Home Top Ad

பாகுபலி-2 இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸில் ஒரு மைல் கல். அப்படியிருக்க எப்படி தோல்வி என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், உண்மை இது தான், அதே ...

பாகுபலி-2 இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸில் ஒரு மைல் கல். அப்படியிருக்க எப்படி தோல்வி என்று நீங்கள் கேட்கலாம்.

ஆனால், உண்மை இது தான், அதே நேரத்தில் தோல்வி இந்தியாவில் இல்லை, சீனாவில் தான்.

பாகுபலி முதல் பாகம் சீனாவில் ரூ 9 கோடி வசூல் செய்தது, ஆனாலும் இரண்டாம் பாகத்தை அங்கு ரிலிஸ் செய்தனர்.

இப்படம் கண்டிப்பாக ரூ 500 கோடி வரை அங்கு வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்க, பாகுபலி-2 தற்போது வரை ரூ 70 கோடி வரை தான் சீனாவில் வசூல் செய்துள்ளது.

இதனால், படம் சீனாவில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஆர்.ஜே. பாலாஜியும், ஜூலியும் அரசியலுக்கு வருவதாக அடுத்தடுத்து அறிவிப்பு வெளியிட்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது. நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தான...

ஆர்.ஜே. பாலாஜியும், ஜூலியும் அரசியலுக்கு வருவதாக அடுத்தடுத்து அறிவிப்பு வெளியிட்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தான் அரசியலுக்கு வருவதாக அறிவிப்பு வெளியிட்டார். அதோடு நிற்கவில்லை. கட்சிக் கொடியை தயார் செய்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். அந்த கொடியை பார்த்து கலாய்க்காதவர்களே இல்லை.

ஆர்.ஜே. பாலாஜி அரசியலுக்கு வருவதை பார்த்து ஒரு கூட்டம் அவரை கலாய்த்தாலும் சிலர் அவரை ஆதரித்துள்ளனர். இந்நிலையில் நான் கட்சி துவங்குகிறேன் என்று கூறி ஒரு பெரிய குண்டை தூக்கிப் போட்டார் ஜூலி.

இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை. ஆ, ஊன்னா கட்சி துவங்குகிறேன் என்று கிளம்பிவிடுகிறார்கள் என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

ஜூலி கட்சி துவங்குவதாக வெளியான வீடியோவில் அவர் இருந்த கெட்டப், வந்து இறங்கிய காரை பார்த்துவிட்டு மக்களுக்கு லைட்டா டவுட்டு வந்தது. அவர் கட்சி துவங்கவில்லையாம், அரசியல் சார்ந்த படத்தில் நடிக்கிறாராம்.

ஹம்பிள் பொலிடீஷியன் நொக்ராஜ் என்கிற கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கப் போகிறாராம் ஆர்.ஜே. பாலாஜி. அரசியல் சார்ந்த இந்த படத்திற்கு தான் இப்படி பீதியை கிளப்பி அவர் விளம்பரம் தேடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்திற்கு எப்படி விளம்பரம் தேடலாம் என்று ரூம் போட்டு யோசிப்பார்கள் போல. நல்லா தேடுறாங்கய்யா விளம்பரத்தை. இதற்கிடையே ஜூலி கமல் ஹாஸன் கட்சியில் சேர முயற்சி செய்வதாக வேறு கூறப்படுகிறது.


நடிகர் விஷால் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பிசியாக இருக்கிறார். அவரின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான இரும்புத்திரை படத்திற்கு மக்க...

நடிகர் விஷால் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பிசியாக இருக்கிறார். அவரின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான இரும்புத்திரை படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு.

அவர் அரசியலில் இறங்கி போட்டியிட சில தடைகளையும் சந்தித்தனர். இந்நிலையில் தற்போது அவரின் மீது அடுத்தடுத்து எதிர்ப்புகள் சூழத்தொடங்கியுள்ளது.

இதில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தை விட்டு விஷால் தானாக செல்ல வேண்டும். இல்லையெனில் நாங்கள் விரட்டுவோம் என நடிகர் ரித்திஷ் கூறியுள்ளார்.

மேலும் அண்மையில் டி.ஆர், இயக்குனர் பாரதிராஜா, ராதா ரவி ஆகியோருடன் சேர்ந்து பேட்டியளித்துள்ளார். அதில் அவர் விஷால் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 3 படங்களை தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன் தற்போது தயாரிக்கும...

தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 3 படங்களை தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன் தற்போது தயாரிக்கும் படத்திற்கு “ பாண்டி முனி “ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் முனியாக பிரபல ஹிந்தி நடிகர் ஜாக்கிஷெராப் முனி என்கிற அகோரி வேடத்தில் நடிக்க, புதுமுக நடிகையான மேகாலி பாண்டி என்ற வேடத்திலும் நடிக்கிறார். மற்றும் இன்னொரு நாயகியாக நிக்கிஷாபட்டேல், பெராரே ,சிவசங்கர், ஷாயாஜி ஷிண்டே, அம்பிகா, வாசுவிக்ரம் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – கஸ்தூரிராஜா. இது இவர் இயக்கும் 23 வது படம் படம் பற்றி இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறியதாவது..

இது நான் இயக்கும் வித்தியாசமான படம். இதுவரை கிராம வாழ்வியலையும் காதலையும் குடும்ப உறவுகளையும் மட்டும் பதிவு செய்த நான் இதில் ஹாரர் விஷயத்தை கையிலெடுக்கிறேன். சாமிக்கும் பேய்க்கும் இடையே நடக்கும் போர் தான் பாண்டி முனி அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு ஜமீன் பங்களாவுக்குள் நடக்கும் ஹாரர் படம் இது. சுமார் 70 வருடங்களுக்கு முன்பு நடப்பது மாதிரியான பீரியட் படம் இது.

சாமி பாதி, பேய் பாதி என்று கதையின் போக்கு இருக்கும். இந்த கதையை கேட்டவுடன் ஜாக்கி ஷெராப் ஆர்வத்துடன் உடனே ஓகே சொன்னது இந்த கதைக்கு கிடைத்த முதல் வெற்றி. படத்தின் படப்பிடிப்பு மலேசியா, தாய்லாந்து, குரங்கணி, ஜவ்வாதுமலை போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.

உலகெங்கும் சாதனையாளர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி பல பயோபிக் திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதில் பெண்களுக்கான பிரத்யேக பயோபிக்குகளி...

உலகெங்கும் சாதனையாளர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி பல பயோபிக் திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதில் பெண்களுக்கான பிரத்யேக பயோபிக்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். `நடிகையர் திலகம்' சாவித்திரி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை அசத்தலாக தெலுங்கில் மகாநடி'யாகவும், தமிழில் நடிகையர் திலகம் எனவும் பதிவு செய்திருக்கிறார்கள்.

நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை எழுதும் அசைன்மென்ட் மதுரவாணிக்குக் (சமந்தா) கிடைக்கிறது. சாவித்திரியின் வாழ்க்கையை எழுத விரும்பாத சமந்தாவை, கொஞ்சம் கொஞ்சமாக கன்வின்ஸ் செய்கிறார் ஆன்டனி (விஜய் தேவரகொண்டா). இருவருக்குமான காதல், சமந்தா சந்திக்கும் சூழல்கள், சாவித்திரியின் வாழ்க்கை, சாவித்திரி சந்திக்கும் சூழல் போன்றவற்றை கச்சிதமாகச் சொல்லி, கதையை நகர்த்தியிருக்கிறார்கள்.


பொதுவாக பயோபிக் என்றால், முழுக்க முழுக்க முதன்மை கதாபாத்திரத்தின் வாழ்க்கையை மட்டுமே மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். அதைக் காட்சிப்படுத்த நினைக்கும் எழுத்தாளர் அல்லது இயக்குநரின் வாழ்க்கையைச் சற்று குறைவான காட்சிகளே திரைக்கதையில் சேர்த்திருப்பார்கள். இதில் இரு கதைக்கும் தேவையான அளவு காட்சிகளை வைத்திருக்கிறார்கள். 1980 களில் சாவித்திரியின் கோமா ஸ்டேஜில் ஆரம்பிக்கும் கதை, சாவித்திரியின் அத்தை துர்காம்பா (பானுப்பிரியாவின் ) வரிகளில் விரிகிறது.


இருபதாம் நூற்றாண்டில் தென்னிந்திய சினிமாவின் ஆளுமையாகக் கருதப்படும் சாவித்திரியாக, அச்சு அசலாக நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.  தோழி சுஷீலா (ஷாலினி பாண்டே ) வுடன் சுற்றித் திரிவது, வெகுளித்தனமாக விஜயவாஹிணி ஸ்டுடியோவில் உலா வருவது, இறுதி வரை உதவிக் கொண்டே இருப்பது, மருத்துவமனைக் காட்சிகள், மதுக்கோப்பைகளுடன் வாழ்வது, முதல் முறை கேமராவைப் பார்க்கும் போது வெட்கப்படுவது,  இத்தனை ஆண்டுகளாக கீர்த்தி சுரேஷ் நடித்த படங்களை எல்லாம், இந்த ஒற்றைப் படத்தின் பெர்ஃபாமன்ஸ் மூலம் ஓவர்டேக் செய்கிறார் கீர்த்தி சுரேஷ். 14 வயது முதல் 43 வயதில் மரணப் படுக்கையில் தள்ளப்படும் வரை, ஒவ்வொரு ஃபிரேமிலும் கீர்த்தி நடிப்பும், உடல்மொழியும், அபாரம். அதிலும் ஜெமினி கணேசனின் பிரிவுக்குப் பின்னான காட்சிகளில் அத்தனை தத்ரூபமான நடிப்பு. உடல் எடை அதிகமாகத் தோன்றும் காட்சிகளில், அப்படியே சாவித்திரியை பிரதிபலிக்கிறார் கீர்த்தி. ஹேட்ஸ் ஆஃப்!


ஜெமினி கணேசனின் கதாபாத்திரத்தில் ஒரு நடிகனாக ஜெமினியை விடவும் சிறப்பாகவே நடித்திருக்கிறார் துல்கர் சல்மான். ``என்னோட எல்லா கிரெடிட்டையும் நீயே எடுத்துக்கற... தோல்விக்கான கிரெடிட்டையாவது எனக்குக் கொடு " என போதையில் இயலாமையின் உச்சத்தில் உதாசீனப்படுத்தப்பட்ட ஒரு மனிதராக அசத்துகிறார் துல்கர் சல்மான். ஒவ்வொரு காட்சியிலும், தான் ஒதுக்கப்படுவதை, `மக்களுக்கு ருசிக்காத சாம்பார் கணேசனாக 'தான் இருப்பதாக மீடியாக்கள் எழுதுவதை எரிச்சலுடன் கடந்து செல்கிறார். ஆனால், அது ஜெமினியை நினைவுக்குக் கொண்டு வருகிறதா என்றால், அது சற்று சந்தேகம்தான். முழு படத்திலும் ஜெமினி பாத்திரத்தின் மேக்கப்பும் அதீத யதார்த்தமான நடிப்பும் ஏனோ உறுத்துகிறது.


சாவித்திரிக்கும் ஜெமினிக்குமான வாழ்க்கையை `உனக்கு வெட்கம் இல்ல... எனக்கு புத்தி இல்லை ' என ஒற்றை வரியில் கடத்துகிறார் வசனகர்த்தா மதன் கார்க்கி. வசன வரிகளில் ஈர்க்கும் மதன் கார்க்கி, ஏனோ பாடல் வரிகளில் பெரிதாக ஈர்க்கவில்லை.

சாவித்திரியாக கீர்த்தி வரும் காட்சிகள் ஒரு கலர்; படத்துக்குள் வரும் படமாக்கப்படும் காட்சிகள் ஒரு கலர்; சமந்தாவின் காட்சிகள் வேறொரு கலர் என மூன்று டோன்களில் பயணிக்கும் கதையில், டானி சா லோவின் ஒளிப்பதிவு கச்சிதம். அதே போல், ஜெமினி சாவித்திரி கணேசனின் காதல் காட்சிகள், படமாக்கப்பட்ட விதமும் அழகு. மெட்ராஸ் சென்ட்ரலின் முகப்பு, MCP நம்பருடன் சாலையில் நகரும் கார்கள், விஜய வாஹிணி ஸ்டுடியோஸ், சந்திரலேகா போஸ்டர், டிராம், பழைய கால கேமரா, மைக் என ஆர்ட் டிரைக்ஷனின் உழைப்பு அபாரம். அதிலும், அந்த மாயாபஜார் காட்சியின் மறுஉருவாக்கம் டாப் கிளாஸ். பின்னால் இருக்கும் நடிகைகளின் இடைவெளி வரை பார்த்துப் பார்த்து அப்படியே மறுஉருவாக்கம் செய்திருக்கிறார்கள். ஜெமினியுடனான சண்டைக்குப் பின்னர், கதவை மூடுகிறார் சாவித்திரி. அது அப்படியே நாகேஷ்வர ராவுடன் நடிக்கும் காட்சியில் தொடர்கிறது. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படத்தின் க்ளைமாக்ஸ் எனப் பல காட்சிகள் அதி அற்புதம்.

சாவித்திரி எப்பேர்ப்பட்ட நடிகை என்பதைக் காட்ட, ஒரு காட்சி விவரிக்கப்படுகிறது. 'செட்'டில் அசிஸ்டென்ட் டீம் சொதப்ப , அந்தக் காட்சியை சாவித்திரி ஒரே 'டேக்'கில் ஓக்கே செய்ய வேண்டும். அது தான் படத்தில், கீர்த்தி சுரேஷின் அறிமுகக் காட்சி. அவ்வளவு சிறப்புமிக்க காட்சியை , ஏனோ அசால்ட்டாக எடுத்து சொதப்பிவிட்டார் இயக்குநர் நாக் அஷ்வின் என்றே தோன்றுகிறது.

சாவித்திரியின் வெற்றிகளையும், கருணையுள்ளத்தையும் அதீதமாக காட்சிப்படுத்தியிருக்கும் அதே வேளையில், தோல்விகளுக்கும், மதுப் பழக்கத்திற்கும் முழுவதுமாக பிறரையே குற்றம் சாட்டி புனிதத் தன்மைக் கொடுத்து, இது உண்மையிலேயே பயோபிக் சினிமாவா இல்லை, ஒரு தலைபட்சமான போற்றதலுக்குரிய சினிமாவா ? என்னும் கேள்வியை எழுப்புகிறது. அதே போல், டப்பிங் என்றாலும் கூட, படத்தில் வரும் தமிழ் காட்சிகளில் கூட , லிப் சிங் இல்லாமல் இருப்பது பெரிய உறுத்தல்.

இப்படி சிற்சில குறைகள் இருந்தாலும், கீர்த்தி சுரேஷின் நடிப்புக்காகவும், பார்வையாளனை வியக்க வைக்கும் சாவித்திரி பற்றிய நெகிழ்ச்சி தொகுப்புகளுக்காகவும், இந்த ' நடிகையர் திலகத்தை ' கண்டு மகிழலாம். 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் செம்ம ஹிட் அடித்தது, அதை தொடர்ந்து இரண்டாவது சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்கியுள்ளார். முதலில் கமல...

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் செம்ம ஹிட் அடித்தது, அதை தொடர்ந்து இரண்டாவது சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்கியுள்ளார்.

முதலில் கமல் இந்த போட்டியை தொகுத்து வழங்கவில்லை என்று கூறினார், ஆனால், தற்போது என்ன நினைத்தார் என்று தெரியவில்லை, அவரே முன்வந்துள்ளார்.

மேலும், இந்த பிக்பாஸ் களத்தை தான் கமல் முதன் முறையாக தன் அரசியல் மேடையாக மாற்றினார், சமூகத்தில் நடக்கும் பல குறைகளை பிக்பாஸ் மேடையில் பேசினார்.

தற்போது கட்சியே தொடங்கிவிட்டார், அதனால், அவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதோ எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ்-2 டீசர் வெளிவந்துள்ளது, இதோ..

ஒரு நேரத்தில் வெள்ளித்திரை நடிகர்கள் சின்னத்திரை நிகழ்ச்சி என்றாலே தவிர்த்து விடுவார்கள். எதோ மார்க்கெட் சரிந்த நடிகர்கள் தான் சின்னத்திரைக...

ஒரு நேரத்தில் வெள்ளித்திரை நடிகர்கள் சின்னத்திரை நிகழ்ச்சி என்றாலே தவிர்த்து விடுவார்கள். எதோ மார்க்கெட் சரிந்த நடிகர்கள் தான் சின்னத்திரைக்குள் வருவார்கள் என்று எண்ணி இருந்தனர். ஆனால் அமீர் கான், சல்மான்கான் போன்ற நடிகர்கள் அந்த பிம்பத்தை உடைத்தனர், கடந்த ஆண்டு கூட கமல் பிக் பாஸ் மூலம் மேலும் பல ரசிகர்களை சம்பாதித்தார்.

அதுமட்டுமில்லாமல் மீண்டும் கமல் சீசன் 2 வை தொகுத்து வழங்கவுள்ளார், இந்நிலையில் மலையாளத்தில் ஆசியாநெட் சேனல் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை மோகன்லால் ஏற்றுள்ளார். இதற்கான அதிரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் விதமாக இந்த நிகழ்ச்சிக்கான துவக்கவிழா நேற்று நடைபெற்றது.

மோகன்லால் அவ்வப்போது சின்னத்திரையில் சில சமூக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தாலும், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான் அவர் நடத்த இருக்கும் மிகப்பெரிய நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. இதை அறிந்த மோகன்லால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்