Home Top Ad

இன்று (ஜூலை 02, 2019) வேல்ஸ் உயர் நீதிமன்ற விசாரணைக்குச் செல்கிறார் (Vijay Mallya) விஜய் மல்லையா. விஜய் மல்லையாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு ...

இந்தியாவிடமிருந்து தப்பிக்க 4 ஸ்பெஷல் வழி வைத்திருக்கும் விஜய் மல்லையா!

இன்று (ஜூலை 02, 2019) வேல்ஸ் உயர் நீதிமன்ற விசாரணைக்குச் செல்கிறார் (Vijay Mallya) விஜய் மல்லையா. விஜய் மல்லையாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்து அரசிடம் சட்ட ரீதியாக பேசிக் கொண்டிருக்கிறது இந்திய அரசு தரப்பு.

இந்திய அரசு தரப்பின் விண்ணப்பத்தை எதிர்த்து, (Vijay Mallya) விஜய் மல்லையாவும் தன்னால் முடிந்த வரை அனைத்து சட்ட வழிகளையும் ஒவ்வொன்றாக பிரயோகித்துக் கொண்டிருக்கிறார்.

அப்படித் தான் இந்த வேல்ஸ் உயர் நீதிமன்ற (Oral Hearing) வாய் வழி விசாரணையும் இன்று நடந்து கொண்டிருக்கிறது. இதைப் பற்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் ஒரு கட்டுரையில், மல்லையா தப்பிக்க இருக்கும் நான்கு சட்ட வழிகளைப் பற்றியும் சொல்லி இருக்கிறார்கள்.

உள் துறை உத்தரவு

ஆக மல்லையாவுக்கு நடக்கும் இந்த வாய்வழி விசாரணையில் வென்றால் என்ன செய்ய வாய்ப்பிருக்கிறது, தோற்றால் என்ன செய்ய வாய்ப்பிருக்கிறது என விரிவாகப் பார்ப்போம். மல்லையா வழக்கில் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின், இங்கிலாந்தின் உள் துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி 04, 2019 அன்றே, விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல, இந்திய அரசுக்கு அனுமதி கொடுத்து விட்டது.

வாய் வழி விசாரணை (Oral Hearing)

அந்த உத்தரவை எதிர்த்து தான், இப்போது வேல்ஸ் உயர் நீதி மன்றத்தில் முறையிட்டு வாய் வழி விசாரணைக்கு (Oral hearing) சென்று கொண்டிருக்கிறார் (Vijay Mallya) விஜய் மல்லையா. இந்த மேல் முறையீட்டைக் குறித்து பேசிய இந்திய தரப்பினர் "விஜய் மல்லையாவை நாடு கடத்துவது குறித்த வாதங்களைக் கேட்க (Oral Hearing), வேல்ஸ் நீதிமன்றம் ஒரு நாள் ஒதுக்கி இருக்கிறது."

தீர்ப்பு

மேலும் "விசாரணை ஒரு நாளுக்குள்ளேயே முடிந்து விட்டால், இன்றைக்கே தீர்ப்பும் வந்துவிடும். அப்படி இல்லை என்றால் வாதங்கள் மட்டும் இன்று கேட்டு விட்டு, தீர்ப்பை மட்டும் மற்றொரு நாளுக்கு ஒத்தி வைப்பார்கள். இந்த விசாரணை நீதிபதி லெகாத் (Justice Leggatt) மற்றும் நீதிபதி பாப்பல்வெல் (Justice Popplewell) முன் நடக்கப் போகிறது" என முன் கூட்டியே சொல்கிறார்கள் (Vijay Mallya) விஜய் மல்லையாவை எதிர்த்து, இந்திய அரசு தரப்பில் வாதாடிக் கொண்டிருக்கும் வழக்கறிஞர்கள்.

மேல் முறையீடு

ஒருவேளை இதுவரையான வழக்கு விசாரணைகளில், ஏதாவது சில சாட்சியங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் விசாரிக்கப்பட்டிருந்தால் மற்றொரு மேல் முறையீடு (Appeal) கொடுக்கப்படலாம் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள். இன்று (Vijay Mallya) விஜய் மல்லையாவின் வழக்கை (appeal)மேல் முறையீடாகக் கருதாமல், வெறும் ஒரு நாள் (Oral Hearing) வாய் வழி விசாரணையாகத் தான் எடுத்துக் கொண்டிருக்கிறது வேல்ஸ் நீதிமன்றம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பு 1

அப்படி இந்த வாய் வழி விசாரணை (Vijay Mallya) விஜய் மல்லையாவுக்கு சாதகமாக தீர்ப்பானால், மீண்டும் வழக்கம் போல உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து வழக்கு நடைபெறும். அப்படி இல்லை என்றால் இது தான் (Vijay Mallya) விஜய் மல்லையாவின் கடைசி சட்ட வாய்ப்பாக இருக்கும் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.

வாய்ப்பு 2

ஒருவேளை இந்த வாய்வழி விசாரணையும் (Vijay Mallya) விஜய் மல்லையாவுக்கு எதிராக வந்தால், இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தை நாடலாமாம். பொதுவாக இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை விசாரிக்க எடுத்துக் கொள்வார்களாம். ஆக விஜய் மல்லையாவின் வழக்கையும் ஒரு பொது நல வழக்காக கருதி இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.

வாய்ப்பு 3

அது போக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தையும், (Vijay Mallya) விஜய் மல்லையா தப்பிக்கும் வழிகளில் ஒன்றாக வைத்துக் கொள்ளலாம் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள். காரணம், இங்கிலாந்து இன்னும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விடுவிக்கப்படவில்லை. அதாவது பிரெக்ஸிட் இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை. ஆகையால் இன்னமும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்கும் இங்கிலாந்து ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்துக்கு உட்பட்டே நடந்து கொள்ள வேண்டி இருக்கும் என்கிறார்கள்.

வாய்ப்பு 4

Representation என ஒரு வழி இருக்கிறதாம். இதையும் (Vijay Mallya) விஜய் மல்லையா பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பிருக்கிறதாம். இந்தியாவில் 1993 சூரத் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட டைகர் ஹனீஃப் என்பவர் சட்ட ரீதியாக எல்லாவற்றிலும் தோற்ற பிறகு, இந்த Representation முறையைப் பயன்படுத்தி இருக்கிறார். இன்று வரை டைகர் ஹனீஃப் விவகாரத்தில் முடிவு செய்யாமல் காத்திருக்கிறது இங்கிலாந்து உள் துறை அமைச்சகம். அதே போல மல்லையாவும் புதிய ஆதாரங்களைச் சமர்பித்து Representation கோர வாய்ப்பிருக்கிறதாம். கோரினால் டைகர் ஹனீர் போல மல்லையாவுக்கு இந்திய அரசு காத்திருக்க வேண்டி இருக்கும் என்கிற டைகர் ஹனீஃபின் Representation.

ஆக இத்தனை கெடுபிடிகளுக்குப் பின்னும் மல்லையா தப்பிக்க கொஞ்சம் வழி இருப்பது போலத் தான் தெரிகிறது. (Vijay Mallya) விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வந்து வட்டியும் முதலுமாக கடனை வசூலித்தால் சரி.

0 coment�rios: