Home Top Ad

துளசி மல்லி கஷாயம்  துளசி - 2 கைப்பிடி, சுக்கு - 1 துண்டு, வெள்ளை மிளகு - 20, ஏலக்காய் - 5, தனியா - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த...

துளசி மல்லி கஷாயம்




துளசி மல்லி கஷாயம்

 துளசி - 2 கைப்பிடி,

சுக்கு - 1 துண்டு,

வெள்ளை மிளகு - 20,

ஏலக்காய் - 5,

தனியா - 2 டேபிள்ஸ்பூன்,

காய்ந்த திராட்சை - 20, பனங்கல்கண்டு

 அல்லது பனைவெல்லம் - தேவைக்கேற்ப.


சுக்கு, வெள்ளை மிளகு, தனியாவை ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். அத்துடன் துளசியும் காய்ந்த திராட்சையும் சேர்த்து, 3 டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். அது பாதியாக சுண்டியதும், வடிகட்டி, பனங்கல்கண்டோ, பனைவெல்லமோ சேர்த்துப் பரிமாறவும்.

பொதுவாக தூதுவளைதான் கபம் போக்கும். வெயில் காலத்தில் தூதுவளையின் சூட்டைத் தவிர்க்கவே இங்கே துளசி சேர்த்திருக்கிறோம். உணவின் மூலம் ஏற்படும் மந்தம் நீக்கி, தொற்று வராமல் காக்கும் கஷாயம் இது. மாலை 6 முதல் 9 மணிக்குள் குடிக்கலாம். சளி பிடிக்காமல் தடுக்கும்.

0 coment�rios: