Home Top Ad

நேர்கொண்ட பார்வை தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பலரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். ஏனெனில் அஜித் நீண்...

நேர்கொண்ட பார்வை படம் குறித்து வெளிவந்த முதல் விமர்சனம், படம் எப்படி இருக்கு?

நேர்கொண்ட பார்வை தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பலரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

ஏனெனில் அஜித் நீண்ட இடைவேளைக்கு பிறகு கதையின் நாயகனாக எந்த ஒரு மாஸ் இல்லாமல் நடித்துள்ளார்.

இப்படத்தை வாங்க பல தயாரிப்பாளர்கள் போட்டிப்போட, அதில் ஒருவராக நட்புனா என்னானு தெரியுமா தயாரிப்பாளர் ரவீந்திரனும் ஒருவர்.

இவருக்கு இந்த படம் கிடைக்கவில்லை என்றாலும், படம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இதில் ‘நேர்கொண்ட பார்வை படத்தை நான் வாங்க முயற்சி செய்தது உண்மை தான், ஆனால், எனக்கு தகுதி இல்லை என்று அவர்கள் நினைத்துவிட்டார்கள்.

எது எப்படியோ எனக்கு மிகவும் நம்பகமான சோர்ஸிலிருந்து கிடைத்த தகவல் நேர்கொண்ட பார்வை படம் செம்ம அல்டிமேட்-ஆக உள்ளது, தல ரசிகர்கள் தாண்டி அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும்’ என கூறியுள்ளார்.

0 coment�rios: