Home Top Ad

விஜய் டிவி யின் செல்லப்பிள்ளை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ தற்போது மிகவும் பிரபலமாகிவருகிறது. அந்தளவு தனது திறமையால் நிகழ...

விஜய் டிவி யின் செல்லப்பிள்ளை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ தற்போது மிகவும் பிரபலமாகிவருகிறது.

அந்தளவு தனது திறமையால் நிகழ்ச்சியையே கலகலப்பூட்டுபவர். திருமணம் செய்து பின்னர் கசந்து போனதால் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டு மீண்டும் சின்னத்திரையில் கலக்கத்தொடங்கி விட்டார் என்று தான் சொல்லவேண்டும்.

தனது உடலழகை மேலும் மெருகேற்றி, புதுப்பொலிவுடன் விஜய் டிவியில் ஷோ ஹோஸ்ட் பண்ணி வருகிறார்.

சமீபத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் திவ்யதர்ஷினியை விஜய் டிவி தொகுப்பாளர் ரியோ தூக்கி இடுப்பில் வைத்து பாடலுக்கு ஆடும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதேவேளை, கோபிநாத் மற்றும் மா.கா.பா.ஆனந்தை பாட்டு பாட சொல்லி, பாட வைத்து அதை வீடியோவாக எடுத்து டிடி, டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். குறித்த காட்சி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

பள்ளி, கல்லூரிகளுக்கு இது கோடை விடுமுறை. அதனாலேயே பலரும் குடும்பம் குடும்பமாகப் பல சுற்றுலாத் தலங்களுக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கும் போய் ...

பள்ளி, கல்லூரிகளுக்கு இது கோடை விடுமுறை. அதனாலேயே பலரும் குடும்பம் குடும்பமாகப் பல சுற்றுலாத் தலங்களுக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கும் போய் வருகிறார்கள். அப்படிப் பலர் விரும்பிப் போகுமிடங்களில் திருப்பதியும் ஒன்று. ஆனாலும், அவசரப்பட்டுப் போய்விடுவார்களேயொழிய சுவாமி தரிசனம் செய்ய 18 மணி நேரம், 24 மணி நேரம் காத்திருக்க வேண்டும். அதற்கான பிரத்யேகக் கூண்டுகளில் அடைப்பட்டுக் கிடக்க வேண்டும். `ஏன்டா சுவாமியைக் கும்பிட வந்தோம்' எனப் பலரும் நம் காதுபட பேசக் கேட்டிருப்போம்.

ஆனால், அந்தச் சிரமம் இனி இல்லை. 'ஆதார் அட்டை', 'வாக்காளர் அடையாள அட்டை' இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு சென்றால் போதும். நீங்கள் சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நேரத்தைக் குறித்துத் தந்துவிடுவார்கள். குறிப்பிட்ட நேரத்தில் 'நாராயணகிரி கார்டன் நுழைவு வாயிலு'க்குச் சென்றால் போதும்... அதிகபட்சம் மூன்று மணி நேரத்தில் பெருமாளை தரிசனம் செய்துவிட்டுத் திரும்பிவிடலாம்.

இந்த இலவச சர்வ தரிசன டோக்கன் முறை கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. திருப்பதி ரயில் நிலையம் அருகிலுள்ள விஷ்ணு நிவாசம், கோவிந்தராஜ சுவாமிசத்திரம், ஸ்ரீனிவாசம் காம்ப்ளக்ஸ், ஆர்.டி.சி பஸ் ஸ்டாண்டு, அலிபிரி ஆகிய இடங்களில் இதற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றன.

நமக்கான  தரிசன நேரம் வரும்வரை, கீழ்த் திருப்பதியில் ஸ்ரீனிவாச மங்காபுரம், அலமேலு மங்காபுரம், கோவிந்தராஜ பெருமாள் கோயில் ஆகிய பகுதிகளுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வரலாம். மேல் திருப்பதியில் பாபநாசம், விஷ்ணுபாதம், ஜபாலி, ஆகாஷ் கங்கா ஆகிய பகுதிகளுக்குச் சென்று திருமலையின் முக்கிய இடங்களைப் பார்த்து வரலாம். அடையாள அட்டையைக் கொண்டு வராதவர்கள் வழக்கம்போல் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். இந்த வழிமுறையைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது.

நாகினி சீரியல் இன்றும் மற்ற தொடர்களுடன் ஒப்பிடும் போது உச்சத்தில் தான் இருக்கிறது. ஹிந்தியிலிருந்து டப்பிங் செய்யப்பட்டு தமிழில் பெரும் வரவ...

நாகினி சீரியல் இன்றும் மற்ற தொடர்களுடன் ஒப்பிடும் போது உச்சத்தில் தான் இருக்கிறது. ஹிந்தியிலிருந்து டப்பிங் செய்யப்பட்டு தமிழில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதில் ஹிந்தியில் 3வது சீசனை நெருங்கிவிட்டது. நாகினி சீரியலில் முக்கிய ரோலில் நடித்தவர் நடிகை அடா கான். சமூகவலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவரின் சமூகவலைதள பக்கத்தில் தற்கொலை மனப்பான்மையில் இருக்கும் படியான பதிவுகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இது பலரையும் அதிர்ச்சியாக்கியது.

அண்மையில் அவர் ஒரு விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது மனம் திறந்து பேசினார். அப்போது அவர் தன் நண்பன் Ankit Gera தன்னை மூன்று முறை ஏமாற்றிவிட்டதாக கூறி அழுதார்.

மேலும் அவரின் பதிவுக்கு காரணம் அவர் தான் என சொல்லப்படுகிறது.

பாகுபலி-2 இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸில் ஒரு மைல் கல். அப்படியிருக்க எப்படி தோல்வி என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், உண்மை இது தான், அதே ...

பாகுபலி-2 இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸில் ஒரு மைல் கல். அப்படியிருக்க எப்படி தோல்வி என்று நீங்கள் கேட்கலாம்.

ஆனால், உண்மை இது தான், அதே நேரத்தில் தோல்வி இந்தியாவில் இல்லை, சீனாவில் தான்.

பாகுபலி முதல் பாகம் சீனாவில் ரூ 9 கோடி வசூல் செய்தது, ஆனாலும் இரண்டாம் பாகத்தை அங்கு ரிலிஸ் செய்தனர்.

இப்படம் கண்டிப்பாக ரூ 500 கோடி வரை அங்கு வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்க, பாகுபலி-2 தற்போது வரை ரூ 70 கோடி வரை தான் சீனாவில் வசூல் செய்துள்ளது.

இதனால், படம் சீனாவில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஆர்.ஜே. பாலாஜியும், ஜூலியும் அரசியலுக்கு வருவதாக அடுத்தடுத்து அறிவிப்பு வெளியிட்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது. நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தான...

ஆர்.ஜே. பாலாஜியும், ஜூலியும் அரசியலுக்கு வருவதாக அடுத்தடுத்து அறிவிப்பு வெளியிட்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தான் அரசியலுக்கு வருவதாக அறிவிப்பு வெளியிட்டார். அதோடு நிற்கவில்லை. கட்சிக் கொடியை தயார் செய்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். அந்த கொடியை பார்த்து கலாய்க்காதவர்களே இல்லை.

ஆர்.ஜே. பாலாஜி அரசியலுக்கு வருவதை பார்த்து ஒரு கூட்டம் அவரை கலாய்த்தாலும் சிலர் அவரை ஆதரித்துள்ளனர். இந்நிலையில் நான் கட்சி துவங்குகிறேன் என்று கூறி ஒரு பெரிய குண்டை தூக்கிப் போட்டார் ஜூலி.

இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை. ஆ, ஊன்னா கட்சி துவங்குகிறேன் என்று கிளம்பிவிடுகிறார்கள் என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

ஜூலி கட்சி துவங்குவதாக வெளியான வீடியோவில் அவர் இருந்த கெட்டப், வந்து இறங்கிய காரை பார்த்துவிட்டு மக்களுக்கு லைட்டா டவுட்டு வந்தது. அவர் கட்சி துவங்கவில்லையாம், அரசியல் சார்ந்த படத்தில் நடிக்கிறாராம்.

ஹம்பிள் பொலிடீஷியன் நொக்ராஜ் என்கிற கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கப் போகிறாராம் ஆர்.ஜே. பாலாஜி. அரசியல் சார்ந்த இந்த படத்திற்கு தான் இப்படி பீதியை கிளப்பி அவர் விளம்பரம் தேடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்திற்கு எப்படி விளம்பரம் தேடலாம் என்று ரூம் போட்டு யோசிப்பார்கள் போல. நல்லா தேடுறாங்கய்யா விளம்பரத்தை. இதற்கிடையே ஜூலி கமல் ஹாஸன் கட்சியில் சேர முயற்சி செய்வதாக வேறு கூறப்படுகிறது.


நடிகர் விஷால் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பிசியாக இருக்கிறார். அவரின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான இரும்புத்திரை படத்திற்கு மக்க...

நடிகர் விஷால் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பிசியாக இருக்கிறார். அவரின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான இரும்புத்திரை படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு.

அவர் அரசியலில் இறங்கி போட்டியிட சில தடைகளையும் சந்தித்தனர். இந்நிலையில் தற்போது அவரின் மீது அடுத்தடுத்து எதிர்ப்புகள் சூழத்தொடங்கியுள்ளது.

இதில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தை விட்டு விஷால் தானாக செல்ல வேண்டும். இல்லையெனில் நாங்கள் விரட்டுவோம் என நடிகர் ரித்திஷ் கூறியுள்ளார்.

மேலும் அண்மையில் டி.ஆர், இயக்குனர் பாரதிராஜா, ராதா ரவி ஆகியோருடன் சேர்ந்து பேட்டியளித்துள்ளார். அதில் அவர் விஷால் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 3 படங்களை தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன் தற்போது தயாரிக்கும...

தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 3 படங்களை தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன் தற்போது தயாரிக்கும் படத்திற்கு “ பாண்டி முனி “ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் முனியாக பிரபல ஹிந்தி நடிகர் ஜாக்கிஷெராப் முனி என்கிற அகோரி வேடத்தில் நடிக்க, புதுமுக நடிகையான மேகாலி பாண்டி என்ற வேடத்திலும் நடிக்கிறார். மற்றும் இன்னொரு நாயகியாக நிக்கிஷாபட்டேல், பெராரே ,சிவசங்கர், ஷாயாஜி ஷிண்டே, அம்பிகா, வாசுவிக்ரம் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – கஸ்தூரிராஜா. இது இவர் இயக்கும் 23 வது படம் படம் பற்றி இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறியதாவது..

இது நான் இயக்கும் வித்தியாசமான படம். இதுவரை கிராம வாழ்வியலையும் காதலையும் குடும்ப உறவுகளையும் மட்டும் பதிவு செய்த நான் இதில் ஹாரர் விஷயத்தை கையிலெடுக்கிறேன். சாமிக்கும் பேய்க்கும் இடையே நடக்கும் போர் தான் பாண்டி முனி அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு ஜமீன் பங்களாவுக்குள் நடக்கும் ஹாரர் படம் இது. சுமார் 70 வருடங்களுக்கு முன்பு நடப்பது மாதிரியான பீரியட் படம் இது.

சாமி பாதி, பேய் பாதி என்று கதையின் போக்கு இருக்கும். இந்த கதையை கேட்டவுடன் ஜாக்கி ஷெராப் ஆர்வத்துடன் உடனே ஓகே சொன்னது இந்த கதைக்கு கிடைத்த முதல் வெற்றி. படத்தின் படப்பிடிப்பு மலேசியா, தாய்லாந்து, குரங்கணி, ஜவ்வாதுமலை போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.