Home Top Ad

‘ஆனந்த யாழை மீட்டுகிறேன்’ பாடலை விட ஒரு உசரமான பாடல், ராம்- நா.முத்துகுமார் காம்பினேஷனில் இனி வரப்போவதில்லை. தன் முதல் படத்திலிருந்தே நா.மு...

நா.முத்துகுமார் இடம்! மனைவியை வைத்து நிரப்பிட்டீங்களா ராம்?

‘ஆனந்த யாழை மீட்டுகிறேன்’ பாடலை விட ஒரு உசரமான பாடல், ராம்- நா.முத்துகுமார் காம்பினேஷனில் இனி வரப்போவதில்லை. தன் முதல் படத்திலிருந்தே நா.முத்துகுமாரின் தோழனாகிவிட்ட இயக்குனர் ராம், யுவன் -நா.மு காம்பினேஷனுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்.

தனக்கு விருது கொடுத்து கவுரவித்த ஆனந்தவிகடன் மேடையிலேயே ‘நா.முத்துகுமாருக்கு ஏன்யா விருது கொடுக்கலே?’ என்று சண்டைப்போட்ட இந்த சாக்லெட் தோழர், அவரில்லாத சினிமாவை எப்படி எதிர்கொள்வார்?

சின்ன வயதிலேயே இந்த உலகத்தை விட்டுப் போன கவிஞர் நா.முத்துகுமாரை திரையுலகம் ஒவ்வொரு நாளும் நினைத்துக் கொள்ளும் என்றாலும், ராம் நிறையவே நினைக்கிறார். ‘பேரன்பு’ படத்தில் நா.முத்துகுமார் இல்லையே என்கிற கவலை அவரை வாட்டி எடுப்பதை புரிந்து கொள்ளவும் முடிகிறது. நா.முத்துகுமார் இடத்தை நிரப்ப யாராலும் முடியாது என்று அந்த விழா மேடையிலேயே சொன்னவரை நோக்கி ஒரு கேள்வியை கேட்கிறார்கள் ரசிகர்கள்.

“ஆமாம்… அவரு இடத்தை யாராலும் நிரப்ப முடியாதுதான். அதற்காக யானைக்கு போர்த்திய அம்பாரியில வடகம் காய வச்சுட்டீங்களே வாத்யாரே…” என்கிறார்கள் அவர்கள்.

ஏன் இப்படி புலம்பணும்?

வேறொன்றுமில்லை. இந்தப்படத்தில் நா.முத்துகுமார் எழுதுகிற அளவுக்கு வெயிட்டான ஒரு பாடலை இயக்குனர் ராமின் மனைவி சுமதியே எழுதிவிட்டாராம்.

0 coment�rios:

தமிழ் சினிமாவை பொறுத்த வரை காலம் காலமாக ஹீரோ புகழ் பாடுவது, ஹீரோயின் மரத்தை சுற்றி ஆடுவது என்பது மாற்ற முடியாத கலாச்சாரமாக இருந்தது. ஹாலிவு...

தமிழ்ப்படம் 2 திரைவிமர்சனம் - ஒரு முறைக்கு மேல் ரிப்பீட் அடிக்க முடியாது.

தமிழ் சினிமாவை பொறுத்த வரை காலம் காலமாக ஹீரோ புகழ் பாடுவது, ஹீரோயின் மரத்தை சுற்றி ஆடுவது என்பது மாற்ற முடியாத கலாச்சாரமாக இருந்தது. ஹாலிவுட்டில் எல்லாம் தரமான படங்களை கூட ஸ்கேரி மூவி என்ற பெயரில் கிழித்து தொங்கவிடுவார்கள்.

ஆனால், தமிழில் தங்களுக்கே தெரியாமல் 1 கிலோமீட்டருக்கு தாண்டுவது, பாலத்தில் இருந்து குதிப்பது என்று ஹீரோக்கள் பல சேட்டைகள் செய்ய, அதை தன் ஸ்டைலில் வைத்து செய்ய அமுதன் இயக்கிய படம் தான் தமிழ் படம், இப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இந்த முறை அதிக கண்டெண்டுடன் களம் இறங்கியுள்ளது தமிழ் படம்-2, இதுவும் முதல் பாகத்தை போல் ரசிகர்களை கவர்ந்ததா? பார்ப்போம்.

கதை:

தமிழ் படத்தில் கதை என்று என்ன சொல்வது. பல படத்தின் காட்சிகளின் தொகுப்பு தான் தமிழ் படம்2.

போன முறை டி என்ற வில்லனை தேடி செல்லும் சிவா இந்த முறை வில்லன் பி யை தேடி செல்கின்றார். அந்த பி யை சிவா பிடித்தாரா என்பதை பல படங்களை பங்கம் செய்து கலாய்த்துள்ளார் சி.எஸ்.அமுதன்.

படத்தை பற்றிய அலசல்

சிவா சிவா சிவா ஒன் மேன் ஆர்மியாக மிரட்டியுள்ளார். படம் முழுவதையும் இவர் ஒருத்தரே தாங்கி நிற்கின்றார். சிவா நடந்தால் சிரித்தால் ஏன் கை அசைத்தால் கூட ஆடியன்ஸிடம் விசில் பறக்கின்றது.

படத்தில் பல படங்களை கலாய்ப்பது தான் கான்செப்ட் என்றால் படத்தின் முதல் காட்சியில் டிபேட்டில் தமிழிசையை காலை வாருவதில் இருந்து ஹெச்.ராஜாவை சோத்துக்கு வந்தேன் என சொல்ல வைப்பது, அதோடு சின்னம்மா சபதம் பன்னீர் செல்வம் சத்தியம் என அரசியல் அட்ராசிட்டி செய்துள்ளனர்.

அதிலும் இதில் சதீஷ் மிரட்டியுள்ளார், வில்லன் கெட்டப் போடலாம் அதற்காக 2.0 அக்‌ஷய்குமார் கெட்டப்பெல்லாம் ரொம்ப ஓவர் சார். சதீஷின் திரைப்பயணத்தில் ஆல் டைம் பெஸ்ட்.

செல்வம் நீங்க பழைய செல்வமா திரும்பி வரனும்னு சொல்றப்ப அது மட்டும் முடியாது சார் ஏன்னா நா செல்வமே இல்ல சிவா, போய் புள்ள குட்டிய படிக்க வைங்கடா...ஆனா இன்ஜினியரிங் மட்டும் படிக்க வைக்க வேண்டாம் போன்ற வசனம் கைத்தட்டல் பறக்கின்றது.

மேலும், படத்தில் தமிழ் படங்கள் மட்டுமின்றி ஸ்பீட், கேம் ஆப் துரோன்ஸ் போன்ற ஹாலிவுட் படங்கள், சீரியஸுகளையும் கலாய்த்துள்ளனர், தமிழில் டோட்டல் டேமேஜ் என்றால் வேதாளம், விவேகம் காட்சிகள் தான் மொத்த திரையரங்கமும் கொண்டாடுகின்றது, அதேபோல் பாகுபலி, கபாலி காட்சிகள் ரசிக்க வைக்கின்றது.

இத்தனை இருந்தும் முதல் பாதி ஒரு சில நேரத்திற்கு பிறகு கொஞ்சம் பொறுமையை சோதிக்கின்றது, ஏனெனில் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சல்லவா? அதேபோல் தான், இன்னமும் கொஞ்சம் முதல் பாதி சுவாரசியப்படுத்தியிருக்கலாம், அதிலும் அடிக்கடி வரும் பாடல்கள் படத்தின் மைனல் முதல் பாதியில்.

படத்தின் ஒளிப்பதிவு பாராட்டியே ஆகவேண்டும், வேட்டையாடு விளையாடு காட்சியை ஒரு இடத்தில் கலாய்க்கிறார்கள், அதுக்கூட கமலுக்கு எப்படி ஆங்கிள் வைத்தார்களோ அதேபோல் சிவாவிற்கும், கண்ணனின் இசை கலக்கல் குறிப்பாக பின்னணி இசை, பாடல்கள் திருப்திப்படுத்தவில்லை.

க்ளாப்ஸ்

சிவா ஒருவரை மட்டுமே நம்பி பந்தயம் கட்டலாம்.

படங்களை கலாய்ப்பதை தேர்ந்தெடுத்த விதம், இன்றைய ட்ரெண்டிங் வசனங்களை கூட விட்டு வைக்காமல் கலாய்த்தது ஆடியன்ஸுடன் ஈசியாக கனெக்ட் செய்கின்றது.

பல்ப்ஸ்

படத்தின் முதல் பாதி கொஞ்சம் பொறுமையை சோதிக்கின்றது.

ஒரு முறை பார்க்கலாம், அடுத்த முறை சிரிப்பு வருமா என்றால் கேள்விக்குறி தான், அதிலும் அந்த ப்ளாஷ்பேக் காட்சிகள் ஏன் சார் இப்படி.

மொத்தத்தில் சிவா ஒன் மேன் ஆர்மியாக உங்களை கண்டிப்பாக 2.30 மணி நேரம் சந்தோஷப்படுத்துவார், ஆனால், ஒரு முறைக்கு மேல் ரிப்பீட் அடிக்க முடியாது.

0 coment�rios: