Home Top Ad

எதிலும் கறாராக இருப்பவர்களைக் கண்டாலே எனக்கு ரொம்பவும் பிடிக்கும். எல்லாவற்றிலும் அப்படி இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட விரு...

ஜெயலலிதாவுக்குப் பிடித்த கறார் பேர்வழி இவர்தான்!

எதிலும் கறாராக இருப்பவர்களைக் கண்டாலே எனக்கு ரொம்பவும் பிடிக்கும். எல்லாவற்றிலும் அப்படி இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட விருப்பமும் ஓயா முயற்சியுங்கூட.

கறாராக இருப்பது எளிதான காரியமல்ல. அதற்கு நிறைய மன உறுதி வேண்டும். சில அடிப்படை இலட்சியக் கோட்பாடுகளை நமக்கு நாமே விதித்துக் கொண்டு, அவற்றின்படி நடக்கும் திடநம்பிக்கையும் இருக்க வேண்டும். அதற்காகப் பிறர் நம்மை ஏளனமாகப் பேசினாலும், பரிகாசம் செய்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாது நமது லட்சியத்தை விட்டுக்கொடுக்காது அதனைக் காப்பாற்ற நிற்கக் கூடிய துணிவும் தேவை.

பொதுவாக, ஒருவர் பணம் விஷயத்தில் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை வைத்தே அவரை எடை போட்டு விட முடியும். ஒருவர் பணம் கொடுப்பதிலும் பெற்றுக்கொள்வதிலும், இரண்டிலும் கறாராக இருந்தால் அப்படிப்பட்டவரை எதிலும் நம்பலாம். அவரை ''நல்லவர் நாணயமானவர்" என்று மதிக்கலாம்.

பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஒருவரின் நடத்தை சரியில்லை என்றால் பொதுவாக எல்லாவற்றிலுமே அவரது நடத்தை அப்படித்தான் இருக்கும் என்றும் கூறலாம்.

இந்த உண்மையை எனது சொந்த அனுபவத்திலேயே பலமுறை உணர்ந்திருக்கிறேன். என்றாலும், இங்கே குறிப்பிட இருப்பது என் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவம் அல்ல. 100 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இருவருமே கறார் பேர் வழிகள்தாம்.

1887-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ம் நாள் பிற்பகலில் இங்கிலாந்தின் பிரபுக்களில் ஒருவரான வில்லியம் லார்ட் டிராக்ஸ் தனது இல்லத்தை விட்டுப் புறப்பட்டார். அவர் இருந்தது பிரைட்டன் என்னும் துறைமுக நகரத்தில். லார்ட் டிராக்ஸ் பெரிய கோடீஸ்வரர், கப்பல் ஓட்டுவதில் அதிக ஈடுபாடு உள்ளவரும், அதில் பெரும் புகழும் பெற்றவர். ஒரு வாடகை குதிரை வண்டியைக் கூப்பிட்டார். அதில் ஏறிக்கொண்டு ''மேற்கு கப்பல் துறைக்கு அழைத்துப்போ" என்று ஆணையிட்டார்.

கப்பல் துறையிலிறங்கிக்கொண்டு வாடகை குதிரை வண்டி ஓட்டுநரைக் காத்திருக்கும் படி கட்டளையிட்டார். "எனது புதிய கப்பலை முதன் முறையாக பரிசீலிக்க ஓட்டிச் செல்லப் போகிறேன். பிற்பகலிலேயே திரும்பி வர உத்தேசித்திருக்கிறேன். எப்படியும் மாலைக்குள் திரும்புவேன். நான் வரும் வரை இங்கேயே காத்திரு நான் திரும்பியதும் நீ தான் என்னை வீட்டுக்கு அழைத்துப்போக வேண்டும்" என்றார். அந்த வாடகை வண்டி ஓட்டுநரின் பெயர் மார்டின் ஹால்லோவே சம்மதம் தெரிவிக்கின்ற வகையில் தலையை அசைத்தார்.

அன்று பிற்பகல், மாலை பூராவும் மார்டின் அங்கேயே காத்திருந்தார். லார்ட் டிராக்ஸ் திரும்பவில்லை. வெகு நேரமான பின்பு இரவில் மார்டின் தன் வீட்டுக்குச் சென்றார்.

மறுநாள் அதிகாலையிலேயே மார்டின் மீண்டும் துறைமுக வாசலுக்குக் குதிரை வண்டியுடன் வந்து காத்திருந்தார். இப்படியே ஒரு நாள்; ஒரு வாரம்; ஒரு மாதம் கழிந்துவிட்டன. தொடர்ந்து மார்டின் காத்திருந்தார். அதுவே அவரது வாழ்க்கை முறையாகிவிட்டது. தினமும் காலையில் மார்டின் குதிரை வண்டியுடன் துறை முகத்திற்கு வருவார். இரவு வரை அங்கேயே காத்திருப்பார்.

வேறு யார் வண்டியை வாடகைக்கு அழைத்தாலும் ஏற்றிச் செல்ல மறுத்தார். லார்ட் டிராக்ஸின் மாளிகைக்கு மார்டின் போகவுமில்லை. அவர் எப்போது திரும்பி வருவார் என்று விசாரித்துத் தெரிந்துகொள்ளமுயலவும் இல்லை. தன்னுடைய விசித்திரமான நடத்தைக்கான விளக்கத்தை கூறவும் இல்லை. ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து மாலை வரை பேசாமல் அப்படியே குதிரை வண்டியில் உட்கார்ந்திருப்பார்.

இப்படியே 599 நாள்கள் உருண்டோடிவிட்டன. கடைசியில் 1889 ம் ஆண்டு, மே மாதம் 12-ம் தேதி, மார்டினுடைய பிடிவாதம் பலன் அளித்தது. லார்ட் டிராக்ஸின் கப்பல் துறைமுகத்துக்குத் திரும்பியது. அவரும் இறங்கி வந்தார். மார்டினைக் கண்டதும் லார்ட் டிராக்ஸ் இவ்வளவு தாமதமாகத் திரும்பியதற்கு விளக்கம் கூறினார். ''ஒரு நாள் பிற்பகலுக்குள் திரும்பி வரத்தான் உத்தேசித்திருந்தேன். ஆனால், கப்பலில் புறப்பட்டதும், கப்பலின் சீரான ஆடாத அசையாத போக்கு; குளிர்ந்த காற்று; இனிமையான சூழ்நிலை எல்லாமே என் மனதுக்கு ரொம்ப இன்பகரமாகப் பட்டன. அப்போதே, அந்தக் கணமே, கப்பலில் உலகச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளுவது என்று தீர்மானித்தேன். கிளம்பி விட்டேன்" என்றார்.

நிதானித்த ஆழ்ந்த தோரணையுடன் மார்டின் தனது சட்டைப்பையிலிருந்து மருள வைக்கக்கூடிய அளவிற்கு நீளமான ஒரு காகிதத்தை வெளியே இழுத்தார்.

'பிரபு அவர்களே... இதோ என்னுடைய பில் ஒவ்வொரு நாளுக்கான காத்திருக்கும் கட்டணத்தையும் (WAITING CHARGES) சரிவர கணக்குப் பார்த்து பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன். காவல்துறை விதிமுறைகளின்படி வாடகைக் கட்டணம், காத்திருப்பதற்கான கட்டணம் இரண்டையும் சேர்த்து பட்டியல் போட்டிருக்கிறேன்."

"மொத்தத் தொகை எவ்வளவு?" என்று கேட்டார் லார்ட் டிராக்ஸ். மார்டின் காகிதத்தை நீட்டினார். லார்ட் டிராக்ஸ் பில்லைப் பார்த்தார். ஒரு புருவத்தை உயர்த்தினார். மொத்தத் தொகை 989 பவுண்ட்ஸ், 15 ஷில்லிங்க்ஸ், 6 பென்ஸ் - அதாவது ஏறத்தாழ 5000 டாலர், இந்தியக் கணக்குப்படி ஏறத்தாழ 45,000 ரூபாய்! (இந்தத் தொடர் வெளியான காலத்தின் மதிப்பீட்டில்)

அத்தனை நாள்களாக அவருக்காகவே காத்திருந்த வேறு வாடிக்கைக்காரர்கள் எவரையும் வண்டியில் ஏற்றிச் செல்ல மறுத்து வந்தது குறித்து மார்டின் விளக்கம் கூறினார்.

''ரைட்டோ!" என்றார் லார்ட் டிராக்ஸ் மறுவார்த்தையின்றி, கண்ணை ஒரு முறைகூட இமைக்காமல், உடனே நின்ற இடத்திலேயே அத்தனை பெரிய தொகையைச் செலுத்திவிட்டார்.

குதிரைவண்டியில் ஏறிக்கொண்டார். ''வீட்டுக்கு மார்டின் என்று ஆணையிட்டார்.

லார்ட் டிராக்ஸின் மாளிகை வாசலில் குதிரை வண்டி போய் நின்றது. வண்டியை விட்டு இறங்கினார். மறுபடியும் மார்டின் அவருக்கு முன்னால் நிற்பதைக் கண்டார். மரியாதை காண்பிக்கும் வகையில் தனது தலையில் அணிந்திருந்த தொப்பியைக் கழற்றி மார்டின் அதனைக் கையில் பிடித்திருந்தார்.

"துறைமுகத்திலிருந்து உங்களை வீடு வரை அழைத்து வந்ததற்கு இரண்டு காசு (ஷில்லிங்) வாடகை நீங்கள் தர வேண்டும்" என்றார் மார்டின் கறாராக.

மறுபடியும் லார்ட் டிராக்ஸ் கட்டணத்தை செலுத்தினார். இம்முறை தெரிந்தும் தெரியாத நிழலைப் போல, இலேசான ஒரு புன்முறுவல் அவரது முகத்தில் ஒரே ஒரு கணம் தோன்றியது.

0 coment�rios:

 நாம் உண்ணுவது, நமக்கு மனநிறைவையும், முழுமையையும் கொடுத்தால் தான் மகிழ்ச்சியாகவும் மன நிறைவுடனும் வாழ முடியும். அந்த வகையில் சாப்பிடும் உணவ...

நாம் என்ன சாப்பிட வேண்டும்? எப்படிச் சாப்பிட வேண்டும்?

 நாம் உண்ணுவது, நமக்கு மனநிறைவையும், முழுமையையும் கொடுத்தால் தான் மகிழ்ச்சியாகவும் மன நிறைவுடனும் வாழ முடியும். அந்த வகையில் சாப்பிடும் உணவில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் பெருமளவிற்கு நம்முடைய வாழ்க்கையில் பங்கு பெறுகின்றன.


உண்ணும் உணவு மனதிற்கும் வயிறுக்கும் நிறைவாக இல்லாமல் இருந்தாலோ அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே வேறு நொறுக்குத் தீனிகளைத் தேடிச் செல்லத்தூண்டினாலோ நமது உணவு பழக்கம் சரியில்லை என்று பொருள். அதனால், சாப்பிடும் உணவை ரசித்து, சுவைத்து சாப்பிட்ட பின், அதில் மனநிறைவையும் முழுமை யையும் கொடுக்கும் சில உணவுப் பழக்கங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

அதற்கு முன்னதாக, மனிதர்கள் உணவு பழக்கத்தால் ஏற்படும் நன்மை தீமை பற்றி அண்மையில் ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அப்போது உலகம் முழுவதும் பெரும் பாலானவர்கள் காலை உணவு சாப்பிடுவதில்லை என்று தெரிய வந்தது. மது அருந்துபவர்கள், புகை பிடிப்பவர்கள், அதிக நேரம் உழைப்பவர்கள், திருமணம் ஆகாதவர்கள், போதிய உடற்பயிற்சி செய்யாதவர்கள்தான் காலை உணவை சாப்பிடாமல் உள்ளனர் என்றும் தெரிந்தது. காலை உணவை சாப்பிடாதவர்களுக்கு மற்றவர்களை விட திடீர் மாரடைப்பு ஏற்பட 27 விழுக்காடு கூடுதல் வாய்ப்பு இருப்பதாக அறிவியலாளர்கள், கருத்துக் கணிப்பு மற்றும் மருத்துவ ஆய்வை ஒப்பிட்டு எச்சரித்துள்ளனர்.

அது போல இரவு நேர உணவை 10 மணிக்கு பிறகே சாப்பிடும் பழக்கம் பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது. இது இதய நோய்களைக் கொண்டு வந்து விடும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் இரவு உணவை முடித்து விட வேண்டும் என்றும் ஆய்வாளர் கள் கூறியுள்ளனர். காலை உணவை தவிர்த்தால் உடல் பருமன், உயர்ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு ஆபத்து ஆகிய பிரச்சினைகளும் வர வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சாப்பிடும் போது தொலைக்காட்சி பார்த்துக் கொண்டோ அல்லது பேசிக் கொண்டோ சாப்பிடக் கூடாது. உணவு உண்ணும் நேரத்தை, சாப்பிடுவதில் மட்டுமே செலவிட வேண்டும். அப்படி கவனத்துடன் சாப்பிடும் வேளை களில், வேகமாகவும், முழுமையாகவும் உண்டு முடித்த மனநிறைவு கிடைக்கும். மேலும் சாப்பிடும் நேரங்களில் வேகமான இசையைக் கேட்பதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் சாப்பிடும் வேகத்தை அது அதிகப்படுத்திவிடும். இதனால் உடல் நலத்திற்கும் கேடு விளையும்.

நுகர்தலும், மெல்லுதலும்: உணவை நுகர்ந்து பார்க்கும் போதே, பாதி மனநிறைவு ஏற்படும். இரண்டாவதாக, மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். ஏனெனில் நொறுங்கத் தின்றால் நூறு வயது! நன்றாக மென்று சாப்பிடும் போது, நாவின் உயிரணுக்கள் தூண்டப்பட்டு, இந்த செய்தியை மூளைக்குக் கொண்டு செல்லும். இதன் மூலம் 'நன்றாக சாப்பிட்டு விட்டோம் என்ற உணர்வும் கிடைக்கும்.

நீர்மச்சத்து மற்றும் நீர்மம் போன்ற உணவுகளை தேர்ந்தெடுப்பதற்கு காரணம், அதிக காற்றும், நீரும் உள்ள உணவுகள் வேகமாக வயிற்றை நிரப்பிவிடும். எனவே காய்கறி சாறும், திராட்சை களையும் சாப்பிடலாம்.

புரதச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை விட, கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகள் மனநிறைவை ஏற்படுத்தும் உணர்வைத் தூண்டுவதற்கு சற்று அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்ளும். எனவே கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கலாம்.

தூக்கம்: தூக்கம் குறைவாக இருக்கும் போது, க்ரெலின் மற்றும் குறைவான அளவு லெப்டின் ஆகிய ஹார்மோன்கள் உற்பத்தியாகும். இவை தான் உணவுத் தேவைக்கான வேலைகளில் ஈடுபட்டு வருபவை. வயிற்றில் சுரக்கும் க்ரெலின் பசிக்கான தூண்டுதலை அதிகப்படுத்தும் போது, லெப்டின் மனநிறைவிற்கான தூண்டுதலை உருவாக்கி, பசியைக் குறைக்கும். எனவே உடலுக்கு ஓய்வும், தூக்கமும் தேவை.

தினமும் சராசரியாக 8 குவளை (3முதல் 4 லிட்டர்) தண்ணீர் குடிக்க வேண்டும். சில சமயங்களில் அடிக்கடி பசியெடுக்கும். இதற்கு உண்மை யான காரணம் தாகமாக இருப்பது தான்! எனவே சாப்பிடும் முன் ஒரு தம்ளர் அளவு அல்லது அதற்கும் மேல் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உணவில் மனநிறைவும், முழுமையும் கிடைக்கும்.

சிறிய தட்டுகள்: சாப்பிடும் தட்டு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அந்த தட்டு முழுவதும் உணவைப் பரிமாறி, தட்டு காலியாகும் வரை சாப்பிடு வது தான் வழக்கம். இந்த பழக்கத்தால், சாப்பிடுவதன் நோக்கம் முழுமை யாக மற்றும் மனநிறைவாக சாப்பிடுவது என்று இல்லாமல், தட்டை காலியாக்குவது தான் என்று மாறி விடுகிறது. எனவே, பெரிய தட்டுக்கு மாற்றாக, சற்றே அளவில் சிறிய தட்டினை பயன்படுத்தத் தொடங்கினால், மனநிறைவைஉணரலாம்.

நெடுநேரம் சாப்பிட வைக்கும் உணவுகள்: சாப்பிட அதிக நேரம் எடுக்கும் உணவு வகைகளை உண்ணும் போது, உண்ணுவதில் முழுமையாக கவனம் திரும்பும் மற்றும் மனநிறைவும் ஏற்படும். எடுத்துக்காட்டாக, நார்ச்சத்த அதிகமுள்ள அவரை, வாழைத்தண்டு, காரமான குழம்பு ஆகிய உணவுகள் உண்ணும் நேரத்தை அதிகப்படுத்தும்.

ஆப்பிள்: சாப்பிடுவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னர், ஒரு ஆப்பிளை சாப்பிடுவதால், உணவின் அளவு குறைவதுடன், மனநிறைவும் கிடைக் கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. எனவே, தினசரி உணவில் ஒரு ஆப்பிளை சேர்த்துக் கொள்வதன் மூலம், தேவையான நார்ச்சத்தும் கிடைக்கும்.

இயற்கை உணவுகள்: செயற்கையாக தயாரிக்கப்பட்ட உணவுகளில், சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்கள் அதிகமான கலோரிகளைக் கொண்டது. எனினும், இயற்கையாகக் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை நாம் சாப்பிடும் போது, அதிகமாக மென்று தின்ன வேண்டியதாக இருப்ப தால், ஒவ்வொருமுறை மெல்லும் போதும் மனநிறைவும், முழுமையும் கிடைப்பதை உறுதி செய்ய முடிகிறது.

இவைகளையெல்லாம் பின்பற்றும் போது, உடலை பருமனடையச் செய்யும் அதிகமான உணவு உட்கொள்ளுதல் குறைவதோடு, நீண்ட நாட்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கும்.

0 coment�rios:

அலங்காரத்திற்காகவும் குபேர பொம்மையை வீட்டில் வைத்திருப்பர். கடவுளாக குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் குவியும். வீட்டின...

குபேர பொம்மையை இங்கே வையுங்கள்.... அதிர்ஷ்டக் காற்று உங்களுக்கு தான்

அலங்காரத்திற்காகவும் குபேர பொம்மையை வீட்டில் வைத்திருப்பர். கடவுளாக குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் குவியும்.

வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. எனவே சிரிக்கும் குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைத்தால் வீட்டில் ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

கிழக்கு திசையில் குபேர பொம்மையினை வைப்பதால் குடும்பத்திற்குள் ஏற்படும் சண்டைகள், சச்சரவு, வாக்குவாதத்தினால் ஏற்படும் மனகஷ்டம் தீரும்.

கிழக்கு திசையில் வைப்பதால் செல்வம் பெருகுவதோடு வாழ்க்கையில் வெற்றி கிடைக்க உதவிடும். நேர்மறையான எண்ணங்களை நமக்குள் கொண்டு வரும்.

குபேர பொம்மையை அறை, ஹால், படுக்கையறை அல்லது உணவருந்தும் அறை என எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். தென்கிழக்கு திசையில் வைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டமும், அதிக வருமானமும் கிடைக்கும்.

சிரித்து கொண்டு இருக்கும் பொம்மையை பார்க்கும் போது மன அழுத்தம் குறைகிறது. பிரச்சனைகளை எதிர்நோக்குவதற்கு புது நம்பிக்கை நமக்கு கிடைக்கும்.

புத்த மதத்தில் இந்த பொம்மையை கடவுளாக மதிக்கின்றனர். எனவே இதை இழிவு படுத்தவோ அவமதிக்கவோ கூடாது.

0 coment�rios:

கள்ள நோட்டு கடத்தலில் பெரும் புள்ளியாக இருக்கும் பிரகாஷ் ராஜ் ஹாங்காங்கில் வசித்து வருகிறார். இவர் சென்னையில் ஆஷிஷ் வித்யார்த்தி மூலம் கள்ள...

போக்கிரி பையன் – சினிமா விமர்சனம்

கள்ள நோட்டு கடத்தலில் பெரும் புள்ளியாக இருக்கும் பிரகாஷ் ராஜ் ஹாங்காங்கில் வசித்து வருகிறார். இவர் சென்னையில் ஆஷிஷ் வித்யார்த்தி மூலம் கள்ள நோட்டு பிசினஸ் செய்து வருகிறார். இவர்களுக்கு எதிராக ஒரு கூட்டம் செயல்பட்டு வருகிறது.

சென்னையில் ஆதரவற்ற இல்லத்தில் இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர், தான் உழைக்கும் பணத்தை அந்த இல்லத்திற்கே செலவு செய்து வருகிறார். ஒரு பிரச்சனையில் சிறப்பாக சண்டைப் போட்டதால், ஆஷிஷ் வித்யார்த்தி கூட்டத்தில் இணைகிறார். பல சிறப்பான விஷயங்கள் செய்வதால் ஆஷிஷிடம் நல்ல பெயரை பெற்று விடுகிறார்.

இந்நிலையில், ஹாங்காங்கில் ஒரு வேலை வருகிறது. இதை முடிப்பதற்காக என்.டி.ஆர். செல்கிறார். அந்த வேலையை சிறப்பாக செய்து முடித்து பிரகாஷ் ராஜ் மனதில் இடம்பிடிக்கிறார்.

பின்னர் சென்னை திரும்பும் என்.டி.ஆருக்கு, ஆதரவற்ற இல்லத்தில் இருக்கும் சிறுவனுக்கு உடல் நிலை சரியில்லாததால் 10 லட்சம் பணம் தேவைப்படுகிறது. இதற்காக ஆஷிஷ் வித்யார்த்திடம் பணம் கேட்கிறார் என்.டி.ஆர். ஆனால், அவரோ பணம் தர மறுத்து விடுகிறார். இதனால் கோபப்படும் என்.டி.ஆர்., துப்பாக்கி முனையில் ஆஷிஷ் வித்யார்த்திடம் இருக்கும் பணத்தை எடுத்து சென்று விடுகிறார்.

அந்த சிறுவனின் சிகிச்சைக்குப் பிறகு பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்துக்கு எதிராக செயல்பட்டு வரும் கேங்கிடம் சேர்ந்து விடுகிறார். மேலும் பிரகாஷ் ராஜை கொல்ல போவதாக அவரிடம் சொல்லுகிறார். இதைக் கேட்ட பிரகாஷ் ராஜ் ஹாங்காங்கில் இருந்து சென்னை வருகிறார்.

இறுதியில் என்.டி.ஆர். பிரகாஷ் ராஜை கொலை செய்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

தெலுங்கில் ‘கன்த்திரி’ என்ற பெயரில் 2008ம் ஆண்டு வெளியான இப்படம், தற்போது டப்பிங் செய்யப்பட்டு ‘போக்கிரி பையன்’ என்ற பெயரில் வெளியாகி உள்ளது. இப்படம் ஆக்‌ஷன் கலந்து மாஸ் என்டர்டெயின்ட் படமாக உருவாகி இருக்கிறது. 2008ம் ஆண்டு வெளியான படம் என்பதால், அப்போது பார்த்திருந்தால் ரசிக்கும் படமாக இருந்திருக்கும். ஆனால், தற்போது பார்க்கும் போது, லாஜிக் இல்லாதது போல் தோன்றுகிறது.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஜூனியர் என்.டி.ஆர். வழக்கம் போல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருக்கிறார். ஹன்சிகாவிற்கு வேலை அதிகமாக இல்லை என்றாலும் கொடுத்த வேலையை சிறப்பாக நடித்திருக்கிறார். வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் பிரகாஷ் ராஜ். இவருக்கு உதவியாளராக வரும் ஆஷிஷ் வித்யார்த்தி ஓரளவிற்கு ரசிக்க வைத்திருக்கிறார்.

மணி ஷர்மா இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். டப்பிங் படம் என்பதால் சுமாரான வரவேற்பை பெற்றிருக்கிறது. சமீர் ரெட்டியின் ஒளிப்பதிவு சிறப்பு.

மொத்தத்தில் ‘போக்கிரி பையன்’ பழைய பையன்.

0 coment�rios:

பாஜகவில் இருந்து நரேந்திர மோடியை நீக்கிவிட்டால், பாஜக கட்சியே கிடையாது என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். அகில இந்...

மோடியை தூக்கிவிட்டால் பாஜக என்கிற கட்சியே கிடையாது - குஷ்பு ஆவேசம்

பாஜகவில் இருந்து நரேந்திர மோடியை நீக்கிவிட்டால், பாஜக கட்சியே கிடையாது என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 84ஆவது காரிய கமிட்டி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்க வந்த குஷ்பு செய்தியாளர்களிடம் பேசியபோது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தற்போது தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி முதுகெலும்பில்லாத ஆட்சி என விமர்சித்த குஷ்பு, தங்களின் பதவிகளை காப்பாற்றிக்கொள்ளவும், ஊழல் வழக்குகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும், பாஜகவின் கைப்பாவையாக தமிழக ஆட்சியாளர்கள் உள்ளதாக குற்றம் சாட்டினார்.

0 coment�rios:

பெங்களூர் அருகே ராமநகரம் பகுதியில் ஆசிரமம் நடத்தி வரும் சாமியார் நித்யானந்தா மீது அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியப் பெண் கற்பழிப்பு புகார் கூற...

பெண் கற்பழிப்பு வழக்கு - நித்தியானந்ததிற்கு வந்தது ஆப்பு

பெங்களூர் அருகே ராமநகரம் பகுதியில் ஆசிரமம் நடத்தி வரும் சாமியார் நித்யானந்தா மீது அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியப் பெண் கற்பழிப்பு புகார் கூறினார்.

இவர் சில வருடங்கள் பிடதி ஆசிரமத்தில் தங்கி இருந்தார். அப்போது ஆன்மீக பேரின்பம் என்ற பெயரில் தன்னை நித்யானந்தா கற்பழித்ததாக புகார் தெரிவித்து இருந்தார்.

அதன் பேரில் ராமநகரம் போலீசார் நித்யானந்தா மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட்டு அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிட்டது.

இதை எதிர்த்து கடந்த 2012-ம் ஆண்டு நித்யானந்தா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். 2014-ல் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டது.

அதன்படி அவருக்கு பரிசோதனை நடந்தது. இதில் அவர் ஆண்மையற்றவர் அல்ல என முடிவு வெளியானது. பரிசோதனை முடிவை கர்நாடக சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு ராமநகரம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா சார்பில் வக்கீல் நாகேஷ் ஆஜராகி வாதாடினார்.

நித்யானந்தாவின் பெயரையும், புகழையும் கெடுப்பதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. புகார் கூறியிருக்கும் பெண் ஆசிரமத்தில் பல வருடங்கள் தங்கி உள்ளார். அவர் ஆன்மீக பேரின்பத்துக்காக விருப்பப்பட்டுத்தான் நித்யானந்தாவுடன் ‘செக்ஸ்’ உறவு வைத்து இருந்தார். அது கற்பழிப்பு அல்ல. பெண்ணின் சம்மதத்துடன் உறவு கொள்வது கற்பழிப்பு ஆகாது.

0 coment�rios:

ஆர்யா பெண் தேடும் வேலைகளில் இருப்பது நாம் அனைவருக்கும் தெரியும். பெண் தேடுவது என்றால் படத்திற்காக அல்ல, வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க இருக...

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்யாவுக்கு இத்தனை கோடி சம்பளமா?

ஆர்யா பெண் தேடும் வேலைகளில் இருப்பது நாம் அனைவருக்கும் தெரியும். பெண் தேடுவது என்றால் படத்திற்காக அல்ல, வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க இருக்கிறார்.

அதற்காக ஒரு புதிய தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியே நடக்கிறது. இதில் ஆர்யாவுக்காக 16 பெண்கள் போட்டி போட களமிறங்கினர். சமீபத்திய நிகழ்ச்சி முடியில் 10 பெண்கள் மட்டுமே உள்ளனர், மற்றவர்கள் வெளியேறிவிட்டனர்.

இனி இருப்பவர்களில் யாரை ஆர்யா திருமணம் செய்து கொள்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போது என்ன தகவல் என்றால் பொதுவாக ஒரு படத்திற்கு ஆர்யா இரண்டு மாதம் கால்ஷீட் கொடுப்பாராம், அதோடு 2ல் இருந்து 3 கோடி வரை சம்பளம் வாங்குவாராம்.

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்காக மட்டும் ஆர்யா ரூ. 8ல் இருந்து 10 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது சரியாக தெரியவில்லை.

0 coment�rios: