Home Top Ad

பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் மாஸ் படம் காலா. நடிப்பில் நடித்திருக்கும் இந்த படத்தின் டீஸர் அண்மையில் வெளியாக ரசிகர்களும் கொண்டாடின...

பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் மாஸ் படம் காலா. நடிப்பில் நடித்திருக்கும் இந்த படத்தின் டீஸர் அண்மையில் வெளியாக ரசிகர்களும் கொண்டாடினர்.

படமும் வரும் ஏப்ரல் ரிலீசாக இருப்பதாக தயாரிப்புக் குழு அறிவித்துள்ளனர். அடுத்து ரஞ்சித் எந்த நடிகருடன் இணைய போகிறார் என்ற தகவல் வந்துள்ளது.

அதாவது கார்த்தியை வைத்து மெட்ராஸ் என்ற மாபெறும் வெற்றி படத்தை கொடுத்து ரஞ்சித் தன்னுடைய அடுத்த படத்திலேயே சூர்யாவுடன் இணைய முடிவு செய்தாராம். ஆனால் நடுவில் ரஜினி பட வாய்ப்பு வந்ததால் அந்த வேலைகளில் இறங்கியிருக்கிறார்.

காலா படத்திற்கு பிறகு சூர்யாவை வைத்து படம் இயக்குவார் என்று கூறப்படுகிறது

கோடைக்காலம் தொடங்கிவிட்டது. இவ்வளவு நாள் சாந்தமாக இருந்த சூரியன் உக்கிரம் காட்டத் தொடங்கிவிட்டது. இளநீர் கடைகள், ஜூஸ் கடைகளில் கூட்டம் மொய்...

கோடைக்காலம் தொடங்கிவிட்டது. இவ்வளவு நாள் சாந்தமாக இருந்த சூரியன் உக்கிரம் காட்டத் தொடங்கிவிட்டது. இளநீர் கடைகள், ஜூஸ் கடைகளில் கூட்டம் மொய்க்கிறது. புதிது புதிதாகத் தள்ளுவண்டிகளில் ஜூஸ் கடைகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. கூல்ட்ரிங்க்ஸ் கடைகளும் ஆங்காங்கே தோன்றுகின்றன. பல கூல்ட்ரிங்க்ஸ் கடைகளில், செக்கச்சிவப்பு வண்ணத்தில் 'ஃப்ரூட் மிக்சர்'  என்ற பானத்தை விற்பனை செய்கிறார்கள்.  பெரும்பாலானோரின் விருப்பத்துக்குரிய பானமாக அது மாறியிருக்கிறது.

வாழைப்பழத்தைக் கொண்டு செய்யப்படும் இந்த ஃப்ரூட் மிக்சரில் உடலுக்குக் கெடுதல் செய்யும் பல பொருள்கள் சேர்க்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து விரிவாகப் பேசினார் சித்த மருத்துவர் செந்தில் கருணாகரன்.

" பெரும்பாலும் இந்தப் பானத்தில் வாழைப்பழம்தான் இருக்கும். பெயருக்கு, கொஞ்சம் அன்னாசிப்பழம், திராட்சை, சிறிதளவு ஆப்பிள் சேர்ப்பார்கள். வாழைப்பழத்தைக் கரைத்து பிற பழங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டிச் சேர்ப்பார்கள். கூடவே, சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. இனிப்புக்கு 'சாக்ரின்'  எனப்படும் செயற்கை இனிப்பூட்டி பயன்படுத்துகிறார்கள். ஒரு கிலோ சீனி தருகிற இனிப்பை, இந்த இனிப்பூட்டி ஒரு சிட்டிகையிலேயே கொடுத்துவிடும்.  ஆனால், இது வயிற்றுக்கு மிகவும் கேடு விளைவிக்கும். வாய் வெந்துபோகும்.    'சாக்ரீன்' கலந்த பானத்தைக் குடித்த சில நிமிடங்களிலேயே நம் உடலில் இன்சுலின் உற்பத்தியாக ஆரம்பித்துவிடும். தேவையில்லாத நேரத்தில் உற்பத்தியாவதால், தேவைப்படும்போது அதன் உற்பத்தி குறைந்துவிடும். இதனால் சர்க்கரைப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சிலர் சுவைக்காக இதனுடன் பாதாம்பால் சேர்ப்பார்கள். இரண்டையும் கலந்து குடிக்கும்போது வயிற்றுக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளன.

இது மட்டுமின்றி, இந்த பானத்தில் வீரியமுள்ள ஒருவகை எசன்ஸ் சேர்க்கிறார்கள். அதுதான் இந்தப் பானத்தின் வாசனைக்குக் காரணம். ஆனால், அதுவும் உடலுக்குக் கேடுவிளைவிக்கக் கூடியது. அதைவிட ஆபத்தானவை செயற்கை நிறமூட்டிகள். நம் உணவுப்பண்டங்களில் மருத்துவர் செந்தில் கருணாகரன்சேர்ப்பதற்காகவே ஏறத்தாழ 1000-த்துக்கும் மேற்பட்ட செயற்கை நிறமூட்டிகள் உள்ளன.  இந்த நிறமூட்டிகளைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட உணவுகள் செரிமானக்கோளாறை ஏற்படுத்தும். நரம்புக் கோளாறுகள், தோல் சம்பந்தமான பிரச்னைகளும் உண்டாகும். வாந்தி, குமட்டலையும் ஏற்படுத்தும்.மேலும் செயற்கை நிறமூட்டிகள் கலந்த உணவுகள் நம் குடலுக்குள் அப்படியே தங்கிவிடும் . இது குடலின் உட்கிரகிப்புத்தன்மையை குறைத்துவிடும்.

ஒவ்வொரு பழத்திலும் இயற்கையாக சர்க்கரை இருக்கிறது. உதாரணமாக ஆப்பிளில் 'மால்டோஸ்' என்னும் சர்க்கரைப் பொருள் இருக்கிறது. இதனுடன் வெள்ளைச் சர்க்கரையோ, சாக்ரீனோ கலக்கும்போது அதனுடைய உண்மையான பலன் கிடைக்காது. அதேபோல், ஒவ்வொரு பழத்துக்கும் இனிப்பு,புளிப்பு, துவர்ப்பு என தனித்தனிச் சுவை இருக்கிறது. தனித்த சத்துகளையும். உடையது. ஒவ்வொரு பழத்தையும் தனியாகச் சாப்பிட்டால்தான் அதற்குரிய பலன் கிடைக்கும்.  அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சாப்பிடும்போது அஜீரணக் கோளாறுதான் உண்டாகும்.

பொதுவாக, இதுபோன்ற பானங்களைத் தவிர்த்து, பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்துக்கு நல்லது. அப்படிச் சாப்பிட்டால் பழங்களில் உள்ள நார்ச்சத்து முழுமையாகக் கிடைக்கும். அல்லது வீட்டுக்குப் பழங்களை வாங்கிச்சென்று ஜூஸாக்கி, சர்க்கரை சேர்க்காமல் குடிக்கலாம்.

வெள்ளைச் சர்க்கரையை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது. பனங்கற்கண்டு, பனை வெல்லம், நாட்டு வெல்லம் பயன்படுத்தலாம், எழுமிச்சம்பழம், புதினா, பனங்கருப்பட்டி கலந்த பானத்தை தாகம் எடுக்கும் தருணங்களில் அருந்தலாம்.   இளநீர், தாளித்த நீர்மோர் அருந்துவதும் நல்லது. " என்கிறார் அவர்.

பிரபு தேவா தமிழில் தொடர்ந்து நிறைய படங்கள் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் அடுத்து மெர்குரி என்ற திகில் படம் வெளியாக இருக்கிறது, படத்த...

பிரபு தேவா தமிழில் தொடர்ந்து நிறைய படங்கள் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் அடுத்து மெர்குரி என்ற திகில் படம் வெளியாக இருக்கிறது, படத்திற்கான டீஸரும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

கடந்த சில நாட்களாக பிரபு தேவா அடுத்து அஜித்தை வைத்து படம் இயக்க போகிறார் என்று நிறைய தகவல்கள் வந்துவிட்டது. அவர் நிஜமாக ஒரு புதிய படம் இயக்குகிறார், ஆனால் தமிழில் இல்லை பாலிவுட்டில்.

சல்மான் கான், சோனாக்ஷியை வைத்து தான் புதிய படம் இயக்குகிறாராம். அர்பாஸ் கான் தயாரிக்கும் இப்படம் பற்றிய வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.

பரபரப்பான செய்திகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் நிகழ்ச்சிகளால் அதிக பார்வையாளர்களை கொண்டவர் பாண்டே மற்றும் தந்தி தொலைக்காட்சி. தலைமை செய்...

பரபரப்பான செய்திகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் நிகழ்ச்சிகளால் அதிக பார்வையாளர்களை கொண்டவர் பாண்டே மற்றும் தந்தி தொலைக்காட்சி.

தலைமை செய்தி ஆசிரியராகவும், பிரபலங்கள் அனைவரின் எதிர் விமர்சனங்களை சந்தித்தவர் ரங்கராஜ் பாண்டே. தன்னுடைய நெறுக்கடியான கேள்விகளால் பலரை திக்கு முக்காட செய்தும் உள்ளார்.

    இந்நிலையில் தற்போது அவர் பணி நீக்கம் செய்துள்ளனர். பல காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

ரங்கராஜ் பாண்டே சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வரை நேரில் சென்று பார்த்ததாகவும், தமிழக அரசியல் சம்பந்தமாக வெளிவரும் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் பேசியுள்ளார். அதற்கு முதல்வர் ஒப்புக்கொள்ளாததால் வெளியேறியுள்ளார்.

இதனை தொடர்ந்து முதல்வர், அரசுக்கு ஆதரவாகவும் எதிராகவும் செயல்படும் தொலைக்காட்சியின் பட்டியலை எடுக்க அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளனர். அந்த பட்டியலில் அரசிற்கு எதிராக செயல்படும் சேனல்கள் அனைத்தும் அரசு கேபிளிலிந்து கட்செய்யப்பட்டுள்ளது. அதில் தந்தி தொலைக்காட்டிசியும் அடங்கும்.

    அரசின் ஊழல்களை ஆதாரத்துடன் வெளியிட்டதன் விளைவாகவே தந்தி டிவி மேளாலருக்கு அதிகபடியான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு பாண்டே வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஆனால் இது தொடர்பாக வந்த தகவலை தந்தி தொலைக்காட்சியும், ரங்கராஜ் பாண்டேவும் உறுதி செய்யவில்லையாம்.

கோலமாவு கோகிலா'. 'டைட்டில் ஹியூமரா இருக்கே'னு கேட்கிறாங்க. 'லோக்கலா இறங்கிப் பேரு வெச்சிருக்கீங்களே'னுகூட கேட்டாங்க. ...

கோலமாவு கோகிலா'. 'டைட்டில் ஹியூமரா இருக்கே'னு கேட்கிறாங்க. 'லோக்கலா இறங்கிப் பேரு வெச்சிருக்கீங்களே'னுகூட கேட்டாங்க. 'அந்த' மாதிரிப் படமா மச்சி'ன்னு கலாய்ச்சாங்க. எனக்கு மட்டுமில்ல, நயன்தாராவுக்குமே இந்தப் பெயர் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. முதன்முறையா அவங்ககிட்ட டைட்டிலைச் சொன்ன செகண்ட், 'குபுக்'னு சிரிச்சுட்டாங்க''

உற்சாகமாகச் சிரிக்கிறார், நெல்சன். நயன்தாரா நடிப்பில் வரும் சம்மரில் ரிலீஸாகவிருக்கும் 'கோலமாவு கோகிலா' படத்தின் இயக்குநர். சிவகார்த்திகேயன், சந்தானம் வரிசையில் விஜய் டிவியிலிருந்து கோலிவுட்டுக்கு வரும் அடுத்த முகம். விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களை இயக்கி வந்தவர், சினிமாவில் தெரிந்துகொள்ள வேண்டிய கிரவுண்ட் லெவல் தொழில்நுட்பங்களை அங்கிருந்தே கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார். நடிப்பில் சிவகார்த்திகேயனும், சந்தானமும் முத்திரை பதித்ததுபோல், இயக்கத்தில் நெல்சன் முத்திரை பதிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது. காரணம் அறிமுகப்படமே நயன்தாராவின் படமாக இருப்பதால்.

''காலங்காலமா ஹீரோக்களை மையப்படுத்தியே சினிமாக்கள் வந்துக்கிட்டு இருக்கு. ஏன்... என்னோட முதல் முயற்சியுமே அப்படித்தான் இருந்தது. சிம்பு நடிக்க நான் தொடங்கிய 'வேட்டை மன்னன்' காரணமே கண்டுபிடிக்க முடியாம பென்டிங்ல இருக்கு. ட்ராப் ஆகிடுச்சுனு சொல்ல மாட்டேன்.  'வேட்டை மன்னன்' மறுபடியும் வேட்டையாட வரலாம். வரும்போது வரட்டும்னு அந்த முயற்சியை அப்படியே விட்டுட்டு, பெண்களை மையப்படுத்தின படங்கள் பக்கம் வந்தேன். அதுலேயும் ஒரு ஃபார்முலா இருந்துச்சு. அந்த ஃபார்முலாவை விட்டு வெளியே வந்து என்ன பண்ணலாம்னு யோசிச்சி, டெவலப் பண்ண கதைதான், 'கோலமாவு கோகிலா'.

ஏற்கெனவே 'வல்லவன்' படத்துல கொஞ்சநாள் நான் வொர்க் பண்ணப்போ, நயன்தாரா மேடம் எனக்குத் தெரியும். அதனால என் மனசுல முதல்ஆளா அவங்கதான் நின்னாங்க. கதை சொல்லப் போனேன். முழுசாக் கேட்டு முடிச்சதும், 'டைட்டில் என்ன'னு கேட்டாங்க. நான் சொன்னதும், ஒரு நிமிஷம் கேப் விட்டுச் சிரிச்சுட்டாங்க. பிறகு 'நல்லாதானே இருக்கு'ன்னாங்க. கதை கேட்டதால அவங்களால அந்தத் தலைப்பை ஏத்துக்க முடிஞ்சது. படத்துல நுழைஞ்சிட்டா, இடைவேளைக்கு முன்னாடியே பெயர்க் காரணம் தெரிஞ்சிடும். அதனால வம்படியாவோ, பேசப்படணும்னோ இந்தத் தலைப்பை நான் வைக்கலை. நயன்தாரவே ஓகே சொன்ன பிறகு மாத்தி யோசிப்போமா... இப்படித்தான் டைட்டில் கன்ஃபார்ம் ஆச்சு'' - 'கோகோ' டைட்டில் பிறந்த கதையைச் சொன்னார், நெல்சன்.

படம் ரிலீஸாக இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகலாம். அதற்குள் டைட்டில் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது. இணையதளங்களில் ஆளாளுக்குப் பேசத்தொடங்கி விட்டார்கள். 'நயன்தாரா பழைய ராமராஜன் படத்து கௌதமிபோல குளித்து முடித்து ஈரத்தலை, துண்டோடு அதிகாலையில் கோலம் போடுகிறார்' எனச் சொல்கிறார்கள். 'நயன் பங்கேற்கிற கோலப்போட்டி படத்தில் உள்ளது' என்கிறார்கள். இப்படி நிறைய கதைகள். 'கோலாமாவுக்கும், கோகிலாவுக்கும் என்ன தொடர்பு?'

கோலாமாவு படத்தில் ஒரு முக்கிய கேரக்டராக வருகிறது. ஸ்மக்லிங் ஆட்களுடன் ஏதோவொரு சூழலில் இணையும் நயன்தாரா, அந்தச் சூழலை அவர் எப்படி ஹேண்டில் செய்து, அதிலிருந்து மீண்டு வருகிறார்... என்பதைத்தான், பல ட்விஸ்டுகளுடன் இந்தப் படத்தில் கதையாகச் சொல்கிறார்கள். 

நடிகை ஸ்ரீதேவி மறைந்தாலும் அவர் படங்கள் மூலம் நம் நினைவில் இருப்பார். இப்போது பலராலும் யோசிக்கப்படுவது ஸ்ரீதேவியின் மகள்கள் பற்றிதான். அவ...

நடிகை ஸ்ரீதேவி மறைந்தாலும் அவர் படங்கள் மூலம் நம் நினைவில் இருப்பார். இப்போது பலராலும் யோசிக்கப்படுவது ஸ்ரீதேவியின் மகள்கள் பற்றிதான்.

அவரது முதல் மகள் ஜான்வி தன்னுடைய முதல் படமான தடக் பட படப்பிடிப்பில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் ஸ்ரீதேவி வாழ்க்கையில் போனி கபூர் வந்ததும், அவரை பிடிக்காமல் ஸ்ரீதேவி அம்மா செய்த விஷயங்களும் இப்போது வெளியாகியுள்ளது.

அதாவது போனி கபூருக்கு, ஸ்ரீதேவியை பிடித்து போக தன்னுடைய தம்பி அனில் கபூர் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் அவரை நாயகியாக கமிட் செய்ய விரும்பியுள்ளார். இதற்காக அவரை அணுகினால் ஸ்ரீதேவியோ தன் அம்மாவை கேட்க கூறியுள்ளார்.

அவரது அம்மாவுக்கு போனி கபூரை பிடிக்கவில்லை என்பதால் ரூ. 10 லட்சம் சம்பளம் கேட்டிருக்கிறார். ஆனால் போனி கபூர், ஸ்ரீதேவியை படத்தில் கமிட் செய்து அவருடன் பழக வேண்டும் என்ற எண்ணத்தில் ரூ. 10 லட்சம் என்ன ரூ. 11 லட்சமே தருகிறேன் என்று கூறி கமிட் செய்துள்ளார்.

பெண் நடன இயக்குனர் என்ற பெருமையோடு சினிமாவில் வலம் வந்தவர் காயத்ரி ரகுராம். ஆனால் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரின் எதிர்ப்ப...

பெண் நடன இயக்குனர் என்ற பெருமையோடு சினிமாவில் வலம் வந்தவர் காயத்ரி ரகுராம். ஆனால் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரின் எதிர்ப்புக்கு ஆளாகினார்.

இதனால் அவர் சமூக வலைதளங்களில் என்ன பதிவு செய்தாலும் அதற்கு ரசிகர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி வந்தார்.

தற்போது டுவிட்டரில் அவர், இனி சமூக வலைதளங்களில் கிண்டல் செய்வது, கெட்ட வார்த்தை பயன்படுத்துவது போன்ற விஷயங்கள் இன்றே முடிவுக்கு வர வேண்டும். இல்லை என்றால் நான் சைபர் கிரைமில் புகார் அளித்து உங்களை கண்டுபிடிப்பேன். என்னை, ஜுலியை அல்லது யாரை கிண்டல் செய்தாலும் சரி என்று பதிவு செய்துள்ளார்.