Home Top Ad

முன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார். ...

ஒரு அரசன் , ஒரு அமைச்சர் , ஒரு அடிமைப்பெண் ! - புதிர் கதை


முன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார்.

ஒரு நாளிரவு, அல் ரஷீதும், ஜாபரும் மதுவைக் குடித்து, மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.  இருவருக்குமே போதை ஏறிக்கொண்டிருந்தது.

அப்போது அல் ரஷீத், " ஜாபர் ...நீ அழகான அடிமைப் பெண் ஒருத்தியை விலைக்கு வாங்கியிருக்கிறாயேமே!!!...எனக்கு அவளை விற்றுவிடு.நீ என்ன விலை கேட்டாலும் கொடுக்கிறேன்" என்றார்.


அதற்கு ஜாபர் தனக்கு என்ன விலை கொடுத்தாலும் அந்த அடிமைப் பெண்ணை யாருக்கும் விற்பதாக இல்லை என்றார்.
அப்படியானால் எனக்கு அன்பளிப்பாகத் தந்துவிடு என்றார் அரசர்.
அன்பளிப்பாகவும் கொடுக்கமுடியாது என்றார் ஜாபர்.

மதுவின் போதையில் இருந்த அரசருக்கு கடுமையான கோபம் உண்டானது."ஜாபர்.....நீ எனக்கு அடிமைப் பெண்ணை விலைக்கோ அல்லது அன்பளிப்பாகவோ தந்தே ஆகவேண்டும். அப்படி அவள் எனக்கு கிடைக்காதுபோனால், பட்டத்து அரசி சுபேதாவை நான் தலாக் செய்துவிடுவேன் [விவாக ரத்து] இது உறுதி" என்று கூச்சல் போட்டார்.

போதை தலைக்கேறியிருந்த ஜாபரும், " நான் அவளை உங்களுக்கு விற்கவோ அல்லது அன்பளிப்பாகவோ தரமாட்டேன். அப்படித் தந்துவிடுவேனேயானால், எனது மூன்று குழந்தைகளுடன் என் மனைவியை தலாக் [ விவாகரத்து] செய்துவிடுவேன். இதுவும் உறுதி" என்றார்.

கொஞ்ச நேரம் கழித்து இருவருக்குமே போதை தெளிந்தது. குடிபோதையில் இருவரும் பேசியவை நினைவுக்கு வந்தது. என்ன செய்தாலும் இருவரில் யாராவது ஒருவர் விவாகரத்து செய்தே ஆகவேண்டுமே.......வாழ்க்கை பாழாகிவிடுமே....என்ன செய்வது என்று இருவருமே வருந்தினார்கள்.

எந்த சிக்கலான பிரச்சினயானாலும் அதற்குத் தகுந்த தீர்வு கூறும் காஜி யூசுப்பை அழைத்துவரும்படி காவலர்களுக்குக் கட்டளையிட்டார்கள். அந்த இரவு வேளையிலே காவலர்கள் சென்று காஜியை அழைத்துவந்தார்கள்.

நடந்த விஷயத்தை அவரிடம் கூறி இதற்கு சிக்கல் இல்லாமல் தீர்வு எப்படிக் கான்பது என்று கேட்டார்கள்.
அவர்கள் கூறியது முழுவதையும் கேட்ட காஜி சிரித்தபடியே, " இதில் எந்த சிக்கலுமே இல்லையே.சுலபமாக தீர்வு கானலாமே!!!" என்றார்.

அவர் கூறியபடியே நடந்து இருவருக்குமே எந்த சிக்கலும் இல்லாமல் பிரச்சினையைத் தீர்த்துக்கொண்டார்கள்.

நண்பர்களே காஜி யூசூப் இந்தச் சிக்கலுக்கு என்ன தீர்வு கூறியிருப்பார்.?


 புதிர் விடை :

அவர்களது பிரச்சினையைக் கேட்ட யூசுப் அலி " இதிலே சிக்கல் எதுவுமே இல்லையே.  மிகச் சுலபமாக இதற்குத் தீர்வு கானலாம் " என்றார்.

" இந்த அடிமைப் பெண்ணை அமைச்சர் உங்களுக்கு பாதி விலைக்கும், பாதி அன்பளிப்பாகவும் தரவேண்டும். அதனால் அமைச்சர் விற்றதாகவும் ஆகாது. அன்பளிப்பாகக் கொடுத்ததாகவும் ஆகாது. ஆக இதனால் நீங்கள் இருவருமே கூறியது போலவே நடந்துள்ளது. அதனால் இருவரது சபதங்களுமே காப்பாற்றப் படும்" என்றார். யூசுப்பின் தீர்வைக் கேட்ட இருவருமே மகிழ்ந்தார்கள்.

அமைச்சர் உடனே அந்தப் பென்னை வர வழைத்து, அரசனுக்குப் பாதி விலையாகவும் பாதி அன்பளிப்பாகவும் கொடுத்தார்.

0 coment�rios:

விஜய்யின் பல படங்கள் சில என்றும் புதுமையாக இருக்கும். அப்படியான படங்களில் ஒன்று பூவே உனக்காக. விஜய் இதில் ஆதரவற்ற தனி நபராக நடித்திருப்பார்...

விஜய்யின் பாட்டி செய்த பெரிய உதவி! இது தெரியுமா

விஜய்யின் பல படங்கள் சில என்றும் புதுமையாக இருக்கும். அப்படியான படங்களில் ஒன்று பூவே உனக்காக. விஜய் இதில் ஆதரவற்ற தனி நபராக நடித்திருப்பார்.

ஆனால் அவருக்கு மிக முக்கிய உறவாக கிடைத்தது ஒரு தாத்தா பாட்டி தான். அந்த முதியவர்களாக நடிகர் நம்பியாரும் நடிகை விஜயகுமாரியும் நடித்திருப்பார்கள்.

அந்த நடிகர் நிறைய பழம் பெரும் நடிகர்களுடன் நடித்திருக்கிறார். தற்போது அவர் சினிமாவில் இல்லை. விழாக்களில் தான் காண முடிகிறது. அவர் நடிகர் சங்க கட்டிட நிதியாக ரூ 5 லட்சம் கொடுத்திருக்கிறார்.

இதற்கான காசோலையை அவர் பொருளாளர் கார்த்தியிடம் கொடுத்துள்ளார். 

0 coment�rios:

சமாளிக்க முடியாத அளவிற்கு கடன் தொல்லை நெருக்கும்போது மஞ்சள் நோட்டீஸ் கொப்பது(திவால் நோட்டீஸ்) கொடுப்பது வழக்கம். அதாவது என்னால் உங்கள் கடனை...

சமாளிக்க முடியாத கடனால் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்த முதல் பிரபலம்!.. யார் தெரியுமா?

சமாளிக்க முடியாத அளவிற்கு கடன் தொல்லை நெருக்கும்போது மஞ்சள் நோட்டீஸ் கொப்பது(திவால் நோட்டீஸ்) கொடுப்பது வழக்கம். அதாவது என்னால் உங்கள் கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை என் சொத்துக்களை பிரித்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று இதன் பொருள். அப்படி ஒரு நோட்டீசை கொடுத்த முதல் ஹீரோ டி.ஆர்.மகாலிங்கம்.

மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்தவர் டி.ஆர்.மகாலிங்கம். பாடும் திறமை கொண்ட மகாலிங்கம் நாடகத்தில் நடித்து வந்தார். பின்னர் நந்தகுமார் படத்தில் பாலகிருஷ்ணனாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

1945ம் ஆண்டு மகாலிங்கம் நடித்த ஸ்ரீவள்ளி படம் பெரும் வெற்றி பெறவே பெரிய ஹீரோ ஆனார். அதன் பின்பு இவர் நடித்த நாம் இருவர், ஞானசவுந்தரி, வேதாள உலகம், ஆதித்யன் கனவு, பவளக்கொடி, லைலா மஜ்னு உட்பட பல படங்கள் பெரும் வெற்றி பெற்றது.

நல்ல வசதியுடன் சொகுசாக வாழ்ந்தார். பட வாய்ப்புகள் குறைந்ததும் தன் மகன் பெயரில் சுகுமார் புரொடக்ஷன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி மச்சரேகை படத்தை தயாரித்தார். அது பெரும் தோல்வி அடைந்தது. அதில் இழந்த பணத்தை மீட்க விளையாட்டு பொம்மை படத்தை தயாரித்தார். அதுவும் தோல்வி அடைந்தது. இரண்டு படங்களிலும் பெரும் நஷ்டத்தை சந்தித்த டி.ஆர்.மகாலிங்கம், கடன்காரர்களை சமாளிக்க மஞ்சள் நோட்டீஸ் கொடுத்தார்.

அதன்பின்பு கவியரசர் கண்ணதாசன் டி.ஆர்.மகாலிங்கத்துக்கு உதவுவதற்காக மாலையிட்ட மங்கை படத்தை தயாரித்து அதில் டி.ஆர்.மகாலிங்கத்தை மீண்டும் நடிக்க வைத்தார். அந்தப் படம் வெற்றி பெற்றதும் மேலும் சில படங்களில் நடித்தும், நாடகம் நடத்தியும் தன் கடன்களை அடைத்தார் டி.ஆர்.மகாலிங்கம்.

0 coment�rios:

இவ்வுலகில் பிறப்பு என்ற ஒன்று இருந்தால், இறப்பு என்ற ஒன்று நிச்சயம் இருக்கும். பிறப்பை கண்டு மகிழும் நாம், இறப்பைப் கண்டு அச்சமடைவோம். சாத...

ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் 10 அறிகுறிகள்


இவ்வுலகில் பிறப்பு என்ற ஒன்று இருந்தால், இறப்பு என்ற ஒன்று நிச்சயம் இருக்கும். பிறப்பை கண்டு மகிழும் நாம், இறப்பைப் கண்டு அச்சமடைவோம். சாதிக்கும் எண்ணம் இருக்கும் யாருக்கும் இறக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்காது. இருப்பினும், நிச்சயம் ஒரு கட்டத்தில் அனைவரும் இறக்க நேரிடும். அதை யாராலும் தடுக்க முடியாது.

இத்தகைய இறப்பை சந்திக்கும் முன்பு ஒருசில அறிகுறிகள் தென்படும். மேலும் சிவபுராணத்தில் ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் :

அறிகுறி 1 :
எப்போது ஒருவரது சருமத்தின் நிறமானது வெளிர் மஞ்சளாகவோ அல்லது வெள்ளையாகவோ அல்லது லேசான சிவப்பாக மாற ஆரம்பித்தால், அது அவர் இன்னும் 6 மாத காலத்தில் உயிரை விடப் போகிறார் என்று அர்த்தமாம்.
அறிகுறி 2 :
எப்போது ஒருவனால் அவனது பிம்பத்தை எதிரொலியை தண்ணீரிலோ அல்லது கண்ணாடியிலோ தெளிவாக காண முடியவில்லையோ, அத்தகையவர்களும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்பதை வெளிப்படுத்துமாம்.
அறிகுறி 3 :
எப்பொழுது ஒருவனுக்கு பார்க்கும் அனைத்தும் கருப்பாக தெரிய ஆரம்பிக்கிறதோ, அவர்களும் இறப்பை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.
அறிகுறி 4 :
ஒருவரது இடது கை மட்டும் ஒரு வாரத்திற்கு மேல் துடிக்கவோ அல்லது நடுங்க ஆரம்பிக்கிறதோ, அவர்கள் ஒரு மாதத்திற்கு மேல் உயிருடன் இருக்கப் போவதில்லை என்று அர்த்தமாம்.
அறிகுறி 5 :
ஒருவரின் உணர்ச்சிமிக்க உறுப்புக்கள் இறுக்கமடைந்து கல் போன்று மாறுகிறதோ, அவர்களும் இன்னும் கொஞ்ச மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.
அறிகுறி 6 :
நிலா, சூரியன் அல்லது நெருப்பின் ஒளியை சரியாக காணமுடியவில்லையோ, அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.
அறிகுறி 7 :
எப்போது ஒருவரின் நாக்கு வீக்கமடைந்து, ஈறுகளில் சீழ் கட்ட ஆரம்பிக்கிறதோ, அவர்கள் இவ்வுலகில் நீண்ட நாட்கள் வாழப் போவதில்லை என்று அர்த்தம்.
அறிகுறி 8 :
ஒருவரால் வானத்தில் உள்ள நட்சத்திரங்களை காண முடியவில்லையோ, அவரும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தம்.
அறிகுறி 9 :
சூரியன், நிலா மற்றும் வானத்தை பார்க்கும் போது, அவை சிவப்பாக தெரிய ஆரம்பித்தால், அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.
அறிகுறி 10 :
ஒருவரின் கனவில் ஆந்தையோ, வெற்றிடமோ அல்லது கிராமம் அழிவது போன்றோ வந்தால், அவரும் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகும்.

0 coment�rios:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ஈரோட்டில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், நேற்று  மாலை 5 மணியள...

’சிலை வைப்பதில் வித்தியாசமான கருத்துடையவன் நான்!’ - கமல் பளீச்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ஈரோட்டில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், நேற்று  மாலை 5 மணியளவில் ஈரோட்டிற்கு வந்த கமல்ஹாசன் பெருந்துறையில் திறந்த வாகனத்தில் நின்றபடி பொதுமக்களிடம் பேசினார். அதன்பின்னர் மாலை ஒரு தனியார் ஓட்டலில் விசைத்தறி தொழிலாளர்களை சந்தித்து பேசினார்.

அதனையடுத்து, 2-ம் நாளான இன்று காலை மொடக்குறிச்சியில் கட்சி நிர்வாகிகள் கொடியேற்ற, மக்களை சந்தித்து கமல்ஹாசன் பேசினார். அடுத்ததாக, ஈரோடு பெரியார் நினைவகத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய கமல்ஹாசன், " மக்கள் நலன் ஒன்றே கொள்கை. இந்த சுற்றுப்பயணத்திற்காக  ஆளும்கட்சி தரப்பிலிருந்து எனக்கு எவ்வித அழுத்தமும் இல்லை. அப்படி கொடுத்தால், திருப்பி பதில் சொல்லுவேன். கிறிஸ்துவ அமைப்பினரிடம் இருந்து நான் நிதி பெறுவதாக உள்ள குற்றச்சாட்டுக்களை கேட்கையில், சிரிப்பு தான் வருகிறது. இந்தமாதிரி கதை புனைபவருக்கு நான் பதில் சொல்லமுடியாது.

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை மன்னித்து விட்டதாக ராகுல் கூறியது அவரின் மனிதநேயம், நாம் கேட்பது சட்டத்தில் உள்ள தளர்வு, இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழக எம்.பி-கள்
ராஜினாமா செய்ய வேண்டும், அப்படிச் செய்வதில் தவறில்லை. முன்னதாக ராமேஸ்வரம் பள்ளியில் என்னை அனுமதிக்காததினால் தான் நான் இப்போது இந்த பள்ளிக்கு (பெரியார் வீடு) வந்துள்ளேன்' என குறிப்பிட்டார்.

பெரியார் சிலை விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, " சிலைகள் வைப்பதில் வித்தியாசமான கருத்துடையவன்நான். ஆனால், அதை உடைப்பது ரொம்ப கேவலமான செயல். பெரியார் இருந்திருந்தால் ஏன் சிலை வைக்கிறீர்கள் என கேட்டிருப்பார்" என்றார்.

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பைப் பொறுத்த வரை, தற்போது பெண்கள் மதியம் 12 மணிக்கு கூடத் தனியாக வெளியில் செல்ல அச்சப்படும் நிலை உள்ளது இதை மாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார். சினிமா துறையில் உள்ள பிரச்சனைகளுக்கு அவர்களிடம் பேசாத கமல் விவசாயிகளிடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துகிறார் என தமிழைசையின் கருத்திற்கு பதிலளித்த அவர், சினிமாத்துறையில் ஜி.எஸ்.டி-க்கு  எதிராக முதலில் ஒலித்தது என்னுடைய குரல் தான் என கூறினார்.

அஸ்வினி கொலை, காவலர்கள் தற்கொலை போன்றவற்றிக்கு தமிழக அரசின் நடைமுறை சரியிலாததே காரணமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அரசு நடைமுறை சரியில்லை என்பது உண்மை, இதைப் பற்றி நான் பேசினால் பேசுவது
சுலபம் வந்து செய்து பார்த்தால் தெரியும் எனப் பதில் வரும் அவ்வாறு ஒரு கருத்து வந்தால் நான் அதை ஏற்கத் தயார் எனப் பதிலளித்தார் கமல்.

0 coment�rios:

ஆர்யா இப்போது படங்களில் நடிப்பதை தாண்டி எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் மிகவும் பிஸியாக இருக்கிறார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 16...

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆர்யாவிடம் திடுக்கிடும் தகவல் கூறிய பெண்- அதிர்ச்சியான நடிகர்

ஆர்யா இப்போது படங்களில் நடிப்பதை தாண்டி எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் மிகவும் பிஸியாக இருக்கிறார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 16 பெண்களில் ஆர்யா ஒருவரை தேர்வு செய்து திருமணம் செய்து கொள்வார் என்று கூறப்படுகிறது. அதற்காக நிறைய போட்டிகள் எல்லாம் நடக்கின்றன.

தற்போது இந்நிகழ்ச்சியின் ஒரு புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அகதா, ஆர்யாவிடம் தன்னை பற்றிய விஷயங்களை கூறினார். அப்போது ஒரு நடன இயக்குனர் தன்னை 6 லட்சம் கொடு, இல்லையெனில் தன்னுடன் இரவு தங்க வேண்டும் என்று சொன்னதாக கூறியுள்ளார்.

இந்த புதிய புரொமோ ரசிகர்களிடம் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

0 coment�rios: