என் இனிய தமிழ் மக்களுக்கு, தினந்தோறும் தட்டு நிறைய திட்டுகளை வழங்கிக் கொண்டிருக்கிறார் பாரதிராஜா. “சும்மா சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடிச்ச ஆளோட கட் அவுட்டுக்கு எதுக்குய்யா பாலாபிஷேகம் பண்ற? சி.எம் ஆகுறதுக்கு அதுவே தகுதியாகிடுமா? என்றெல்லாம் அவர் ரஜினியை வார வார…. ரஜினி மக்கள் மன்றம் படு சூடாகி வருகிறது.
பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘கொடிபறக்குது’ படத்தில் ரஜினி சிகரெட் பிடிக்கும் காட்சியை திரும்ப ரிப்பீட் பண்ணி, ‘இப்படி சீன் வச்சவரு எப்படி பேசுறார் பாருங்க?’ என்று ரிப்பீட் அடிக்கிறார்கள். அது போதாது என்று பாரதிராஜாவின் திரைப்பட கல்லூரியை திறந்து வைக்க வந்த ரஜினியின் போட்டோவை போட்டு, அப்ப மட்டும் இவர் உங்களுக்கு தேவைப்படுகிறாரா? என்று கேள்வி கேட்கிறார்கள். இதெல்லாம் பாரதிராஜாவின் பார்வைக்கு போகிறதோ, இல்லையோ?
‘நாம ஏன் அவரை தேவையில்லாமல் விமர்சிக்கணும்?’ என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் அவர். ‘இன்னும் கட்சியே ஆரம்பிக்கல. இன்னும் கொடியை கூட அறிமுகப்படுத்தல. இரண்டையும் செஞ்சுட்டு முழு நேர அரசியல்வாதியா ரஜினி வரட்டும். அப்ப விமர்சிக்கலாம். இப்ப விமர்சிக்கறது அவ்வளவு நல்லாயிருக்காது’ என்று திடீர் முடிவை எடுத்திருக்கிறாராம்.
இனி சினிமா விழாக்களில் மைக்கை பிடிக்கும் பாரதிராஜாவிடம், ரஜினி பற்றி கேள்வி கேட்பவர்களுக்கு ஒரே பதில்தான் வைத்திருப்பார்.
“ஸாரிய்யா… நெக்ஸ்ட் கொஸ்டீன்!”

0 coment�rios: