“கிள்ளிக் கொடுக்க மாட்டான்... இவன் அள்ளி அள்ளிக் கொடுப்பான்” என்பது தமிழக மாஸ் ஹீரோக்களுக்கான டயலாக்தான். ஆனால், அதை டெலிகாம் நிறுவனங்களில் ஜியோவுக்கும் சொல்லலாம். மாதம் ஒரு ஆஃபர்; வாரம் ஒரு டிஸ்கவுன்ட் எனத் தள்ளுபடித் தள்ளுவண்டி நடத்தும் ஜியோவின் அடுத்த ஆஃபரின் பெயர், “ஹாலிடே ஹங்காமா.”
இப்போதிருக்கும் பிளான் இதுதான். 84 நாள்களுக்குத் தினமும் 1.5ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி கால்கள் உண்டு. இந்த பிளானில், இப்போது 100 ரூபாய் தள்ளுபடிதருகிறது ஜியோ. அப்படியென்றால், 84 நாள்களுக்கு தடையின்றி மொபைல், கால், டேட்டா பயன்படுத்த வெறும் 299 ரூபாய் மட்டுமே. ஒரு நாளைக்குக் கணக்கிட்டால் ரூபாய் 3.55 மட்டுமே.
இந்த ஆஃபரை My Jio app அல்லது Phonepay மூலம் ரீசார்ஜ் செய்யும்போது கிடைக்கும். உடனடித் தள்ளுபடியாக 50 ரூபாயும், ரீசார்ஜ் செய்தபின் கேஷ்பேக்காக 50 ரூபாயும் கிடைக்கும்.
குறைந்த கால ஆஃபரான ஹாலிடே ஹங்காமா, ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை மட்டுமே என இப்போது சொல்லியிருக்கிறது ஜியோ. அதன்பின், இதே ஆஃபர் நீட்டிக்கப்படலாம் அல்லது இதேபோல வேறு ஒரு ஆஃபர் வரலாம் என்கிறது, ஜியோவின் வரலாறு. இருந்தாலும், ரிஸ்க் எடுக்காமல் இப்போதே இந்த ஆஃபரைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது.

0 coment�rios: