Home Top Ad

வாழைப்பழ தோல் நமது சரும பிரச்சினைகள், காயங்கள், பூச்சிக்கடிகள் மற்றும் மன நோய் போன்ற இன்னும் பல பிரச்சினைகளை போக்க உதவுகிறது. வாழைப்பழ தோ...

பூச்சி கடிக்கு உடனடி ரிசல்ட் கிடைத்திடும்! வாழைப்பழ தோலை இப்படி தேய்க்கவும்?

வாழைப்பழ தோல் நமது சரும பிரச்சினைகள், காயங்கள், பூச்சிக்கடிகள் மற்றும் மன நோய் போன்ற இன்னும் பல பிரச்சினைகளை போக்க உதவுகிறது.

வாழைப்பழ தோலின் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்தும் படியுங்கள்..

பூச்சி கடிகள்

வாழைப்பழத்தில் உள்ள மருத்துவ தன்மையானது பூச்சிக்கடிகளுக்கு மருந்தாகிறது.

உங்களை மூட்டை பூச்சிகள் போன்ற பூச்சிகள் கடித்துவிட்டால் அந்த இடத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவை உண்டாகும்.

இதற்கு வாழைப்பழத்தின் தோலை வைத்து அந்த இடத்தில் நன்றாக தேய்க்க வேண்டும். இதனால் அரிப்பு, எரிச்சல் போன்றவை குணமாகும்.
பற்களை வெண்மையாக்க

மற்றவர்கள் அசந்து போகும் அளவிற்கு வெண்மையான பற்கள் வேண்டுமா? அப்படி என்றால் நீங்கள் வாழைப்பழ தோலை பயன்படுத்துவது தான் சிறந்த வழியாகும்.

உங்களது பற்களில் வாழைப்பழ தோலை வைத்து தேய்ப்பதால் உங்களது பற்கள் வெண்மையாகும்.

இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உங்களது பற்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல பலன் கொடுக்கும்.

வறண்ட சருமம்

உங்களது சருமத்தில் வறண்ட பகுதிகள் இருந்தால், அந்த இடத்தில் வாழைப்பழத்தின் தோலை வைத்து நன்றாக தேய்க்க வேண்டும்.

இதனை தினமும் அல்லது வார இறுதி நாட்களில் செய்வதினால் வறண்ட சருமம் மறையும்.
மன அழுத்தம்

உங்களுக்கு இது விசித்திரமானதாக இருக்கலாம். ஆனால் இது நிரூபிக்கப்பட்ட ஒரு முறையாகும்.

நீங்கள் வாழைப்பழத்தின் தோலை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வந்தால் உங்களது மன அழுத்த பிரச்சினை தீரும்.

அல்லது வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஜூஸை பருகினாலும் மன அழுத்தம் தீரும்.
மருக்கள்

மருக்கள் நமக்கு எத்தனை பாதிப்புகளை உண்டாக்க கூடியது என்பது நமக்கு தெரியும். நமது தோற்றத்தையும் கெடுக்கும் தன்மை கொண்டதாகும்.

மருக்கள் உள்ள இடத்தில் வாழைப்பழத்தை வைத்து நன்றாக தேய்க்க வேண்டும்.

இந்த வாழைப்பழமானது உங்களது மருவின் மீது ஒரு மாயம் செய்யும். இது மருக்கள் ஒரு இடத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரவாமல் தடுக்கும்.

0 coment�rios: