ஸ்ரீதேவியின் மரணம் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சாக இருப்பதை அவிழ்க்கப்போவது யார் என்பது தெரிய வில்லை. இந்த மர்மமே விலகாத நிலையில் தற்போது ஸ்ரீதேவியின் மகள் அவரின் உடன் பிறவா அண்ணாவுடன் அன்புடன் நெருங்கி பழகியதை, அண்ணன் மீது காதல் என்று ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத திரைப்பட நடிகையாக தன் நடிப்பால் முத்திரை பதித்து வெற்றி வாகைசூடியவர் ஸ்ரீதேவி.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனத் திரைப் பயணத்தைத் தொடர்ந்த ஸ்ரீதேவி, இந்திப் பட ரசிகர்களால்க னவுக்கன்னியாக, சூப்பர் ஸ்டாராக ஆராதிக்கப்பட்டார்.
தமிழகத்திலிருந்து இந்தித் திரையுலகில் ஹேமமாலினி, ரேகா, வைஜயந்திமாலா ஆகியோர் முன்னணி நடிகைகளாகப்பயணப்பட்டிருந்தாலும் ஸ்ரீதேவி அளவுக்கு இந்தியில் பிற தமிழ் நடிகைகள் உச்சத்தைத் தொட்டதில்லை.
அதை போன்றே அவரது மரணத்தைப் பற்றி முதலில் வந்த செய்தியும் பின்னர் அது மறுக்கப்பட்டு அவர் மாரடைப்பில் இறக்கவில்லை.
ஸ்ரீதேவி அண்மைக்காலங்களில் திரைப்படங்களில் அவ்வளவாக நடிக்கவில்லை என்றாலும் தன் இளமைத் தோற்றம்குன்றாதவண்ணம் அழகுபடுத்திக்கொள்வது, அதற்காக அறுவை சிகிச்சைகள் செய்துகொள்வது ஆகியவற்றில் ஸ்ரீதேவிஆர்வத்துடன் ஈடுபட்டுவந்தார்.
அதேபோல் தன் மூத்த மகள் ஜான்வியை இந்தியில் கதாநாயகியாக்கும் முயற்சியில்வெற்றி பெற்றார்.
மன உளைச்சலுக்கான காரணம் என்ன? ஒருபுறம் இது மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் மகள் ஜான்வியின் ஆண் நண்பர்கள் வட்டத்தை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நடிகர் மிதுன் சக்கரவர்த்தி ஜான்விக்குத் தந்தை போன்றவர்.(ஸ்ரீதேவியின் முதல் கணவர்) அவரதுமகனுடன் தன் மகள் நெருக்கமான நட்புடன் இருப்பதை ஸ்ரீதேவியால் ஜீரணிக்க முடியவில்லை.
அண்ணனுடன் காதல் என்பதால் துடித்துப் போனார். அதுவே அவரை நிரந்தரமன உளைச்சலைத் தந்தது என்றும் ஒரு செய்தி வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஏற்கெனவே மகள் நடவடிக்கையால் மன அழுத்தத்தில் இருந்த ஸ்ரீதேவி கவலையை மறக்க மதுவுக்கு அடிமையாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
விடை தெரியாத கேள்விகள். மனைவியைத் தனிமையில் விட்டு விட்டு மூன்றரை மணி நேரத்தில் ஒரே விமானத்தில் மும்பைக்கு மகளுடன் வந்தபோனி கபூர் மீண்டும் துபாய்க்கு வர வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றது.
இதேவேளை, புகழ் பெற்றவர்களின் அகால மரணங்களில் விடை தெரியாத, விடை காண முடியாத கேள்விகளும் மர்மங்களும் கொட்டிக்கிடக்கும். அது நாடு கடந்து சென்ற ஸ்ரீதேவி மரணத்திலும் நீடிக்கிறது என்பது மற்றும் மறுக்க முடியாத உண்மை. பொருத்திருந்து பார்ப்போம்....
0 coment�rios: