Home Top Ad

 "பஸ்ஸை தொட்டு பாருங்க.. அப்பறம் இருக்கு" என்று தாக்க முயன்ற பாஜகவினருக்கு "சவுண்டு" விட்ட தமிழக எஸ்.ஐக்கு கேரளாவில்...

பஸ்ஸை தொட்டு பாருங்க.. வீரம் காட்டிய "தமிழ் சிங்கம்" எஸ்ஐ.. கேரளாவிலிருந்து குவியும் பாராட்டு

 "பஸ்ஸை தொட்டு பாருங்க.. அப்பறம் இருக்கு" என்று தாக்க முயன்ற பாஜகவினருக்கு "சவுண்டு" விட்ட தமிழக எஸ்.ஐக்கு கேரளாவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

குமரி - கேரள எல்லையில் கேரள அரசுப் பேருந்தை தாக்க முயன்ற பா.ஜ.க-வினரை எதிர்த்து குரல்கொடுத்து பேருந்தைக் காப்பாற்றிய களியக்காவிளை சப் இன்ஸ்பெக்டர் மோகன அய்யருக்கு பாராட்டுப்பத்திரம் மற்றும் சன்மானம் வழங்குவதாக கேரள அமைச்சர் அறிவித்துள்ளார்.

2 நாளைக்கு முன்னாடி அதாவது 2-ம் தேதி 2 பெண்கள் சபரிமலைக்கு தரிசனம் செய்ய போனார்கள். ஏற்கனவே கொதித்து கிடந்த அம்மாநில பாஜகவினர், இந்த விஷயத்துக்கு பிறகு திரும்பவும் போராட்டங்களில் இறங்கினார்கள். இதற்காக மறுநாள் 3-ம்தேதி பந்த்தை நடத்தினார்கள்.

அடித்து நொறுக்கினர்

அப்போது நூற்றுக்கும் அதிகமான பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பாஜகவினர் அங்கு போராட்டம் செய்தாலும், கேரள பார்டர் என்பதால், கன்னியாகுமரிக்கும் பரவியது. அங்க இருக்கிற ஆத்திரத்தை எல்லாம் இங்கு வந்து காட்டி, நம் தமிழக பஸ்களையும் கேரள பாஜகவினர் சுக்குநூறாக்கினர்.

எஸ்.ஐ. மோகன அய்யர்

அப்போதுதான் எல்லை பகுதியான களியக்காவிளைக்கும் பாஜகவினர் நுழைந்தனர். அங்கும் எந்த பஸ்களையும் செல்ல விடாமல் அமர்க்களம் செய்தார்கள். அந்த நேரம் பார்த்து, கேரள அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் பாஜகவினர் பாய்ந்து போய் அடிக்க போனார்கள். அப்போது பாதுகாப்பு பணியில் களியக்காவிளை போலீஸ் எஸ்.ஐ. மோகன அய்யர் என்பவர் இருந்தார்.

தொட்டு பாருங்க..

பஸ்ஸை தாக்க வருகிறார்கள் என்று தெரிந்து ஆவேசப்பட்டு, போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினார். அப்போதும் பாஜகவினர் பஸ்ஸை தாக்குவதிலேயே குறியாக இருந்தனர். ஒரு கட்டத்தில் நரம்புகள் புடைத்து எழுந்த எஸ்.ஐ., "எங்க.. பஸ்ஸை தொட்டு பாருங்க.. அப்பறம் இருக்கு உங்களுக்கு" என்று கர்ஜித்தார்.

ஓட்டம் பிடித்தனர்

இதை பார்த்து பயந்து மிரண்ட பாஜகவினர் பஸ்ஸை எதுவுமே செய்யாமல் ஓட்டம் பிடித்தனர். கேரள பஸ்ஸை தமிழக எஸ்.ஐ. சேதமின்றி காத்த இந்த சம்பவம்தான் இணையத்தில் வைரலானது. எஸ்.ஐ. மோகன அய்யரின் புகழ் கேரளாவரை பரவிவிட்டது. இப்போது, அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் போனில் பேசி வாழ்த்து சொல்லி இருக்கிறார்.

தமிழ் சிங்கம்

கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மோகன அய்யருக்கு பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது. இதை தவிர கேஎஸ்ஆர்டிசி நிறுவனம் 1000 ரூபாய் சன்மானமும் அறிவித்திருக்கிறது. இப்போது நம்ம ஊர் எஸ்.ஐ. மோகன அய்யருக்கு "தமிழ் சிங்கம்" என்ற பட்டப்பெயரை வைத்து அம்மாநில மக்கள் செல்லமாக அழைத்து தங்கள் வாழ்த்து மழையை பல்வேறு ரூபங்களில் பொழிந்து கொண்டிருக்கிறது.

0 coment�rios:

நடிகர் கதிர் போலீசாக நடிக்கும் சத்ரு படத்தின் டீசர் வெளியானது. பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து கதிர் நடிக்கும் படம் சத்ரு. மைல் ஸ்டோன் ...

"போலீச அடிக்கிறதெல்லாம் சினிமால தான்... நிஜத்துல சிறுநீர் வரும்"!

நடிகர் கதிர் போலீசாக நடிக்கும் சத்ரு படத்தின் டீசர் வெளியானது.

பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து கதிர் நடிக்கும் படம் சத்ரு. மைல் ஸ்டோன் மூவிஸ் சார்பில் திரு தயாரித்திருக்கும் இப்படத்தை நவீன் நஞ்சுந்தன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு நடிகர் அம்ரீஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. கதிர் இதில் முதல் முறையாக போலீசாக நடித்துள்ளார். படத்தில் அவர் பேசும், "போலீச அடிக்கிறதெல்லாம் சினிமால தான்... நிஜத்துல சிறுநீர் வரும்" எனும் வசனம் படுமிரட்டலாக இருக்கிறது.

டீசரை பார்க்கும் போது, இது ஒரு போலீஸ் கேங்ஸ்டர் படம் என்பது தெளிவாகிறது. பணத்துக்காக கடுங்குற்றங்களை செய்யும் ஒரு கும்பலுக்கும், போலீசுக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் சத்ருவாக இருக்க முடியும்.

இந்த படத்தில் கதிருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். வில்லனாக புதுமுகங்கள் சிலர் நடிக்கின்றனர்.

0 coment�rios:

விஸ்வாசம் கதை குறித்து புதிய தகவல் பரவி வருகிறது. சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் 10ம் தேதி ரி...

லீக்கான விஸ்வாசம் கதை: ட்ரெய்லரில் அஜித் சொன்னது தான் உண்மையோ?

விஸ்வாசம் கதை குறித்து புதிய தகவல் பரவி வருகிறது.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் கதை இது தான் என்று கூறி ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.

இந்த தகவல் உண்மையா என்பதை சிவா தான் உறுதி செய்ய வேண்டும்.

தூக்குதுரை

தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டியை சேர்ந்த தூக்குதுரை ஒரு கேங் லீடராம். தூண்டிவிட்டால் சண்டக்கோழியாக மாறும் கதாபாத்திரத்தில் அஜித் நடித்துள்ளாராம். மனைவி நயன்தாராவுக்கு பிரசவம் நடக்கும்போது அஜித் சிலருடன் மோதிக் கொண்டிருப்பாராம். அதனால் குழந்தை பிறக்கும் நேரத்தில் அவர் நயன்தாரா அருகில் இருக்க மாட்டாராம். என் கதையில நான் வில்லன்டா என்று அஜித் ட்ரெய்லரில் சொன்னது உண்மை போன்று.

பிரிவு

என்னையும், குழந்தையையும் விட உங்களுக்கு சண்டை போடுவது தான் முக்கியமா என்று கூறி அஜித்துடன் கோபித்துக் கொண்டு தனியாக போய்விடுவாராம் நயன். பின்னர் அவர் மும்பையில் தனியாக வசிப்பாராம். குழந்தை இறந்துவிட்டதாக அஜித்துக்கு தகவல் வருமாம். 12 ஆண்டுகள் கழித்து தான் அஜித்தும், நயன்தாராவும் சேர்வார்களாம்.

வில்லன்

தனது மகள் உயிருடன் இருப்பதே அஜித்துக்கு ரொம்ப லேட்டாகத் தான் தெரியுமாம். மகளை வில்லன் ஜகபதி பாபுவிடம் இருந்து காப்பாற்றும் வேலையில் இறங்குவாராம் அஜித். இந்த பாசப் போராட்டத்தை ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் அளிக்கிறார் சிவா என்று கூறப்படுகிறது.

அஜித்

படத்தில் பரபரக்கும் சண்டை காட்சிகள் உள்ளதாம். பாசம், காதல், காமெடி, ஆக்ஷன் என்று அனைத்தையும் சரி சமமான அளவில் கலந்து கொடுத்துள்ளாராம் சிவா. விஸ்வாசம் தல ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 coment�rios:

நீண்ட நாட்களாக விமானத்தை இயக்கி வந்த 5 பைலட்கள் குறித்து தற்போது திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவல் உலகையே அதிர்ச்சியில் ...

இவ்வளவு நாட்களாக விமானத்தை இயக்கியது இவர்கள்தான்... உலகை அதிர்ச்சியில் உறைய வைத்த திடுக் தகவல்...

நீண்ட நாட்களாக விமானத்தை இயக்கி வந்த 5 பைலட்கள் குறித்து தற்போது திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவல் உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.


பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரை தலைமையிடமாக கொண்டு, பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (Pakistan International Airlines-PIA) விமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது.


இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே நஷ்டத்தில் இயங்கி கொண்டுள்ளது. அரசுகள் மாறினாலும் கூட, இந்த நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து மீட்க எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.


கடந்த ஜூன் மாத இறுதியில், பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நஷ்டம் 36 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்தது. பாகிஸ்தான் நாட்டின் நிதி அமைச்சகம் மூலம் இந்த தகவல் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.


இந்த சூழலில், பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலர் கல்வி சான்றிதழ்களில் முறைகேடு செய்திருப்பதாக புகார்கள் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை, பாகிஸ்தான் நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தான் நாட்டு உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் சமீபத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிர்ச்சிகரமான சில தகவல்கள் தெரியவந்தன.


பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றும் 7 பைலட்களின் சான்றிதழ்கள் போலியாக இருக்கலாம் என சமீபத்தில் சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் விசாரணை நடத்தியது.


இதில், 5 பைலட்கள் பள்ளி படிப்பையே தாண்டாதவர்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்தது. சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிவில் விமான போக்குவரத்து ஆணையம் இந்த தகவலை உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு முன்பு தெரிவித்தது.

இதன்மூலமாக இந்த தகவல் தற்போது வெளியே தெரியவந்துள்ளது. சிவில் விமான போக்குவரத்து ஆணையம் கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த மூன்று நீதிபதிகளில் ஒருவரான இஜாசுல் அஹ்ஸான், இவர்கள் பஸ்ஸை இயக்க கூட தகுதியற்றவர்கள் என்று விமர்சித்தார்.

ஆனால் அவர்கள் தற்போது விமானத்தையே இயக்கி கொண்டுள்ளனர். இதன்மூலம் பயணிகளின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் நிலவுகிறது எனவும் அவர் தெரிவித்தார். தற்போது இந்த சம்பவம் பாகிஸ்தான் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமானத்தின் பைலட் ஆக வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உள்ளது. என்றாலும் அதற்கு உரிய கல்வி தகுதி மற்றும் இதர பிற தகுதிகளும் கட்டாயம் அவசியம். ஆனால் பாகிஸ்தானில் உரிய கல்வி தகுதி இல்லாமலேயே 5 பேர் பைலட் ஆக வேலைக்கே சேர்ந்து விட்டனர்.

என்றாலும் பயணிகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இந்தியாவில் இதுபோன்ற விஷயங்கள் சற்று கடுமையாகவே பின்பற்றப்படுகின்றன. இந்தியாவில் பைலட் ஆக வேண்டும் என்றால், சில அடிப்படையான தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். இதுகுறித்து இனி தெரிந்து கொள்ளலாம்.
இவ்வளவு நாட்களாக விமானத்தை இயக்கியது இவர்கள்தான்... உலகை அதிர்ச்சியில் உறைய வைத்த திடுக் தகவல்...

முதலில் பள்ளி மேல்நிலைப் படிப்பில் கணிதம், இயற்பியல் போன்ற பாடங்களை படித்திருக்க வேண்டும். அத்துடன் அவற்றில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களையும் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். மாணவர் பைலட் லைசென்ஸ் பெற வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 16 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

அதே சமயம் தனியார் பைலட் லைசென்ஸ் பெற 17 வயதும், கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் பெற 18 வயதும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதே சமயம் 17 வயது பூர்த்தியாகியிருந்தால், நேரடியாக பிரைவேட் பைலட் லைசென்சுக்கு விண்ணப்பிக்க முடியும்.

ஆனால் இதற்கு 17 வயது பூர்த்தியாகி இருந்தால் மட்டும் போதாது. 12ம் வகுப்பிலும் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். இதன்பின் இந்திய சிவில் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குனரகம் தேர்வு ஒன்றை நடத்தும்.

இந்த தேர்வானது விமான வழித்தடங்கள், விமான வானியல் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியவை சார்ந்ததாக இருக்கும். அதே சமயம் ஒரு கண்ணில் பார்வை மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்.

மருத்துவ மொழியில் இதனை 66 கண்பார்வை என்று அழைக்கின்றனர். அதே சமயம் மற்றொரு கண்ணில் 69 என்ற அளவில் குறைபாடு இருக்கலாம். என்றாலும் 66 என்ற நிலைக்கு இது சரி செய்யப்பட வேண்டும். அதேபோல் பொதுவான உடற்தகுதி என்பதும் கட்டாயமாக தேவை. தினசரி வாழ்க்கை முறையை பாதிக்கும் எந்த வியாதியும் இருக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற பல்வேறு அடிப்படையான விஷயங்கள் இங்கு பின்பற்றப்பட்டு வருகின்றன.

0 coment�rios: