Home Top Ad

இந்திய சினிமாவின் முதல் லேடி சூப்பர்ஸ்டாராக விளங்கிய நடிகை ஸ்ரீதேவி சற்றுமுன் மரணமடைந்துள்ளார். இந்த தகவல் சினிமா துறையில் உள்ளவர்கள் மற்ற...

நடிகை ஸ்ரீதேவி திடீர் மரணம் - அதிர்ச்சி தகவல்


இந்திய சினிமாவின் முதல் லேடி சூப்பர்ஸ்டாராக விளங்கிய நடிகை ஸ்ரீதேவி சற்றுமுன் மரணமடைந்துள்ளார். இந்த தகவல் சினிமா துறையில் உள்ளவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஸ்ரீதேவி நடிகர் Mohit Marwah வின் திருமணத்திற்காக துபாய் சென்றுள்ளார், அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்துள்ளது. 54 வயதாகும் அவர் நேற்று இரவு 11 - 11.30 மணிக்கு இறந்துவிட்டார் என நெருங்கிய உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவியின் கணவர் மற்றும் இளைய மகள் அவரோடு சென்றுள்ளார். மூத்த மகள் ஜான்வி தற்போது சினிமாவில் நடித்துவருவதால் அவர் ஸ்ரீதேவியோடு செல்லவில்லை.

ஸ்ரீதேவியின் மரணம் பற்றிய தகவல் அறிந்து பிரபலங்கள் பலர் ஜான்விக்கு ஆறுதல் கூறுவதற்காக தற்போது அவரது வீட்டுக்கு விரைந்துள்ளனர்.

0 coment�rios: