Home Top Ad

பேராசிரியர்கள் கேட்டதால் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக சர்ச்சைக்குள்ளான பேராசிரியை நிர்மலா தேவி தெரிவித்துள்ளார். மாணவிகளை பாலியல...

இவர்களுக்காகத் தான் இவ்வாறு செய்தேன்... நிர்மலா தேவியின் திடுக்கிடும் வாக்குமூலம்

பேராசிரியர்கள் கேட்டதால் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக சர்ச்சைக்குள்ளான பேராசிரியை நிர்மலா தேவி தெரிவித்துள்ளார்.

மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக கைதான அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முதல் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில், விசாரணை அதிகாரியான சூப்பிரண்டு ராஜேஸ்வரி, உதவி அதிகாரியான துணை சூப்பிரண்டு சாஜிதா பேகம் ஆகியோர், பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தினர். இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இந்த விசாரணை நடந்தது.

அப்போது பெரும்பாலான கேள்விகளுக்கு நிர்மலா தேவி மவுனமாகவே இருந்துள்ளார். மாணவிகளிடம் யாருடைய தூண்டுதலின் பேரில் பேசினீர்கள் என கேட்டபோது, காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகியோர் தான் ஆசை வார்த்தை கூறி தன்னை தூண்டியதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

அவரது வாக்குமூலத்தை பொலிசார் வீடியோவில் பதிவு செய்தனர். இதனிடையே பேராசிரியை நிர்மலா தேவியிடம் முழுமையாக விசாரணை நடத்திய பிறகே, வழக்கின் முழு விவரம், அதில் தொடர்புடையவர்கள் பற்றி தெரியவரும் என சிபிசிஐடி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் பல்கலைக்கழகம் வந்து சென்றபோது பதிவு ,செய்யப்பட்ட சி.சி.டி.வி. கமெரா பதிவுகளை சேகரித்து வருகிறோம் என்றும் அந்த அதிகாரி கூறினார். பேராசிரியை நிர்மலா தேவிக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளது? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம் என்றும் சிபிசிஐடி அதிகாரி கூறியுள்ளார்.

பேராசிரியை நிர்மலா தேவியிடம் 2-வது நாளாக இன்றும் சி.பி.சி.ஐ.டி. பொலிசார் விசாரணை நடத்தினர். அவர் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் மதுரை அழைத்துச் செல்ல இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு முத்து சங்கரலிங்கம் தெரிவித்துள்ளார்.

இவர் மாணவிகளை எவ்வாறு மூளைச் சலவை செய்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 'நிர்மலா தேவி, கல்லூரியில் எல்லோரிடமும் அன்பாகப் பழகுவார். குறிப்பாக மாணவிகளிடம் உரிமையோடு பேசுவார். அப்போது, மாணவிகளின் குடும்பப் பின்னணிகுறித்தும் விசாரிப்பார். அதன்பிறகு, அதில் சில மாணவிகளின் செல்போன் நம்பர்களை வாங்கிப் பேசுவார். அதனால், அவரை எளிதில் நம்பிப் பழகிவிடுவார்களாம்.

தினமும் மெஸேஜ் அனுப்புவார். பதில் அனுப்பாதவர்களிடம் உரிமையாகப் பேசி பதில் அனுப்பச்சொல்வார். அவர்களுடைய எதிர்காலத்தில் அக்கறை கொண்டவர்போல அட்வைஸ் செய்வார். இப்படி சில வாரப் பழக்கத்துக்குப் பிறகு, வாட்ஸ்அப், சாட்டிங் என வேறு ரூட்டில் உரையாடல் பயணிக்கும். அதற்கு எதிர்த்தரப்பிலிருந்து வரும் ரியாக்‌ஷனைப் பொறுத்து, நிர்மலா தேவி தன் பேச்சுவார்த்தைத் தொனியை அமைத்துக்கொள்வாராம்.

கல்லூரி வளாகத்துக்குள், நிர்மலா தேவியைத் தெரியாதவர்கள் யாருமே இல்லை என்ற அளவுக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன. மேடம், அந்த அளவுக்கு கல்லூரியில் பிரபலம். எப்போதும் அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். எப்போதுமே, ’கண்ணுங்களா’ என்றுதான் மாணவிகளை அழைப்பார் என்று தெரியவந்துள்ளது.

0 coment�rios:

கம்பு, கேழ்வரகு, தினை, சாமை உள்ளிட்ட சிறுதானியங்களை, கடந்த பல ஆண்டுகளாகவே மத்திய அரசு கண்டுகொள்ளாமலே இருந்தது. இவற்றின் உற்பத்தி, விலை நிர்...

"இனி எல்லா வீடுகளிலும் சிறுதானியம்!" - அரசின் அறிவிப்புக்குப் பெருகும் வரவேற்பு

கம்பு, கேழ்வரகு, தினை, சாமை உள்ளிட்ட சிறுதானியங்களை, கடந்த பல ஆண்டுகளாகவே மத்திய அரசு கண்டுகொள்ளாமலே இருந்தது. இவற்றின் உற்பத்தி, விலை நிர்ணயம், சந்தை வாய்ப்புகள் உள்ளிட்ட எதிலும் ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டாமலே இருந்துவந்தார்கள். தற்போது, பொதுமக்களிடம் சிறுதானியங்கள்குறித்த விழிப்புஉணர்வு நாளுக்குநாள் அதிகரித்துவருவதால், தற்போது மத்திய அரசு இதில் சிறப்புக் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. பொது விநியோகத் திட்டத்தில் கம்பு, கேழ்வரகு, சோளம், தினை உள்ளிட்ட சிறுதானியங்களைச் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என சமீபத்தில் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் அறிவித்தார். பொது விநியோகத் திட்டத்தில் சிறுதானியங்களைச் சேர்ப்பது தொடர்பாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிதி ஆயோக் மற்றும் மத்திய வேளாண்மைத் துறையின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் சிறுதானியங்கள்குறித்த பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. நிதி ஆயோக் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், பொது விநியோகத் திட்டத்தில் சிறுதானியங்களை வழங்க மத்திய வேளாண்மைத் துறை திட்டமிட்டுள்ளது. 2018-ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாகவும் அறிவித்துள்ளது. 


சிறுதானியம்

இதற்கு, பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வரவேற்பு பெருகிவருகிறது. தமிழ்நாட்டில் சிறுதானியம் சாகுபடியை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாமரர் ஆட்சியர் கூடத்தின் ஒருங்கிணைப்பாளர் சரவணன் இதுகுறித்து நம்மிடம் பேசும்போது, ‘50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் பரவலாக அதிக அளவில் சிறுதானியங்கள் சாகுபடிசெய்யப்பட்டு வந்தது. நம் முன்னோர்களின் முதன்மை உணவாகவே கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் திகழ்ந்தன. காலப்போக்கில், அடுத்தடுத்த தலைமுறையினரின் உணவுப் பழக்கம் மாறியதால், விவசாயிகள் இவற்றை சாகுபடிசெய்வதைக் கைவிடத் தொடங்கினார்கள். தமிழ்நாட்டில் சிறுதானிய பயிர்களைப் பார்ப்பதே அரிது என்ற நிலை உருவாகிக்கொண்டிருந்தது. இந்நிலையில்தான் நம்மாழ்வார் மற்றும் பசுமை விகடனின் தொடர் முயற்சிகளால் சிறுதானியச் சாகுபடி புத்துயிர் பெறத் தொடங்கியது. கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, குதிரை வாலி, வரகு ஆகியவற்றின் சாகுபடி முறைகள்குறித்தும் இதன் மகத்துவம்குறித்தும் விரிவான கட்டுரைகள் வெளியாகின. சிறுதானியங்களை எப்படியெல்லாம் விதவிதமாக சமைக்கலாம் என அவள் விகடன் ஆர்வத்தை உருவாக்கியது. சிறுதானிய உணவுத் திருவிழாவும் நடத்தி, மக்களின் கவனத்தை ஈர்த்தது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்களின் முயற்சிகளாலும் சிறுதானியம்குறித்த விழிப்புஉணர்வு அதிகரித்துவருகிறது. இதனால், மத்திய மாநில அரசுகளின் கவனம் சிறுதானியங்களின் பக்கம் திரும்பியுள்ளது. ரேஷன் கடைகளில் சிறுதானியம் வழங்கப்பட்டால், இதைப் பயிர்செய்யும் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும். வெளிச் சந்தையிலும் சிறுதானியங்களின் கொள்முதல் விலை உயர்வதோடு, சந்தை வாய்ப்புகளும் பெருகும். இதனால், சிறுதானிய சாகுபடி பரப்பு அதிகரிக்கும்” என்றார்.

பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து, ‘சிறுதானியங்கள் ஏழைகளின் உணவாக இருந்தது. அவர்களிடம் அரிசியைப் புகுத்தி. சத்துக்கள் நிறைந்த சிறுதானியங்கள் நாளடைவில் கைப்பற்றப்பட்டன. தற்போது, பணக்காரர்களின் உணவாக இவை உள்ளன. பொது விநியோகத் திட்டத்தில் சிறுதானியங்கள் வழங்கப்பட்டால், மீண்டும் ஏழைகளின் உணவாக இவை மாறும். இதனால், அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதாக சிறுதானியங்கள் கிடைக்கும். மத்திய அரசின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.” என்றார்.

சிறுதானியங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர் ஒருவர், ’’நாளுக்குநாள் வெப்பம் அதிகரித்துவருவதால், நெல் சாகுபடியில் மகசூல் குறைந்துகொண்டேவருகிறது. சிறுதானியங்கள் மட்டுமே வறட்சியைத் தாங்கி வளரக்கூடியன. அதே சமயம், மக்களிடம் சத்துக் குறைபாடுகள் அதிகரித்து, பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. இதனால்தான், சிறுதானியங்களை மத்திய மாநில அரசுகள் கையில் எடுக்கத் தொடங்கியுள்ளன. இவற்றை சாகுபடிசெய்யும் முறைகள்குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல், இவற்றை மதிப்புக்கூட்டுவதற்கான இயந்திரங்கள் எல்லா இடங்களிலும் பரவலாகக் கிடைக்கவும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.” என்றார்.  

0 coment�rios: