தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே !
நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் ...
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது !
தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே !
அலுவலகத்தில் வேலை பார்ப்போருக்கும் சரி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் சரி ஞாயிற்றுக்கிழமை வந்தாலே உற்சாகம் தான். வாரம் முழுதும் வேலை பார்...
வாரத்தில் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை ஏன் வந்தது?.. எப்போதாவது யோசித்ததுண்டா?
வாரம் முழுதும் வேலை பார்த்து சோர்வடைந்தவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் தினம் வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமையே.
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் வாழ்வதற்கு முக்கிய ஆதாரம் சூரிய ஒளி. இது இல்லை எனில் தாவரங்கள் அவற்றிற்கு தேவையான உணவினை தயாரித்து கொள்ள முடியாது. மற்ற உயிர்களுக்கும் உணவு கிடைக்காது.
உலகில் உள்ள ஓரறிவு உயிர் முதல் ஆறறிவுள்ள மனிதன் வரை அனைவருக்கும் மிக முக்கியமானது சூரியன். அனைத்து உயிர்களுக்கும் ஜீவாதரமாக சூரியன் திகழ்வதால் வாரத்தின் முதல் நாளாக சூரியனை ஏற்படுத்தினார்கள்.
ஐம்பெரும்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் கடவுள் வாழ்த்தின் துவக்கத்தில் ஞாயிறு போற்றுதும் என்றே எழுதப்பட்டுள்ளது. சூரியனுக்கு பின்னரே மற்ற இயற்கை வழிபாடுகளான நிலா, மழை போன்ற தெய்வங்கள் குறிக்கப்படுகின்றன.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஹிட் படங்கள் என்பது எப்போதும் மிக குறைவு தான். வருடத்திற்கு 200 படங்கள் திரைக்கு வருகின்றது. இதில் ஹிட் ஆன படம்...
இந்த வருடம் இதுவரை வந்த படத்தில் ஒரே படம் தான் ஹிட், எது தெரியுமா?
இதில் ஹிட் ஆன படம் என்று பார்த்தால் 10 கூட இருக்காது, அந்த வகையில் இந்த வருடம் இதுவரை சுமார் 35 படங்கள் வரை வந்துவிட்டது.
இதில் அனைத்து தரப்பினருக்கும் ஹிட் கொடுத்த படம் என்றால் கலகலப்பு-2 தான், இதை தவிர வேறு எந்த படமும் அனைத்து தரப்பினருக்கும் லாபம் கொடுக்கவில்லை.
பாலா இயக்கிய நாச்சியார் மட்டும் முதலுக்கு மோசமில்லை ரகம், மற்றபடி பெரிதும் எதிர்ப்பார்த்த தானா சேர்ந்த கூட்டம் படம் தோல்வியை சந்தித்துள்ளது.
ஸ்கெட்ச் படம் குறைந்த தொகைக்கு விற்றதால் பெரியளவில் நஷ்டம் இல்லை, இனி வரும் காலங்களில் திரையரங்க, தயாரிப்பாளர்கள் போராட்டம் எல்லாம் முடிந்து திரைக்கு வரும் படங்களாவது வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பும்.
ஒருவர் தன்னை தானே சுயவிமர்சனம் செய்வது அவ்வளவு எளியது அன்று. கண்ணதாசன் தன்னுடைய மனதில் உள்ளவற்றை அப்படியே வெளிபடுத்துவார்.அவர் யோசித்து எள...
கண்ணதாசன் - சுயவிமர்சனம்
நானிடறி விழுந்தயிடம் நாலாயிரம் அதிலும்
நான் போட்ட முட்கள் பதியும்
நடைபாதை வணிகன்னென்று நான்
கூவி விற்ற பொருள்
நல்ல பொருளில்லை அதிகம்
நல்ல பொருளில்லை அதிகம்..."
கண்ணதாசன் ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யம். அவர் ஒரு சகாப்தம்.அவர் ஒரு தமிழ் அகராதி. அவர் நம் வாழ்க்கையின் அனுபவம்.
ஒரு கையில் மதுவும் ஒரு கையில் மாதுவும்
சேர்ந்திருக்கின்ற வேளையிலே என்
ஜீவன் பிறிய வேண்டும் - இல்லையென்றால்
என்ன வாழ்கை நீ வாழ்ந்தாயென்றே
எனை படைத்த இறைவன் கேட்பான் ...
மேலே உள்ள வரிகளை எழுதியது ஏதோ சாதரண கவிஞன் அல்ல. வெறும் பத்து பாடல்களை எழுதி மறைந்த ஒரு பாமர கவிஞன் அல்ல. 5000 பாடல்களையும்6000 கவிதைகளையும் படைத்த ஒரு அசுரன். அவர் எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கை 232.
அவரின் சுயசரிதை புத்தகங்கள்
எனது வசந்த காலங்கள்
எனது சுயசரிதம்
வனவாசம்
மனவாசம்
கண்ணதாசன்,சுயவிமர்சனம்
ஒரு கோப்பையில் என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர்துடிப்பு ...
காவியத்தாயின் இளைய மகன்
காதல் பெண்களின் பெருன் தலைவன்
பாமர ஜாதியில் தனி மனிதன் - நான்
படைப்பதனால் என் பேர் இறைவன் ...
நான் மானிட ஜாதியில் ஆட்டி வைப்பேன் - அவர்
மாண்டு விட்டால் அதை பாடி வைப்பேன்
நான் நிரந்தரம் ஆனவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை...
அவருடைய "சேரமான் காதலி" சாகித்திய ஆகாடமி விருது பெற்றது.முதல் முதலில் பாடலுக்காக தேசிய விருது பெற்ற உன்னத கவிஞன்(1968). தமிழ் நாட்டின் முதல் அரசவை கவிஞன். அவருடைய அர்த்தமுள்ள இந்து மதம் உலகப் புகழ் பெற்றவை.
ரஜினிகாந்த் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கியுள்ள 'காலா' திரைப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரப்பரப்பாக நடந்துவருகின்றன. ஏப்ரல் 27- ம் ...
"ரஜினியோடு மோதும் சூப்பர் ஹீரோக்கள், பாபிசிம்ஹாவின் வெப்சீரிஸ், ஜாக்குலின் ஆக்ஷன், அனுராக் காஷ்யப்பின் புதிய படம்...
பாபி சிம்ஹாவின் வெப்சீரிஸ்
தமிழ் ரசிகர்களுக்கிடையே வெப்சீரிஸ் கலாசாரம் பெருகி வருகிறது. யூ-டியூப், அமேசான், நெட்ஃப்லிக்ஸ் என எல்லா வீடியோ வலைதளங்களின் தொடர்களையும் தமிழ் ரசிகர்கள் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இதைப் புரிந்துகொண்ட திரை நட்சத்திரங்கள், மெள்ள மெள்ள வெப்சிரீஸ் பக்கமும் தலைகாட்ட ஆரம்பித்துள்ளனர். 'ப்ரீத்' என்ற இந்தித் தொடரில் மாதவன் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து தமிழில் பாபி சிம்ஹா வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இத்தொடரை ' `சவாரி' படத்தின் இயக்குநர் குகன் சென்னியப்பன் எழுதி இயக்குகிறார். பாபி சிம்ஹாவிற்கு ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார்.
நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய படம்
'வெப்பம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான தெலுங்கு நடிகர் நானி, 'பாகுபலி' இயக்குநர் ராஜமௌலியின் 'நான் ஈ' படம் மூலம் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பெரிய ரசிகர் கூட்டத்தைப் பெற்றார். தொடர்ந்து தெலுங்கில் கடந்த மூன்று வருடமாக ஹிட் படங்களைக் கொடுத்து வரும் நானி, சமீபத்தில் தயாரித்த 'ஆவ்' படமும் ஹிட் ஆனது. டோலிவுட்டின் 'நேச்சுரல் ஸ்டார்' என அழைக்கப்படும் இவரின் அடுத்தபடம், 'கிருஷ்ணார்ஜுனா யுத்தம்'. காதல், காமெடி, ஆக்ஷன் என வழக்கமான நானி படங்களின் டெம்ப்ளேட்டில் ஃபிட் ஆகியிருக்கும் இத்திரைப்படம், டோலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் நானிக்கு ஜோடி அனுபமா பரமேஸ்ரன்.
சல்மான் படத்தில் ஸ்டண்ட் செய்யும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்
2008-ல் அப்பாஸ் மஸ்தான் இயக்கத்தில் சைஃப் அலிகான் நடித்து வெளிவந்த ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் 'ரேஸ்'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதேகூட்டணியில் மீண்டும் வெளியான 'ரேஸ் 2' திரைப்படமும் வெற்றி பெற்றது. தற்போது, சல்மான் கான், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் நடிக்க, பிரபல நடன இயக்குநர் 'ரேஸ் 3' இந்தத் தலைப்பின் 3-வது அத்தியாயமாக வெளிவருகிறது. இப்படத்திற்காக நாயகி பிரத்யேக சண்டைக் காட்சிகளுக்காக மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அனுராக் காஷ்யப் - அபிஷேக் கூட்டணி
முன்னணி பாலிவுட் இயக்குநர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். தற்போது நயன்தாரா, அதர்வா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்தியில் தொடர்ந்து படம் இயக்கிவரும் இவர், அடுத்து அபிஷேக் பச்சனை வைத்து 'மன்மர்ஸியான்' எனும் படத்தை இயக்கிவருகிறார். 'கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து படத்தில் நடிக்கிறேன்' என்று அபிஷேக் நெகிழ்வாய் ட்வீட் செய்ய, சூர்யா உள்பட அபிஷேக்கின் திரையுலக நண்பர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.
தலைமுடி அதிகமாக உதிர தொடங்கினால் அது நாளடைவில் சொட்டையாக மாறிவிடும். இப்பிரச்சனையை ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலருமே சந்திக்கின்றனர்....
சொட்டையில் முடி வளர்ச்சியை தூண்டும் டிப்ஸ்: சில வாரத்தில் பலன் தெரியுமாம்
இதற்கு மரபணுக்கள் மட்டும் காரணமல்ல, ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை உண்பது, மன அழுத்தம், பதற்றம் போன்ற வேறு சில காரணங்களும் உள்ளது. அதற்கான சில இயற்கை வழிகள் இதோ,
கடுகு எண்ணெய்
ஒரு கப் கடுகு எண்ணெயை ஊற்றி சூடேற்றி, அதில் 4 டேபிள் ஸ்பூன் மருதாணி இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி குளிர்ந்த பின் வடிகட்டி தினமும் தலையில் சொட்டை உள்ள இடத்தில் தடவி வந்தால், சில வாரங்களில் முடியின் வளர்ச்சியைக் காணலாம்.
வெங்காயம்
சொட்டையான இடத்தில் வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து தடவி சிறிது நேரம் கழித்து அவ்விடத்தில் தேனை தடவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்தால், முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
முட்டை
ஒரு முட்டையின் மஞ்சள் கருவுடன் சிறிது தேன் கலந்து, அதை ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி, 30 நிமிடம் கழித்து ஷாம்பு பயன்படுத்தி முடியை அலச வேண்டும். இதை வாரத்திற்கு 1 முறை செய்து வர வேண்டும்.
தயிர்
2 டேபிள் ஸ்பூன் தயிருடன், 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் செய்து, அதை ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி 1 மணிநேரம் கழித்து நீரில் அலச வேண்டும். அதனால் முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.
நெல்லிக்காய்
நெல்லிக்காயை துண்டுகளாக்கி, தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி அந்த எண்ணெய் குளிர்ந்ததும், தினமும் அதை தலைக்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்படும்.
தேங்காய் பால்
தினமும் தேங்காய் பாலை கொண்டு முடியின் ஸ்கால்ப்பை மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து குளித்து வந்தால், முடி ஊட்டம் பெற்று, தலைமுடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
ஏற்கனவே 2 வாரமாக எந்தவொரு புதிய படமும் வெளியாகாததால் சினிமா ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை முதல் அனைத்து ...
தியேட்டர் உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு! ரசிகர்கள் மகிழ்ச்சி
சென்னை தியேட்டர் உரிமையாளர்கள் சங்க கூட்டம் இன்று நடந்தது. அதில் ஸ்டிரைக்கில் கலந்துகொள்ளமாட்டோம் என முடிவெடுத்துள்ளதாக சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
மக்களின் பொழுதுபோக்கிற்காக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் என அனைத்து மொழி படங்களையும் திரையிடவுள்ளோம் என மேலும் அவர் கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி எப்போதும் தரமான படங்களை தான் தேர்ந்தெடுத்து நடிப்பார். அப்படி அவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம் வி...
விஜய் சேதுபதி படத்தை கைப்பற்றிய அம்பானி- வேற லெவல்
இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விக்ரம் வேதா நீண்ட நாட்களாக ஹிந்தியில் ரீமேக் செய்ய பேச்சு வார்த்தைகள் நடந்து வந்தது.
இறுதியாக Y Not Studios அனில் அம்பானியுடன் கைக்கோர்த்து விக்ரம் வேதாவை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர்.
ஹிந்தி பதிப்பில் மாதவன், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்பதை விரைவில் அறிவிக்கப்படுமாம்.
1 coment�rios: