Home Top Ad

சமீபத்தில் இந்தியாவிற்கு "உயரமான சிலைகள்" மீதான போதை உருவாகி இருப்பதை நையாண்டியாக தெரிவிக்கும் நோக்கில் மார்க்கண்டேய கட்ஜூ அவர்...

விண்வெளிக்கு லிஃப்ட்; ஜப்பானை பார்த்து வாய் பிளக்கும் நாசா!

சமீபத்தில் இந்தியாவிற்கு "உயரமான சிலைகள்" மீதான போதை உருவாகி இருப்பதை நையாண்டியாக தெரிவிக்கும் நோக்கில் மார்க்கண்டேய கட்ஜூ அவர்கள், சமூக வலைததளத்தில் ஒரு கருத்தை தெரிவித்து. அதில் போகும் போக்கை பார்த்தால் விண்வெளிக்கி செல்ல ராக்கெட்டுகள் தேவைப்படாது, சிலைகள் போதும் என்பது போல் கூறி இருந்தார். அது ஜப்பான் நாட்டு ஆராய்ச்சியாளர்களின் காதில் விழுந்தது போல ஒரு சோதனை நிகழ்வுள்ளது.

ஜப்பான் நாட்டில் உள்ள ஷிசோக்கா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரர் ஏஜென்சி (JAXA) உடன் இணைந்து "ஒரு நம்பமுடியாத" திட்டத்தின் கீழ் பணியாற்றுகிறது. அது வரவிருக்கும் வாரத்தில் ஒரு மினியேச்சர் பதிப்பு ஸ்பேஸ் லிஃப்ட்டர்களின், அதாவது விண்வெளியை நோக்கி செல்லும் லிஃப்ட் சோதனைகளைத் தொடங்குகிறது. இது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையான நாசாவிற்கே வாராத யோசனை ஆச்சே என்று நினைக்கிறீர்கள் தானே? இருக்கலாம்!

விண்வெளி எலிவேட்டர்

இதுவரை நடத்தப்பட்ட சோதனைகள் ஆனது குறைந்த தூரத்தில் உள்ள மற்றும் எளிமையான நட்சத்திரங்களை அடையும் நோக்கத்திலான சிறிய சிறிய படிகளை செயல்படுத்தியது. இந்த விண்வெளி எலிவேட்டர் ஆனது 6 செ.மீ உயரம், 3 செ.மீ நீளம், மற்றும் 3 செ.மீ அகலம் கொண்ட ஒரு சிறிய பெட்டியைக் கொண்டிருக்கும். இரண்டு சிறிய க்யூப்சாட்ஸ்க்கு (CubeSats) இடையேயான இடைவெளியில் இடைநிறுத்தப்பட்ட ஒரு 10 மீட்டர் கேபிள் வழியாக இந்த பெட்டி நகரும். பெட்டியின் இயக்கம் செயற்கைக்கோள் வழியாக கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.

எலிவேட்டர் டெஸ்ட்

பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒரு பேட்டியில், "விண்வெளியில் நடத்தப்படும் இந்த எலிவேட்டர் டெஸ்ட் ஆண்டு உலகின் முதன்மையான பரிசோதனையாகும்" என்றார். கடந்த 1895 ஆம் ஆண்டில், ரஷ்ய அறிவியலாளர் ஆன கோன்ஸ்டாண்டின் சியோல்கோவஸ்கி எண்ணத்தில் உதித்த இந்த ஸ்பேஸ் லிஃப்ட் ஆனது சாத்தியப்படாமல் போக பல முக்கியமான காரணங்கள் இருந்தன.

பூமியின் மேற்பரப்பில் இருந்து விண்வெளிக்கு நகரும் ஒரு கேபிள்

ஸ்பேஸ் லிப்டின் முக்கிய யோசனையே, அது செல்ல வேண்டிய இடத்தை சென்று அடையும் வரை, பூமியின் மேற்பரப்பில் இருந்து விண்வெளிக்கு நகரும் ஒரு கேபிள் ஆனது விண்வெளி சுற்றுப்பாதையில் நிலுவையில் இருக்கும் என்பது தான். மற்றொரு முக்கியமான விடயமாக, இந்த கேபிளுக்கு தேவையான பொருள்கள் வேறு எந்தப் பொருளையும் விட இலகுவாகவும், வலுவாகவும் இருக்க வேண்டும், அப்போதுதான் விண்வெளியில் கிடைக்கும் அழுத்தத்தை அதனால் தாக்கு பிடிக்க முடியும்.

ஒபாயாஷி

ஷிசோக்கா பல்கலைக்கழகத்துடன் ஒத்துழைத்த ஒரு ஜப்பானிய கட்டுமான நிறுவனமான ஒபாயாஷி, 2050 ஆம் ஆண்டுக்குள் ஒரு விண்வெளி எலிவேட்டரை கட்டும் இலக்கைக் கொண்டு இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த 2014 ஆம் ஆண்டில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தியபோது, ​​"தற்போதைய தொழில்நுட்பங்களில் இந்த கருத்தை செயல்படுத்தும் அளவிற்கான போதுமானதாக திறன்கள் இல்லை, இருந்தாலும் எங்களின் திட்டம் யதார்த்தமானது என்று கூறப்பட்டு இருந்தது.

96000 கிலோ மீட்டர்

இந்த திட்டத்திற்கு சுமார் 96000 கிலோ மீட்டர் அளவிலான கார்பன் நானோகுழாய் கேபிள்கள், பூமி மீது 400 மீட்டர் விட்டம் கொண்ட 'எர்த் போர்ட்' (அது 12500 டன் எதிர் எடையை தாங்கும் அளவு பலமானதாக இருக்க வேண்டும்) ஆகியவைகள் தேவைப்படுகிறது. கார்பன் நானோகுழாய்கள் எஃகை விட அதிக இழுவிசை வலிமை கொண்டதாக அறியப்படுகின்றன, அதனால் தான் இந்த குறிப்பிட்ட ஸ்பேஸ் எலிவேட்டர் திட்டத்திற்கு அவைகள் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளன.

விண்வெளி ஆராய்ச்சிக்கான நிதி

மிகவும் சாத்தியமற்றகாக கருதப்படும் இந்த விண்வெளி உயர்த்தி (எலிவேட்டர்) ஆனது கட்டமைக்கப்பட்டால் அது எதிர்காலத்தில் சாத்தியமான விண்வெளி ஆராய்ச்சிக்கான நிதி சுமைகளை குறைக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் வேண்டாம். இன்னும் சொல்லப்போனால் தற்போது ஒரு விண்வெளி ஏவுதலுக்கு ஒரு பவுண்டு எடைக்கு சுமார் 40,000 முதல் 50,000 டாலர்கள் வரை செலவு ஆகிறது. ஆனால் இந்த விண்வெளி எலிவேட்டர் சாத்தியம் ஆன (அனுமானங்களின் அடிப்படையிலான ஆரம்ப ஆய்வுகளின் கீழ்) பிறகு பவுண்டுக்கு 100 டாலர்கள் என்கிற நிலை உருவாகலாம். ஆகமொத்தம் எதிர்காலத்தில் நிகழப்போகும் விண்வெளி பயணம் ஆனது நிச்சயமாக மிகவும் உற்சாகமாக இருக்கும்.

0 coment�rios: