Home Top Ad

தண்ணீர் பிரச்னை உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் , தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு வேண்டுகோள் விடுத்துள்ளார். சி...

தண்ணீரை சேமிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்: நடிகர் வடிவேலு வேண்டுகோள்

தண்ணீர் பிரச்னை உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் , தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கலியாந்தூர் அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. ஊரை காவல் காக்கும் அய்யனாருக்கு புரவி எடுப்பு திருவிழா நடத்தினால் மழை பெய்யும் என்பது ஐதீகம்.  இந்த விழாவில் நகைச்சுவை நடிகர் வடிவேலு குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

வடிவேலுவின் மனைவிக்கு கலியாந்தூர் சொந்த ஊர் என்பதால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வள்ளி திருமணம் நாடகத்தை தொடங்கி வைத்தார்.

விழாவில் அவர் பேசும் போது ”அய்யனாருக்கு அடிக்கடி திருவிழா நடத்தி மழையை வரவழைக்க வேண்டும், குடிநீர் பிரச்னை எல்லா இடங்களிலும் உள்ளது. அதனை வீணாக்காமல் சேமிக்க இளைஞர்கள் முன் வரவேண்டும் கிராமத்தின் பாரம்பரியமும், பண்பாடும் திருவிழாக்களில் உள்ளது. அதில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.”

பின்னர்,  கிராம மக்கள் வேண்டுகோளை ஏற்று, எட்டணா இருந்தா என்பாட்டை கேட்கும் என்ற பாடலை பாடி, நடனமாடினார்.

0 coment�rios: