Home Top Ad

எதிரியைத் தேடிப் போய் திருப்பி அடிக்கும் இந்திய உளவுத்துறை அதிகாரியின் கதையே ’விஸ்வரூபம் 2’. அமெரிக்காவிலிருந்து தப்பித்துச் செல்லும் தீவ...

முதல் பார்வை: விஸ்வரூபம் 2

எதிரியைத் தேடிப் போய் திருப்பி அடிக்கும் இந்திய உளவுத்துறை அதிகாரியின் கதையே ’விஸ்வரூபம் 2’.

அமெரிக்காவிலிருந்து தப்பித்துச் செல்லும் தீவிரவாதிகள் குழுத் தலைவன் ராகுல் போஸைத் தேடும் பயணத்தை மேற்கொள்கிறார் கமல். உடன் சேகர் கபூர், ஆண்ட்ரியா, பூஜாகுமார் ஆகியோர் பயணிக்கின்றனர். லண்டனில் கமல் அண்ட் கோவைப் பழிதீர்க்க ராகுல் போஸ் சதித் தீட்டம் தீட்ட, அதை வெற்றிகரமாக முறியடிக்கிறார் கமல். 1500 டன் எடை கொண்ட வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமும் அவருக்கு ஏற்படுகிறது. டபுள் கேம் ஆடும் உயர் அதிகாரி ஒருவரால் தன் உயிருக்கே ஆபத்து நேர்கிறது. ராகுல் போஸாலும் பேராபத்து தொடர்கிறது. இவற்றை கமல் எப்படி சந்திக்கிறார், அதனால் ஏற்படும் இழப்புகள் என்ன என்பதற்கு ’விஸ்வரூபம் 2’ விடை சொல்கிறது.

இயக்குநராகவும், நடிகராகவும் கமல் தன்னை மிகச் சரியாக நிறுவியிருக்கும் படம் என்று சொல்லலாம். நளினம் மிகுந்த கதக் நடன ஆசிரியராக இருக்கும் விஸ்வநாத்தின் நதிமூலம், ரிஷிமூலம் இதில் சரியாக வெளிப்படுகிறது. ராணுவ அதிகாரியாக இருந்து தீவிரவாதியாகக் கட்டமைக்கப்பட்டு சாவின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்து இந்திய உளவுத்துறை அதிகாரியாகும் பரிமாணம் அடையும் காட்சிகள் திரைக்கதை நகர்த்தலுக்கு வினையூக்கியாக வேகமுகம் காட்டுகிறது.

கமல் அசரடிக்கிறார். வார்த்தைக்கு வார்த்தை பதிலடி கொடுத்து நகைச்சுவைத் தரன்மையிலும் தெறிக்க விடுகிறார். நாட்டின் மீதான பற்று, சக பணியாளர் மீதான அன்பு, மனைவி மீதான அக்கறை, தொழில் மீதான பக்தி என்று எல்லா முகங்களிலும் மிகச் சரியாகப் பொருந்துகிறார். எதிரிக்கும் நல்லது செய்கிற அந்தப் பண்பிலும் கமலின் கதாபாத்திரம் உயர்ந்து நிற்கிறது.

கமல் மீதான காதலில் கிறங்குவதிலும், கணவனுக்காக ரிஸ்க் எடுத்து 1500 எடை கொண்ட வெடிகுண்டின் தன்மையைப் பரிசோதிப்பதிலும் பூஜாகுமார் கவனிக்க வைக்கிறார். பூஜாகுமார் மீதான பொறாமையை லேசுபாசாக வெளிப்படுத்துவது, கமல் மீதான அன்பை திடமாக உணர்த்துவது, ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்துவது என ஆண்ட்ரியா ஆச்சர்யப்படுத்துகிறார்.

கமலின் மிகச் சிறந்த வழிகாட்டியாக தன்னை வடிவமைத்துக்கொண்ட சேகர் கபூர் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குண்டுகள் பாய்ந்த நிலையில் கமலுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் அக்காட்சி செம்ம.

நின்று நிதானித்து ஸ்கோர் செய்கிறார் ராகுல் போஸ். எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் கச்சிதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். சூழ்ச்சியில் சிக்கவைத்து நாடகமாடும் ஆனந்த மகாதேவனும், கமலின் அம்மாவாக அழுத்தமான நடிப்பைத் தந்த வகீதா ரஹ்மானும் கவன ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

ஷாம்தத் சைனுதீன் லண்டன், ஆப்கானிஸ்தான், டெல்லியின் பரப்பைக் கண்களுக்குள் கடத்துகிறார். லால்குடி என்.இளையராஜாவின் ஆப்கானிஸ்தான் தீவிரவாதக் கும்பல் குறித்த செட், தண்ணீருக்குள் நிகழும் சண்டைக்காட்சி ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜிப்ரானின் இசையில் நானாகிய நதிமூலமே ரசிக்க வைக்கிறது. நான் யாரென்று தெரிகிறதா பாடலை உல்டாவாக்கிய ஞாபகம் வருகிறதா பாடல் மெதுவான பீட்டாக இருப்பதால் வெறுமனே கடந்துபோகிறது. பின்னணி இசையில் ஜிப்ரானின் உழைப்பு பளிச்சிடுகிறது. இந்தக் காட்சி தேவையே இல்லை என்று சொல்லாத அளவுக்கு நறுக்கென்று காட்சிகளைக் கோத்த விதத்தில் மகேஷ் நாராயணனும், விஜய் சங்கரும் வியக்க வைக்கிறார்கள்.

முதல் பாகத்தை நினைவூட்டுவதற்காக இரண்டாம் பாகத்தில் கூறியது கூறல் இருக்கும். ஆனால், இப்படத்தில் அப்படி எந்த அம்சமும் இல்லை. திரைக்கதை எந்தக் குழப்பமும் இல்லாமல் நேர்த்தியாகச் செல்கிறது. ஆனால், படத்தில் சவால்கள் குறைவாக உள்ளதால் அதை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தமும் நாயகனுக்கு குறைவாகவே உள்ளது. இதனால் இரண்டாம் பாதி பெரிதாக ஈர்க்கவில்லை. அதை முட்டுக்கொடுப்பதற்காக கமல் அம்மா போர்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், அது போதுமானதாக இல்லை. நாயகன் எந்த சாகசத்தையும் செய்யாமல், புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்தாமல் எதிரிகளை சாதாரணமாகவே அணுகுவது எடுபடவில்லை. 64 வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்வது காட்சியாக இல்லாமல் வசனமாக நகர்வதால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அதுவும் அந்த கிளைமாக்ஸ் பலவீனம்.

இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், தீவிரவாதம், வன்முறை ஆகியவற்றை எதிர்த்துக் களமாடுவதோடு நில்லாமல், அஹிம்சை, அன்பை மட்டும் முன்னிறுத்தும் கமலின் நோக்கம் ராகுல் போஸ் வாரிசுகள் வழியாக இப்படத்தில் சரியாக நிறைவேறி இருக்கிறது.

0 coment�rios:

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மெரினா கடற்கரையில் இன்று காலை கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்தினார். வயது மூப்ப...

மறைந்த கலைஞர் எழுதிவைத்துச் சென்ற 3 உயில்கள்: வைரமுத்து மேல் கொந்தளிப்பில் ஸ்டாலின் குடும்பம்!

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மெரினா கடற்கரையில் இன்று காலை கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்தினார்.

வயது மூப்பின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதியன்று மாலை அவர் அனுமதிக்கப்பட்டிருந்த காவேரி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இவரின் மரணம் அவரின் குடும்பத்தார் மற்றும் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

அப்போது அங்கு வந்திருந்த கவிஞர் வைரமுத்து கருணாநிதியின் உடலுக்கு அருகில் நின்று கதறி அழுதபடி அஞ்சலி செலுத்தினார். அவரின் தாங்கமுடியாத துக்கத்தை அழுகையின் மூலம் வெளிப்படுத்தினார். இந்தக் காட்சியைப் பார்த்த அனைவரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இதற்கு முன்னதாக கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு கோபாலபுரம் வீட்டில் இருந்தபோதும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் வைரமுத்து அடிக்கடி வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகில் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு இன்று காலையிலேயே தன் மகன்களுடன் வந்த வைரமுத்து, கருணாநிதியின் சமாதியில் மலர் தூவி பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சூரியன் இல்லாமல் ஒரு விடியல் வருமா. அதேபோன்று கருணாநிதி இல்லாத தமிழகத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. என் தந்தைக்குச் செய்யவேண்டிய இறுதி மரியாதையை செய்யவே நான் இங்கு வந்தேன். தமிழக மக்கள் நன்றியுள்ளவர்கள் என நான் நம்புகிறேன்.

கருணாநிதியின் லட்சியங்கள், கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வது நம் கடமை. அவர் இலக்கியங்கள், சொற்பொழிவு, செயல் ஆகியவற்றில் என்றும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார். அவரின் போர் குணத்தை இந்த கால இளைஞர் கற்றுக்கொள்ள வேண்டும்.

கருணாநிதியை எதிரி என நினைத்தவர்கள் கூட அவரின் போர்குணத்தைக் கண்டு வியந்துள்ளனர். கருணாநிதி நம் சமூகத்துக்கு எழுதி வைத்துச் சென்றுள்ள மிகப்பெரிய உயில் சுயமரியாதை, தமிழ், இன அடையாளம் ஆகியவை. இவற்றைக் கட்டிக்காப்பாற்ற வேண்டியது தமிழர்களின் பெரும் கடமை எனக் கூறினார்.


மேலும், இன்று அதிகாலை முதல் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்துக்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

இது ஒரு புறமிருக்க, வைரமுத்து கலைஞர் சமாதிக்கு பாலூற்றி வழிபட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது, பொதுவாக ஒருவர் இறந்து விட்டால் மூன்றாம் நாள் காலையில் இறந்தவரின் குடும்பத்தினர் மட்டுமே சமாதியில் பாலூற்றி வழிபடுவார்கள்.

ஆனால் ஸ்டாலின், அழகிரி என கருணாநிதியின் மகன்களை கலந்தாலோசிக்காமல் வைரமுத்து பாலூற்றி வணங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்காக கவிஞர் வைரமுத்து மேல் கருணாநிதி குடும்பத்தினர் அதிருப்தியிலும், கோபத்திலும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 coment�rios:

திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி காலமானதை அடுத்து அக்கட்சியின் செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் விரைவில் திமுக தலைவராக பதவியேற்க உள்ள...

அடுத்த தலைவர் யார்? முதல்வர் பதவிக்கு போட்டி... ஸ்டாலினின் திட்டம் இதுதானாம்!

திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி காலமானதை அடுத்து அக்கட்சியின் செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் விரைவில் திமுக தலைவராக பதவியேற்க உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் கனிமொழி மற்றும் அழகிரியை சமாளிக்க இருவருக்கும் திமுகவில் முக்கிய பதவிகள் வழங்கவும் ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவில் இருந்து விலக்கப்பட்ட அழகிரி, மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்றும், அவருக்கு கட்சியில் முக்கிய பதவி கொடுப்பதோடு வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஒருவேளை ஸ்டாலின் கொடுக்கும் பதவியை அழகிரி விரும்பாவிட்டால் அவருக்கு பதிலாக அவருடைய மகன் தயாநிதி அழகிரிக்கு கட்சியில் முக்கியத்துவம் தரும் வகையில் ஒரு பதவியும், முரசொலி அறக்கட்டளையில் ஒரு பதவியும் வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

அதேபோல் கனிமொழிக்கும் கட்சியில் மேலும் முக்கியத்துவம் கிடைக்கும் என்றும், அவர் வழக்கம்போல் ராஜ்யசபா எம்பி பதவியில் தொடர்ந்து இருப்பார் என்றும் கூறப்படுகிறது. அழகிரி, கனிமொழி ஆகிய இருவரையும் டெல்லி பக்கம் அனுப்பிவிட்டால்தான், முதலமைச்சர் பதவிக்கு போட்டி இருக்காது என்பதே ஸ்டாலின் எண்ணமாக இருப்பதாக திமுகவினர் கூறி வருகின்றனர்.

0 coment�rios:

திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி காலமானதை அடுத்து அக்கட்சியின் செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் விரைவில் திமுக தலைவராக பதவியேற்க உள்ள...

அடுத்த தலைவர் யார்? முதல்வர் பதவிக்கு போட்டி... ஸ்டாலினின் திட்டம் இதுதானாம்!

திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி காலமானதை அடுத்து அக்கட்சியின் செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் விரைவில் திமுக தலைவராக பதவியேற்க உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் கனிமொழி மற்றும் அழகிரியை சமாளிக்க இருவருக்கும் திமுகவில் முக்கிய பதவிகள் வழங்கவும் ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவில் இருந்து விலக்கப்பட்ட அழகிரி, மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்றும், அவருக்கு கட்சியில் முக்கிய பதவி கொடுப்பதோடு வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஒருவேளை ஸ்டாலின் கொடுக்கும் பதவியை அழகிரி விரும்பாவிட்டால் அவருக்கு பதிலாக அவருடைய மகன் தயாநிதி அழகிரிக்கு கட்சியில் முக்கியத்துவம் தரும் வகையில் ஒரு பதவியும், முரசொலி அறக்கட்டளையில் ஒரு பதவியும் வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

அதேபோல் கனிமொழிக்கும் கட்சியில் மேலும் முக்கியத்துவம் கிடைக்கும் என்றும், அவர் வழக்கம்போல் ராஜ்யசபா எம்பி பதவியில் தொடர்ந்து இருப்பார் என்றும் கூறப்படுகிறது. அழகிரி, கனிமொழி ஆகிய இருவரையும் டெல்லி பக்கம் அனுப்பிவிட்டால்தான், முதலமைச்சர் பதவிக்கு போட்டி இருக்காது என்பதே ஸ்டாலின் எண்ணமாக இருப்பதாக திமுகவினர் கூறி வருகின்றனர்.

0 coment�rios:

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருமணம் நடைபெறாததை கண்டு, அந்த கிராமத்தின் பெயரை அங்குள்ள மக்கள் ம...

திருமணம் நடப்பதில் சிக்கல்: கிராமத்தின் பெயரை மாற்றிய மக்கள்

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருமணம் நடைபெறாததை கண்டு, அந்த கிராமத்தின் பெயரை அங்குள்ள மக்கள் மாற்றியுள்ள சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மெர் மாவட்டத்தின் மியான் கா பாரா கிராமத்தின் பெயர், மகேஷ் நகர் என மாற்றப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் வீடு எனப் பொருள்படும் மியான் கா பாரா கிராமத்தில் உள்ள 2000 குடும்பத்தில், வெகு சிலரே இஸ்லாமியர்கள்.

ஆனால், இந்தப் பெயரைப் பார்த்ததுமே இங்குள்ளவர்களைத் திருமணம் செய்ய யாருமே முன்வருவதில்லை.


இதனால் கடும் அதிருப்தியடைந்த இப்பகுதி மக்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை முன்வைத்தனர். இதனையடுத்து தற்போது இந்த கிராமத்திற்கு மகேஷ் நகர் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

ஆனால், ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் வரவிருப்பதால் மக்களை பிளவுப்படுத்தும் நோக்கில் அங்கு ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி செயல்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அந்த மாநிலத்தில் இஸ்லாமியப் பெயர்களைப்போல உள்ள கிராமங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுவருகின்றன. அந்த வகையில், ஜூஞ்ஹூனா மாவட்டத்தின் இஸ்மாயில்பூர் கிராமம் தற்போது, பிச்சான்வா குர்த் என மாற்றப்பட்டது.

அத்துடன், ஜலோர் மாவட்டத்தின் நார்பாரா என்ற கிராமத்தின் பெயர், நார்புரா என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் நாடு முழுவதும் உள்ள 27 கிராமங்களின் பெயர்களை மாற்ற மத்திய உள்விவகார அமைச்சகம் பரிசீலித்துவருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

0 coment�rios:

விஸ்வரூபம் 2 படத்தின் முத்தக்காட்சிகளை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக நாயகனும் நாயகியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும்காட்சிகள் மட்டும் பட...

விஸ்வரூபம்-2 திரைப்படத்தின் வெட்டப்பட்ட காட்சிகள் ஓரு பார்வை !


விஸ்வரூபம் 2 படத்தின் முத்தக்காட்சிகளை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக நாயகனும் நாயகியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும்காட்சிகள் மட்டும் படத்தில் இடம் பிடித்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விஸ்வ ரூபம் திரைப்படத்தின் முதல் பாகம்வெளியானது. அப்போது விஷ்வரூபம் முதல் பாகத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்து உள்ளதாகவும், அது இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதால் படத்தை வெளியிடக் கூடாது என்று பல எதிர்ப்புகள் எழுந்தன.

இந்த நிலையில் விஸ்வரூபம் திரைப்படத்தின் 2-ம் பாகம்இன்று வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தின் இந்தி வெர்ஷனில் 14 இடங்களில்வரும் காட்சிகளை சென்சார் போர்டு வெட்டியுள்ளது. படுக்கை அறையில்கமல் பூஜாகுமாருக்கு கொடுக்கும் உதட்டு முத்த காட்சியை சென்சார்போர்டுவெட்டியுள்ளது. அதற்கு பதிலாகஇருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொளும் காட்சிகள்இடம் பெற்றுள்ளது,

மேலும் தமிழ் வெர்ஷனில் மொத்தம் 22 இடங்களில் வரும் காட்சிகளை வெட்டியுள்ளது சென்சார் போர்டு .

0 coment�rios:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. தனது தந்தை மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் அவரிடம் எந்தவொரு உதவியையும் நாடாமல் தனது சொந்...

நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. தனது தந்தை மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் அவரிடம் எந்தவொரு உதவியையும் நாடாமல் தனது சொந்த முயற்சியாலயே இந்த இடத்தை அடைந்துள்ளார்.

இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். பிரபல போராளி சேக்குவாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் உருவாகுவதாக செய்திகள் வரும் நிலையில் இப்படத்தில் என்.ஜி.குமரன் என்கிற எம்.எல்.ஏ.வாக சூர்யா நடித்துள்ளாராம்.

மேலும் காக்கும் முன்னேற்ற கழகம் என்கிற கட்சியின் இளைஞர் அணி தலைவராகவும் நடித்துள்ளாராம். அயுத எழுத்து படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் இந்த NGK அரசியல் படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

0 coment�rios: