Home Top Ad

ஹெல்மெட் போடாமலோ அல்லது கைவசம் லைசென்ஸ் இல்லாமல் அல்லது குடித்து விட்டு வாகனங்களை ஓட்டி  டிராஃபிக் விதிகளை மீறுபவர்களிடம், டிராஃபிக் போலீசா...

டிராஃபிக் விதிகளை மீறுபவர்களுக்கு பணமில்லா முறையில் அபராதம்! – சென்னையில் அறிமுகம்

ஹெல்மெட் போடாமலோ அல்லது கைவசம் லைசென்ஸ் இல்லாமல் அல்லது குடித்து விட்டு வாகனங்களை ஓட்டி  டிராஃபிக் விதிகளை மீறுபவர்களிடம், டிராஃபிக் போலீசார் லஞ்சம் வசூலிப்பதாகவும், அதேபோல் சாலை விதிகளை மீறுபவர்களும் தங்கள் குற்றங்களிலிருந்து தப்பிக்க லஞ்சம் கொடுப்பதாகவும், அதிக அளவில் புகார்கள் வந்தன.  இதையடுத்து, இதை தடுக்கும் விதமாக,  மின்னணு முறையில் -அதாவது பணமில்லா அபராதம்   அபராதம் செலுத்தும் வசதியை சென்னை மாநகர போலீஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப வாகன ஓட்டிகள் நேரடி அபராத தொகையை டிஜிட்டல் கட்டண முறைகளில் செலுத்த ஏதுவாகவும் பணமில்லா அபராதம் செலுத்தும் முறையை கொண்டு வந்துள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களுக்கான நேரடி அபாராத தொகையை பெறும் முறையில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும், சென்னை மாநகரபோக்குவரத்து காவல் துறை, நேரடி பணமில்லா அபராதம் செலுத்து முறையை இன்று முதல் நடைமுறைப்படுத்தி உள்ளது.

போக்குவரத்து போலீசார், ஸ்பாட் ஃபைன் பொதுமக்களிடம் வாங்குவதால் பல்வேறு மனக்கசப்புகள் ஏற்பட்டன.

போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் தேவையில்லாத வாக்குவாதம் வீண் பிரச்சனைகள் ஏற்பட்டன.

இதனால், ஸ்பாட் பைன் முறையை நிறுத்துவதாகவும், நேரடி பணமில்லா அபராதம் செலுத்து முறை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகையை, பணமில்லா அபராத தொகை மூலம் செலுத்துவதற்கு கிரெடிட் கார்ட் / டெபிட் கார்டு, பாரத ஸ்டேட் வங்கி ஆன்லைன் பணபரிவர்த்தனை, போஸ்ட் ஆபிஸ், இ-சேவை மையம், PAYTM இதுபோன்று பல்வேறு வகையில் பணம்செலுத்த வகை செலுத்தப்பட்டுள்ளது.

பணம்தான் கொடுக்க வேண்டும் என்றால் நீதிமன்றம் சென்று செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் போலீசாரிடம் பணம் கொடுக்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டும் வாகன விபத்தில் 1347 பேர் உயிரிழந்துள்ளனர். குடும்ப உறுப்பினரை இழந்து வாடும் நிலையை அறிந்த பின்னரே போக்குவரத்து காவல் துறை இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதாக போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் கூறினார்.

0 coment�rios:

நடிகர் ரஜினிகாந்த் இன்று நடந்த காலா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. அதில் பேசிய சூப்பர்ஸ்டார் மிக உருக்கமாக பேசினார். முதலில்...

ரசிகர்களுக்கு பொறுமை இல்லை, அரசியல் கிடையாது: ரஜினி பேச்சு

நடிகர் ரஜினிகாந்த் இன்று நடந்த காலா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. அதில் பேசிய சூப்பர்ஸ்டார் மிக உருக்கமாக பேசினார்.

முதலில் கபாலி படத்தின் ஸ்கிரிப்டை படித்துவிட்டு கதை மிக மெதுவாக நகர்வதாக எனக்கு தோன்றியது. ரஞ்சித்தை அழைத்து இது பற்றி பேசினேன். ரசிகர்களுக்கு இவ்வளவு பொறுமை கிடையாது, நான் கதை கேட்கும்போது ஒரு ரசிகன் என்ன எதிர்பார்ப்பான் என்ற கண்ணோட்டத்தில் தான் கேட்பேன்.

காலா படத்தை மும்பையில் உள்ள தாராவியில் தமிழர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுத்துள்ளோம். ரஞ்சித் 85 நாட்களில் படத்தை முடித்துவிட்டார்.. அடுத்த கே.எஸ்.ரவிக்குமார் அவர்தான் என நினைக்கிறேன்.

"காலாவில் அரசியல் இருக்கும்; ஆனால் காலா அரசியல் படம் கிடையாது" என சூப்பர்ஸ்டார் மேலும் கூறினார்.