Home Top Ad

அப்போலோ 11 மிஷனின் ஒரு பகுதியாக நிலவின் மேற்பரப்பில் கால்பதித்த முதல் மனிதன் என்ற சாதனையை நீல் ஆம்ஸ்ட்ராங் செய்த 50வது ஆண்டு இது ஆகும். ஆம்...

இதுவரை நிலவில் கால்பதித்தவர்கள் யார் யார் தெரியுமா?

அப்போலோ 11 மிஷனின் ஒரு பகுதியாக நிலவின் மேற்பரப்பில் கால்பதித்த முதல் மனிதன் என்ற சாதனையை நீல் ஆம்ஸ்ட்ராங் செய்த 50வது ஆண்டு இது ஆகும்.

ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஷ்

ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஷ் ஆல்ட்ரின் ஆகிய இருவரும், ப்ளோரிடாவின் கேப் கென்னடி தளத்திலிருந்து 100 மணி நேரம் பயணித்து 20 ஜூலை 1969 அன்று நிலவின் மேற்பரப்பில் கால்பதித்த அந்த தருணம், "மனிதனின் ஒரு சிறு அடி, மனிதகுலத்தின் மிகப்பெரிய பாய்ச்சலுக்கு வழிவகுக்கும்" என்ற அழிவில்லா பொன்மொழிக்கு காரணமாக அமைந்தது.

முழுமையான தகவல்கள் இதோ

இவர்கள் மட்டுமே நிலவில் கால்பதித்த அந்த சாதனையை செய்தவர்கள் அல்ல. அவர்களுக்கு தொடர்ந்து பலரும் நிலவில் கால்பதித்துள்ளனர். ஆனால் எத்தனை பேர் நிலவில் தரையிறங்கியுள்ளனர்?. அதைப்பற்றிய முழுமையான தகவல்கள் இதோ.

நிலவில் கால்பதித்தவர்கள் யார்?

ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் உள்ளிட்ட மொத்தம் 12 விண்வெளி வீரர்கள் நிலவில் கால்பதித்துள்ளனர். மற்ற 10 பேரும் 1969 முதல் 1972 வரை நடைபெற்ற நாசாவின் மற்ற 5 விண்வெளி பயணங்களின் போது நிலவிற்கு சென்றுள்ளனர்.

இந்த மிஷன்கள் அனைத்தும் அப்போலோ 12, அப்போலோ 14, அப்போலோ 15, அப்போலோ 16 மற்றும் அப்போலோ 17 திட்டங்களின் கீழ் நடைபெற்றன.

நிலவில் கால்பதித்த நபர்கள் யார் யார்?

பின்வரும் விண்வெளி வீரர்கள் தான் மனிதகுலத்திற்கு விண்வெளியில் பெரும் பாய்ச்சலை வழங்கியுள்ளனர்.

* நீல் ஆம்ஸ்ட்ராங் - அப்போலோ11, 1969

*பஷ் ஆல்ட்ரின் - அப்போலோ11, 1969

*பீட்டே கான்ராட் - அப்போலோ12, 1969

*ஏலன் பீன் - அப்போலோ12, 1969

*ஏலன் ஷெப்பர்ட் - அப்போலோ14, 1971

*எட்கர் மிட்சல் - அப்போலோ14, 1971

*டேவிட் ஸ்காட் - அப்போலோ15, 1971

*ஜேம்ஸ் இர்வின் -அப்போலோ15, 1971

*ஜான் யங்- அப்போலோ16, 1972

* சார்லஸ் டுயூக் - அப்போலோ16, 1972

*ஜீன் செர்னான் - அப்போலோ17, 1972

* ஹாரிசன் ஸ்மிட் - அப்போலோ17, 1972

நிலவில் வெற்றிக்கொடி நாட்டிய நாடுகள்

அமெரிக்கா, முந்தைய சோவியத் யூனியன் மற்றும் சீனா ஆகிய நாடுகள் நிலவில் இதுவரை தரையிறங்கியுள்ள நிலையில், அவற்றில் சமீபத்தில் 2013ஆம் ஆண்டு சீனா நிலவில் கால்பதித்தது.

ஆர்டிமிஸ் என்ற புதிய திட்டத்தின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டுகளில் ஒரு பெண் விண்வெளி வீராங்கனையை நிலவில் கால்பதிக்கச் செய்ய நாசா உறுதியேற்றுள்ளது.

நாசா நிர்வாகி ஜிம் பிரையன்ஸ்டீன்

புதியதலைமுறையின் இளம் பெண்கள் விண்வெளி துறையில் பணியாற்றும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், விரைவில் விண்வெளி வீராங்கனை ஒருவரை நிலவில் கால்பதிக்க வைப்பதை குறிக்கோளாக கொண்டிருப்பதாக நாசா நிர்வாகி ஜிம் பிரையன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கு மனிதர்கள்

செவ்வாய்க்கு மனிதர்கள்

வாஷிங்டன் டிசி.யில் கடந்த செவ்வாயன்று நடைபெற்ற 'செவ்வாய்க்கு மனிதர்கள் " என்ற கருத்தரங்கில் பிரையன்ஸ்டீன் கூறியதாவது," எனக்கு 11 வயதான மகள் உள்ளார். அவர் தற்போதைய மிகவும் வேறுபட்ட விண்வெளி வீரர்கள் இதை பார்க்கும் அதே வழி யிலேயே, தன்னை பார்க்க வேண்டும் என நான் விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

வரலாற்றை திரும்பி பார்த்தால்....

"நாம் நிலவில் தரையிறங்கிய வரலாற்றை திரும்பி பார்த்தால், 1960 மற்றும் 1970 களில் போர் விமானிகளே விண்வெளி வீரர்களாக பயணித்துள்ளனர் மற்றும் இன்னும் அப்போதிருந்து பெண்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே இந்த புதிய திட்டம் மூலம் எனது மகள் போன்ற புதிய தலைமுறை இளம் பெண்கள், இதுவரை மற்ற பெண்கள் நினைத்து பார்க்க கூட முடியாத வழியில் தங்களை பார்க்க முடியும்" என கூறினார் ஜிம்.

0 coment�rios:

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் தீபாவளிக்கு பிகில் படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் பிகில் படத...

விஜய்யின் பல கோடி மதிப்பிலான ஹாலிவுட் படம் என்ன ஆனது தெரியுமா?

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் தீபாவளிக்கு பிகில் படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் பிகில் படத்தின் சிங்கிள் ட்ராக் இன்று மாலை வெளிவர, விஜய் ரசிகர்களுக்கு ஒரு அப்டேட் கிடைத்துள்ளது.

அது வேறு ஒன்றுமில்லை, பி.வாசு விஜய்-சோனம்கபூரை வைத்து ஒரு ஹாலிவுட் படம் இயக்குவதாக இருந்தார்.

அந்த படம் பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை, அதுக்குறித்து விசாரித்த போது, விஜய் அந்த படத்தில் நடிப்பதாக இருந்தாலும், அந்த தயாரிப்பாளர் மீது ஒரு சந்தேகம் இருந்ததாம்.

இதனால் வாசு அந்த தயாரிப்பாளரை பார்க்க அமெரிக்கா செல்ல, பிறகு தான் தெரிந்தது, இவர்களை வைத்து தான் அவர் பைனான்ஸ் பணம் ரெடி பண்ணப்போகிறார் என்று, அதனால், அந்த படம் ட்ராப் ஆனதாக வாசு கூறியுள்ளார்.

0 coment�rios:

நேர்கொண்ட பார்வை தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பலரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். ஏனெனில் அஜித் நீண்...

நேர்கொண்ட பார்வை படம் குறித்து வெளிவந்த முதல் விமர்சனம், படம் எப்படி இருக்கு?

நேர்கொண்ட பார்வை தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பலரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

ஏனெனில் அஜித் நீண்ட இடைவேளைக்கு பிறகு கதையின் நாயகனாக எந்த ஒரு மாஸ் இல்லாமல் நடித்துள்ளார்.

இப்படத்தை வாங்க பல தயாரிப்பாளர்கள் போட்டிப்போட, அதில் ஒருவராக நட்புனா என்னானு தெரியுமா தயாரிப்பாளர் ரவீந்திரனும் ஒருவர்.

இவருக்கு இந்த படம் கிடைக்கவில்லை என்றாலும், படம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இதில் ‘நேர்கொண்ட பார்வை படத்தை நான் வாங்க முயற்சி செய்தது உண்மை தான், ஆனால், எனக்கு தகுதி இல்லை என்று அவர்கள் நினைத்துவிட்டார்கள்.

எது எப்படியோ எனக்கு மிகவும் நம்பகமான சோர்ஸிலிருந்து கிடைத்த தகவல் நேர்கொண்ட பார்வை படம் செம்ம அல்டிமேட்-ஆக உள்ளது, தல ரசிகர்கள் தாண்டி அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும்’ என கூறியுள்ளார்.

0 coment�rios: