ரசிகர்களுக்கு பொறுமை இல்லை, அரசியல் கிடையாது: ரஜினி பேச்சு

நடிகர் ரஜினிகாந்த் இன்று நடந்த காலா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. அதில் பேசிய சூப்பர்ஸ்டார் மிக உருக்கமாக பேசினார். முதலில்...

நடிகர் ரஜினிகாந்த் இன்று நடந்த காலா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. அதில் பேசிய சூப்பர்ஸ்டார் மிக உருக்கமாக பேசினார்.

முதலில் கபாலி படத்தின் ஸ்கிரிப்டை படித்துவிட்டு கதை மிக மெதுவாக நகர்வதாக எனக்கு தோன்றியது. ரஞ்சித்தை அழைத்து இது பற்றி பேசினேன். ரசிகர்களுக்கு இவ்வளவு பொறுமை கிடையாது, நான் கதை கேட்கும்போது ஒரு ரசிகன் என்ன எதிர்பார்ப்பான் என்ற கண்ணோட்டத்தில் தான் கேட்பேன்.

காலா படத்தை மும்பையில் உள்ள தாராவியில் தமிழர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுத்துள்ளோம். ரஞ்சித் 85 நாட்களில் படத்தை முடித்துவிட்டார்.. அடுத்த கே.எஸ்.ரவிக்குமார் அவர்தான் என நினைக்கிறேன்.

"காலாவில் அரசியல் இருக்கும்; ஆனால் காலா அரசியல் படம் கிடையாது" என சூப்பர்ஸ்டார் மேலும் கூறினார்.

மேலும் பல...

0 comments

Search This Blog