிதில் உடலில் இருந்து வெளியேற உதவுகிறது.

    ஒற்றைத் தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் பெற, கருப்பு திராட்சையைக் கொண்டு ஜூஸ் தயாரித்து, காலையில் குடிக்க வேண்டும்.

    தினமும் ஒரு டம்ளர் கருப்பு திராட்சை ஜூஸ் அல்லது ஒரு கையளவு கருப்பு திராட்சையை சாப்பிட்டு வந்தால், கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

    சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு கையளவு கருப்பு திராட்சையை சாப்பிட்டு வந்தால், அது ரத்த சர்க்கரை அளவைக் குறைத்து, சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும்.

    ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைத்து, கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டுடனும், சீராகவும் வைத்துக் கொள்ளும்.

    சரும செல்களை ஆரோக்கியமாக பாதுகாத்து, முதுமைத் தோற்றம், வறட்சியான சருமம் வறண்டு, மென்மையிழந்து அசிங்கமாக இருக்கும் தோற்றம் ஆகிய பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

    கருப்பு திராட்சை விதைகளை அரைத்து, அதனை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் அலச வேண்டும். இதனால் முடி உதிர்வு, பொடுகு பிரச்சனை ஏற்படாது.

0 coment�rios: