Home Top Ad

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நீண்டகாலமாக எல்லைப்பிரச்சனை இருந்து வருகிறது. இதனால், எல்லையில் அவ்வப்போது அசாதரண சூல்நிலையும் ஏற்பட்டு ...

தோண்ட தோண்ட கொட்டிக் கிடக்கும் தங்கம்! இதன் மதிப்பு 60 பில்லியன் அமெரிக்க டொலர்களாம்!

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நீண்டகாலமாக எல்லைப்பிரச்சனை இருந்து வருகிறது. இதனால், எல்லையில் அவ்வப்போது அசாதரண சூல்நிலையும் ஏற்பட்டு வருகிறது.

இதற்கு காரணம், இந்தியாவிற்கு சொந்தமான அருணாசலபிரதேசத்தை தங்களது தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருவது தான்.

இந்நிலையில், அருணாச்சல பிரதேச எல்லயை ஒட்டிய லூன்சே எனும் பகுதியில் சீன அரசாங்கம் தங்கச் சுரங்கம் தோண்டி வருவதாக செய்திகள் வந்தன.

இதில், சுமார் 60 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிர்கு தங்கம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த உலோக தாதுப் பொருட்கள் இருப்பதாக தனியார் செய்தி நிறுவனம் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லூ காங் கூறியதாவது, சீனா தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அவ்வப்போது பூமிக்கு அடியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இப்படியிருக்கையில், தற்போது தங்கச் சுரங்கம் தோண்டப்படும் பகுதி முழுக்க முழுக்க சீனாவின் இறையாண்மைக்கு சொந்தமானது. இந்த பகுதியை அனுபவிக்க எங்களுக்கு முழு உரிமை உள்ளது. என்று தெரிவித்துள்ளார்.

0 coment�rios:

காலம்காலமாக மற்ற மொழிப்படங்களில் சில நம் ரசிகர்களை ஈர்த்து விடுகிறது. அவை நம் மொழியிலும் பார்த்தால் நன்றாக இருக்குமே என்ற எதிர்பார்ப்பும் இ...

பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைவிமர்சனம் - பாஸ்கர் ஒரு ராஸ்கல் நல்ல எண்டர்டெயின்மெண்டான ஃபேமிலி பேக்கேஜ்.

காலம்காலமாக மற்ற மொழிப்படங்களில் சில நம் ரசிகர்களை ஈர்த்து விடுகிறது. அவை நம் மொழியிலும் பார்த்தால் நன்றாக இருக்குமே என்ற எதிர்பார்ப்பும் இருக்கும்.

அப்படி ஒரு ரசனையுடன் மலையாளத்தில் இருந்து வந்திருக்கிறான் இந்த பாஸ்கர் ஒரு ராஸ்கல். யார் இவன், மக்களிடம் இடம் பிடிப்பானா என உள்ளே சென்று பார்க்கலாம்.

கதைக்களம்

அரவிந்த் சாமி ஒரு சாதாரண பிசினஸ் மேன். ஆனால் இவர் வம்பு என வந்துவிட்டால் முரடன். இவருக்கு ஆகாஷ் என்ற பையனும், அப்பா நாசரும் இருக்கிறார்கள். அப்பா மீது பாசமாக இருந்தாலும் சில விசயங்களால் அவனுக்கு அரவிந்த் சாமியை பிடிக்கவில்லை.

நடிகை அமலா பால் ஒரு எதிர்பாராத விதமாக ஒரு கட்டத்தில் தன் காதல் கணவரை இழக்கிறார். பின் வேறொரு ஊரில் தன் மகள் நைனிகாவுடன் தனியே வாழ்கிறார். இந்நிலையில் அரவிந்த் சாமிக்கு தன் மகன் மூலம் அமலா பாலின் அறிமுகம் கிடைக்கிறது. பின் இரு குடும்பமும் ஒன்றாக நட்புறவாக மாறுகிறார்கள்.

பின் அரவிந்த் சாமி, அமலா பால் இருவரும் வாழ்க்கையில் இணைய விரும்பும் நேரத்தில் பயங்கர அதிர்ச்சி. தன்னை தேடி வந்த ஒரு நபரால் பெரும் அதிர்ச்சியாகிறார் அமலா.

மேலும் முக்கிய அறிவியல் விஞ்ஞானி ஒருவர் கொல்லப்படுகிறார். அவரின் கொலைக்கு காரணமானவர்கள் யார்? மர்ம பின்னணி என்ன? அமலா பாலை தேடி வந்த நபர் யார்? அவரின் கணவர் என்ன ஆனார்?

அரவிந்த் சாமி, அமலா பால் இருவரும் வாழ்க்கையில் இணைந்தார்களா என்பதே இந்த படத்தின் கதை.

படத்தை பற்றிய அலசல்

அரவிந்த் சாமி அண்மைகாலமாக படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். மீண்டும் அவர் ஹீரோவாக பாஸ்கர் படத்தில் வந்திருக்கிறார். அவருக்கு இன்னும் அந்த காலத்து ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை தியேட்டரில் காணமுடிகிறது. அவர்களின் எதிர்பார்ப்பை அவரும் இப்படத்தில் பூர்த்தி செய்கிறார். முரட்டுத்தனமாக இருக்கும் இவர் தன் மகனுக்காக வேறுவிதமாக மாறுகிறார்.

அமலா பால் மீண்டும் ஹீரோயினாக இப்படத்தின் மூலம் இறங்கியுள்ளார். படத்தில் அவரை பார்க்கும் போது முன்பு இருந்த அமலா பாலை அப்படியே பார்க்க முடிந்தது. தான் விரும்பும் யோகாவையும் கூடவே கூட்டி வந்திருக்கிறார். விரும்பிய ஒன்றுக்காக வாழ்க்கையை விட்ட கதை அவரின் ரியல் லைஃப் போலிருந்தது.

விஜய் சேதுபதியுடன் நடித்த குட்டி பையன் மாஸ்டர் ராகவன் படத்தில் ஆகாஷாக தன் திறமையை காட்டியிருக்கிறார். இவரை சும்மா சொல்லக்கூடாதுங்க. நடனம், நடிப்பு என அசத்துகிறார். எதிர்காலத்தில் திறமையான நடிகராக வருவார் என தெரிகிறது.

தெறி படத்திற்கு பிறகு பேபி நைனிகா மீண்டும் இப்படத்தில் இறங்கியுள்ளார். சொல்லப்போனால் ஒரு குட்டி ஹீரோயின் போல தான். சில நேரத்தில் பிள்ளைகள் விரும்பும் சிலவற்றில் பெரிய விசயம் இருக்கும் என அவர் படத்தில் தெளிவுபடுத்துகிறார்.

படத்தில் காமெடிக்கு மூன்று பேர் கூட்டணியாக, ரமேஷ் கண்ணா, ரோபோ சங்கர், சூரி என ஒன்று கூடியுள்ளார்கள். யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் கிடையாது என காட்டியிருக்கிறார்கள்.

மலையாளத்தில் ஹிட்டான இப்படத்தை தமிழ் படம் போல அழகாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சித்திக். இந்த படம் எப்படியிருக்குமோ என நினைப்பவர்களை படம் முழுக்க உட்கார்ந்து பார்த்து ரசிக்கும் படி செய்திருக்கிறார்.

நிகிஷா படேல், நடிகர் ரியாஸ் கான், பாலிவுட் நடிகர் அஃப்தப் சிவ்தஸனி என பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். ஆனால் என்ன ரியாஸ்கானா இது என உருவத்தால் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

சிம்பிளான ஸ்டோரி, மலையாள பட ஸ்டைலில் அழகான எடிட்டிங், கேட்கும் படியான பாடல்கள் என படம் ஒரு அழகான படைப்பு. கல்யாணி என ஓரே ஒரு சின்ன விசயத்தால் வந்த பிரச்சனை.

மது வா இல்லை மாது வா, என்ன அது என்பதை படத்தில் பாருங்கள்..

கிளாப்ஸ்

மாஸ்டர் ராகவன், பேபி நைனிகா இருவரும் படம் முழுக்க ஸ்கோர் அள்ளுகிறார்கள்.

அரவிந்த் சாமி, அமலா பால் ஜோடி நன்றாக தான் இருக்கிறது.

ரோபோ சங்கர், சூரி, ரமேஷ் கண்ணா என தங்கள் பங்குக்கு ஆடியன்ஸிடம் கிளாப்ஸ் பெறுகிறார்கள்.

பல்ப்ஸ்

எதற்காக கதை ஆரம்பித்தார்களோ அதை ஒரு இடத்தில் சொல்லாமல் விட்டது போல ஒரு ஃபீல்.

மொத்தத்தில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் நல்ல எண்டர்டெயின்மெண்டான ஃபேமிலி பேக்கேஜ். 

0 coment�rios: