Home Top Ad

நம் நாட்டின் ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் தாஜ் மஹாலுக்கு இணையான அழகுடைய கட்டிடம் இந்த உலகத்திலேயே வேறு இருக்க முடிய...

தாஜ்மகால் ஏலத்துக்கு வருது!- தத்து எடுக்க தனியாருக்கு உ.பி. அரசு அழைப்பு!



நம் நாட்டின் ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் தாஜ் மஹாலுக்கு இணையான அழகுடைய கட்டிடம் இந்த உலகத்திலேயே வேறு இருக்க முடியாது. கட்டிடக்கலையின் உச்சமென திகழும் இந்த தாஜ் மஹால் போன்றொரு கட்டிடத்தை காண்பது கூட அரிதே. சில இடங்களை பகலில் சென்று பார்ப்பதை விடவும் இரவு நேரத்தில், மின் விளக்குகளின் ஒளியில் பார்க்கையில் அவை அதி அற்புதமாக காட்சியளிக்கும். அதிலும் குறிப்பாக சில இடங்களை பவுர்ணமி நாளில் நிலவொளியில் பார்ப்பதற்கு இணையான விஷயம் வேறெதுவுமே இருக்க முடியாது என்பதால் இந்த அதிசயத்தைக் கண ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமானோர் வந்து கண்டு கழிப்பார்கள். இதனிடையே இந்த தாஜ்மகாலை தனியார் நிறுவனங்கள் தத்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உத்தர பிரதேச அரசு கோரிக்கை வைத்து இருக்கிறது.

முன்னதாக உத்தர பிரதேசத்தில் உள்ள சுற்றுலாதலங்களின் பட்டியலில் இருந்து தாஜ்மஹாலை நீக்க சொல்லி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டார். இந்த உத்தரவு உலகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாஜ்மஹால் முகாலய அரசால் கட்டப்பட்டது அது இந்தியக் கட்டிடக் கலை இல்லை என்பதால், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ பட்டியலில் இருந்தும் தாஜ்மஹால் நீக்கப்பட்டது. அதே சமயத்தில் சில பா.ஜ.க தலைவர்கள் அது ஒரு இந்து கோவில் என்றும் குறிப்பிட்டு வந்தனர். தற்போது இதன் பராமரிப்பை அம்மாநில அரசு கைவிட்டு விட்டது.

இனி தாஜ்மஹாலில் அரசு நியமித்து இருக்கும் துப்புரவு பணியாளர்களும் வெளியேற்றப்பட இருக்கிறார்கள். காரணம் தற்போது பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தின் படி முக்கியமான சுற்றுலாதலங்களை தனியாருக்கு கொடுக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது தாஜ்மகாலை தனியாருக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.டி.சி மற்றும் ஜி.எம்.ஆர் என்ற இரண்டு நிறுவனங்கள் தங்கள் ஆண்டு வருமானத்தில் 2 சதவிகிதத்தை தாஜ்மகால் பராமரிப்பிற்கு கொடுக்க வேண்டும். இதற்கான ஏலம் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது என்பதுதான் லேட்டஸ்ட் ரிப்போர்ட்.

0 coment�rios: