பாண்டியராஜனே தனது மகன் குறித்து கவலைப்பட்டால் நான் எங்கே போவது என்று இயக்குநர் கே.பாக்யராஜ் வருத்தம் தெரிவித்தார்.
ஜெ.எஸ்.அபூர்வா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் `தொட்ரா’. இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
பிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளா இந்தப்படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், மைனா சூஸன், கூல் சுரேஷ், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா, ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். உத்தமராஜா இசையமைத்துள்ளார்.
தொட்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பாண்டியராஜன், ஆர்.கே.செல்வமணி, பேரரசு, ஏ.வெங்கடேஷ், மீரா கதிரவன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஜே எஸ் கே, சுரேஷ் காமாட்சி, விடியல் ராஜூ, கனியமுதன், நடிகர்கள் பரத், ஸ்ரீகாந்த், கலையரசன், அரீஷ் குமார், நடிகை நமீதாவின் கணவரும் நடிகருமான வீரா, ஷரண், போஸ் வெங்கட், லொள்ளு சபா ஜீவா, நடிகைகள் நமீதா, வசுந்தரா, கோமல் ஷர்மா தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், பி. டி. செல்வகுமார் உள்ளிட்ட பலரும் மற்றும் படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.
நடிகர் பரத் பேசும்போது, “தொட்ரா படம் டைட்டிலிலேயே பாஸ்மார்க் வாங்கிவிட்டது. எனக்கு காதல் படம் பிரேக் கொடுத்தது போல பிருத்விக்கு இந்த ‘தொட்ரா’ படம் அமையும் என சொல்கிறார்கள். உண்மைதான் அந்தப்படம் எனக்கு மட்டுமல்லாமல் அதில் பணியாற்றிய பலருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. அதேபோல இந்தப்படமும் ஒரு காவியமாக அமையும் என நம்புகிறேன்” என்றார்.
நடிகர் கூல் சுரேஷ் பேசும்போது, “இந்தப்படத்தில் ஹீரோ ஹீரோயின் கையைப் பிடித்துக்கொண்டு ஓடவேண்டும்.. அவர்களை நானும் இயக்குநர் ஏ.வெங்கடேஷும் துரத்த வேண்டும். இப்படி ஒரு காட்சியை படமாக்கியபோது, இயக்குநர் கட் சொன்னபின்னும் கூட ஹீரோவின் கையை விடாமல் பிடித்து ஓடிக்கொண்டே இருந்தார் நாயகி வீணா. அப்புறம் உதவி இயக்குநர்கள் பின்னாலேயே ஓடிப்போய்த்தான் நிறுத்தவேண்டி இருந்தது” என படப்பிடிப்பின் சுவாரஸ்யங்களை பகிர்ந்துகொண்டார்.
அடுத்ததாக பிரபல இயக்குநரும், படத்தின் நாயகன் பிருத்வியின் தந்தையுமான பாண்டியராஜன் பேசியபோது, “பிருத்வி இவ்வளவு நண்பர்களை சேர்த்து வைத்திருப்பான் என நினைத்தே பார்க்கவில்லை. என் கவலையெல்லாம் இன்னும் அவன் சினிமாவில் ஒரு நல்ல நிலைக்கு வரவில்லையே என்பதுதான். வெற்றி அவ்வளவு சாதாரணமாக வந்துவிடாது. உடனே வந்துவிட்டால் அதற்கு மரியாதையும் கிடையாது. எதற்கும் ஒரு நல்ல நேரம் வரவேண்டும். ஆனால் இந்தப் படத்தை பார்த்ததும் பிருத்விக்கு அந்த நல்ல நேரம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது. அந்த அளவுக்கு இந்தப் படத்தில் பிருத்வியை பார்க்கும்போது புது தேஜஸ் தெரிகிறது.” என ஒரு தகப்பனாக தனது உணர்வுகளை நெகிழ்ச்சியுடன் கூறி கண் கலங்கினார்.
படத்தின் இயக்குநர் மதுராஜ் பேசும்போது, “இந்தப் படத்தை பார்த்துவிட்டு என் குருநாதர் பாக்யராஜ் சார், என் பெயரைக் காப்பாற்றிவிட்டாய் எனக் கூறினார். இதைவிட பெரிய விருது வேறொன்றும் இருக்க முடியாது. கதாநாயகி வீணாவை படப்பிடிப்பின் போது அடித்துவிட்டதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். படத்தின் தயாரிப்பாளர் சந்திரா எனக்கு இன்னொரு அம்மா போல” என நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “சமீபத்தில் நடைபெற்று முடிந்த வேலைநிறுத்தம் வெற்றி என எல்லோரும் பாராட்டிப் பேசுகிறார்கள்.. அதற்கு ஒரு பிரஸ்மீட்டும் வைத்து அறிவித்துவிட்டார்கள். அதனால் நான் குறை ஏதும் சொன்னால் அது தவறாகப் போய்விடும்.. ஆர்.கே.செல்வமணி அண்ணன் இந்த சமயத்தில் இயக்குநராக படம் இயக்கவேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.. அப்போதுதான் எங்கள் கஷ்டம் உங்களுக்கு புரியும். சினிமாவில் எப்போதும் பெரிய நடிகர்களை சுற்றிக்கொண்டே இல்லாமல் புது ஆட்களும் வளரட்டும். அதனால் இந்த நடிகரை வைத்து இவ்வளவு சம்பளம் கொடுத்து இந்த பட்ஜெட்டுக்குள் தான் படம் எடுக்கவேண்டும் என தயாரிப்பாளர்களின் சுதந்திரத்தை நசுக்க வேண்டாம். கோடிகளைக் கொட்டி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு யாரை வைத்து படமெடுக்க வேண்டும் எனத் தீர்மானிக்கும் உரிமை கூட இல்லையா..?” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்..
அவருக்கு பதில் கொடுக்கும் விதமாக மீண்டும் மைக் பிடித்த இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, “தயாரிப்பாளர்களுக்குள் புரிதல் இல்லை என இதைத்தான் நாங்கள் சொல்கிறோம். மீண்டும் மீண்டும் விவாதத்திற்கு நாங்கள் தயாராக இல்லை. பணம் இருக்கிறதே என நீங்கள் விரும்பிய ஆட்களுக்கு சம்பளத்தை அள்ளிக்கொடுத்து விட்டால், பின்னால் வரும் தயாரிப்பாளர்களை அது பாதிக்கும்.. அதற்காகத்தான் இந்த கட்டுப்பாடுகள். படம் எடுக்கும்போது உள்ள பிரச்சனைகளை சொல்லுங்கள்.. சரி பண்ணுகிறோம்.. கடந்த வருடம் வரை நடந்த விஷயங்களை இனி பேசவேண்டாம்.. கோடிகளைக் கொட்டி படம் எடுக்கிறீர்கள்.. டெக்னீசியன்களுக்கு கொடுத்த சம்பளம் போக மீதிப்பணம் உங்களுக்கு திரும்பி வந்துவிட்டதா..? நஷ்டம் தானே.. இனி அது இன்னொரு தயாரிப்பாளருக்கு நேரக்கூடாது.. அதுதான் எங்கள் நோக்கம்”. என்றார்..
நிகழ்ச்சியின் இறுதியில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “பாண்டியராஜன் தனது மகனைப் பற்றி ரொம்பவே ஃபீல் பண்ணிப் பேசினார். அவரே ஃபீல் பண்ணினால், அவருக்கு முன்னாடி வந்த நான் என் மகன் சாந்தனுவை பற்றி எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்பேன். பத்து வருடங்களுக்கு முன் ‘காதல்’ படத்தில் நடிக்கச்சொல்லி சாந்தனுவுக்குத்தான் அந்த வாய்ப்பு வந்தது. படம் நிச்சயம் ஹிட்டாகும் என நன்றாகவே தெரிந்தது. ஆனாலும் அப்போது அந்தப்படத்தில் நடிக்கும் அளவுக்கு அவருக்கான வயது இல்லை என மறுத்துவிட்டேன். அதற்குப்பின் அந்த வாய்ப்பு பரத்திற்குப் போய், படமும் மிகப்பெரிய ஹிட்டாகி விட்டது.
அதனால் யாருக்கு என்ன கிடைக்கவேண்டுமோ அது எல்லாமே வரும் நேரத்தில் தான் வரும். அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை. என்னுடைய உதவி இயக்குநர் என்பதற்காகவே மதுராஜுக்கு படம் கொடுத்ததாக தயாரிப்பாளர் சொன்னார். அந்தவகையில் இந்தப்படத்தை நல்லபடியாக முடித்து ஆடியோ ரிலீஸ் அளவுக்கு கொண்டு வந்ததிலும் தயாரிப்பாளருடன் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் படத்தை முடித்ததிலும் இயக்குநர் மதுராஜ் என் பெயரைக் காப்பாற்றி விட்டார். சினிமாவில் பலரும் வில்லனாக நடித்து ஹீரோவாக உயர்ந்தவர்கள் தான். அதனால் இந்தப்படத்தில் நடித்த எம்.எஸ்.குமாரும் ஹீரோவாக மாற வாழ்த்துகள்” என வாழ்த்திப் பேசினார்.

0 coment�rios: