Home Top Ad

விஜய் சேதுபதி என்றாலே எல்லாருடைய மனதிலும் நினைவிற்கு வருவது அவரது இயல்பான நடிப்பு தான். அந்த அளவிற்கு தான் நடித்த படங்கள் அனைத்திலும் ஒரு ச...

மறுபடியும் கேங்ஸ்டரில் ஜுங்காவாக கலக்க இருக்கும் விஜய்சேதுபதி- ஆனால் அதற்கும் இதற்கும் கொஞ்சம் வித்தியாசம் உள்ளது

விஜய் சேதுபதி என்றாலே எல்லாருடைய மனதிலும் நினைவிற்கு வருவது அவரது இயல்பான நடிப்பு தான். அந்த அளவிற்கு தான் நடித்த படங்கள் அனைத்திலும் ஒரு சிறு பகுதியிலாவது தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

அந்த அடையாளத்தின் மூலமே தற்போது அவர் முன்னணி நடிகர் பட்டியலில் உள்ளார். அத்தகையவரின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ஜுங்கா. இதற்கு முன் இவரது நடிப்பில் வெளியாகி கவனிக்கத்தக்க படமாக அமைந்த இதற்குதான் ஆசைப்பட்டாயா பாலகுமாராவை இயக்கிய கோகுல் தான் இப்படத்தையும் இயக்கவுள்ளார்.

படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் நடிகர் அருண் பாண்டியனுடன் சேர்ந்து இப்படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார் விஜய்சேதுபதி. படத்தில் இவருக்கு ஜோடியாக தற்போதைய டிரெண்டிங் நடிகை சாயிஷா நடித்துள்ளார். மடோனா செபாஸ்டினும் வருகிறார்.

படத்தின் காமெடிக்காக யோகிபாபுவை சேர்த்தாலும் எப்படியோ அவர் மட்டும் காமெடி பண்ண போவதில்லை கூட விஜய்சேதுபதியும் சிரிக்க வைக்க போகிறார் என்பதை படத்தின் டிரைலரை பார்த்த அனைவருக்கும் தெரியும். என்னதான் படம் முழுக்க வெளிநாட்டில் காட்சிப்படுத்தி இருந்தாலும் கஞ்சதனமான ரௌடியாகவே விஜய்சேதுபதி வருகிறாராம்.

மேலும் படத்தின் இசைவேலையை சித்தார்த் விபின் நன்றாக செய்துள்ளார் என்றே தெரிகிறது. ஏனெனில் இதுவரை வெளியாகியுள்ள அனைத்து பாடல்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெளிநாடாக இருந்தாலும் சென்னை லோக்கல் லெவலுக்கு இறங்கி குத்து போடும் அளவுக்கு கானா பிரபலங்களை எல்லாம் பாட வைத்துள்ளார்.

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாக உள்ள இந்த படம் வரும் வெள்ளிகிழமை 27ஆம் தேதி ரிலிஸாக உள்ளது.

0 coment�rios: