Home Top Ad

கடிகார மனிதர்கள் தலைப்பை பார்த்ததும் புரிந்திருக்கும் படத்தின் கதை காலத்தின் பின்னால் ஓடும் ஏழை மனிதர்களை பற்றியது என்று. நடிகர் கிஷோர், ...

கடிகார மனிதர்கள் திரைவிமர்சனம் - அதிக பொறுமை இருப்பவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்

கடிகார மனிதர்கள் தலைப்பை பார்த்ததும் புரிந்திருக்கும் படத்தின் கதை காலத்தின் பின்னால் ஓடும் ஏழை மனிதர்களை பற்றியது என்று.

நடிகர் கிஷோர், கருணாகரன் மற்றும் லதா ராவ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வாடகை வீட்டில் உள்ளவர்கள் படும் இன்னல்களை காட்டியுள்ளது.

கதை:

வறுமை காரணமாக சென்னையை தேடி வருகிறது கிஷோர் மற்றும் லதா ராவ் குடும்பம். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். வண்டியில் வீட்டு சாமான்களை ஏற்றிக்கொண்டு புரோக்கர் உதவியுடன் தெருத்தெருவாக வீடு தேடுகின்றனர்.

5 பேர் கொண்ட குடும்பம் என்பதால் எந்த வீட்டு ஓனரும் இவர்களுக்கு வீடு தர முன்வரவில்லை. 3500 ரூபாய்க்கு மேல் இவராலும் வாடகை கொடுக்க முடியாது.பின்னர் இறுதியாக இவர்களுக்கு ஒருவர் மட்டும் வீடு தர முன்வருகிறார். ஆனால் 4 பேர் மட்டுமே இருக்க வேண்டும் என அவர் கூற புரோக்கர் இவருக்கு இரண்டு குழந்தைகள் மட்டும் தான் இருக்கிறார்கள் என பொய் கூறிவிடுகிறார்.

இந்த பொய்யை மறைக்க கிஷோர் அவரின் கடைசி பையனை ஒரு பெட்டியில் போட்டு தினமும் வீட்டுக்குள் கொண்டுவந்து மீண்டும் காலையில் அதே பெட்டியில் ஸ்கூலுக்கு கொண்டு சென்று விடுவார்.

அதே காம்பவுன்டுக்குள் குடிவரும் கருணாகரனுக்கும் ஹவுஸ் ஓனர் மகளுக்கும் காதல் - அது தனி ட்ராக்கில் செல்கிறது.

இப்படியே தொடரும் வாடகை வீடு வாழ்க்கையில் காலம் கடக்க கடக்க அவர்கள் சொன்ன பொய்யால் அதிக பிரச்சனைகள் வருகிறது.

அதையெல்லாம் எப்படி சமாளித்தார்கள், அவர்களால் சொந்த வீடு வாங்கமுடிந்ததா என்பது தான் மீதி கதை

க்ளாப்ஸ்:

வாடகை வீடு கஷ்டங்களையும், வீடு உரிமையாளர்களின் அராஜகத்தையும் வெட்ட வெளிச்சமாக காட்டியதற்கும், பொய் சொல்லாமல் பலருக்கும் வீடு கிடைக்காது என தற்போதைய சமூக பிரச்சனையை காட்டியதற்கும் அறிமுக இயக்குனர் வைகறை பாலன் அவர்களை பாராட்டலாம். கிஷோர், லதா ராவ் நடிப்பு பர்ப்பெக்ட். கருணாகரனின் காதல் சீன்களை சாம்.C.S மியூசிக் தூக்கி நிறுத்துகிறது.

பல்ப்ஸ்:

ஆனால் மெதுவாக செல்லும் திரைக்கதை பார்ப்பவர்களை கொஞ்சம் அதிகமே சோதிக்கிறது. ஒரு சைக்கிள் ரேசை எதோ F1 ரேஸ் அளவுக்கு பில்டப் கொடுத்ததெல்லாம் டூமச்.

மொத்தத்தில் கடிகார மனிதர்கள் எதார்த்த சினிமாவை ரசிப்பவர்கள், அதிக பொறுமை இருப்பவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.

0 coment�rios:

உலக சினிமாவில் மிகப்பெரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கார் விருதுகள் தான். இதை இந்தியாவில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் மட்டுமே இதுவரை வென்றுள்ளார். ...

ஆஸ்கார் விருதுகளில் சேர்க்கப்பட்டுள்ள புதிய விருது - கடும் விமர்சனம்!

உலக சினிமாவில் மிகப்பெரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கார் விருதுகள் தான். இதை இந்தியாவில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் மட்டுமே இதுவரை வென்றுள்ளார்.

இதுவரை இல்லாத அளவில் அடுத்த வருடம் நடக்கவுள்ள விருது விழாவில் பல்வேறு மாற்றங்கள் தற்போது கொண்டுவரவுள்ளன.

2020ல் பிப்ரவரி 9ம் தேதி விழா நடக்கும் எனவும், விழாவில் புதிதாக "Most Popular Film" என்ற விருது சேர்க்கப்பட்டுள்ளது எனவும் அறிவிப்பு வந்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் அதிகம் ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் 3 மணி நேரம் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பு தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதுவரை கொடுக்கப்பட்டு வரும் Best picture விருதை இந்த புதிய விருது குறைத்து மதிப்பிடும்படி புதிய விருது உள்ளது என பலரும் கூறி வருகின்றனர்.

0 coment�rios:

திமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருக்கும் ராஜாஜி அரங்கில் இருந்து மெரினா வரை லட்சக்கணக்கில் மக்கள் இருப்பது கூகுள் மூலம் தெரிய வந்...

ராஜாஜி அரங்கில் இருந்து மெரினா வரை... கூகுளின் மலைக்க வைக்கும் புகைப்படம்!

திமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருக்கும் ராஜாஜி அரங்கில் இருந்து மெரினா வரை லட்சக்கணக்கில் மக்கள் இருப்பது கூகுள் மூலம் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தின் முதுபெரும் அரசியல்வாதியான திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை இந்த உலகை விட்டு பிரிந்து சென்றார். திமுக தொண்டர்கள் இதனால் பெரிய சோகத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள்.

தமிழகம் முழுக்க இதற்காக துக்கம் அனுசரிக்கப்படுகிறது. தற்போது அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்து வருகிறது. காலையில் இருந்து வரிசையாக தலைவர்கள் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அங்கு லட்சக்கணக்கில் மக்கள் கூடி வருகிறார்கள். இதனால் அங்கு பெரிய அளவில் கூட்டம் நொடிக்கு நொடி அதிகரித்து வருகிறது. அண்ணாவிற்கு கூடிய கூட்டத்திற்கு நிகரான கூட்டம் தற்போது அங்கு கூடி வருகிறது.

திமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருக்கும் ராஜாஜி அரங்கில் இருந்து அடக்கம் நடைபெற இருக்கும் மெரினா வரை லட்சக்கணக்கில் மக்கள் இருப்பது கூகுள் மூலம் தெரிய வந்துள்ளது.

கூகுள் மேப்பின் இந்த புகைப்படத்தில், சிவப்பாக இருக்கும் பகுதியில் எல்லாமும் லட்சக்கணக்கில் மக்கள் இருக்கிறார்கள். ராஜாஜி ஹாலை சுற்றி உள்ள எல்லா இடத்திலும் மக்கள் இருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

அதேபோல், மைனஸ் கொடுக்கப்பட்டு இருக்கும், இடங்களில் எல்லாம் சாலைகள் அடைக்கப்பட்டு இருக்கிறது. ராஜாஜி ஹாலில் இருந்து மெரீனாவிற்கு ஒரு சாலையை தவிர மற்ற அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு உள்ளது. கருணாநிதியின் இறுதி சடங்கிற்கு தமிழகம் முழுக்க பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


0 coment�rios:

கருணாநிதியின் உயிர்பிரிந்தும் கூட அண்ணா அவருக்கு பரிசளித்த மோதிரத்தை அவர் கழட்ட வில்லை. அந்த அன்பு பரிசுடன் அவருக்கு அருகில் இன்று சென்றடைந...

இறுதி நிமிடத்திலும் கருணாநிதியின் கையில் இருந்த சாதாரண மோதிரம் யார் கொடுத்த பரிசு தெரியுமா?

கருணாநிதியின் உயிர்பிரிந்தும் கூட அண்ணா அவருக்கு பரிசளித்த மோதிரத்தை அவர் கழட்ட வில்லை. அந்த அன்பு பரிசுடன் அவருக்கு அருகில் இன்று சென்றடைந்துள்ளார்.

ஒரு காலகட்டத்தில் தி.மு.க. தேர்தல் நெருங்கி விட்டது. அறிஞர் அண்ணா கையில் பணம் இல்லாமல் தவித்தார். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் ரூ.11இலட்சத்தை வசூலித்துத் தந்தார் கருணாநிதி.

இதனை பாராட்டி, அண்ணா, கருணாநிதிக்கு ஒரு மோதிரத்தை அணிவித்தார். இந்த மோதிரத்தை கருணாநிதி பெரிதும் மதித்தார். தன் வாழ்நாளில் அந்த மோதிரத்தை மட்டும் அவர் கழட்டியதே இல்லையாம்.

இதுகுறித்து பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு தயாளு அம்மாள் கடந்த 2000-ஆம் ஆண்டு ஒரு பேட்டி அளித்தபோது கூறுகையில், "அறிஞர் அண்ணா போட்ட மோதிரம் தான் இப்போது வரை அவரது விரலில் இருக்கு, இது தவிர வேறு யாரோ ஒரு சமயம் கொடுத்த பரிசான ஒரேயொரு பவள மோதிரம் மட்டும் போட்டிருக்கிறார்.

அவருக்கு நிறைய பேர் மோதித்தை பரிசாக கொடுத்துள்ளனர். ஆனால் அவர் எதையுமே போட்டதில்லையாம்.

0 coment�rios:

தாயின் தலைமுறையிலும், தந்தையின் தலைமுறையிலும் உயிருடன் இருப்பவர்களுக்கு மேலே மூன்று தலைமுறைப் பிதுர்க்களின் பிண்டத்தோடு இறந்தவனின் பிண்டத்த...

இறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை கண்டிப்பாக செய்யக்கூடாது..!

தாயின் தலைமுறையிலும், தந்தையின் தலைமுறையிலும் உயிருடன் இருப்பவர்களுக்கு மேலே மூன்று தலைமுறைப் பிதுர்க்களின் பிண்டத்தோடு இறந்தவனின் பிண்டத்தையும் சேர்க்க வேண்டும்.

பிண்டம் உண்ணும் பிதுரர் மூவர், தியாசகர் மூவர், லோபகர் மூன்று பேர் பிண்டம் போடும் பந்தியில் வருவான். ஒருவன் இவ்வாறு தந்தையின் மரபிற்குப் பத்துப் பேர்களும் உள்ளார்கள். ஒருவன் மரித்தும் பிதுரர்களோடு சேர்த்தும் நான்காம் பாட்டன் முதல் தியாசகன் ஆகிறான். மூன்றாம் லேபகன் பந்தியில் வருவோனாகிறான். புத்திரன் சிரார்த்தம் செய்தால் மாண்டுபோன தந்தை மகிழ்ந்து அந்தப் புத்திரனுக்கு ஒரு புத்திரனை தருகிறான். சிரார்த்தம் செய்வதில் பிதுரர்களுக்குத் திருப்தியுண்டாலதன்றி செய்பவனுக்கு மிக்க பயன் உண்டு. உயிர் நீங்கிய பிறகு தேகத்தை வைத்திருக்க கூடாது. அதனால் உடனே சம்ஸ்காரம் செய்ய வேண்டும்.

தனிஷ்டா பஞ்சகத்தில் இறந்த தோஷ நிவர்த்தியின் பொருட்டுச் சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி சில கருமங்களை அதிகமாக செய்தல் வேண்டும். எள்ளும் கோவும் ஹிரண்யமும் நெய்யும் தானம் கொடுக்க வேண்டும். தனிஷ்டா பஞ்சகத்தில் மாய்ந்தவருக்கு சாஸ்திரத்தில் சொல்கிரபடிச் செய்யாவிட்டால் கருமஞ் செய்யும் கர்த்தா துன்பம் அடைவான்.

கருடா! ஒருவன் மரித்தவுடன் அவனது கால்களையும் கைகளையும் கட்ட வேண்டும். உறவினரெல்லாம் சவத்தின் அருகிலேயே இருக்க வேண்டும். ஒரு கிராமத்தில் ஒரு சவம் கிடந்தால் யாரும் சோறும் நீரும் உண்ணலாகாது. அப்படி உண்டால் மாமிசம் உண்ட தோஷமும் இரத்தம் பருகிய தோஷமும் அடைவார்கள். தந்த சுத்தியும் செய்யலாகாது. இரவில் பிணம் கிடக்கும் பொது ஆண் பெண் கூடியின்புறுதல் கூடாது என்றார் திருமால்.

0 coment�rios:

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு, இந்தியாவில் இதுவரை யாருக்கு கிடைக்காத அளவிற்கு பெருமை கிடைத்துள்ளது. வயது முதிர்ச்சி மற்றும் உட...

இந்தியாவில் கருணாநிதிக்கு மட்டுமே கிடைத்த பெருமை! அப்படி என்ன தெரியுமா?

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு, இந்தியாவில் இதுவரை யாருக்கு கிடைக்காத அளவிற்கு பெருமை கிடைத்துள்ளது.

வயது முதிர்ச்சி மற்றும் உடல்நிலை குறைபாடு காரணமாக கடந்த 11 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தை ஆழ்த்தியுள்ள கருணாநிதியின் மறைவுக்கு இந்தியா முழுவதிலிருந்தும் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவினால் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதேபோல நாட்டின் முக்கியமான இடங்கள் அனைத்திலும் தேசிய கோடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு , மத்திய அரசால் துக்கநாள் அனுசரிக்கப்பட்டது வருகிறது. அதன்படி மத்திய அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

கருணாநிதியின் மறைவுக்கு அரசு விடுமுறை அறிவித்து தமிழக அரசு மரியாதை செலுத்தியிருக்கும் வேளையில், கர்நாடக, ஆந்திர, கேரளா, தெலுங்கானா மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் பதவியில் இல்லாத ஒரு தலைவருக்கு இதுபோன்ற பெருமை இதுவரையிலும் கிடைத்ததே இல்லை. அந்த வகையில் மறைந்தும் இத்தகைய பெருமையினை கலைஞர் பெற்றுள்ளார்.

0 coment�rios:

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி சென்னையில் இன்று, செவ்வாய்க்கிழமை, மாலை 6.10 மணியளவில் காலமான...

”உடன்பிறப்பே” என்ற வார்த்தையால்...அகிலத்தையே வியக்க வைத்த கலைஞர் கருணாநிதி தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தது ஏன்?

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி சென்னையில் இன்று, செவ்வாய்க்கிழமை, மாலை 6.10 மணியளவில் காலமானார். அவர் குறித்த 95 தகவல்களை இங்கே பகிர்கிறோம்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார்.
கருணாநிதி தம் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தை. அவருக்கு முன்பாக பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் உண்டு. சண்முகசுந்தரம் அம்மாளின் மகன்கள்தான் முரசொலி மாறனும் முரசொலி செல்வமும். பெரியநாயகம் அம்மாளின் மகன் அமிர்தம்.
கிரிக்கெட் காதலர் கருணாநிதி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சிறு வயதில் அவருக்கு பிடித்தமான விளையாட்டாக இருந்தது ஹாக்கி. போர்ட் ஸ்கூல் ஹாக்கி டீமிற்காக விளையாடி இருக்கிறார் கருணாநிதி.
கருணாநிதியின் முதல் மேடை பேச்சு 'நட்பு' குறித்து. எட்டாம் வகுப்பு மாணவராக இருந்த போது (1939) பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில் 'நட்பு' என்ற தலைப்பில் பேசினார்.
கருணாநிதி முதன்முதலில் துவங்கிய பத்திரிகையின் பெயர் மாணவ நேசன். 1941ல் வெளியான மாணவ நேசன் ஒரு மாத இதழ்.
முதன் முதலில் கருணாநிதி தொடங்கிய அமைப்பு தமிழ் மாணவர் மன்றம்.
நீதிக்கட்சியை சேர்ந்த அழகிரிசாமியால் தன் சிறுவயதில் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் கருணாநிதி. அதன் காரணமாகவே தம் மகனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார்.
தான் திராவிட சிந்தனையால் ஈர்க்கப்படாமல் இருந்தால் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருப்பேன் என்று ஒரு முறை கருணாநிதி கூறினார்.
எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் நட்பு ஏற்பட்டது சேலம் மாடர்ன் தியேட்டரில்தான்.
மூன்று முறை திருமணம் செய்துகொண்டவர் கருணாநிதி . முதல் மனைவி பத்மாவதி. அவகுப் பிறந்தவர், மு.க.முத்து. திருமணமான சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார் பத்மாவதி. கலைஞரின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கு பிறந்தவர்கள் அழகிரி, ஸ்டாலின், செல்வி மற்றும் தமிழரசு. அவரது மூன்றாவது மனைவியான ராஜாத்தியம்மாளுக்குப் பிறந்தவர் கனிமொழி.


கருணாநிதி எழுதி முதன் முதலில் அரங்கேற்றப்பட்ட நாடகம், 'பழனியப்பன்'. திருவாரூர் பேபி டாக்கீஸில் 1944ல் அரங்கற்றப்பட்டது.
50களிலிருந்து 70கள் வரை தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய சிவாஜி கணேசன், எம்.ஜி. ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் மிகப் பெரிய வெற்றிப்படங்களை அளித்தவர் கருணாநிதி. சிவாஜிக்கு பராசக்தி, மனோகரா. எம்.ஜி.ஆருக்கு மந்திரி குமாரி, மலைக்கள்ளன்.
கருணாநிதி முதன் முதலில் வசனம் எழுதிய திரைப்படம் 1947ல் வெளியான ராஜகுமாரி. இந்தப் படம்தான் முதன் முதலில் எம்.ஜி.ஆர் முன்னணி வேடத்தில் நடித்த படம்.
1947ல் வெளியான ராஜகுமாரி தொடங்கி, 2011ல் வெளியான பொன்னர் - சங்கர் வரை சுமார் 64 வருடங்கள் திரையுலகில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என பல்வேறு துறைகளிலும் பணியாற்றியிருக்கிறார் கருணாநிதி.
பராசக்தி படம் வெளிவந்தபோது, அந்தப் படத்தை கிண்டல் செய்து ஒரு இதழில் பரப்பிரம்மம் என்ற பெயரில் கார்ட்டூன் வெளியிடவே, அதே பெயரில் ஒரு நாடகத்தை எழுதி மாநிலம் முழுவதும் நடத்தினார் கருணாநிதி.
கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ஸ்ரீ ராமானுஜர் - மதத்தில் புரட்சி செய்த மகான். அந்தத் தொடருக்கு அவர் எழுத ஆரம்பித்தபோது அவரது வயது 92. எழுதிவந்தபோதே அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.
கருணாநிதி 10 சமூக நாவல்களையும் 6 சரித்திர நாவல்களையும் எழுதியிருக்கிறார்.
21 நாடகங்களை கருணாநிதி எழுதியிருக்கிறார். 1957ல் தி.மு.கவுக்குக் கிடைத்த உதயசூரியன் சின்னத்தைப் பிரபலபடுத்துவதற்காக உதயசூரியன் என்ற நாடகத்தை எழுதினார்.
இனியவை 20 என்ற பெயரில் பயண நூல் ஒன்றையும் கருணாநிதி எழுதியிருக்கிறார்.
கருணாநிதி பணியாற்றிய படங்களின் எண்ணிக்கை 69.

கருணாநிதி கதை - வசனம் எழுதி எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் எண்ணிக்கை 9.
கருணாநிதியை ஆரம்பகாலத்தில் எம்.ஜி.ஆர் 'ஆண்டவரே' என்று அழைத்திருக்கிறார்.
கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், 1969ல் கருணாதியிடம் பணியில் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக உதவியாளராக இருந்துவருகிறார். இரண்டு முறை கோபித்துக்கொண்டு வெளியேறி, மீண்டும் கருணாநிதியிடம் சேர்ந்திருக்கிறார்.
கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற அடைமொழியை வழங்கியது நடிகவேள் எம்.ஆர்.ராதா தான். கருணாநிதி எழுதிய, 'தூக்குமேடை' என்ற நாடகத்தை பார்த்து இந்த பட்டத்தை வழங்கினார்.
இதுவரை 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கும் கருணாநிதி, இதுவரை ஒரு தேர்தலில்கூட தோல்வியடைந்ததில்லை.
சென்னை சேப்பாக்கம் தொகுதியில்தான் அதிகபட்சமாக மூன்று முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார் கருணாநிதி. சைதாப்பேட்டை, அண்ணாநகர், திருவாரூர், துறைமுகம் ஆகிய பகுதிகளில் தலா இரண்டு முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
1957லிருந்து தற்போதுவரை 60 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவரும் கருணாநிதி மிகக் குறுகிய காலத்திற்கு சட்ட மேலவை உறுப்பினராக இருந்திருக்கிறார்.
33 வயதில் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினரானார் கருணாநிதி.
கருணாநிதி 45 வயதில் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
கருணாநிதி சட்டமன்றக் கன்னிப் பேச்சே மிகவும் கவனிக்கப்பட்டது. அதில் நங்கவரம் பண்ணை விவசாயிகளுக்காகப் பேசினார் கருணாநிதி. பிறகு இதற்காக 20 நாட்கள் போராட்டமும் நடத்தி, பிரச்சனைக்குத் தீர்வு கண்டார்.


கருணாநிதி முதன்முறையா சட்டமன்றத்தில் பேசிவிட்டு அமர்ந்ததும், அப்போது சட்டப்பேரவை தலைவராக இருந்த யு. கிருஷ்ணாராவ் ஒரு காகிதத்தில், 'Very Good Speech' என்று எழுதி கொடுத்தார்.
மனிதர்களை மனிதர்களே இழுத்துச் செல்லும் கை ரிக்ஷா வழக்கம் இந்தியாவின் சில மாநிலங்களி்ல் இன்னும் உள்ள நிலையில், 1973லேயே தமிழகத்தில் அதைத் தடை செய்தார்.
அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வரான போதுதான் "உடன்பிறப்பே" என முரசொலியில் கடிதம் எழுதத் துவங்கினார் கருணாநிதி. 1971 முதல் "உயிரினும் மேலான உடன்பிறப்பே" என்று பேசவும் துவங்கினார்.
கல்லக்குடி போராட்டம்தான் அவரை அரசியல் தளத்தில் முக்கிய தலைவராக பரிணமிக்க செய்தது. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்லக்குடியில் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து, ரயில் மறியலில் இறங்கினார்.
எம்.ஜி.ஆருக்கு புரட்சி நடிகர் என்ற பட்டத்தைக் கொடுத்தது கருணாநிதிதான்.

0 coment�rios: