Home Top Ad

வீரம் ப்ளஸ் முட்டாள்தனம் ஈக்குவல் டூ மோடுமுட்டி! ஒரு மோடு முட்டியை பொள்ளாச்சியிலிருந்து மூட்டை கட்டிக் கொண்டு வந்து சென்னையிலும், பாரீசிலும...

ஜுங்கா / விமர்சனம் - வீரம் ப்ளஸ் முட்டாள்தனம் ஈக்குவல் டூ மோடுமுட்டி!

வீரம் ப்ளஸ் முட்டாள்தனம் ஈக்குவல் டூ மோடுமுட்டி! ஒரு மோடு முட்டியை பொள்ளாச்சியிலிருந்து மூட்டை கட்டிக் கொண்டு வந்து சென்னையிலும், பாரீசிலும் விட்டால் என்னாகும்? அப்படியே அந்த கற்பனையில் லைட்டா காதலையும் புழிஞ்சா, கண் மயக்கும், மனம் மயக்கும் ஜுங்கா ரெடி! அட… ஜுங்கான்னா என்னப்பா? படத்தை பாருங்கப்பா… பங்கம் பண்ணியிருக்கானுங்க! (மரியாதை…மரியாதை)

பூர்வீக சொத்தே ஒரு தியேட்டர்தான். அதுவும் சென்னையில். அது தெரியாமல் கண்டக்டர் வேலையை குப்பையாக கொட்டிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு அதாவது மிஸ்டர் ஜுங்காவுக்கு தெரிய வர… கிளம்புடா சென்னைக்கு. மீளுடா தியேட்டரை என்ற ஆவேசத்தோடு வந்திறங்குகிறார். வந்தால், ரெண்டாயிரத்து சொச்சம் கோடிக்கு அதிபதியான சுரேஷ்மேனனிடம் இருக்கிறது தியேட்டர். ஒரு கோடியை கொடுத்துட்டு தியேட்டரை மீட்கலாம் என்று சின்ன சின்ன தாதாயிசம் பண்ணுகிறார் சேது. (பூர்வீக தொழிலாச்சே?) கிடைக்கிற பணத்தை அப்படியே சேர்த்துக் கொண்டுபோய் அவரிடம் கொடுத்தால், ‘தியேட்டரா? ஒனக்கா? போடா போ’ என்கிறார் அவர். அப்புறம்? வீறு கொண்டு எழும் வி.சே, தாறுமாறாக பிளான் போட்டு தியேட்டரை மீட்பதே க்ளைமாக்ஸ்.

ஆளே மாறியிருக்கிறார் சேது. கொசு குறுக்கே போனால் கூட, டைனோசரே மிரள்கிற அளவுக்கு கத்தி குமிக்கிறார். பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரி, காஸ்ட்யூம், காலர், பட்டன் என்று சகலத்திலும் புது விஜய்சேதுபதி. அவரது ரசிகர்கள் மட்டுமல்ல… அத்தனை பேரும் அள்ளிப்பூசிக் கொள்கிற அளவுக்கு ஜோர் பண்ணுகிறார். ஆனால் முகத்துல போட்ட ஓவர் பவுடரும், கொஞ்சம் தடித்த தோலும் ‘எத்தனாவது பர்த் டே?’ன்னு கேட்க வைக்குது. கவனம் தலைவா… ஆமாம்… லவ் வந்து டூயட் ஆடுற நேரத்திலும் கூட, சாயிஷாவை விட்டு தள்ளியே நிக்குறீங்களே, என்னாத்துக்கு?

அடுத்து யோகிபாபு! உடம்பு வெயிட் மண்டைக்கு டிரான்ஸ்பர் ஆகியிருக்கலாம். நான் சொல்றதுதான் டைமிங். போட்றதுதான் வெடிச்சிரிப்புன்னு நினைத்து பேசுகிறார். பல இடங்களில் சிரிக்க முடிந்தாலும், சில இடங்களில் நாங்க சிரிக்கலேப்பா… என்று இறுக விடுகிறார். கஞ்சனிடம் சிக்கிக் கொண்டு பசி பொறுக்க முடியாமல் அலையும் நேரத்தில் பொங்க விடுவது சிறப்பு.

நம்ம சாயிஷான்னு நாடு கொண்டாடுற நேரம் வந்தாச்சு. தலைநகர் பாரீசில், தளுதளுப்பாக திரியும் அவருக்கு காஸ்ட்யூம் டிசைனர் யாரோ? நல்லாயிருப்ப கண்ணு. எங்கெல்லாம் டிரஸ் தேவை. எங்கெல்லாம் தேவையில்லேன்னு நல்லா புரிஞ்சு வச்சுருக்க! பாரீசின் மைனஸ் குளிரில் அவர் ஆடும் துடுக் துடுக் டான்ஸ், நமக்கு குளிரடிக்கவும் அவருக்கு குளிர் போக்கவும் உதவியிருக்கிறது.

முதல் பாதியை மடோனாவுக்காக ஒதுக்கியிருக்கிறார் இயக்குனர் கோகுல். தமிழை தெலுங்கில் போட்டு குலுக்கிப் பேசும் அந்த ஸ்டைல் யப்பா… செம!

எப்பவும் இஞ்சி தின்ற எபெக்டிலேயே வருகிறார் வில்லன் சுரேஷ் மேனன். வந்திருக்கார்… அதற்கப்புறம் சொல்ல என்ன இருக்கு?

படத்தின் ஐகான், சரண்யா பொன்வண்ணனும் அந்த விஜயா பாட்டியும்தான். தொண்டை தண்ணி வறளும்படி கத்த ஆரம்பிக்கும் சரண்யாவின் டயலாக் மாடுலேஷன் அப்படியே அள்ளூகிறது. பேரன் குறித்து எந்நேரமும் புளகாங்கிதப்படும் விஜயா பாட்டி, அவன் சொதப்பினான் என்று தெரிந்து பம்முவதும் பின்பு ஏறி அடிப்பதும் தியேட்டரே துவம்சமாகிற அளவுக்கு குட்… வெரி குட்!

இசையமைப்பாளர் சித்தார் விபின் இப்படத்தில் நடிக்காதது பெரும் குறை. வாய்ப்பு தராத அந்த கோபத்தை பாடல்களில் காட்டிவிட்டார். நல்லவேளை… அந்த பாரீஸ் டூயட் கைகொடுக்கிறது.

ஒளிப்பதிவாளர் டட்லி ஒரு லிப்ட் போல எல்லாரையும் தூக்கிக் கொண்டுபோய் பாரீசில் இறக்கியிருக்கிறார். கண்ணை அள்ளுது தல…

பிளாக் காமெடி என்ற வஸ்துவை ஜனங்களுக்கு அறிமுகப்படுத்திய புண்ணியவான் எவனோ… அவன் நாசமா போக. வெந்தும் வேகாமலும் கிடைக்கிற அரைவேக்காட்டு சிரிப்பு எவனுக்கு வேணும்? வின்னர் வடிவேலுகளும், வீடு கொள்ளா சிரிப்புமாக இருந்த காலம் போயே போச்.

இயக்குனர் கோகுல் நினைத்தால் பழக்கடையே சாத்தியம். ஆனால் ஜுங்கா, அவுன்சில் அளந்து அண்ணாந்து குடிக்க வைக்கும் புளியங்கா ஜுஸ்!

0 coment�rios: