நடிகர் சதீஷ்
நடிகை சுனு லட்சுமி
இயக்குனர் பவித்ரன்
இசை அபே பவித்ரன்
ஓளிப்பதிவு மணிகண்டன்
நாயகி சுனு லட்சுமியும் தமிழ்நாட்டில் இருக்கும் போது அவர்கள் வீட்டில் வேலை செய்து வருகிறார் நாயகன் சதீஷ். திடீர் என்று தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு படிக்க செல்கிறார் சுனு லட்சுமி. சில நாட்களில் சுனு லட்சுமியை பார்ப்பதற்காக மும்பை செல்கிறார் சதீஷ். இருவரும் மும்பையில் பேசி பழகி காதலித்து வருகிறார்கள்.
ஒரு நாள் இவர்கள் பேசுவதை பார்க்கும் சுனு லட்சுமியின் அண்ணன், சதீஷை தன் வீட்டின் கெஸ்ட் ஹவுஸில் தங்க வைக்கிறார். இந்நிலையில், மும்பையில் சுனு லட்சுமியை காதலிப்பதாக பின்னாடியே சுற்றி வரும் பாலா, சுனுவும், சதீஷும் காதலிப்பதை அண்ணனிடம் போட்டு கொடுத்து விடுகிறார்.
இதனால், சுனு லட்சுமி, சதீஷ் காதலை பிரிக்க நினைக்கிறார் சுனு லட்சுமியின் அண்ணன். ஆனால், சுனு லட்சுமி அண்ணன் கட்டுப்பாட்டில் இருந்து தப்பித்து சதீஷிடம் தஞ்சமடைகிறார்.
இதே சமயம், மும்பை-புனே தேசிய நெடுஞ்சாலையில் சமீப காலமாக சரக்கு லாரிகள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதைக் கண்டுபிடிக்க ஒரு ஸ்பெஷல் போலீஸ் டீம் அமைக்கப்படுகிறது. இந்த டீமின் விசாரணையில் சிக்குகிறார் சுனு லட்சுமியின் அண்ணன்.
இறுதியில் சதீஷும், சுனு லட்சுமியும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? சுனு லட்சுமியின் அண்ணன் என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் சதீஷ், பாலா கிருஷ்ணா, பிரபு சதீஷ், லிங்கம் சிவா, லியோ ஆகிய புதுமுகங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். புதுமுகங்கள் என்பதால் இவர்களிடம் நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. ‘அறம்’ படத்தில் நடித்த சுனு லட்சுமி தான் இதில் முகம்தெரிந்தவர். இன்னும் நடிப்பில் கவனம் செலுத்தி இருக்கலாம்.
`வசந்த காலப் பறவை’,` சூரியன்’, `ஐ லவ் இந்தியா’, `இந்து’, `திருமூர்த்தி’, `கல்லூரி வாசல்’ போன்ற படங்களை இயக்கிய பவித்ரன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படங்களை இயக்கிய இயக்குனரா என்று ஆச்சரியத்தில் அனைவரையும் ஆழ்த்தி இருக்கிறார். மிகவும் பழைய கதை, திரைக்கதையில் தெளிவு இல்லை.
பவித்ரனின் மகன் அபே பவித்ரன் தான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சாலக்குடியில் ஒலிக்கும் பாடல் ஓகேதான். ஆனால் நடனம்..? பின்னணி இசையும் பெரிதாக எடுபடவில்லை. மணி கண்டனின் ஒளிப்பதிவில் மும்பையை அழகாகக் காட்டுவார்கள் என்று பார்த்தால் அதுவும் இல்லை. மும்பையின் மிகப் பெரிய திருவிழாவான விநாயகர் ஊர்வலத் திருவிழாவிலும் ஒரு காட்சியை திணித்து படமாக்கியிருக்கிறார்கள்.
மொத்தத்தில் ‘தாராவி’ ரொம்ப பழைய இடம்.

0 coment�rios: