Home Top Ad

கருப்பட்டி என்னும் பனைவெல்லத்தின் மருத்துவ பயன்கள் *சீனி நமக்கு எவ்வளவு பகையோ அதற்கு நேர் மாறாக கருப்பட்டி நம் நெருங்கிய நண்பன். பனங்கருப...

கருப்பட்டி என்னும் பனைவெல்லத்தின் மருத்துவ பயன்கள்

கருப்பட்டி என்னும் பனைவெல்லத்தின் மருத்துவ பயன்கள்

*சீனி நமக்கு எவ்வளவு பகையோ அதற்கு நேர் மாறாக கருப்பட்டி நம் நெருங்கிய நண்பன். பனங்கருப்பட்டி யின் மருத்துவ பயன்கள் அளவில்லாதது*

*இப்படி சர்க்கரை மற்றும் பல நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபட நமக்கு கிடைத்த அருமருந்து தான் கருப்பட்டி*

*சர்க்கரைக்கு மாற்றாக சரியாக கருப்பட்டியை பயன்படுத்தினாலே இன்று உள்ள பெரும்பாலான நோய்கள் இல்லாமலும் அதற்கான மருத்துவ செலவுகள் மற்றும் மருந்துகள் அவசியமில்லாமலே போகும்*

*“உணவே மருந்து” என்னும் நியதிப்படி, கால சூழலுக்கு ஏற்றார்போல உடலுக்கு தேவையானதை தேவைப் படும் நேரத்தில் வழங்குகிறது*

*பனங்கருப்பட்டியின் மருத்துவ பயன்கள்:-*

*1.பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது*

*2.விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது*

*3.பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத் தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்*
*4.குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்*

*5.கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன*

*6.கருப் பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும். அதில் உள்ள ‘கிளைசீமி இன்டெக்ஸ்’ உடலில் கலக்கும் சர்க்கரை அளவை, வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழாக குறைக்கிறது*

*7.சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதி கமாக இருக்கிறது. மேலும் இதை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்*

*8.கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது. கருப்பட்டியை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்புகின்றனர்*

*9.கருப்பட்டிஇரத்தத்தை சுத்திகரித்துஉடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கும்*

*10. மேனிபளபளப்பை பெறும்*

*11.கருப்பட்டியில் சுண்ணாம்பு கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தமடையும்*

*12.சீரகத்தை வறுத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்*

*13.ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும்*

*14.கரும்புசக்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்களும்எலும்புகளும் உறுதியாகும்*

*15.நீரிழிவு நோயாளிகள் (சக்கரை நோயாளிகள்) கைகுத்தல்அரிசிசாதத்துடன் கருப்பட்டி கலந்து சாப்பிட்டுவந்தால் சக்கரையின் அளவு கட்டுபாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவது குறையும்*

*16.குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம்உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது*

*17.சுக்குகருப்பட்டி பெண்களின் கர்ப்பப பைக்கு மிகவும் ஏற்றது*
.

*18.சுக்கு,மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாகசுரக்கும்*

*19.அந்ததாய் பாலை குடிக்கும் குழந்தைக்கு நல்ல ஊட்டசத்துக்கள் கிடைக்கபெறும்*.

*20.உடல்இயக்கத்தையும் சீரான சக்தியையும் சமநிலையில் செய்கிறது*

0 coment�rios:

கருணாநிதி தனது கண்ணின் கருவிழி என்று அழைத்தது ஒருவரைத்தான். அவர் வேற யாருமில்லை கருணாநிதியின் மருமகான முரசொலி மாறன். கருணாநிதியின் மறு வட...

கருணாநிதியை உலுக்கிய மரணம்: அவரின் மனசாட்சி யார் தெரியுமா?

கருணாநிதி தனது கண்ணின் கருவிழி என்று அழைத்தது ஒருவரைத்தான். அவர் வேற யாருமில்லை கருணாநிதியின் மருமகான முரசொலி மாறன்.

கருணாநிதியின் மறு வடிவம் என்று திமுக தொண்டர்களால் அழைக்கப்பட்டவர் முரசொலி மாறன்.

அரசியலில் தொடங்கி கட்சி, கூட்டணி என அனைத்திலும் கருணாநிதி அடுத்து என்ன முடிவு எடுப்பார் என்பது முரசொலி மாறனுக்கு தெரியும். அந்த அளவுக்கு கருணாநிதியின் எண்ணமாகவும், நிழலாகவும் திகழ்ந்தார் முரசொலி மாறன்.

திமுக நிர்வாகிகள் பலரும் முரசொலி மாறனை செல்லமாக கருணாநிதியின் மனசாட்சி என்று தான் அழைப்பார்கள்.

திமுகவின் அரசியல் தேசிய அளவிலும், சர்வதேச அரங்கிலும் உயர்ந்திட மிக முக்கிய காரணமாக இருந்துள்ளார் முரசொலி மாறன்.

ஒருமுறை தோஹா மாநாட்டில் முரசொலி மாறன் நீண்ட உரை ஒன்றை நிகழ்த்தினார். அவரின் உரையை கேட்டு மெய் மறந்த கருணாநிதி, முரசொலி மாறனை கட்டி அணைத்து பாராட்டினார். அதன் பின்பு தான் கருணாநிதி வாழ்க்கையில் தவிர்க்க முடியாத நிழலாக முரசொலி மாறன் உருவெடுத்தார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக முரசொலி மாறன் காலமானர். மாறனின் மரணத்தின் போது கருணாநிதி அவருடன் இருந்தார்.

மாறனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்ற செய்தி தெரிந்ததும் கலைஞர் அடுத்தக்கணமே மருத்துவமனைக்கு விரைந்தார்.

மாறன் மரணமடைந்ததும், கருணாநிதி மருத்துவமனையிலியே கண்ணீர் விட்டு அழுதார். முதலில் முரசொலி மாறனின் உடல் அவரின் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அதன் பின்பு இரவு 9 மணிக்கு மேல் தான் கருணாநிதியின் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டது. அதுவரை மாறனின் உடலுக்கு அருகில் கருணாநிதி அமர்ந்திருந்தார்.

முரசொலி மாறனின் பிரிவுக்கு பிறகு கருணாநிதி மனதளவிலும், உடல் அளவிலும் பலவீனம் ஆனார். கருணாநிதியின் உடல்நிலை சற்று மோசமானது.

முரசொலி மாறனின் பிரிவு தான் கருணாநிதியை இந்த நிலையில் தள்ளிவிட்டது என்று திமுக தொண்டர்கள் பலர் வருத்தப்பட்டனர். மாறனின் மறைவு கருணாநிதியின் நெஞ்சில் இடி போல் விழுந்தது.

அதன் பின்பு கருணாநிதி அளித்த பல பேட்டியில் அவரால் மறக்க முடியாத மரணம் என்று முரசொலி மாறனின் மரணத்தை தான் குறிப்பிடுவார்

0 coment�rios:

ஆப்பிளிள் சத்துக்கள் நிறைந்து காணப்பட்டாலும் அதன் விதைகளில் விஷத்தன்மை வாய்ந்த ஒரு சயனைடு உள்ளது. ஒரு கிராம் ஆப்பிள் விதையில் 0.06-0.24 கிர...

ஆப்பிள் விதையில் விஷம்! சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

ஆப்பிளிள் சத்துக்கள் நிறைந்து காணப்பட்டாலும் அதன் விதைகளில் விஷத்தன்மை வாய்ந்த ஒரு சயனைடு உள்ளது. ஒரு கிராம் ஆப்பிள் விதையில் 0.06-0.24 கிராம் அளவிற்கு சயனைடு எனும் நச்சுக்கள் உள்ளது.

அத்தகைய ஆப்பிள் பழத்தின் விதைகளையும் நாம் சேர்த்து சாப்பிட்டால் பலவிதமான பக்கவிளைவுகள் ஏற்படுத்தும்.

ஆப்பிள் விதையை சாப்பிட்டால் என்ன நடக்கும்?

ஆப்பிள் விதைகளில் இருக்கும் அமிக்டாலின் என்ற சயனைடு மிகவும் நச்சு தன்மை கொண்டது. அத்தகைய ஆப்பிள் விதைகளை நாம் உண்ணும் போது அவை முதலில் செரிமான மண்டலத்தை சென்றடைந்து அந்த சயனைடு நச்சாக மாறி, உடலின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
ஆப்பிள் விதைகளை நாம் சாப்பிடும் போது அவை முதலில் நம் உடலில் உள்ள சுவாச உறுப்புகளுக்கு செல்லும் ஆக்ஸிஜனை தடுத்து, இதயம், மூளை மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரித்து, உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடியதாக அமைகிறது.

தெரியாமல் ஆப்பிள் விதைகளை உண்டால் அவை அவர்களின் நோய் எதிர்ப்பு திறனை பொறுத்தே பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் அவர்களுக்கு சில நேரங்களில் வாந்தி, மயக்கம், தலை சுத்தல், வயிற்றில் வலி போன்றவை ஏற்படும்.

ஆப்பிள் விதையில் 0.3-0.35 மிகி வரையிலான சயனைடு ஆபத்தை விளைவிக்கும். மேலும் ஆப்பிள் விதையில் உள்ள சயனைடின் அளவு ஒவ்வொருவரின் உடல் எடைக்கு ஏற்றது போல வேறுபடும்.

ஆப்பிள் விதைகளை ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொண்டால் கோமா நிலை ஏற்பட்டு இறப்புகள் கூட நடைபெற வாய்ப்பு உள்ளது.

எச்சரிக்கை!

ஆப்பிள் சாப்பிடும் முன்னர் அதன் விதைகளை முற்றிலும் அகற்றிவிட்டு சாப்பிடுவது நல்லது.
அதன் விதைகளை அப்படியே சாப்பிட்டுவிட்டால் அதை வெளியில் உடனடியாக உமிழ்ந்துவிடுவது நல்லது.
மேலும் செரிமான மண்டலத்தை சென்றடைந்தால் தான் சயனைடாக மாறும் என்பதால், அதனை உமிழ்ந்துவிடுவதால் எதுவும் ஆகாது.

0 coment�rios:

கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள ’விஸ்வரூபம் 2’ படத்திற்கு பிரபல சினிமா பத்திரிக்கையாளர் உமைர் சந்து அளித்துள்ள ரேட்டிங் விபரங்கள் சமூகவலைதளங்கள...

Vishwaroopam 2: ரேட்டிங் இதுதான்- விமர்சகர் உமைர் சந்து சினிமா விமர்சனம்

கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள ’விஸ்வரூபம் 2’ படத்திற்கு பிரபல சினிமா பத்திரிக்கையாளர் உமைர் சந்து அளித்துள்ள ரேட்டிங் விபரங்கள் சமூகவலைதளங்களில் டிரென்டிங்கில் உள்ளன.

2013ம் ஆண்டில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியான திரைப்படம் ’விஸ்வரூபம்’. கமல்ஹாசன் இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம், இந்திய உளவாளியின் அதிரடி சாகசங்களை பற்றிய படமாக தயாராகியிருந்தது.

தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் ‘விஸ்வரூபம்- 2’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்த படத்தை கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ளார்.

முதல் பாகத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர், ராகுல் போஸ் போன்றோர் விஸ்வரூபம்- 2விலும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பல புதிய கதாபாத்திரங்களும் இந்த படத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது.

குறிப்பாக விஸ்வரூபம்- 2வில் கமல்ஹாசனின் தாயார் கதாபாத்திரம் முக்கிய இடம் பிடித்துள்ளது. அந்த கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னாள் கதாநாயகியும் தமிழகத்தை சேர்ந்தவருமான வகீதா ரஹ்மான் நடித்துள்ளார்.

EXCLUSIVE First Review #Vishwaroopam2 from #UAE ! A Well Made Thriller in all Respects ! @ikamalhaasan Stole the Sh… https://t.co/M0p7PYNmRO

— Umair Sandhu (@sandhumerry) 1533802594000


இந்தியாவில் நாளை அதிகாரப்பூர்வமாக வெளிவரவுள்ள ’விஸ்வரூபம்- ’படம், முன்னதாக மத்திய கிழக்கு பகுதியின் சில நாடுகளில் வெளியானது. அதை பார்த்த பிரபல சினிமா பத்திரிக்கையாளர் உமைர் சந்து ’விஸ்வரூபம்- 2’ படத்திற்கு தனது ரேட்டிங்கை அளித்துள்ளார்.

”விஸ்வரூபம் - 2 அதிரடியாகவும், ரசிக்கும்படியான த்ரில்லிங் அனுபவம் தரும் விதத்தில் தயாராகியுள்ளது. கமலின் நடிப்பு மற்றும் இயக்கம் அருமை. படத்தில் இடம்பெற்றுள்ள அதிரடி காட்சிகள் பிரமிப்பை தருகின்றன”. என தனது ட்விட்டரில் உமைர் சந்து பதிவிட்டுள்ளார்.

அத்துடன் 5 / 3.5 என தனது ரேட்டிங்கை விஸ்வரூபம்- 2 படத்திற்கு அவர் வழங்கியுள்ளார். இவரது இந்த பதிவு, சமூக வலைதளங்களில் டிரென்டிங்கில் உள்ளன. இது இந்திய ரசிகர்கள் மத்தியிலும் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. 

0 coment�rios:

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் நாளை ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. நடிகர் கமல்ஹாசன...

'விஸ்வரூபம்' முதல் ‘விஸ்வரூபம் 2’ வரை- ரசிகனையும் தொண்டனையும் திருப்திபடுத்துவாரா கமல்ஹாசன்?

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் நாளை ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், அவரே இயக்கி, தயாரித்து கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘விஸ்வரூபம்’. சர்வதேச தீவிரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், வெளியீட்டிற்கு முன் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது.

தடைகளை உடைத்து சரித்திரம் படைத்தவன்:

படத்தில் முஸ்லீம் மதத்தவர்களை தவறாக சித்தரித்ததாக தெரிவித்து, சில முஸ்லீம் அமைப்பினர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் சில நாட்களுக்கு பின்னரே விஸ்வரூபம் வெளியிடப்பட்டது. இருப்பினும், படம் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களின் பேராதரவை பெற்று, மிகப்பெரிய அளவில் வெற்றிப் பெற்றது. படத்தின் இறுதியில் அதன் இரண்டாம் பாகத்தில் சில காட்சிகள் டிரைலராக காட்டப்பட்டு, விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.



2015 இல் கலக்கிய கமல்:

ஆனால், நிதிப் பிரச்சனையால் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடிக்கடி தடைப்பட்டது. இதனிடையில், நடிகர் கமல்ஹாசன் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உத்தமவில்லன் (2015), ஜித்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் (2015), சி.கே.திவாகர் இயக்கத்தில் தூங்கா வனம் (2015) உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதில் பாபநாசம் திரைப்படம் மட்டும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியைப் பெற்றது.

சபாஷ் நாயுடு:

இந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தசாவதாரம் படத்தில் வந்த காமெடி கதாபாத்திரமான நாயுடுவை வைத்து சபாஷ் நாயுடு படத்தை இயக்க முயற்சித்தார். ஆனால், அந்தப் படமும் நிதிப்பிரச்சனையால் பாதியிலேயே தடைப்பட்டது.

பிக்பாஸும் பிரச்சனைகளும்:

பிக்பாஸ் கமல்ஹாசன்

இதற்கிடையில்தான் வெளியானது பிக்பாஸ் என்ற ரியாலிட்டு ஷோ. ஏற்கனவே பல மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த இந்த ஷோவை, தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார், அவரின் பேச்சுப் புலமை இந்த நிகழ்ச்சி வெற்றிப் பெற மிகப்பெரிய அளவில் உதவியது.

அதுவரையில், சமூகப் பிரச்சனைகளுக்கு நடிகனாக குரல் கொடுத்து வந்த கமல்ஹாசன். அந்த சமூகத்தில் உள்ளவர்களில் ஒருவராக, அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளை வைக்கத் தொடங்கியது இந்த நிகழ்ச்சியில்தான்.

முதலில், தமிழ் கலாச்சாராத்திற்கு எதிராக உள்ளது என ஆரம்பித்த பிக்பாஸ் பிரச்சனை, படிப்படியாக உருவெடுத்து, கமலுக்கும் மற்றும் அரசாங்கத்திற்கும் இடையேயான பிரச்சனையாக மாறியது. இதனால், கமலுக்கும் தமிழக அமைச்சர்களுக்கும் இடையே கருத்துப் போர் உண்டானது. இதன் விளைவாக, நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டார்.

விஸ்வரூபத்துடன் விஸ்வரூபம் எடுத்த மக்கள் நீதி மய்யம்:

இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் பாதியில் நிறுத்தப்பட்ட ‘விஸ்வரூபம் 2’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினார். அதே வேளையில் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி, மதுரையில் நடந்த மாநாட்டில், சொன்னபடி ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியைத் தொடங்கி, அதன் கொடியையும் அறிமுகப்படுத்தினார். ஒருபுறம் ‘விஸ்வரூபம் 2’ மறுபுறம் மக்கள் நீதி மய்யம் இரண்டையும் ஒருசேர கட்டமைத்தார் கமல்ஹாசன்.


தற்போது, ‘விஸ்வரூபம் 2’ படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், ஆகஸ்ட் 10 ஆம் தேதி(நாளை) வெளியாகிறது. கடந்த முறையை போல் இல்லாமல், இம்முறை படத்திற்கு பிரச்சனைகள் அந்த அளவிற்கு இல்லை என்றாலும், படம் வெளியான பின் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என எதிர்பார்க்கப்படுகிறது.


முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தியுள்ள நடிகர் கமல்ஹாசன், அரசியலுக்கு வந்த பின் வெளியாகும் முதல் திரைப்படம் ‘விஸ்வரூபம் 2’. தற்போது கமல்ஹாசனுக்கு நடிகனாக தனது ரசிகனை மட்டுமில்லாமல், ஒரு தலைவனாக தனது தொண்டனையும் இப்படத்தில் திருப்தி படுத்த வேண்டியுள்ளது. அதை அவர் எந்த அளவிற்கு செய்கிறார் என்பதை படம் வெளியான பின்னரே அறிய முடியும். 

0 coment�rios: