Home Top Ad

சசிகலா புஷ்பா எம்.பி. மறுமணம் செய்யப்போவதாக கூறப்படும் வழக்கறிஞர் ராமசாமியின் முதல் மனைவி சத்யபிரியா கைக்குழந்தையுடன் கண்ணீர் மல்க ஆட்சியர்...

பூதாகரமாக வெடித்த சசிகலா புஷ்பாவின் மறுமணம்... கைக்குழந்தையுடன் மனைவி கண்ணீர் புகார்

சசிகலா புஷ்பா எம்.பி. மறுமணம் செய்யப்போவதாக கூறப்படும் வழக்கறிஞர் ராமசாமியின் முதல் மனைவி சத்யபிரியா கைக்குழந்தையுடன் கண்ணீர் மல்க ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா டெல்லியில் வழக்கறிஞர் ராமசாமியை திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பான அழைப்பிதழ்கள், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின.

ஆனால் சசிகலா புஷ்பா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வரவில்லை. இந்த நிலையில் இன்று சத்யபிரியா என்ற பெண் கைக்குழந்தையுடன் மதுரை ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்துள்ளார்.

அம்மனுவில், தமக்கும் சசிகலா புஷ்பா எம்.பி. திருமணம் செய்ய இருப்பதாக சொல்லப்படும் ராமசாமிக்கும் 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. என்னை நீதிபதி என கூறி திருமணம் செய்தார்.

நாங்கள் இருவரும் ஓராண்டுதான் வாழ்ந்தோம். இருவருக்கும் மன வருத்தம் ஏற்பட்ட நிலையில் தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டேன். இருந்தபோதும் என்னிடம் செல்போனில் ராமசாமி பேசி வந்தார்.

இந்நிலையில்தான் தற்போது சசிகலா புஷ்பா எம்.பி.யை ராமசாமி திருமணம் செய்யப் போவதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இது குறித்து விசாரிக்க வேண்டுகிறேன். என் கணவர் ராமசாமியுடன் வாழ விரும்புவதாக சத்யபிரியா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 coment�rios:

ஆர்யா தற்போது தனியார் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் இறுதியில் வெற்றி பெறும் பெண்ணை ஆர்யா த...

ஆர்யா நடத்திவரும் எங்க வீட்டு மாப்பிள்ளை டிவி நிகழ்ச்சிக்கு தடை? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

ஆர்யா தற்போது தனியார் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் இறுதியில் வெற்றி பெறும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்வார் என சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை சுற்றி சில சர்ச்சைகள் இருந்து வருகிறது. பெண்களின் மாண்பை சிதைப்பதாகவும், கலாச்சாரத்தை கெடுப்பதாகவும் இருப்பதாக கூறி மதுரையை சேர்ந்த ஜானகியம்மாள் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

மதுரை உயர்நீதிமன்றத்தில் இது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள் சினிமா தணிக்கை வாரிய தலைவர், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் செயலர் ஆகியோர்க்கு நோட்டிஸ் அனுப்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.

0 coment�rios:

அதிமுகவில் இருந்து ஜெயலலிதா இருக்கும்போதே நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கு வரும் மார்ச் 26ஆம் தேதி திருமணம் நடைபெற இர...

சசிகலாவிற்கு இரண்டாவது திருமணமா?.. தீயாய் பரவும் திருமண அழைப்பிதழ்

அதிமுகவில் இருந்து ஜெயலலிதா இருக்கும்போதே நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கு வரும் மார்ச் 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. ஓர் அழைப்பிதழும், அடுத்து சசிகலா புஷ்பாவிற்கும் அவரது கணவருக்கும் விவாகரத்து ஆன சான்றிதழ் வெளியாகியிருக்கிறது.

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா. டெல்லி நார்த் அவென்யூ பகுதியில் வசிக்கிறார். ஜெயலலிதாவின் மறைவுக்கு முன் அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர். தற்போது நாடாளுமன்றத்தில் அதிமுகவுக்கு ஆதரவாகவும் இல்லாமல், ஆதரித்து பேசாமலும் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் அவருடைய சொந்த வாழ்க்கை பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சசிகலா புஷ்பாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவர் தனிமையில் டெல்லியில் வசித்து வந்தார்.

இந்நிலையில், இந்த நிலையில், சசிகலா புஷ்பாவுக்கும் ஓரியண்டல் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் இணை துணைவேந்தர் ராமசாமி என்பவருக்கும் திருமணம் வரும் மார்ச் 26ஆம் தேதி டெல்லியில் நடைபெறுவதாகத் திருமண அழைப்பிதழ் பரவி வருகிறது. இது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சசிகலா புஷ்பாவின் நெருக்கமான அரசியல் வட்டாரங்களில் இதுபற்றி விசாரித்தபோது, ‘ஆமாம் உண்மைதான்’ என சொல்லுகிறார்கள். இந்த திருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

இதுகுறித்து உண்மை நிலவரத்தை அறிய சசிகலா புஷ்பாவிடம் கேட்டபோது, அவர் சரியான பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் இதை மறுக்கவும் இல்லை.

இதுகுறித்து அவரது உதவியாளர் கூறுகையில், சசிகலா புஷ்பாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதையடுத்து இருவரும் விவாகரத்து செய்து கொள்வதற்காக நீதிமன்றத்தை நாடினர். கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக நடந்து வந்த நீதிமன்ற விசாரணையில், நேற்று முன்தினம் துவாரகா மாவட்ட நீதிமன்றம் அவர்களுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஆனால், சமூக வலைதளங்களில் வந்து கொண்டிருக்கும் சசிகலா புஷ்பாவின் திருமண அழைப்பிதழ் பற்றி இன்னும் யாரும் உறுதியாக சொல்லவில்லை, அந்த அழைப்பிதழில் இருக்கும் அலைபேசி என்னை தொடர்புகொள்ள முயன்றோம் ஆனால் தொடர்புகொள்ள முடியவில்லை இன்னும் அடங்காத இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 coment�rios: