Home Top Ad

விஸ்வாசம் கதை குறித்து புதிய தகவல் பரவி வருகிறது. சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் 10ம் தேதி ரி...

லீக்கான விஸ்வாசம் கதை: ட்ரெய்லரில் அஜித் சொன்னது தான் உண்மையோ?

விஸ்வாசம் கதை குறித்து புதிய தகவல் பரவி வருகிறது.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் கதை இது தான் என்று கூறி ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.

இந்த தகவல் உண்மையா என்பதை சிவா தான் உறுதி செய்ய வேண்டும்.

தூக்குதுரை

தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டியை சேர்ந்த தூக்குதுரை ஒரு கேங் லீடராம். தூண்டிவிட்டால் சண்டக்கோழியாக மாறும் கதாபாத்திரத்தில் அஜித் நடித்துள்ளாராம். மனைவி நயன்தாராவுக்கு பிரசவம் நடக்கும்போது அஜித் சிலருடன் மோதிக் கொண்டிருப்பாராம். அதனால் குழந்தை பிறக்கும் நேரத்தில் அவர் நயன்தாரா அருகில் இருக்க மாட்டாராம். என் கதையில நான் வில்லன்டா என்று அஜித் ட்ரெய்லரில் சொன்னது உண்மை போன்று.

பிரிவு

என்னையும், குழந்தையையும் விட உங்களுக்கு சண்டை போடுவது தான் முக்கியமா என்று கூறி அஜித்துடன் கோபித்துக் கொண்டு தனியாக போய்விடுவாராம் நயன். பின்னர் அவர் மும்பையில் தனியாக வசிப்பாராம். குழந்தை இறந்துவிட்டதாக அஜித்துக்கு தகவல் வருமாம். 12 ஆண்டுகள் கழித்து தான் அஜித்தும், நயன்தாராவும் சேர்வார்களாம்.

வில்லன்

தனது மகள் உயிருடன் இருப்பதே அஜித்துக்கு ரொம்ப லேட்டாகத் தான் தெரியுமாம். மகளை வில்லன் ஜகபதி பாபுவிடம் இருந்து காப்பாற்றும் வேலையில் இறங்குவாராம் அஜித். இந்த பாசப் போராட்டத்தை ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் அளிக்கிறார் சிவா என்று கூறப்படுகிறது.

அஜித்

படத்தில் பரபரக்கும் சண்டை காட்சிகள் உள்ளதாம். பாசம், காதல், காமெடி, ஆக்ஷன் என்று அனைத்தையும் சரி சமமான அளவில் கலந்து கொடுத்துள்ளாராம் சிவா. விஸ்வாசம் தல ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 coment�rios: