Home Top Ad

சமீபத்தில் இந்தியாவிற்கு "உயரமான சிலைகள்" மீதான போதை உருவாகி இருப்பதை நையாண்டியாக தெரிவிக்கும் நோக்கில் மார்க்கண்டேய கட்ஜூ அவர்...

விண்வெளிக்கு லிஃப்ட்; ஜப்பானை பார்த்து வாய் பிளக்கும் நாசா!

சமீபத்தில் இந்தியாவிற்கு "உயரமான சிலைகள்" மீதான போதை உருவாகி இருப்பதை நையாண்டியாக தெரிவிக்கும் நோக்கில் மார்க்கண்டேய கட்ஜூ அவர்கள், சமூக வலைததளத்தில் ஒரு கருத்தை தெரிவித்து. அதில் போகும் போக்கை பார்த்தால் விண்வெளிக்கி செல்ல ராக்கெட்டுகள் தேவைப்படாது, சிலைகள் போதும் என்பது போல் கூறி இருந்தார். அது ஜப்பான் நாட்டு ஆராய்ச்சியாளர்களின் காதில் விழுந்தது போல ஒரு சோதனை நிகழ்வுள்ளது.

ஜப்பான் நாட்டில் உள்ள ஷிசோக்கா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரர் ஏஜென்சி (JAXA) உடன் இணைந்து "ஒரு நம்பமுடியாத" திட்டத்தின் கீழ் பணியாற்றுகிறது. அது வரவிருக்கும் வாரத்தில் ஒரு மினியேச்சர் பதிப்பு ஸ்பேஸ் லிஃப்ட்டர்களின், அதாவது விண்வெளியை நோக்கி செல்லும் லிஃப்ட் சோதனைகளைத் தொடங்குகிறது. இது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையான நாசாவிற்கே வாராத யோசனை ஆச்சே என்று நினைக்கிறீர்கள் தானே? இருக்கலாம்!

விண்வெளி எலிவேட்டர்

இதுவரை நடத்தப்பட்ட சோதனைகள் ஆனது குறைந்த தூரத்தில் உள்ள மற்றும் எளிமையான நட்சத்திரங்களை அடையும் நோக்கத்திலான சிறிய சிறிய படிகளை செயல்படுத்தியது. இந்த விண்வெளி எலிவேட்டர் ஆனது 6 செ.மீ உயரம், 3 செ.மீ நீளம், மற்றும் 3 செ.மீ அகலம் கொண்ட ஒரு சிறிய பெட்டியைக் கொண்டிருக்கும். இரண்டு சிறிய க்யூப்சாட்ஸ்க்கு (CubeSats) இடையேயான இடைவெளியில் இடைநிறுத்தப்பட்ட ஒரு 10 மீட்டர் கேபிள் வழியாக இந்த பெட்டி நகரும். பெட்டியின் இயக்கம் செயற்கைக்கோள் வழியாக கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.

எலிவேட்டர் டெஸ்ட்

பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒரு பேட்டியில், "விண்வெளியில் நடத்தப்படும் இந்த எலிவேட்டர் டெஸ்ட் ஆண்டு உலகின் முதன்மையான பரிசோதனையாகும்" என்றார். கடந்த 1895 ஆம் ஆண்டில், ரஷ்ய அறிவியலாளர் ஆன கோன்ஸ்டாண்டின் சியோல்கோவஸ்கி எண்ணத்தில் உதித்த இந்த ஸ்பேஸ் லிஃப்ட் ஆனது சாத்தியப்படாமல் போக பல முக்கியமான காரணங்கள் இருந்தன.

பூமியின் மேற்பரப்பில் இருந்து விண்வெளிக்கு நகரும் ஒரு கேபிள்

ஸ்பேஸ் லிப்டின் முக்கிய யோசனையே, அது செல்ல வேண்டிய இடத்தை சென்று அடையும் வரை, பூமியின் மேற்பரப்பில் இருந்து விண்வெளிக்கு நகரும் ஒரு கேபிள் ஆனது விண்வெளி சுற்றுப்பாதையில் நிலுவையில் இருக்கும் என்பது தான். மற்றொரு முக்கியமான விடயமாக, இந்த கேபிளுக்கு தேவையான பொருள்கள் வேறு எந்தப் பொருளையும் விட இலகுவாகவும், வலுவாகவும் இருக்க வேண்டும், அப்போதுதான் விண்வெளியில் கிடைக்கும் அழுத்தத்தை அதனால் தாக்கு பிடிக்க முடியும்.

ஒபாயாஷி

ஷிசோக்கா பல்கலைக்கழகத்துடன் ஒத்துழைத்த ஒரு ஜப்பானிய கட்டுமான நிறுவனமான ஒபாயாஷி, 2050 ஆம் ஆண்டுக்குள் ஒரு விண்வெளி எலிவேட்டரை கட்டும் இலக்கைக் கொண்டு இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த 2014 ஆம் ஆண்டில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தியபோது, ​​"தற்போதைய தொழில்நுட்பங்களில் இந்த கருத்தை செயல்படுத்தும் அளவிற்கான போதுமானதாக திறன்கள் இல்லை, இருந்தாலும் எங்களின் திட்டம் யதார்த்தமானது என்று கூறப்பட்டு இருந்தது.

96000 கிலோ மீட்டர்

இந்த திட்டத்திற்கு சுமார் 96000 கிலோ மீட்டர் அளவிலான கார்பன் நானோகுழாய் கேபிள்கள், பூமி மீது 400 மீட்டர் விட்டம் கொண்ட 'எர்த் போர்ட்' (அது 12500 டன் எதிர் எடையை தாங்கும் அளவு பலமானதாக இருக்க வேண்டும்) ஆகியவைகள் தேவைப்படுகிறது. கார்பன் நானோகுழாய்கள் எஃகை விட அதிக இழுவிசை வலிமை கொண்டதாக அறியப்படுகின்றன, அதனால் தான் இந்த குறிப்பிட்ட ஸ்பேஸ் எலிவேட்டர் திட்டத்திற்கு அவைகள் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளன.

விண்வெளி ஆராய்ச்சிக்கான நிதி

மிகவும் சாத்தியமற்றகாக கருதப்படும் இந்த விண்வெளி உயர்த்தி (எலிவேட்டர்) ஆனது கட்டமைக்கப்பட்டால் அது எதிர்காலத்தில் சாத்தியமான விண்வெளி ஆராய்ச்சிக்கான நிதி சுமைகளை குறைக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் வேண்டாம். இன்னும் சொல்லப்போனால் தற்போது ஒரு விண்வெளி ஏவுதலுக்கு ஒரு பவுண்டு எடைக்கு சுமார் 40,000 முதல் 50,000 டாலர்கள் வரை செலவு ஆகிறது. ஆனால் இந்த விண்வெளி எலிவேட்டர் சாத்தியம் ஆன (அனுமானங்களின் அடிப்படையிலான ஆரம்ப ஆய்வுகளின் கீழ்) பிறகு பவுண்டுக்கு 100 டாலர்கள் என்கிற நிலை உருவாகலாம். ஆகமொத்தம் எதிர்காலத்தில் நிகழப்போகும் விண்வெளி பயணம் ஆனது நிச்சயமாக மிகவும் உற்சாகமாக இருக்கும்.

0 coment�rios:

தோட்டக்கலையின் மீது பல பேருக்கு ஈடுபாடு உள்ளது. தங்கள் வீட்டை அலங்கரிக்க பூச்செடி தொட்டிகளை வாங்கி குவிப்பார்கள். அவர்களை பொறுத்த வரை தோட்ட...

நகர்ப்புற வீடுகளுக்கான சில தோட்டக்கலை இரகசியங்கள்!!!

தோட்டக்கலையின் மீது பல பேருக்கு ஈடுபாடு உள்ளது. தங்கள் வீட்டை அலங்கரிக்க பூச்செடி தொட்டிகளை வாங்கி குவிப்பார்கள். அவர்களை பொறுத்த வரை தோட்டக்கலை என்பது ஓய்வில் செய்யக்கூடிய ஒரு பொழுது போக்காகும். சில நேரம் ஈடுபாட்டையும் தாண்டி உயிராக அதன் மீது நாட்டம் கொண்டுள்ளனர் சிலர்.

நீங்கள் உண்ணுவதற்கு ஆரோக்கியமான காய்கள் மற்றும் பழங்களை கூட வளர்க்கலாம். ஆனால் நகர்ப்புற வீடு என்றால் அவைகளில் சில வேற்றுமைகள் இருக்கும். சில பேரின் வீட்டில் தோட்டத்திற்கென தனி முற்றம் என்பதே இருப்பதில்லை. உங்களுக்கு இந்த கலையின் மீது ஆர்வம் இருந்தும் கூட வீட்டில் இடம் இல்லாத போது ஏமாற்றம் அடைவார்கள் சிலர்.

ஆனால் வருத்தப்படுவதற்கு எதுவுமே இல்லை. தோட்டம் வைப்பதற்கு இடம் இல்லை என்றால் தான் என்ன? அழகிய தொட்டிகளில் சிகளை வைத்து, அவைகளை ஜன்னலின் மீது அல்லது சமையலறை ஜன்னலின் மீது அழகாக அடுக்கி, தோட்டக்கலையின் மீது இருக்கும் உங்கள் ஆர்வத்தை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.

ஆர்வம் தான் முக்கியம், அது இருந்தால் அதை எந்த வடிவில் வேண்டுமானாலும் நிறைவேற்றிக் கொள்ளலாம். எந்த காலமாகட்டும் அல்லது எந்த இடமாகாட்டும், நாங்கள் கூறும் ரகசியங்களை தெரிந்து கொண்டால், இந்த கலையின் மீதுள்ள ஆர்வத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். உங்களுக்கு தேவையானது எல்லாம் சில தொட்டிகள் மற்றும் என்ன வளர்க்க வேண்டும் என்பது மட்டுமே. மற்றது எல்லாம் பெரிய விஷயம் அல்ல.

சரி, நகர்ப்புற வீட்டில் இருக்கும் நீங்கள் தோட்டக்கலையை மேற்கொள்ள உங்களுக்காக சில ரகசியங்களை கூறப் போகிறோம். ஆர்கானிக் வகை செடிகளை உங்கள் வீட்டில் வளர்க்கலாம். அதனால் இந்த அழகு ரகசியங்களை கவனமாக படியுங்கள்.

கிடைக்கும் இடத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்தவும்

உங்கள் வீட்டிற்கு வெளியே அழகிய முற்றம் ஒன்று இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது எவ்வளவு பெரியது என்பதை கவனியுங்கள். அங்கே போதிய சூரிய வெளிச்சம் விழுகிறதா என்பதை முதலில் கவனியுங்கள். ஒரு வேளை, அங்கே மண் இருந்தால், மண்ணின் வகையை சோதனை செய்யுங்கள். ஆர்கானிக் செடி அல்லது பூ வகையை தேர்ந்தெடுப்பதற்கு முன், முதலில் முற்றத்தின் அனைத்து நிலைகளையும் சோதனை செய்து கொள்ள வேண்டும். ஆம், உங்களுக்கு முழுமையான தோற்றத்தை உண்டாக்கும் ஆசை இருக்கலாம். ஆனால் போதிய இடம் இல்லையென்றால், இருக்கும் இடத்தை எப்படி அழகாக்குவது என்று யோசியுங்கள். ஒரு வேளை, பக்கத்து வீட்டுக்காரருடன் அந்த இடத்தை பகிரும் நிலை ஏற்பட்டால், அவர்களுடன் பேசி அவர்களின் இடத்தை கொஞ்சம் பயன்படுத்திக் கொள்ளுங்கள். யோசித்துப் பாருங்கள்.

தண்ணீர் வரத்தை சோதனை செய்து கொள்ளுங்கள்

முற்றம் ஏதும் இல்லாமல் தோட்டம் போட விரும்புபவர்கள், மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று இது. எங்கிருந்து தண்ணீர் கொண்டு வர திட்டமிட்டுள்ளீர்கள்? ஹோஸ் பைப் வைத்து தண்ணீர் எடுத்து வர வேண்டுமா அல்லது வாளியில் தண்ணீர் நிறைத்து தூக்கி கொண்டு வர வேண்டுமா? ஒரு வேளை, வாளியில் பிடித்துக் கொண்டு வர வேண்டும் என்றால் அது கஷ்டமாக இருக்கும். அதனால் தான் சொன்னோம், தோட்டம் அமைக்கும் முன்பு, போதிய திட்டமிடுதல் தேவை என்று. மேலும் தண்ணீருக்கான கட்டுப்பாட்டின் மீதும் கவனம் தேவை. உங்கள் வீட்டில் கோடைக்காலத்தில் தண்ணீர் பிரச்சனை இருந்தால், அதற்காக உங்கள் செடிகள் வாடக்கூடாது அல்லவா?

தோட்டம் அமைப்பதை பற்றிய திட்டமிடுதல்

தோட்டத்தை அமைப்பதற்கு முன்பு என்ன செடிகள் வளர்க்கப் போகிறீர்கள் என்பதை திட்டமிடுவது அவசியம். என்ன வளர்க்க போகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்: சிறு செடி, உணவு, செடிகள், பூக்கள் போன்றவைகள்.ஒரு வகை செடி தான் வளர்க்க போகிறீர்களா அல்லது அனைத்து வகையிலும் ஒவ்வொன்று வளர்க்க போகிறீர்களா? உங்கள் முதன்மை எதன் மீது என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பிய செடிகளை வளர்க்க இந்த பதில்கள் உங்களுக்கு இடத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். எவ்வகை செடிகளுக்கு அதிக சூரிய வெளிச்சம் தேவை, தேவையில்லை என்பதையும் தெரிந்து கொள்வீர்கள். போதிய இடம் இல்லாத போது, திட்டமிடுதல் மிகவும் முக்கியம்.

புதுமையான தோட்டம்

போதிய இடம் இல்லாத போது, உங்கள் ஆக்கப்படைப்பை வெளிக்கொண்டு வாருங்கள். எப்போதும் வளர்க்கிற காயையும் பழங்களையும் தான் வளர்க்க வேண்டும் என்றில்லை. நீங்களே ஆராய்ச்சி செய்து, புதுமையான ஒன்றை திட்டமிடுங்கள். இவ்வகை சூழ்நிலைகள் உங்களின் ஆக்கப்படைப்பு உங்களுக்கு பெரிதும் உதவும்.

தலைகீழ் தோட்டம்

தற்போது, இவ்வகை தோட்டத்தை தான், நகர்ப்புற வாசிகள் பலரும் பின்பற்றுகிறார்கள். உண்மையிலேயே இது ஒரு சுவாரஸ்யமான போக்காகும். இந்த முறையால், உங்கள் தோட்டத்தின் அளவு பெரிதாகி, கிடைத்த சிறு இடத்தை நன்றாக பயன்படுத்தலாம். உயரமான தொட்டிகளை பயன்படுத்தி அதில் செடிகளை வையுங்கள். ஜன்னல் பெட்டிகளை பயன்படுத்தினால் இடத்தை அடைக்காமலும் இருக்கும். இந்த ஐடியாவால் கிடைத்த சிறு இடத்தில், அதிகமாக வளர்க்கலாம். கிடைத்த சின்ன இடத்தை பயன்படுத்த கிராதி பெட்டிகளை பயன்படுத்துங்கள்.

வீட்டினுள் தோட்டம்

சிறு செடிகளை வீட்டினுள்ளேயே வளர்க்கலாம். வீட்டினுள்ளேயே பல செடிகளை வளர்க்கலாம். அவைகள் நன்றாக வளர, அதன் மீது சூரிய ஒளி படும் வகையில் ஜன்னல் இருக்க வேண்டும். சூரிய வெளிச்சம் தேவைப்படும் செடிகளை வீட்டிற்கு வெளியே வளர்க்கலாம்.

0 coment�rios:

உங்கள் வீட்டு பிரிட்ஜில் காய்கறிகள், பால், மீதம் உள்ள உணவு என்று ஓரிரு வாரங்களாக அப்படியே உள்ளதா? கவலை வேண்டாம். இவற்றை ஒழுங்கமைக்க சில குற...

பிரிட்ஜில் எந்த பொருள்களை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க...

உங்கள் வீட்டு பிரிட்ஜில் காய்கறிகள், பால், மீதம் உள்ள உணவு என்று ஓரிரு வாரங்களாக அப்படியே உள்ளதா? கவலை வேண்டாம்.

இவற்றை ஒழுங்கமைக்க சில குறிப்புகள் உள்ளன. அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம். உங்கள் பிரிட்ஜில் பொதுவாக மிகவும் குளிரான பகுதி சற்று சூடான பகுதி என்று சில இடங்கள் உள்ளன. ஆகவே குறிப்பிட்ட பொருட்களை குறிப்பிட்ட இடத்தில் வைப்பதன் மூலம் அதன் தன்மையை அப்படியே பாதுகாக்க முடியும்.

பிரிட்ஜ்

சில பொருட்களை பிரிட்ஜில் தனியாக வைப்பதன் மூலம் அதன் சுகாதாரம் பாதுகாக்கப்படுகிறது. குறிப்பாக இறைச்சி, பால் பொருட்கள் அல்லது காய்கறிகள், சமைக்காத பொருட்கள் போன்றவற்றை சமைத்த உணவுக்கு அருகில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

உயர் வெப்பநிலையில் சமைக்கப்படும் உணவுப் பொருட்களை பிரிட்ஜின் அடிப்பகுதியில் வைக்க வேண்டும். இந்த இடத்தில் தான் அதிக குளிர்ச்சி இருக்கும்.

காய்கறிகள் மற்றும் பழங்கள்

குறைந்த ஈரப்பதம் அல்லது க்ரிஸ்பர் என்ற பகுதி உங்கள் பிரிட்ஜில் இருந்தால் அந்த இடத்தில் பழங்களை சேமித்து வைக்கலாம். பழங்களுக்கு பொதுவாக குறைந்த ஈரப்பதம் மட்டுமே தேவைப்படும். அதிக ஈரப்பதம் உள்ள இடத்தில் காய்கறிகளை வைக்க வேண்டும்.

இறைச்சி மற்றும் பால் பொருட்கள்

பிரிட்ஜின் அடிப்பகுதியில் குளிர்ச்சி அதிகமாக இருப்பதால் அந்த இடத்தில் இறைச்சியை சேமிக்க வேண்டும். இதனால் மற்ற பொருட்கள் கெட்டுப் போவது தடுக்கப்படும். இறைச்சியின் சாறு பிரிட்ஜில் சொட்டாமல் இருக்கும் விதத்தில் இறைச்சியை கவனமாக மூடி ஒரு பாத்திரத்தில் வைக்கவும். குறிப்பாக மற்ற பொருட்களை வைத்து அதன் மேலே உள்ள அடுக்கில் இறைச்சியை வைக்கும்போது அதிக கவனம் தேவை. இந்த பகுதியை அடிக்கடி சுத்தம் செய்து வைப்பது நல்லது.

பிர்ட்ஜின் பாதி பகுதிக்கு மேலே, பால் பொருட்களை சேமித்து வைக்கலாம். முட்டை மற்றும் சமைக்காத மற்ற பொருட்களைக் கூட அந்த இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.

மீதமாகும் உணவுகளை எங்கே வைப்பது?

தயார் செய்யப்பட்ட உணவு மற்றும் மீதம் உள்ள உணவை பொதுவாக பிரிட்ஜின் மேல் பகுதியில் வைக்கலாம். இந்த பகுதி மற்ற பகுதிகளை விட சற்று குளிர்ச்சி குறைவாக இருக்கும். இதனால் உணவு எளிதில் கெட்டுப் போகாமல் பாதுகாக்கப்படும். மேலும் மேல் பகுதியில் இவற்றை வைப்பதால் உங்களால் எளிதில் மறக்காமல் அதனை எடுத்து காலி செய்ய முடியும்.


பிரிட்ஜின் கதவு பகுதியில் என்ன வைக்கலாம்?

சுவையூட்டிகள் மற்றும் குளிர்பானங்களை பிரிட்ஜின் கதவு பகுதியில் வைக்கலாம். இந்த பகுதி பிரிட்ஜில் அதிக வெப்பமயமான பகுதி, கதவை அடிக்கடி திறப்பதும் மூடுவதுமாக இருப்பதால் இந்த இடத்தில் இவற்றை வைக்கலாம். குளிர்பானங்களை வைப்பதால் சிந்தும் வாய்ப்பு இருப்பதால் இந்த பகுதியை அடிக்கடி சுத்தம் செய்வதும் அவசியமாகும். இந்த பகுதியில் பால் வைப்பது முற்றிலும் தவறான செயலாகும். பொதுவாக பாலை குளிர்ச்சியான இடத்தில் வைக்கவேண்டும்.

0 coment�rios:

ஸ்மார்ட் போனை ஒரு கையால் பிடிப்பது நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனில் எதாவது செய்தி படிக்கும் போதோ, டைப் செய்யும் போதோ, ஸ்கீரினை நகர்த்தும் ப...

செல்போன எப்படி புடிப்பீங்கனு சொல்லுங்க... நீங்க எப்படிபட்டவர்னு சொல்றோம்...



ஸ்மார்ட் போனை ஒரு கையால் பிடிப்பது

நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனில் எதாவது செய்தி படிக்கும் போதோ, டைப் செய்யும் போதோ, ஸ்கீரினை நகர்த்தும் போதோ ஒரு கையை மட்டும் பயன்படுத்துபவராக இருந்தால் நீங்கள் மிகவும் நம்பிக்கையான நபராக இருப்பீர்களாம். தனியாளாக இருந்து அனைத்தையும் சமாளித்து விரும்பிய முடிவுகளை எடுத்து அதில் வெற்றியும் அடைவீர்களாம்.

அது மட்டுமல்லாமல் ஒரு நபருடனான உறவை தீர்மானிக்க அந்த நபர் நம் வாழ்க்கையில் தேவையா இல்லையா என்பதை தீர்மானிக்கவும் போதுமான நேரத்தை செலவழிப்பீர்கள். அதனால் தான் என்னவோ மற்றவருக்கு நீங்கள் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட நபராக தெரிவீர்கள்.

ஒரு கையில் பிடித்துக் கொண்டு மறு கை பெருவிரலால் ஆப்ரேட் செய்தல்

இந்த மாதிரி ஸ்மார்ட் போனை கையாள்பவர்கள் புத்திசாலியாக இருப்பார்களாம் . உங்கள் உள்ளுணர்வு சரியானதாகவும் மிகுந்த புத்திசாலித்தனத்தை கொண்டும் காணப்படுவீர்கள். எந்தவொரு காரியத்திலும் முதல் அடி எடுத்து வைப்பதற்கு முன் பல அடி முன்னால் சென்று யோசிப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தையும் முன்னரே புரிந்து கொள்வீர்கள். இதனால் உங்களை ஏமாற்றுவது மிகவும் கடினம்.

இருப்பினும் நீங்கள் காதல் விஷயங்களில் கடினமாக நடந்து கொள்ளும் நபராக இருப்பீர்கள். உறவில் நீங்கள் சிந்திக்காமல் எடுக்கின்ற ஒரு சில முடிவுகள் உங்கள் உறவை பாதிக்க கூடும். காதல் என்று வரும் போது நிறைய சட்ட திட்டங்களை பேசும் நபராக மாறி விடுவீர்கள்.

இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டு ஆப்ரேட் செய்வது

ஸ்மார்ட் போனை இரண்டு கைகளிலும் பிடித்து கொண்டு கையாள்பவரா நீங்கள் அப்போ உங்கள் லவ் ரெம்ப பாஸ்ட்டாக இருக்கும். நீங்கள் விரைவான திறமையான முடிவுகளை எடுக்கும் நபராக இருப்பீர்கள். வேகமாக மாறும் சூழலுக்கு ஏற்ப மாறி திறம்பட செயல்படுவீர்கள்.

ஆனால் காதல் என்று வரும் போது உங்கள் வேகம் போதாது. உண்மையைச் சொல்லப் போனால் நீங்கள் காதலில் எதிர் தான். உங்கள் பயமே அன்பானவருடான நெருக்கத்தை இழக்க வைக்கும்.

ஒரு கையில் பிடித்துக் கொண்டு இரண்டாவது கையின் ஆள்காட்டி விரலால் கையாள்வது

இந்த மாதரி ஸ்டைல போனை கையாளும் நபர்கள் க்ரீயேட்டிவ் திறன் கொண்டவராக இருப்பார்களாம். நிறைய ஐடியாக்களை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி அதை திறம்பட முடித்தும் காட்டுவீர்கள். உங்களுடைய எண்ணங்களை ஒன்று திரட்டி உங்களுக்கென்ற உலகில் தனியாக வாழ்வீர்கள். ஓவியம் தீட்டிதல் அல்லது புத்தகம் எழுதுதல் போன்றவை உங்களுக்கு வெற்றி தரும்.

காதல் என்று வரும் போது உங்கள் படைப்பாற்றல் அப்படியே கூச்ச சுபாவமாக மாறி விடும். இதனாலேயே நீங்கள் காதல் உறவில் செல்ல திணறுவீர்கள். ஆனால் உங்களை யாரும் புரிந்து கொண்டால் அவருடனான உறவு நன்றாகவே இருக்கும். கண்டிப்பாக உங்கள் ஆளுமை திறனை கண்டு அவர்கள் ஆச்சரியப்படுவார்கள்.

என்னங்க நீங்க எந்த ஸ்டைல போன பிடிக்கிறீங்க? நீங்களும் எப்படிப்பட்ட நபர்னு தெரிஞ்சுகிட்டீங்களா.


இதை ஆராயும் விதமாக ஸ்மார்ட் போனைக் கொண்டு ஒரு சுவாரஸ்யமான சோதனையை மேற்கொண்டனர். சரி வாங்க அதைப் பற்றி கீழ்க்காணும் படங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கிரக நிலை ஜோதிடம், கை ரேகை ஜோதிடம் மாதிரி இதுவும் ஸ்மார்ட் போன் ஜோதிடம் என்றே கூறலாம். ஆமாங்க 2020 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு படி கிட்டத்தட்ட 3 பில்லியன் மக்கள் ஸ்மார்ட் போனை பயன்படுத்துவார்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதை நீங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியாக ஒருபக்கம் பார்த்தாலும் மனநிலை சார்ந்ததாக பார்க்க வேண்டும் என்று மன தத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் நாம் ஸ்மார்ட் போனை கையாளும் விதம், பயன்படுத்தும் முறைகள் போன்றவைகள் நம் குணத்தை வெளிப்படுத்துகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

0 coment�rios:

இந்தாண்டும் தமிழ் சினிமாவில் மொத்தம் 171 நேரடி தமிழ் படங்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் பாலிவுட், டோலிவுட்டுக்கு அடுத்தப்படியாக மிகப்பெரிய...

பிளாஷ்பேக் 2018 : இந்த வருடம் வெளியான 171 படங்கள்.... முழு பட்டியல் இதோ!

இந்தாண்டும் தமிழ் சினிமாவில் மொத்தம் 171 நேரடி தமிழ் படங்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் பாலிவுட், டோலிவுட்டுக்கு அடுத்தப்படியாக மிகப்பெரிய சினிமாத்துறை கோலிவுட் தான். உலகம் முழுவதிலுமே தமிழ் சினிமாவுக்கு என தனி மவுசு உண்டு.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை எப்போதும் பெரிய பட்ஜெட் படங்களைவிட , சிறிய பட்ஜெட் படங்கள் தான் அதிகளவில் வெளியாகும். இந்த வருடமும் அதே நிலைதான்.

சினிமா தொழில் டிஜிட்டல் மயமானப்பின்னர், கடந்த சில வருடங்களாக ஆண்டுக்கு 200க்கும் அதிகமான திரைப்படங்கள் வெளியாகின. ஆனால் இந்த ஆண்டு 171 படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன.

அவை என்னப்படங்கள் என பார்ப்போம்...

ஜனவரி மாதம்

ஜனவரி 5: காவாலி, டிசம்பர் 13, வாநாய்கள் ஜாக்கிரதை, பார்க்க தோனுதே, சாவி, விதி மதி, உல்டா
ஜனவரி 12: குலேபகாவலி, ஸ்கெட்ச், தானா சேர்ந்த கூட்டம்
ஜனவரி 19: வீரத் தேவன்
ஜனவரி 26: நிமிர், மன்னர் வகையறா, சரணாலயம்

பிப்ரவரி மாதம்

பிப்ரவரி 2: மதுர வீரன், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், படை வீரன், விசிறி, ஏமாலி
பிப்ரவரி 9: கலகலப்பு 2, நரிவேட்டை, சவரக்கத்தி, சொல்லிவிடவா
பிப்ரவரி 16: மனுசனா நீ, மேல்நாட்டு மருமகன், நாகேஷ் திரையரங்கம், நாச்சியார், வீரா
பிப்ரவரி 23: 6 அத்தியாயம், கூட்டாளி, காத்தாடி, கேணி, மெர்லின், ஏன்டா தலையில எண்ண வெக்கல, தமிழனானேன்

மார்ச் மாதம்

மார்ச் 2: தாராவி
மார்ச் 20: மெர்க்குரி, முந்தல், பிப்ரவரி 27: தியா, பாடம், பக்கா

ஏப்ரல் ஸ்டிரைக்

ஏப்ரல் மாதத்தில் ஒட்டுமொத்த திரைத்துறையும் ஸ்டிரைக்கில் இருந்ததால் எந்த படமும் ரிலீசாகவில்லை. அதேபோல், படப்பிடிப்பும் நடைபெறவில்லை.

மே மாதம்

மே 4: அலைபேசி, இருட்டு அறையில் முரட்டு குத்து, காத்திருப்போர் பட்டியல்
மே 11: இரவுக்கு ஆயிரம் கண்கள், இரும்புத்திரை
மே 17: பாஸ்கர் ஒரு ராஸ்கல்
மே 18: காளி, காதலர்கள் வாலிபர் சங்கம், செயல், பால்காரி
மே 25: அபியும் அனுவும், ஒரு குப்பைக் கதை, காலக் கூத்து, பேய் இருக்கா இல்லையா, புதிய ப்ரூஸ்லீ, செம

ஜூன் மாதம்

ஜூன் 1: ஆண்டனி, மோகனா, பஞ்சுமிட்டாய், வயக்காட்டு மாப்பிள்ளை, எக்ஸ் வீடியோஸ்
ஜூன் 7: காலா , ஜுன் 8: சமூக வலைப்பின்னல்
ஜூன் 14: கோலி சோடா 2
ஜூன் 15: கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாய்ங்ய, கன்னக்கோல், நானுடன் நீ
ஜூன் 22: ஆந்திரா மெஸ், என்ன தவம் செய்தேன், கார்கில், ட்ராபிக் ராமசாமி, டிக் டிக் டிக்
ஜூன் 29: அசுரவதம், சேம போத ஆகாதே, எதுக்குடி காதலிச்ச

ஜூலை மாதம்

ஜூலை 6: இட்லி, காசு மேல காசு, மிஸ்டர் சந்திரமௌலி, ரோஜா மாளிகை
ஜூலை 12: தமிழ்ப் படம் 2
ஜூலை 13: கடைக்குட்டி சிங்கம் படம், நண்பர்கள்
ஜூலை 20: போத, மாயா பவனம், ஒண்டிக் கட்ட, விண்வெளி பயணக் குறிப்புகள்
ஜூலை 27: பிரம்மபுத்ரா, ஜுங்கா, மோகினி

ஆகஸ்ட் மாதம்

ஆகஸ்ட் 3: அரவிடம், எங்க காட்டுல மழை, கஜினிகாந்த், கடல் குதிரைகள், கடிகார மனிதர்கள், காட்டுப்பயன் சார் இந்த காளி, மணியார் குடும்பம், நாடோடி கனவு, போயா வேலையப் பாத்துக்கிட்டு, உப்பு புளி காரம்
ஆகஸ்ட் 10: அழகு மகன், காதல் எனக்கு பிடிக்கும், பியார் பிரேமா காதல், விஸ்வரூபம் 2
ஆகஸ்ட் 17: கோலமாவு கோகிலா, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, ஓடு ராஜா ஓடு, ஓ காதலனே
ஆகஸ்ட் 24: எச் சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், களரி, லக்ஷ்மி, மேற்குத் தொடர்ச்சி மலை
ஆகஸ்ட் 30: இமைக்கா நொடிகள்
ஆகஸ்ட் 31: 60 வயது மாநிறம், ஆருத்ரா, அண்ணனுக்கு ஜே

செப்டம்பர் மாதம்

செப்டம்பர் 7: அவளுக்கென்ன அழகிய முகம், படித்தவுடன் கிழித்து விடவும், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம், டார்ச்லைட், தொட்ரா, வஞ்சகர் உலகம்

செப்டம்பர் 13: சீமராஜா, யு டர்ன்
செப்டம்பர் 21: ஏகாந்தம், மேடை, ராஜா ரங்குஸ்கி, சாமி 2
செப்டம்பர் 27: செக்கச் சிவந்த வானம்,
செப்டம்பர் 28: பரியேறும் பெருமாள், ஆடவர்

அக்டோபர் மாதம்

அக்டோபர் 4: விஜய் சேதுபதி - திரிஷா நடித்த '96'
அக்டோபர் 5: ராட்சசன், யாகன், நோட்டா
அக்டோபர் 12: ஆண் தேவதை, அடங்காதப் பசங்க, அமாவாசை, களவாணி சிறுக்கி, கூத்தன், மனுசங்கடா, மூணாவது கண்
அக்டோபர் 17: வடசென்னை
அக்டோபர் 18: சண்டக்கோழி 2, எழுமின்
அக்டோபர் 26: ஜீனியஸ், ஜருகண்டி

நவம்பர் மாதம்

நவம்பர் 2: தப்பு தாளங்கள், வன்முறைப் பகுதி, சந்தோஷத்தில் கலவரம்
நவம்பர் 6: பில்லா பாண்டி, களவாணி மாப்பிள்ளை, சர்கார்
நவம்பர் 16: காற்றின் மொழி, திமிரு புடிச்சவன், உத்தரவு மகாராஜா
நவம்பர் 23: கிருஷ்ணன், கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும், பேதியாக்கும் சகவாசம், செய், செம்மறி ஆடு, வண்டி
நவம்பர் 29: 2.0

டிசம்பர் மாதம்

டிசம்பர் 7: வினை அறியார், டோனி கபடி குழு, சீமாத்துரை, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
டிசம்பர் 14: பயங்கரமான ஆளு, திருமல , பிரபா, ஜானி, துப்பாக்கி முனை
டிசம்பர் 20: சீதக்காதி
டிசம்பர் 21: கனா,அடங்க மறு, மாரி 2, சிலுக்குவார்பட்டி சிங்கம்
டிசம்பர் 28: காட்சிப் பிழை, பிரான்மலை

என மொத்தம் 171 படங்கள் இந்த ஆண்டு ரிலீசாகியுள்ளன.

0 coment�rios: