Home Top Ad

நடிகர் ஆர்யா ஒரு பிரபல தொலைக்காட்சி நடத்தும் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டுவருகிறார். அதில் அவரை திருமணம் செய்த...

டிவி நிகழ்ச்சியில் உண்மையிலேயே திருமணம் செய்வாரா ஆர்யா? அவரே கூறிய பதில்

நடிகர் ஆர்யா ஒரு பிரபல தொலைக்காட்சி நடத்தும் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டுவருகிறார். அதில் அவரை திருமணம் செய்து கொள்ள இம்ப்ரெஸ் செய்ய பல பெண்கள் போட்டிபோட்டு பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர்.

நேற்றைய நிகழ்ச்சியில் விருந்தினர்களாக நடிகர் ஷாம் மற்றும் கலையரசன் உள்ளிட்டோர் வந்திருந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் ஷாம் ஆர்யாவை பார்த்து ஒரு கேள்வி கேட்டார், "எல்லோரின் மனதிலும் இந்த கேள்வி உள்ளது, இது வெறும் ரியாலிட்டி ஷோ என நினைத்தேன், நிஜமாகவே நீ இந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்வாயா?" என கேட்டார்.

அதற்கு ஆர்யா "கண்டிப்பாக செய்துகொள்வேன்" என பதில் கூறினார்.

0 coment�rios:

க்யூப் மற்றும் தியேட்டர்களின் அட்ராசிட்டியை ஒழுங்கு படுத்தும் திட்டத்தில் ஒரு ஸ்டெப் அல்ல, பல ஸ்டெப்புகள் முன்னேறி நின்று அடித்து வருகிறது ...

போஸ்டர் கூட ஒட்டக்கூடாதாம்! இதில் அஜீத் படம் எப்படி?

க்யூப் மற்றும் தியேட்டர்களின் அட்ராசிட்டியை ஒழுங்கு படுத்தும் திட்டத்தில் ஒரு ஸ்டெப் அல்ல, பல ஸ்டெப்புகள் முன்னேறி நின்று அடித்து வருகிறது தயாரிப்பாளர் சங்கம். முன்பு சங்கத் தலைவர் விஷாலுக்கு எதிராக நின்று கேம் ஆடிய முக்கிய தயாரிப்பாளர்கள் பலரும், இப்போது விஷால் சப்போர்ட் மன நிலையில் இருப்பதால் நினைத்ததை நடத்தியே தீருவேன் என்று ஃபுல் ஸ்பீட் காட்டி வருகிறார் விஷால்.

மார்ச் 16 முதல் படப்பிடிப்புகள் ரத்து, போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நிறுத்தம், பிரஸ்மீட்டுகள் இல்லை, நாளிதழ் விளம்பரங்கள் நோ, அவ்வளவு ஏன்? ஊரெங்கும் ஒட்டப்படும் சினிமா போஸ்டர்களுக்கும் தடை. போஸ்டர் ஒட்டுவோர் சங்கத்தை அழைத்து பேசிய தயாரிப்பாளர் சங்கம், பிரச்சனை முடியும் வரை எந்த சினிமா போஸ்டரும் ஒட்டக் கூடாது என்று கூறிவிட்டது.

நிலைமை இவ்வளவு சீரியஸ் ஆக இருக்க… ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விஸ்வாசம் படத்திற்காக செட் போடும் வேலைகள் மட்டும் நிறுத்தப்படவில்லை. ஏன்? முதன் முறையா ஆரம்பிச்சுருக்கோம். சென்ட்மென்ட்டா நிறுத்த வேண்டாம் என்று கூறிவிட்டாராம் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன். ஒரு வேளை மார்ச் 23 க்குள் பிரச்சனை முடிந்துவிட்டால், அதே செட்டில் விஸ்வாசம் ஷுட்டிங்கை தொடர்வோம். இல்லாவிட்டால், பிரச்சனை முடிகிற வரைக்கும் செட் அப்படியே இருக்கட்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.

ஆக மொத்தம், திரையுலக பிரச்சனை முடிகிற வரைக்கும் ‘விஸ்வாசம் ’ படப்பிடிப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை!

0 coment�rios:

வாழைப்பழ தோல் நமது சரும பிரச்சினைகள், காயங்கள், பூச்சிக்கடிகள் மற்றும் மன நோய் போன்ற இன்னும் பல பிரச்சினைகளை போக்க உதவுகிறது. வாழைப்பழ தோ...

பூச்சி கடிக்கு உடனடி ரிசல்ட் கிடைத்திடும்! வாழைப்பழ தோலை இப்படி தேய்க்கவும்?

வாழைப்பழ தோல் நமது சரும பிரச்சினைகள், காயங்கள், பூச்சிக்கடிகள் மற்றும் மன நோய் போன்ற இன்னும் பல பிரச்சினைகளை போக்க உதவுகிறது.

வாழைப்பழ தோலின் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்தும் படியுங்கள்..

பூச்சி கடிகள்

வாழைப்பழத்தில் உள்ள மருத்துவ தன்மையானது பூச்சிக்கடிகளுக்கு மருந்தாகிறது.

உங்களை மூட்டை பூச்சிகள் போன்ற பூச்சிகள் கடித்துவிட்டால் அந்த இடத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவை உண்டாகும்.

இதற்கு வாழைப்பழத்தின் தோலை வைத்து அந்த இடத்தில் நன்றாக தேய்க்க வேண்டும். இதனால் அரிப்பு, எரிச்சல் போன்றவை குணமாகும்.
பற்களை வெண்மையாக்க

மற்றவர்கள் அசந்து போகும் அளவிற்கு வெண்மையான பற்கள் வேண்டுமா? அப்படி என்றால் நீங்கள் வாழைப்பழ தோலை பயன்படுத்துவது தான் சிறந்த வழியாகும்.

உங்களது பற்களில் வாழைப்பழ தோலை வைத்து தேய்ப்பதால் உங்களது பற்கள் வெண்மையாகும்.

இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உங்களது பற்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல பலன் கொடுக்கும்.

வறண்ட சருமம்

உங்களது சருமத்தில் வறண்ட பகுதிகள் இருந்தால், அந்த இடத்தில் வாழைப்பழத்தின் தோலை வைத்து நன்றாக தேய்க்க வேண்டும்.

இதனை தினமும் அல்லது வார இறுதி நாட்களில் செய்வதினால் வறண்ட சருமம் மறையும்.
மன அழுத்தம்

உங்களுக்கு இது விசித்திரமானதாக இருக்கலாம். ஆனால் இது நிரூபிக்கப்பட்ட ஒரு முறையாகும்.

நீங்கள் வாழைப்பழத்தின் தோலை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வந்தால் உங்களது மன அழுத்த பிரச்சினை தீரும்.

அல்லது வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஜூஸை பருகினாலும் மன அழுத்தம் தீரும்.
மருக்கள்

மருக்கள் நமக்கு எத்தனை பாதிப்புகளை உண்டாக்க கூடியது என்பது நமக்கு தெரியும். நமது தோற்றத்தையும் கெடுக்கும் தன்மை கொண்டதாகும்.

மருக்கள் உள்ள இடத்தில் வாழைப்பழத்தை வைத்து நன்றாக தேய்க்க வேண்டும்.

இந்த வாழைப்பழமானது உங்களது மருவின் மீது ஒரு மாயம் செய்யும். இது மருக்கள் ஒரு இடத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரவாமல் தடுக்கும்.

0 coment�rios:

அஜித்தின் விசுவாசம் படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. ரசிகர்களும் படத்தை பற்றிய ஏதாவது ஒரு விஷயத்தை படக்குழு வெளியிட மாட்டார்களா என்...

அஜித் பாடுகிறாரா?- டி.இமான் கூறிய ஸ்பெஷல் தகவல்

அஜித்தின் விசுவாசம் படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. ரசிகர்களும் படத்தை பற்றிய ஏதாவது ஒரு விஷயத்தை படக்குழு வெளியிட மாட்டார்களா என்று ஏங்கி வருகின்றனர்.

இந்த நேரத்தில் இப்பட இசையமைப்பாளர் டி.இமான் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் விசுவாசம் படத்தின் இரண்டு பாடல்களுக்கான வேலைகளில் தற்போது இருப்பதாகவும் அந்த 2 பாடல்களும் முதற்கட்ட படப்பிடிப்பில் எடுக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதோடு அஜித் ஓகே சொன்னால் கண்டிப்பாக படத்தில் அவரை பாட வைக்க நான் தயார் என்று தெரிவித்துள்ளார்.

0 coment�rios:

நடிகர் ஆர்யா தற்போது தான் பெண் தேடுவதை டிவி நிகழ்ச்சி மூலம் நடத்தி வருகிறார். அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய தொலைக்காட்சி ஒன்றில் எங்க...

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்- ஆர்யாவை விட்டு விலகி வெளியில் சென்றார்

நடிகர் ஆர்யா தற்போது தான் பெண் தேடுவதை டிவி நிகழ்ச்சி மூலம் நடத்தி வருகிறார். அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய தொலைக்காட்சி ஒன்றில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இதில் பல பெண்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். இதில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான கோமதி என்ற பெண் தனது தாத்தா இறந்து விட்டதால் நிகழ்ச்சியை விட்டு வெளியே சென்றுள்ளார்.

இது ஆர்யாவுக்கும், சக போட்டியாளர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசியில் ஆர்யாவும் அவருக்கு அனுதாபங்கள் சொல்லி வழி அனுப்பி வைத்துள்ளார்.

0 coment�rios: