Home Top Ad

‘இவரு மட்டும் மாட்டேன்னு சொல்லியிருந்தா இந்தப்படத்தையே எடுத்திருக்க மாட்டேன்’ என்று ஒவ்வொரு பிரஸ்மீட்டிலும் யாராவது ஒரு நடிகரை புகழ்ந்து வை...

பசுபதி இல்லேன்னா இந்தப்படமே இல்ல! -டைரக்டர் சரண்டர்!

‘இவரு மட்டும் மாட்டேன்னு சொல்லியிருந்தா இந்தப்படத்தையே எடுத்திருக்க மாட்டேன்’ என்று ஒவ்வொரு பிரஸ்மீட்டிலும் யாராவது ஒரு நடிகரை புகழ்ந்து வைப்பார்கள் இயக்குனர்கள். கடைசியில் படத்தை பார்த்தால், அந்த நடிகர் நடிக்காமலிருந்தால் கூட இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே என்று தோன்றும். ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ படத்திலும் அப்படியொரு புகழ்ச்சி.

தன்னை நோக்கிய அந்த புகழ்ச்சியை தக்க வைத்துக் கொள்வாரா பசுபதி?

‘ஒரு பேச்சுக்கெல்லாம் சொல்லல. நிஜமாகவே இந்தப்படத்தில் பசுபதியின் பர்பாமென்ஸ் பிரமாதம்’ என்று பேச ஆரம்பித்தார் அ.இ.சா படத்தின் இயக்குனர் அவினாஷ் ஹரிகரன். அதிலும் கொஞ்சம் உண்மை இருக்கதான் செய்கிறது. வதவதவென படங்களில் நடித்துத் தள்ளுபவரல்ல பசுபதி. அவர் மனசுக்கு ஒட்டாத படங்களை, இடது கையால் புறம் தள்ளிவிட்டு குப்புறடித்து தூங்கக் கூட செய்கிற ஆள்தான்.

இதுவரைக்கும் 30 படங்களுக்கு மேல் விநியோகம் செய்திருக்கும் ஆரா சினிமாஸ் நிறுவனம்தான் இந்தப்படத்தை முதன் முறையாக தயாரித்திருக்கிறது. இந்த 30 படத்திலும் ஆரா நிறுவனம் கற்றுக் கொண்டது என்ன தெரியுமா? ஆடியன்ஸ் எதை சொன்னா ரசிப்பான். எதை சொன்னா ரசிக்க மாட்டான் என்பதை. “இந்தப்படத்தை நான் தயாரிக்க காரணமே அந்த கணக்குதான்” என்றார் ஆரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ்.

‘சரி… இது முழு நீள அரசியல் படமா?’ என்றால், “ஐயய்யோ. அதெல்லாம் இல்ல” என்கிறார் இயக்குனர் அவினாஷ். மூன்று பேரின் வாழ்வில் ஒரு அரசியல்வாதி ஏற்படுத்துகிற திருப்பம் என்னவாக முடிகிறது என்பதுதானாம்.

படம் மட்டும் நல்லாயில்லேன்னா, வீட்டுக்கு ஆட்டோவ அனுப்பிர வேண்டியதுதான்!

0 coment�rios:

சமயங்களில், பூட்டிய அறைக்குள் இருப்பது கன்னுக்குட்டி என்று நினைத்திருப்போம். கதவை திறந்தால் காட்டு யானை பிளிரும்! அப்படியொரு முரட்டுப்படம்த...

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன / விமர்சனம் - பளபளப்பை பாராட்டி விடுவோம்!

சமயங்களில், பூட்டிய அறைக்குள் இருப்பது கன்னுக்குட்டி என்று நினைத்திருப்போம். கதவை திறந்தால் காட்டு யானை பிளிரும்! அப்படியொரு முரட்டுப்படம்தான் ம.பா.ம.எ! துருவா, ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா, சரண்யா பொன்வண்ணன் என்று சல்லி விலையில் கிடைக்கும் திருவிழா ரிப்பன்கள்தான் இப்படத்தின் தாம்பு கயிறுகள். பார்த்தால்… தியேட்டரை விட்டு எழுந்து ஓட விடாமல் இறுக்கிக் கட்டுகிறார்கள். ஆஹா…!

வயதான மற்றும் திருமணமான பெண்களிடம் தாலியறுக்கும் தடியன்கள் சிலர். இந்த துயரத்தில் சிக்குகிற ஹீரோ அந்த கும்பலை கண்டறிந்து எப்படி வேரறுக்கிறான் என்பதுதான் கதை. பின்புலத்தில் தங்க மாஃபியா பற்றிய ஏராளமான டீட்டெயில்கள். கடைசியில் தங்கம் யார் கைக்கு போகிறது என்பதை அறியும்போது, ‘அடப்பாவிகளா, எவனைதான் நம்ப சொல்றீங்க?’ என்று அதிர்ச்சியாகிறோம்.

சுமார் நான்கு படங்களிலாவது நடித்திருப்பார் இப்படத்தின் ஹீரோ துருவா. இன்னமும் மனசுக்குள் ஒட்டாத முகம். அழுத்தமான காட்சிகளில் நடிக்க அநியாயத்துக்கு முக்குகிறார். பேஸ்கட்டு கவுத்தாலும், ஓங்குதாங்கான அவரது உடற்கட்டு ஆக்ஷன் காட்சிகளில் துவம்சம் பண்ணுகிறது. படத்தில் இவர் குறித்த சஸ்பென்சை முன்பே யூகிக்க முடிவதும் கூட சற்றே சப்!

படத்தின் முதுகெலும்பே சரண்யா பொன்வண்ணனின் நடிப்புதான். எந்த அழகான பெண்ணை பார்த்தாலும், ‘என் புள்ளைய கட்டிக்கிறீயா?’ என்று அப்பாவியாக கேட்டு அலற விடுகிறார் அவர்களை. வெகு தூர கோவில்களை இலவச தரிசனம் செய்ய அவர் போடும் தந்திரத் திட்டங்கள், ஜாலியாக்குகிறது தியேட்டரை. அவ்வளவு சந்தோஷமும் புறாக் கூட்டுக்குள் பூகம்பம் வந்தது போல நொறுங்கும் போது, தியேட்டரும் சப்தநாடியை அடக்கிக் கொள்கிறது.

பிக்பாஸ்2 ல் கலக்கிக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா தத்தா இதில் ஒரு ஹீரோயின். அழகு இருக்கிறதே ஒழிய, நடிப்பு நாலு பைசாவுக்கு கூட நம்பும்படி இல்லை. அதுவும் திடீரென இவர் போலீஸ் ஆகி, ஃபுல் சல்யூட் அடிப்பதெல்லாம் ட்ராமா!

மற்றொரு ஹீரோயின் அஞ்சனாவுக்கு சற்றே வெயிட் ரோல். நம்பியவர்களை நட்டாற்றில் விடவில்லை இவர்! அந்த வில்லன் கூட்டத்தில் அறம் படத்தில் நடித்த ராமச்சந்திரனின் நடிப்பு தனி கவனம் பெறுகிறது. ராதாரவிக்கு ஒரு நாள் கால்ஷீட்தான் போல. வந்தவரைக்கும் பெடல் மிதித்துவிட்டு போகிறார்.

பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு மனசை ரம்மியமாக்குகிறது. சண்டைக்காட்சிகளில் ஸ்பெஷல் மெனகெடல். பலே. இசை அச்சு. இன்னும் நாலைந்து முறை கேட்டால் பாடல்கள் மனசில் நிற்குமோ என்னவோ?

செயின் பறிப்பு திருடர்கள் பற்றிய டிக்ஷனரியாகவே ஒரு படம் வந்தது. ‘மெட்ரோ’! அப்படத்தின் ‘கவரிங்’தான் இப்படம் என்றாலும், பெண்களுக்கு விழிப்புணர்வை தந்திருக்கிறதே!

வேறு வழியேயில்லை… இயக்குனர் ராகேஷின் முயற்சியால் கிடைத்த இந்த  இமிடேஷன் பளபளப்பை பாராட்டி விடுவோம்!

0 coment�rios:

கமல்ஹாசன் நடித்து இயக்கிய படம் விஸ்வரூபம்-2. இப்படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் அடைந்த வெற்றியை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. ...

அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல் மார்க்கெட் இப்படியானதே!

கமல்ஹாசன் நடித்து இயக்கிய படம் விஸ்வரூபம்-2. இப்படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் அடைந்த வெற்றியை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

இந்நிலையில் விஸ்வரூபம்-2 படத்திற்கு பெரியளவில் எதிர்ப்பார்ப்பு இல்லை, ஆனால், கமல் இந்தியா முழுவதும் இப்படத்தை ப்ரோமோட் செய்தார்.

அப்படியிருந்தும் இப்படம் தற்போது வரை மொத்தம் ரூ 50 கோடி தான் வசூல் செய்துள்ளதாம், இதில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ 30 கோடி வசூல் செய்துள்ளது.

இதனால், பல இடங்களில் விஸ்வரூபம்-2 கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது, சமீபத்தில் வந்த கடைக்குட்டி சிங்கமே ரூ 50 கோடியை தாண்டி தமிழகத்தில் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி கமல் மார்க்கெட் அதளபாதளத்திற்கு செல்ல அவரின் அரசியல் எண்ட்ரீ ஒரு காரணமா என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

0 coment�rios:

மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்தோனேஷியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பயங்கர நிலநடுக்கம் ...

இந்தோனேஷியாவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்; பீதியில் பொதுமக்கள்!

மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இந்தோனேஷியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இரண்டு முறை நிலநடுக்கத்தால் தொடர் நில அதிர்வுகள் ஏற்பட்டு, மக்களை அச்சுறுத்தின.

ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த சூழலில் இன்று காலை சும்பவா பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5ஆக பதிவானது.

இந்நிலையில் இன்று இரவு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9ஆக பதிவாகியுள்ளது. இதனால் ஏராளமான கட்டடங்கள் குலுங்கின.

0 coment�rios: