Home Top Ad

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். நய...

வருங்கால கணவர் பெயரை அறிவித்த நயன்தாரா


தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள். கடந்த மாதம் காதலர் தினத்தன்று இருவரும் ஒன்றாக சேர்ந்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டாடினார்கள்.

அதன் பிறகு இருவரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றனர். பிறந்த நாள் வாழ்த்து தெரிப்பது, காதலர் தின கொண்டாட்டம் என வெளிநாடு சென்ற படங்கள் இணைய தங்களில் வெளியானது. என்றாலும் இருவரும் தங்களது காதல் பற்றி வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் முதல் முறையாக விக்னேஷ் சிவனை தனது வருங்கால கணவர் என்று நயன்தாரா குறிப்பிட்டுள்ளார். சென்னையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் நயன்தாரா பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் அம்மா, அப்பா, சகோதரர், என் வருங்கால கணவர் ஆகிய அனைவருக்கும் முதலில் நன்றி என்று குறிப்பிட்டார். இதன் மூலம் காதலரான விக்னேஷ் சிவனை வருங்கால கணவர் என்று நயன்தாரா தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா முதலில் நடிகர் பிரபுதேவாவை காதலித்து திருமணம் செய்யவும் முடிவு செய்தார். இதற்காக கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த நயன்தாரா இந்து மதத்துக்கு மாறினார். ஆனால் கடைசி நேரத்தில் இருவருக்கும் இடையேயான உறவு முறிந்து விட்டது.

அதன் பிறகு ராமராஜ்ஜியம் படத்தில் சீதையாக நயன்தாரா நடித்தபோது இந்து முறைப்படி விரதம் இருந்து நடித்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 coment�rios: