Home Top Ad

சர்க்கரை நோயில் சீனா முதலி டத்தில் உள்ளது. 2வது இடத்தில் உள்ள இந்தியா முதலிடத்தை பிடிக்க வேகமாக முன்னேறிக் கொண்டுள்ளது. சர்க்கரை நோய் வந்தா...

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

சர்க்கரை நோயில் சீனா முதலி டத்தில் உள்ளது. 2வது இடத்தில் உள்ள இந்தியா முதலிடத்தை பிடிக்க வேகமாக முன்னேறிக் கொண்டுள்ளது. சர்க்கரை நோய் வந்தால் அழையா விருந்தாளிகளாக பிரஷர், கொலஸ்ரால் ஆகியவையும் பின்தொடர்ந்து வந்து விடும். இதனை சரியாக கவனிக்காமல் விட்டால் கல்லீரல், சிறுநீரகம், கண், இதயம் என அனைத்து உறுப்புகளிலுமே பிரச்னை ஏற்பட்டு விடும். கணையத்தில் இன்சுலின் சுரப்பது குறைவால் இந்நோய் ஏற்படுவதாக கூறப்பட்டாலும், குடும்ப பாரம் பரியம் நமது வாழ்க்கை நடை முறை ஆகியவையும் முக்கிய காரணிகளாக உள்ளன. இதுபற்றி ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி அவசர சிகிச்சை பிரிவு உதவிப்பேராசிரியர் ஜான் வியோஜ் கூறியதாவது:

இரண்டு வகை

சர்க்கரை நோயை ஆங்கில மருத்து வம் டைப் -1, டைப் -2 என 2 ஆக பிரித்துள்ளது. இதில் டைப் எனப்படுவது சிறு குழந்தைகள் மற்றும் சிறுவயதில் ஏற்படும் சர்க்கரை நோயாகும். இதற்கு வைரல் இன்பெக்சன், நோய் எதிர்ப்பு சக்தி கணையத்தை பாதித்தல் காரணமாக இருக்கலாம். இதற்கு நேரடியாக இன்சுலின் செலுத்துவதும், உணவு கட்டுப்பாடு மூலம் கட்டுப்பாட்டில் வைக்கலாம். டைப் 2ல் 15க்கும் மேற்பட்ட காரணங்கள் உள்ளன.

இன்சுலின் போதிய அளவு சுரக்காமல் போதல், இன்சுலின் சுரந்தாலும் நமது உடல் அதனை முறையாக பயன்படுத்த முடியாமல் போதல், அல்லது உடலின் சில பாகங்கள் அல்லது உறுப்புகள் இன்சுலின் செயல்பாட்டை ஏற்காமல் இருத்தல், இன்சுலினுக்கு எதிரான ஹார்மோன் சுரத்தல், உடல் பருமன், மன அழுத்தம் மற்றும் உடலுக்குள் நிகழும் மாற்றங்கள், குடும்ப பாரம்பரியம் போன்றவை காரணமாக இருக்கும். இதற்கு சர்க்கரையின் அளவை கணக்கிட்டு அதற்கேற்ப மாத்திரைகள் வழங்கப்படும். சிலருக்கு சர்க்கரை அளவு ஆண்டிற்கு ஆண்டு அதிகரிக்கும். அதற்கேற்ப வீரியமிக்க மாத்திரைகள் வழங்கப்படும்.மாத்திரைகளால் கட்டுப்படுத்த முடியாத போது, இன்சுலின் செலுத்தப்படும்.

அறிகுறிகள்

அதிக தாகம் எடுத்தல், எடை குறைதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடலின் மெல்லிய பாகங்களில் வெடிப்பு ஏற்படுதல் (ஆணுறுப்பு, விரல் நுனிகளில் வெடிப்பு, ஊறல் இருக்கும்), தலை சுற்றல் போன்றவை இருக்கும்.

ரத்தபரிசோதனை

பொதுவாக 35 வயதிற்கு மேல் ஆண்டிற்கு ஒரு முறை சர்க்கரை நோய் பரிசோதனை செய்வது நல்லது. சர்க்கரை நோய் பாதிப்புடையவர்கள் ஆரம்பத்தில் சர்க்கரை அளவை துல்லியமாக அறிய தொடர்ந்து ரத்த பரிசோதனைகள் செய்யப்படும். அதன்பின் நோயாளிகள் தன்மை பற்றி மருத்துவர்களுக்கு நன்றாக தெரிந்து விடும் என்பதால் தேவைப்படும் போது மட்டும் சோதனை செய்யப்படும். உடல் பருமன் உடையவர்கள், குடும்ப பாரம்பரியமாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் 25 வயது முதலே சோதனை செய்யலாம். ஆண்களை பொறுத்தவரை இடுப்பளவு 90 செ.மீட்டருக்குள்ளும், பெண்களுக்கு 80 செ.மீக்குள்ளும் இருக்க வேண்டும். இந்தளவை தாண்டினால் உடல் எடை அதிகரி த்து விட்டதாக அர்த்தம். இவர்களும் ரத்தபரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம்.

கண்ணையும், பாதத்தையும் கவனியுங்க

சர்க்கரை நோய் நரம்புகளையும் வலுவிழக்க செய்யும். மேலும் சிறிய ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதால் சிறிய ரத்த குழாய் மற்றும் பெரிய ரத்த குழாய் பாதிப்பு ஏற்படும். பெரிய ரத்த குழாய் பாதிப்பால் கால்கள், இதயம் போன்றவவை பாதிக்கபடும். இதனால் மாரடைப்பு, கால்களில் உணர்ச்சியற்று போதல் ஏற்படும். நோயை கண்டு கொள்ளாவிட்டால் சுயநினைவிழப்பு போன்றவை ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து விளைவித்து விடும். சிறிய ரத்தகுழாய் பாதிப்பால் கண்கள், சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.

எனவே சர்க்கரை நோயாளிகள் கொலஸ்டிரல், பிரஷர், கிரியாட்டினின், ஆல்பமின்(உப்பு) போன்ற நோய்களுக்கான பரிசோதனையும் மேற்கொள்வது அவசியம். மேலும் கண்களையும் ஆண்டிற்கு ஒரு முறை பரிசோதிப்பதால் கண்களில் திரையில் உள்ள நரம்புகளில் பாதிப்பை கண்டறிந்து லேசர் சிகிச்சை மூலம் பார்வை இழப்பை தடுக்க முடியும். இல்லாவிட்டால் திடீரென பார்வையிழப்பு ஏற்படும். இதேபோல் சர்க்கரை நோய் தாக்கி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனவர்களுக்கு காலில் உணர்ச்சி இருக்காது. இதனால் கால் பாதங்கள் கல் மற்றும் முட்கள் குத்தி காயம் ஏற்பட்டால் தெரியாது. இதனால் ஏற்படும் புண் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும். எனவே தினமும் தங்களது பாதங்களை பார்க்க வேண்டும். வெடிப்பு. டாட் போன்றவை இருந்தால் தகுதியான மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

பாஸ்ட் புட்டால் 20 வயதிலேயே பாதிப்பு டாக்டர் ஜான் வியோஜ் மேலும் கூறியதாவது:

பாஸ்ட் புட் வகைகளை அறவே தவிர்க்க வேண்டும். குழந்தைகள் பாக்கெட்டுகளில் வரும் கிழங்கு வகை சிப்ஸ்கள், தின்பண்டங்களையும், நூடுல்ஸ், பீட்சா, பர்கர், ஹாட்டாக் போன்ற பேக்கரி வகை உணவுகளை அதிகம் விரும்பி உண்கின்றனர். இதில் உள்ள வேதிப்பொருட்கள் காரணமாக சிறுவயதிலேயே பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

ஆயுர்வேதம் என்ன சொல்லுது

கோட்டாறு அரசு ஆயுர் வேத மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர் கிளாரன்ஸ் டேவி கூறியதாவது: ஆயுர்வேதத்தில சர்க்கரை நோய் 20 ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கபத்தினால் ஏற்படும் 10 வகை சர்க்கரை நோய்களை குண மாக்கலாம். பித்தம் காரணமாக ஏற்படும் 6 வகை சர்க்கரை நோய்களையும், வாதம் காரணமாக ஏற்படும் 4 வகை சர்க்கரை நோய்களையும் கட்டுப்படுத்த மட்டுமே முடியும். இதில் வாதம் காரணமாக ஏற்படும் நோய்களுக்கு கடுமையான சிகிச்சைகள் தேவை. சர்க்கரை நோய் என்றால் இன்சுலின் சுரக்காது என்பது அல்ல. கணையம் சுரக்கும் இன்சுலின் சுக்ரோஸில் உள்ள சக்தியையும், கழிவையும் பிரிக்க முடியாமல் போவதும் காரணமாகும்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த மருந்துகளுடன், நீராவி குளியல், மாசாஜ் போன்றவை மூலமும் ஆயுர்வேதத்தில் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். நெற்றியில் வியர்வை வரும் வரை நடக்க வேண்டும். சீந்தல்சாறு, திரிபாலா பொடி, கோமுத்திர திலாசித்து, மஞ்சள் பொடி மற்றும் நெல்லிச்சாறு கலவை, சந்திர பிரபா மூலிகை, நிஷா சதாகாதி கசாயம், வசந்த கசுமநந்திரம், மேகமுக்கர வடி, சொர்ண ராஜா வங்க�ந்திரம் போன்ற மருந்துகள் பிரதானமாக விளங்குகின்றன.

சர்க்கரை நோயாளிகள், கார்போ ஹைடிரேட், கொழுப்பு மிகுந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். கோதுமை, ராகி, கொள்ளு, பச்சைப்பயறு போன்ற பாராம்பரிய உணவுகள் நல்லது. பழங்களை அளவோடு சாப்பிடலாம்.

அறிகுறிகள்

ஆயுர்வேதாவில் பல், வாய், கண், மூக்குகளில் கழிவுகள் தேங்குவது, கால், உள்ளங்கை எரிச்சல், தோலில் பிசுபிசுப்பு, அதிகம் சிறுநீர் பிரிதல், சிறுநீர் கழித்த இடத்தில் எறும்புகள் அரித்தல், சிறுநீர் அடிக்கடி கழித்தல் போன்றவை அறிகுறிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகற்காய் அதிகம் உண்பதும் ஆபத்து

டாக்டர் கிளாரன்ஸ் டேவி மேலும் கூறியதாவது: நமது உடலுக்கு 6 சுவையுடைய உணவுகள் அவசியம். இவை சீரான அளவில் இருக்க வேண்டும். அளவு மாறினால் உடலுக்கு பிரச்சனை எற்படும். கசப்பு சுவையுடைய பாகற்காய் அதிகம் உண்பதால் சர்க்கரை நோய் குணமாகும் என அதிகம் பேர் அதனை அதிகளவு சாப்பிடுகின்றனர். இது முற்றிலும் தவறானது. பாகற்காயை அளவோடு எடுக்கலாம். ஆனால் அளவிற்கு அதிகமாக எடுத்தால் உடலில் கபம், வாதம், பித்தம் ஆகியவற்றில் மாறுபாடு ஏற்படும்.

மூங்கில் அரிசி சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தன்மையுடையது.சர்க்கரை நோயை குணப்படுத்தும் சக்தி வாய்ந்த பாரம்பரிய நெல் வகைகாளன கருத்தக்கார், மாப்பிள்ளைச்சம்பா, காடடு யாணம் உள்பட பல்வேறு வகைகள் உள்ளன.

0 coment�rios:

காலில் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும், உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம் காரணமாகவும், அசுத்தமான இடங்களில் உள்ள கிருமிகளாலும் காலில் ஆணி நோய் பலர...

காலில் ஆணியா?.. இதை மட்டும் செய்தால் கவலையே வேண்டாம்

காலில் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும், உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம் காரணமாகவும், அசுத்தமான இடங்களில் உள்ள கிருமிகளாலும் காலில் ஆணி நோய் பலருக்கு வருகிறது.

காலில் ஆணி வந்து விட்டால், பாத‌த்தை தரை‌யி‌ல் வை‌க்க முடியாத அள‌வி‌ற்கு ‌பிர‌ச்‌சினையை ஏ‌ற்படு‌த்து‌ம். கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது.

அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தை தருகிறது.

பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத் தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள். கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கும் கால் ஆணி வர வாய்ப்புள்ளது.

கால் ஆணி ஏற்பட்டுவிட்டால் அதனை உடனடியாக சரிபடுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும்.

    கால் ஆணி ஏற்பட்ட உடனேயே, பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும். இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

    மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பத்து போடுங்கள். இதனால் பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும்.

    மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள் மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.

    அம்மான் பச்சரிசி செடியை சிறிது சிறிதாக உடைத்து அதிலிருந்து வரும் பாலை பயன்படுத்தலாம். ஒரு தடவை தடவினதும் குணம் கிடைக்காது. தொடர்ந்து ரெண்டு வாரமாவது செய்ய வேண்டும். முதலில் வலி குறையும், பிறகு போகப் போக ஆணியும் மறைந்துவிடும்.
    சித்திரமூலம்(கொடிவேலி) வேர்ப்பட்டையை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைத்து தூங்கப்போவதற்கு முன் கால் ஆணி மேல பூசி வந்தால் மூன்று நாட்களில் குணம் கிடைக்கும். இந்த வைத்தியம் செய்யும்போது சிலருக்கு அந்த இடத்துல புண் உண்டாகும். அப்படி ஏற்பட்டால் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து குழைத்து, புண் வந்த இடத்தில் பூசினால் புண் ஆறிவிடுவதோடு கால் ஆணியும் காணாமல் போய்விடும்.

0 coment�rios:

நாம் அடிக்கடி பேச்சுவழக்கில் உபயோகிக்கும் சுருக்க வார்த்தைகளின் விரிவாக்கம். இனிமேலாவது யாராவது டக்குன்னு அதோட ஃபுல் ஃபார்ம் என்ன? என்று கே...

இந்த சுருக்க வார்த்தைகளின் விரிவாக்கம் தெரிந்தால் இனி நீங்களும் கெத்து காட்டலாம்?

நாம் அடிக்கடி பேச்சுவழக்கில் உபயோகிக்கும் சுருக்க வார்த்தைகளின் விரிவாக்கம். இனிமேலாவது யாராவது டக்குன்னு அதோட ஃபுல் ஃபார்ம் என்ன? என்று கேட்டால் அசால்ட்டாக சொல்லுங்கள்...

DP!

பேஸ்புக், வாட்ஸ்-அப், ட்விட்டர் என அனைத்து சமூக செயலிகளிலும் முகப்பு படம் ஒன்று வைத்திருப்போம். அது நாம் யார் என்பதை எடுத்துக் காட்டும் படமாக திகழ்கிறது.

இதை சுருக்கமாக DP என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்கள். மூச்சுக்கு முன்னூறு முறை டி.பி மாத்திட்டேன் என கூறும் நபர்களில் சிலருக்கு இதன் விரிவாக்கம் Display Picture என தெரிவதில்லை.

ROFL

சில சமயங்களில் நீங்கள் ஏதேனும் காமெடியான படம், வீடியோ, ஸ்டேட்ஸ் பகிர்ந்திருந்தாலோ, பல சமயங்களில் உங்கள் முகப்பு படத்திற்கு கீழேயும் இப்படி ROFL என கமெண்ட் செய்வார்கள்.

இதை விரிவாக்கம் Rolling On Floor Laughing. அதாவது விழுந்து, விழுந்து சிரிச்சேன் என்பார்கள் தானே, அப்படி!

DSLR

மச்சி அடுத்த மாசம் கோவா ட்ரிப் போறேன் உன்னோட DSLR கொடேன்... என்று பல நண்பர்கள் நச்சரிப்பார்கள். அல்லது, டேய் மச்சி டி.பி மாத்தி ரொம்ப நாள் ஆச்சு...

உன்னோட DSLR எடுத்துட்டு வாயேன்... நாலஞ்சு படம் எடுக்கலாம் நான் வேணும்னா மாடலா போஸ் தரேன் என டீசண்டாக கெஞ்சுவார்கள். இந்த DSLR-ன் விரிவாக்கம் Digital Single Lens Reflex.

OTP

நீங்கள் எங்க பண பரிமாற்றம் செய்தாலும், டிக்கெட்டுகள் புக் செய்தாலும் இந்த OTP உங்கள் மொபைல் எண் குறுஞ்செய்திக்கு வந்துவிடும்.

பலரும் இதை OTP என்றே கூறி பழகிவிட்டார்கள். இதன் விரிவாக்கம் என்ன என்று கேட்டால், புத்திசாலிகளே சில சமயம் தடுமாறலாம். ஏனெனில், இது நமது பழக்க தோசத்தில் ஒன்றாக மாரிவிட்டது. இதன் விரிவாக்கம் One Time Password.

AM / PM

பெரும்பாலும் மொபைல், கணினி, லேப்டாப், வ்ரிஸ்ட் வாட்சுகளில் AM / PM என்ற நேரத்தை காணும் நமக்கு இதன் விரிவாக்கம் என்னவென்று தெரியாது.

AM என்றால் Ante Meridiem, PM என்றால் Post Meridiem. Before Noon, After Noon என்பது போல. ரயில் நேரத்தின் படி நீங்கள் மணி பார்ப்பவராக இருந்தால் இது குறித்த குழப்பம் தேவையில்லை.

YOLO

பெரும்பாலும் யோ-யோ மக்கள் தான் இத்தகைய சுருக்க வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். YOLO என்றால் You Only Live Once என்பதாகும். நீ வாழும் வாழ்க்கை ஒரு முறையானது என்பதை இது குறிக்கிறது.

PEG

பெரும்பாலும் நாம் இணையத்தில் இருந்து ஒரு புகைப்படத்தை பதிவிறக்கம் செய்த, அதன் டீடெய்ல்ஸ்-ல் போய் பார்த்தல் Format என்ற இடத்தில் .JPEG என்று இருக்கும். இதன் விரிவாக்கம் Joint Photographic Experts Group என்பதாகும்.

அதேபோல சில சமயங்களில் வாட்ஸ்-அப்பில் GIF என்ற பெயரில் சிறிய வீடியோ போல சில பகிர்வுகள் வரும். இதன் விரிவாக்கம் Graphic Interchange Format ஆகும்.

BYE

Bye னா ஏன்ன? டாட்டா, See You சொல்ற மாதிரி ஒரு வார்த்தை தானே என்று தான் பலரும் எண்ணுகிறார்கள். ஆனால், BYE என்பதற்கும் ஒரு விரிவாக்கம் இருக்கிறது. BYE என்றால் Be With You Everytime என்ற விரிவாக்கம் இருக்கிறது. நான் எல்லா நேரத்திலும் உன்னுடன் இருப்பேன் என்பதை இது குறிக்கிறது.

ZIP

பல ஃபார்ம்களை ஃபில் செய்யும் போது நகரம் என்பதற்கு பக்கத்தில் ZIP என்ற பெட்டி இருக்கும் அங்கே நாம் வசிக்கும் இடத்தின் குறியீட்டு என்னை பதிவு செய்வோம். 600001, 641008, 560011 என ஒவ்வொரு நகரத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் இப்படி ஒரு குறியீட்டு என் இருக்கும். இதன் விரிவாக்கம் Zone Improvement Plan Code ஆகும்.
QR Code

பெரும்பாலும் முன்னே நாம் அறிந்தது Bar Code தான். சில வருடங்களுக்கு முன்னாள் தான் இந்த QR Code நமக்கு பரிச்சயம் ஆனது. எல்லா பொருளிலும், சில பில்களிலும் கூட இந்த Codeஐ நாம் காண முடியும். இதன் விரிவாக்கம் Quick Response Code.

GPS

GPS உதவியுடன் ஒருவர் எங்கே இருக்கிறார், எங்கே சென்றிருக்கிறார், அவர் எந்த திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறார் என அனைத்தையும் அறிந்துக் கொள்ள முடியும். பல போலீஸ் கதைகளில்...

டிவைஸ் ஒன்றை வில்லனுக்கு தெரியாமல் பேக் (Bag) உள்ளே வைத்து... அது பயணிக்கும் திசை கொண்டு ஹீரோ விரட்டுவார். இதன் விரிவாக்கம் என்னவெனில், Global Positioning System.

0 coment�rios:

சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் ஜேம்ஸ் வசந்தன். பிரபல இசையமைப்பாளர். இவருடைய மனைவி சுகந்தி. இவர், கடந்த 2014-ம் ஆண்டு அடையாறு மகளிர் போலீஸ் ந...

ஜேம்ஸ் வசந்தன் இப்படி பட்டவரா..

சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் ஜேம்ஸ் வசந்தன். பிரபல இசையமைப்பாளர். இவருடைய மனைவி சுகந்தி. இவர், கடந்த 2014-ம் ஆண்டு அடையாறு மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்தார்.

அதில், வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தும் ஜேம்ஸ் வசந்தன், தன்னையும், குழந்தைகளையும் கொடுமைப்படுத்துவதாக கூறி இருந்தார். இதுபற்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஆலந்தூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். குற்றப்பத்திரிகை நகலை பெற நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஜேம்ஸ் வசந்தனுக்கு ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஆலந்தூர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு சுல்தான் ஆரிபீன் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி, ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டை பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு சுல்தான் ஆரிபீன் உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கை வருகிற ஏப்ரல் மாதம் 10-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். 

0 coment�rios:

திராட்சையை கருப்பு, சிவப்பு மற்றும் பச்சை நிறம் போன்ற நிறங்களின் அடிப்படையில் 3 வகைகள் உள்ளது. இந்த மூன்று வகை திராட்சைகளிலுமே நம் ஆரோக்கிய...

ஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்

திராட்சையை கருப்பு, சிவப்பு மற்றும் பச்சை நிறம் போன்ற நிறங்களின் அடிப்படையில் 3 வகைகள் உள்ளது. இந்த மூன்று வகை திராட்சைகளிலுமே நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்கள் நிறைந்துள்ளது.

அதிலும் கருப்பு நிற திராட்சையை அன்றாடம் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
கருப்பு திராட்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

    கருப்பு திராட்சையில் உள்ள பாலிஃபீனால்கள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அல்சைமர் நோய் வராமல் தடுக்கிறது.

    மார்பக புற்றுநோய் மற்றும் இதர வகை புற்றுநோய்களையும் எதிர்த்து போராடி புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.

    செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வயிற்றில் ஏற்படும் எரிச்சல், வயிற்று உப்புசம், அஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

    கருப்பு திராட்சை யூரிக் அமில அளவைக் குறைத்து, சிறுநீரகங்களில் கொடுக்கப்படும் அழுத்தத்தில் இருந்து விடுவித்து, சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

    அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுத்து, கழிவுகள் எளிதில் உடலில் இருந்து வெளியேற உதவுகிறது.

    ஒற்றைத் தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் பெற, கருப்பு திராட்சையைக் கொண்டு ஜூஸ் தயாரித்து, காலையில் குடிக்க வேண்டும்.

    தினமும் ஒரு டம்ளர் கருப்பு திராட்சை ஜூஸ் அல்லது ஒரு கையளவு கருப்பு திராட்சையை சாப்பிட்டு வந்தால், கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

    சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு கையளவு கருப்பு திராட்சையை சாப்பிட்டு வந்தால், அது ரத்த சர்க்கரை அளவைக் குறைத்து, சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும்.

    ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைத்து, கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டுடனும், சீராகவும் வைத்துக் கொள்ளும்.

    சரும செல்களை ஆரோக்கியமாக பாதுகாத்து, முதுமைத் தோற்றம், வறட்சியான சருமம் வறண்டு, மென்மையிழந்து அசிங்கமாக இருக்கும் தோற்றம் ஆகிய பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

    கருப்பு திராட்சை விதைகளை அரைத்து, அதனை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் அலச வேண்டும். இதனால் முடி உதிர்வு, பொடுகு பிரச்சனை ஏற்படாது.

0 coment�rios:

நடிகர் ரஜினி என்பதை தாண்டி அரசியல்வதியாக உருவெடுக்க தொடங்கியுள்ளார் ரஜினிகாந்த். அரசியல் களத்துக்கு என்று வந்துவிட்டால் நாட்டில் நடக்கும் வ...

பெண்களுக்கு எதிரான கொலைகளுக்கு ரஜினியின் ரியாக்க்ஷன் இதுதானா !

நடிகர் ரஜினி என்பதை தாண்டி அரசியல்வதியாக உருவெடுக்க தொடங்கியுள்ளார் ரஜினிகாந்த். அரசியல் களத்துக்கு என்று வந்துவிட்டால் நாட்டில் நடக்கும் விஷயங்களுக்கு கருத்து தெரிவிக்க வேண்டும் என்பது பண்பு.

ஆனால் ரஜினி அவர்கள் அவ்வப்போது மீடியா எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் போவது எந்தவித நாகரிக அரசியல் என்பது புரியவில்லை. இன்று காலை ரஜினிகாந்த் இமயமலைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது பத்திரிக்கையாளர்கள் ஏர்போர்ட்டில் ரஜினிகாந்திடம், சமீபத்தில் அரங்கேறிய பெண்களுக்கு எதிராக நடக்கும் கொலைகளை பற்றி கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்றுள்ளார்.

ரஜினியின் இந்த செயல் வருத்தமளிக்கும் வகையில் உள்ளது என்று சமூகவலைத்தளத்தில் பேசப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

0 coment�rios:

பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் மாஸ் படம் காலா. நடிப்பில் நடித்திருக்கும் இந்த படத்தின் டீஸர் அண்மையில் வெளியாக ரசிகர்களும் கொண்டாடின...

பா. ரஞ்சித் அடுத்த இந்த பிரபல நடிகருடன் இணைகிறாரா?- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் மாஸ் படம் காலா. நடிப்பில் நடித்திருக்கும் இந்த படத்தின் டீஸர் அண்மையில் வெளியாக ரசிகர்களும் கொண்டாடினர்.

படமும் வரும் ஏப்ரல் ரிலீசாக இருப்பதாக தயாரிப்புக் குழு அறிவித்துள்ளனர். அடுத்து ரஞ்சித் எந்த நடிகருடன் இணைய போகிறார் என்ற தகவல் வந்துள்ளது.

அதாவது கார்த்தியை வைத்து மெட்ராஸ் என்ற மாபெறும் வெற்றி படத்தை கொடுத்து ரஞ்சித் தன்னுடைய அடுத்த படத்திலேயே சூர்யாவுடன் இணைய முடிவு செய்தாராம். ஆனால் நடுவில் ரஜினி பட வாய்ப்பு வந்ததால் அந்த வேலைகளில் இறங்கியிருக்கிறார்.

காலா படத்திற்கு பிறகு சூர்யாவை வைத்து படம் இயக்குவார் என்று கூறப்படுகிறது

0 coment�rios:

கோடைக்காலம் தொடங்கிவிட்டது. இவ்வளவு நாள் சாந்தமாக இருந்த சூரியன் உக்கிரம் காட்டத் தொடங்கிவிட்டது. இளநீர் கடைகள், ஜூஸ் கடைகளில் கூட்டம் மொய்...

கூல்ட்ரிங்க்ஸ் கடைகளில் விற்கப்படும் 'ஃப்ரூட் மிக்சர்' குடிக்கத்தகுந்த பானம்தானா?

கோடைக்காலம் தொடங்கிவிட்டது. இவ்வளவு நாள் சாந்தமாக இருந்த சூரியன் உக்கிரம் காட்டத் தொடங்கிவிட்டது. இளநீர் கடைகள், ஜூஸ் கடைகளில் கூட்டம் மொய்க்கிறது. புதிது புதிதாகத் தள்ளுவண்டிகளில் ஜூஸ் கடைகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. கூல்ட்ரிங்க்ஸ் கடைகளும் ஆங்காங்கே தோன்றுகின்றன. பல கூல்ட்ரிங்க்ஸ் கடைகளில், செக்கச்சிவப்பு வண்ணத்தில் 'ஃப்ரூட் மிக்சர்'  என்ற பானத்தை விற்பனை செய்கிறார்கள்.  பெரும்பாலானோரின் விருப்பத்துக்குரிய பானமாக அது மாறியிருக்கிறது.

வாழைப்பழத்தைக் கொண்டு செய்யப்படும் இந்த ஃப்ரூட் மிக்சரில் உடலுக்குக் கெடுதல் செய்யும் பல பொருள்கள் சேர்க்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து விரிவாகப் பேசினார் சித்த மருத்துவர் செந்தில் கருணாகரன்.

" பெரும்பாலும் இந்தப் பானத்தில் வாழைப்பழம்தான் இருக்கும். பெயருக்கு, கொஞ்சம் அன்னாசிப்பழம், திராட்சை, சிறிதளவு ஆப்பிள் சேர்ப்பார்கள். வாழைப்பழத்தைக் கரைத்து பிற பழங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டிச் சேர்ப்பார்கள். கூடவே, சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. இனிப்புக்கு 'சாக்ரின்'  எனப்படும் செயற்கை இனிப்பூட்டி பயன்படுத்துகிறார்கள். ஒரு கிலோ சீனி தருகிற இனிப்பை, இந்த இனிப்பூட்டி ஒரு சிட்டிகையிலேயே கொடுத்துவிடும்.  ஆனால், இது வயிற்றுக்கு மிகவும் கேடு விளைவிக்கும். வாய் வெந்துபோகும்.    'சாக்ரீன்' கலந்த பானத்தைக் குடித்த சில நிமிடங்களிலேயே நம் உடலில் இன்சுலின் உற்பத்தியாக ஆரம்பித்துவிடும். தேவையில்லாத நேரத்தில் உற்பத்தியாவதால், தேவைப்படும்போது அதன் உற்பத்தி குறைந்துவிடும். இதனால் சர்க்கரைப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சிலர் சுவைக்காக இதனுடன் பாதாம்பால் சேர்ப்பார்கள். இரண்டையும் கலந்து குடிக்கும்போது வயிற்றுக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளன.

இது மட்டுமின்றி, இந்த பானத்தில் வீரியமுள்ள ஒருவகை எசன்ஸ் சேர்க்கிறார்கள். அதுதான் இந்தப் பானத்தின் வாசனைக்குக் காரணம். ஆனால், அதுவும் உடலுக்குக் கேடுவிளைவிக்கக் கூடியது. அதைவிட ஆபத்தானவை செயற்கை நிறமூட்டிகள். நம் உணவுப்பண்டங்களில் மருத்துவர் செந்தில் கருணாகரன்சேர்ப்பதற்காகவே ஏறத்தாழ 1000-த்துக்கும் மேற்பட்ட செயற்கை நிறமூட்டிகள் உள்ளன.  இந்த நிறமூட்டிகளைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட உணவுகள் செரிமானக்கோளாறை ஏற்படுத்தும். நரம்புக் கோளாறுகள், தோல் சம்பந்தமான பிரச்னைகளும் உண்டாகும். வாந்தி, குமட்டலையும் ஏற்படுத்தும்.மேலும் செயற்கை நிறமூட்டிகள் கலந்த உணவுகள் நம் குடலுக்குள் அப்படியே தங்கிவிடும் . இது குடலின் உட்கிரகிப்புத்தன்மையை குறைத்துவிடும்.

ஒவ்வொரு பழத்திலும் இயற்கையாக சர்க்கரை இருக்கிறது. உதாரணமாக ஆப்பிளில் 'மால்டோஸ்' என்னும் சர்க்கரைப் பொருள் இருக்கிறது. இதனுடன் வெள்ளைச் சர்க்கரையோ, சாக்ரீனோ கலக்கும்போது அதனுடைய உண்மையான பலன் கிடைக்காது. அதேபோல், ஒவ்வொரு பழத்துக்கும் இனிப்பு,புளிப்பு, துவர்ப்பு என தனித்தனிச் சுவை இருக்கிறது. தனித்த சத்துகளையும். உடையது. ஒவ்வொரு பழத்தையும் தனியாகச் சாப்பிட்டால்தான் அதற்குரிய பலன் கிடைக்கும்.  அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சாப்பிடும்போது அஜீரணக் கோளாறுதான் உண்டாகும்.

பொதுவாக, இதுபோன்ற பானங்களைத் தவிர்த்து, பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்துக்கு நல்லது. அப்படிச் சாப்பிட்டால் பழங்களில் உள்ள நார்ச்சத்து முழுமையாகக் கிடைக்கும். அல்லது வீட்டுக்குப் பழங்களை வாங்கிச்சென்று ஜூஸாக்கி, சர்க்கரை சேர்க்காமல் குடிக்கலாம்.

வெள்ளைச் சர்க்கரையை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது. பனங்கற்கண்டு, பனை வெல்லம், நாட்டு வெல்லம் பயன்படுத்தலாம், எழுமிச்சம்பழம், புதினா, பனங்கருப்பட்டி கலந்த பானத்தை தாகம் எடுக்கும் தருணங்களில் அருந்தலாம்.   இளநீர், தாளித்த நீர்மோர் அருந்துவதும் நல்லது. " என்கிறார் அவர்.

0 coment�rios:

பிரபு தேவா தமிழில் தொடர்ந்து நிறைய படங்கள் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் அடுத்து மெர்குரி என்ற திகில் படம் வெளியாக இருக்கிறது, படத்த...

முன்னணி நடிகரை இயக்கும் பிரபுதேவா- ரசிகர்கள் எதிர்ப்பார்த்த சூப்பர் தகவல்

பிரபு தேவா தமிழில் தொடர்ந்து நிறைய படங்கள் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் அடுத்து மெர்குரி என்ற திகில் படம் வெளியாக இருக்கிறது, படத்திற்கான டீஸரும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

கடந்த சில நாட்களாக பிரபு தேவா அடுத்து அஜித்தை வைத்து படம் இயக்க போகிறார் என்று நிறைய தகவல்கள் வந்துவிட்டது. அவர் நிஜமாக ஒரு புதிய படம் இயக்குகிறார், ஆனால் தமிழில் இல்லை பாலிவுட்டில்.

சல்மான் கான், சோனாக்ஷியை வைத்து தான் புதிய படம் இயக்குகிறாராம். அர்பாஸ் கான் தயாரிக்கும் இப்படம் பற்றிய வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.

0 coment�rios: