Home Top Ad

காமெடியில் தனிக் காட்டு ராஜாவாக வலம் வந்து சிறுவர்களையும் பெரியவர்களையும் சிரிக்க வைத்த வடிவேலு வுக்கு புதிய சிக்கல் வந்துள்ளது. இவர் நடித்...

வடிவேலுவின் ‘இம்சைக்கு’ ஒரு வாரம் கெடு!

காமெடியில் தனிக் காட்டு ராஜாவாக வலம் வந்து சிறுவர்களையும் பெரியவர்களையும் சிரிக்க வைத்த வடிவேலு வுக்கு புதிய சிக்கல் வந்துள்ளது. இவர் நடித்து 2006-ல் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் நல்ல வசூல் பார்த்ததால் அதன் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் இயக்குனர் ஷங்கர் தயாரிக்க முன்வந்தார்.

இதற்காக வடிவேலுக்கு குறிப்பிட்ட தொகையை சம்பள முன்பணமாக கொடுத்து ஒப்பந்தம் செய்தனர். இந்த படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவனே டைரக்டு செய்ய முடிவானது. சென்னையில் பல கோடி செலவில் அரண்மனை அரங்குகள் அமைத்து படப்பிடிப்பையும் தொடங்கினர். சில நாட்கள் அதில் நடித்த வடிவேலு தொடர்ந்து நடிக்க முடியாது என்று விலகி விட்டார்.

இதனால் படப்பிடிப்பு நின்று போனது. அரங்குகளையும் பிரித்து விட்டனர். இந்த பிரச்சினை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு போனது. வடிவேலுவிடம் பேசி படப்பிடிப்புக்கு அனுப்பி வைக்கும்படி ஷங்கர் மனு அளித்து இருந்தார். நடிகர் சங்கம் மூலம் வடிவேலுக்கு நோட்டீசு அனுப்பி விளக்கம் கேட்கபட்டது. படத்தில் நடிக்கும்படியும் வற்புறுத்தப்பட்டது.

படப்பிடிப்பை தாமதமாக தொடங்கி தனக்கு பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தியதால் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று பிடிவாதமாக மறுத்தார் வடிவேல். தொடர்ந்து பேசியும் பிரச்சினைக்கு தீர்வு வரவில்லை. படத்துக்கு செலவழித்த ரூ.9 கோடியை வடிவேலு தனக்கு நஷ்ட ஈடாக அளிக்க வேண்டும் என்று படக்குழு சார்பில் இன்னொரு புகார் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க வேண்டும் என்று கெடு விதித்து ஒரு வாரம் அவகாசம் வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு மறுத்தால் வடிவேல் படங்களில் நடிக்க தடை விதிக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் கூறப்படுகிறது.

0 coment�rios:

கும்கி விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் அறிமுகமான படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸ் மட்டுமின்றி விமர்ச...

கும்கி-2 படத்தில் வளர்ந்து வரும் முன்னணி ஹீரோ கமிட் ஆனார்

கும்கி விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் அறிமுகமான படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது.

பாக்ஸ் ஆபிஸ் மட்டுமின்றி விமர்சனங்கள் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற, தற்போது கும்கி-2 படத்திற்கான வேலைகள் தொடங்கிவிட்டது. இதையும் பிரபுசாலமன் தான் இயக்கி வருகின்றார்.

ஏற்கனவே தாய்லாந்தில் ஒரு சில காட்சிகள் எடுக்க, தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடந்து வருவதாக தெரிகின்றது.

இப்படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடித்து வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

0 coment�rios:

செல்வராகவன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர். ஒரு படத்தின் வெற்றி, தோல்வி தாண்டி எழுத்து-இயக்கம் செல்வராகவன் என்று திரையி...

தமிழ் சினிமாவின் அத்தனை பார்முலாவையும் குத்தி கிழித்தெறிந்த செல்வராகவன்

செல்வராகவன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர். ஒரு படத்தின் வெற்றி, தோல்வி தாண்டி எழுத்து-இயக்கம் செல்வராகவன் என்று திரையில் வரும் போது விசில் சத்தம் பறக்கும்.

அப்படி ஒரு புகழுக்கு சொந்தமான செல்வராகவனின் மாஸ்டர் பீஸ் புதுப்பேட்டை வெளிவந்து இன்றுடன் 12 வருடங்கள் ஆகின்றது.

இந்த படம் இப்போது வந்திருந்தால் மெகா ஹிட் ஆகியிருக்கும், சூப்பர் ஹிட் ஆகியிருக்கும், ரூ 100 கோடி வசூல் வந்திருக்கும் என சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஒரு பேச்சு இருக்கும்.

ஆனால், செல்வராகவனோ எப்போது வந்தாலும் புதுப்பேட்டை இப்படித்தான் இருக்கும் என்று சிம்பிளாக முடித்துவிடுவார். படத்தின் தொடக்கத்திலேயே நாயகன் பிச்சை எடுப்பது போல் ஒரு காட்சி.

தீம் மியூஸிக் போட்டு நடிகர்களுக்கு ஸ்லோ மோஷனில் மாஸ் இண்ட்ரோ கொடுத்த தமிழ் சினிமாவில் அம்மாவிடம் அடிவாங்கி கொண்டு பள்ளிக்கு கிளம்பும் ஒரு நாயகனாக தனுஷின் அறிமுகம்.

அம்மா இழப்பு, தெருவில் பிச்சை, அன்புவிடம் அறிமுகம், செல்வியுடன் காதல், காதலுக்காக கொலை, கொலையில் இருந்து பிறக்கும் அரசியல், அரசியல் ஆசையால் வரும் விளைவு என இதைவிட ஒரு கேங்ஸ்டர் வாழ்க்கையை யாரும் அருகில் நின்று படம் பிடித்திட முடியாது.

அதிலும் வேங்கைய மகன் ஒத்தைல நிக்கிறேன் என்பது போல் ஒரே ஆளாக நின்றுக்கொண்டு இரண்டே அடியில் மூர்த்தியின் தம்பியை கொலை செய்து, பின் ஒரு கேங்ஸ்டரிடம் சென்று ட்ரெயினிங் எடுப்பது, அந்த கேங்ஸ்டரும் உள்ளே பயத்தை வைத்துக்கொண்டு தனுஷிடம் தில்லாக பேசுவது.

வேரு ஒருவருக்கு திருமணம் செய்த பெண்ணை, கல்யாண மேடையில் தாலி கட்டுவது என சினிமா பார்முலா அனைத்தையும் குத்தி கிழித்த படம் தான் இந்த புதுப்பேட்டை.

இப்படி ஒவ்வொரு காட்சியிலும் நம்மை பிரமிக்க வைத்த செல்வராகவன் மீண்டும் இதே பலத்துடன் திரும்ப வரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.

0 coment�rios: