Home Top Ad

தமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே தொட்டதெல்லாம் வெற்றியாகும். அப்படி தொடர்ந்து வெற்றியை மட்டுமே ருசித்து வரும் சிவகார்த்திகேயன், ஹாட்ர...

தமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே தொட்டதெல்லாம் வெற்றியாகும். அப்படி தொடர்ந்து வெற்றியை மட்டுமே ருசித்து வரும் சிவகார்த்திகேயன், ஹாட்ரிக் கூட்டணியாக பொன்ராமுடன் சீமராஜாவை களத்தில் இறக்கியுள்ளார், இந்த படமும் சிவகார்த்திகேயனின் வெற்றி மகுடத்தில் இணைந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

ராஜா வம்சத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் வழக்கம் போல் வேலை இல்லாமல் சுற்றினாலும் ஊரே மதிக்கின்றது. அவரும் பல நிகழ்வுகளுக்கு சிறப்பு விருந்தினராக செல்கின்றார், அப்போது சமந்தாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகின்றார்.

அதை தொடர்ந்து சமந்தா புலியம்பட்டியை சார்ந்தவர், சிவகார்த்திகேயன் சிங்கம்பட்டியை சார்ந்தவர் இந்த இரண்டு ஊருக்கும் ஒரு மார்க்கெட் தான் பஞ்சாயத்து. அது மட்டுமின்றி சில விவசாய நிலங்களை லால் மிரட்டி பறித்துள்ளார்.

முதலில் மார்கெட்டை அடைய லால்,சிம்ரனும் மற்றும் சிவகார்த்திகேயனும் மோத யாருக்கு மார்க்கெட் என்பதற்காக ஒரு மல்யுத்த போட்டி நடக்கின்றது.

அதில் சிவகார்த்திகேயன் வெற்றிபெற பிறகு தான் தெரிய வருகின்றது சமந்தா லாலின் முதல் மனைவி மகள் என்பது. பிறகு என்ன இவர்கள் காதல் இணைந்ததா? சீமராஜா, லாலின் அதிகாரத்தை அடக்கினாரா? மக்களின் நிலத்தை மீட்டாரா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

சீமராஜாவாக சிவகார்த்திகேயன் தன்னால் எவ்வளவு உழைப்பை கொடுக்க முடியுமோ, அதாவது காமெடி, ஆடல், பாடல் தாண்டி ராஜா வேஷத்திலும் மிரட்டியுள்ளார், ஒரு முழு கமர்ஷியல் ஹீரோவாகவே மாறிவிட்டார், மாஸ் இண்ட்ரோ, பன்ச் வசனம் என ரஜினி, விஜய்க்கு அடுத்த இடத்தை இப்போது பிடிக்க ரெடியாகிவிட்டார், இதில் அரசியலுக்கு போய்டலாம் வா என்று சூரி சிவகார்த்திகேயனை கூப்பிடுவது போல கூட வசனம் உள்ளது, சரி ஏதோ ப்ளானில் இருக்கிறார் SK.

படத்தின் மிகப்பெரும் பலம் எல்லோரும் எதிர்ப்பார்த்த சிவகார்த்திகேயன், சூரி காம்போ தான், ஒரு இடத்தில் கூட நம்மை ஏமாற்றவில்லை, காமெடியில் அசத்துகின்றனர், அதிலும் சிறுத்தையிடம் மாட்டிக்கொண்டு சூரி அடிக்கும் கலாட்டா, இப்போது எல்லாம் படம் பார்க்க தானே லாப்டாப் வச்சுருக்காங்க என கொடுக்கும் கவுண்டர் என எப்போதும் போல் இந்த கூட்டணி பாஸ்மார்க்.

இதை தவிர படத்தில் எந்த ஒரு கதாபாத்திரமும் மனதில் நிற்கவில்லை, சிம்ரனுக்கும் அவருடைய டப்பிங் குரலுக்கும் கொஞ்சம் கூட மேட்ச் ஆகவில்லை, சமந்தா படத்தில் கொடுக்கும் ரியாக்ஸனை விரல் விட்டு எண்ணிவிடலாம், சிறுத்தை வந்தால் கூட நிதானமாக ‘சிறுத்தை வந்துடுச்சுனு’ ரியாக்ஸன் காட்டாமல் நிற்கின்றார்.

லால், நெப்போலியன் என பலரும் ஏமாற்றமே, காமெடியா, கதையா என்ற இடத்தில் பொன்ராம் மிகவும் தடுமாறியுள்ளார், காமெடியை வைத்து கதையை நகர்த்திய முதல் பாதி ஓரளவிற்கு ஓகே என்றாலும், இரண்டாம் பாதி தொடங்கியதுமே ராஜா கதைக்கு சென்று, சிவகார்த்திகேயன் களத்தில் இறங்கியிருந்தால் சூடுப்பிடித்திருக்கும்.

ஆனால், படம் எப்போது முடியும் என்ற மனநிலையில் ராஜா கதை வருகின்றது, சிஜி வேலைகள் உண்மையாகவே சூப்பர், இந்த பட்ஜெட்டில் மிரட்டியுள்ளனர், அப்படியிருந்தும் அந்த காட்சிகள் வந்த இடம் தான் கொஞ்சம் பொறுமையை சோதித்தது.

டி.இமானின் இசையில் பாடல்கள் ஓகே, ஆனால் பின்னணி ஏன் சார் இவ்வளவு ரிப்பீட் டியூன்ஸ், ஒளிப்பதிவு கலக்கல், அதிலும் ராஜா போஷன் சூப்பர்.

க்ளாப்ஸ்

படத்தின் முதல் பாதி.

சிவகார்த்திகேயன், சூரி காம்போ சிரிப்பிற்கு கேரண்டி.

பல்ப்ஸ்

வலுவே இல்லாத திரைக்கதை, அதிலும் இரண்டாம் பாதி பொறுமையை சோதிக்கின்றது.

நெகட்டிவ் கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் கூட அழுத்தமாக இருந்திருக்கலாம், கடைசி வரை எந்த ஒரு இடத்திலும் நமக்கு அவர்களை வில்லனாக பார்க்க முடியவில்லை.

மொத்தத்தில் ராஜா பேமிலி ஆடியன்ஸை டார்கெட் செய்தி திருப்திப்படுத்துகின்றார்.

ரஜினிகாந்த் நடிப்பில் மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் 2.0. இப்படத்தின் பட்ஜெட் சுமார் ரூ 400 கோடி இருக்கும் என கூறப்படுகின்றது....

ரஜினிகாந்த் நடிப்பில் மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் 2.0. இப்படத்தின் பட்ஜெட் சுமார் ரூ 400 கோடி இருக்கும் என கூறப்படுகின்றது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் தேதி பலரும் எதிர்ப்பார்க்க, அதை ஷங்கரே தெரிவித்துள்ளார், 2.0 டீசர் செப்டம்பர் 13ம் தேதி வரவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார், இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதர்வா, நயன்தாரா ஆகியோர் நடித்துள்ள இமைக்கா நொடிகள் படம் சென்ற வாரம் ரிலீஸ் ஆனது. முதல் நாளில் சில சிக்கல்களால் பல காட்சிகள் ரத்தாகி இரவு க...

அதர்வா, நயன்தாரா ஆகியோர் நடித்துள்ள இமைக்கா நொடிகள் படம் சென்ற வாரம் ரிலீஸ் ஆனது. முதல் நாளில் சில சிக்கல்களால் பல காட்சிகள் ரத்தாகி இரவு காட்சிகள் மட்டும் ஓடியது.

நல்ல விமர்சனம் பெற்றதால் இமைக்கா நொடிகள் நல்ல வசூல் ஈட்டிவருகிறது. தற்போது படம் 360 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருவதாக இன்று நடந்த நன்றி தெரிவிக்கும் விழாவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் 7 நாட்களில் 16 கோடி ருபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் மேடையிலேயே அறிவித்துள்ளார்.

செக்கச்சிவந்த வானம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கவிஞா் வைரமுத்து, முன்னாள் முதல்வா் ஜெயலலிதா விரும்பி கேட்ட பாடல் குறித்த...

செக்கச்சிவந்த வானம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கவிஞா் வைரமுத்து, முன்னாள் முதல்வா் ஜெயலலிதா விரும்பி கேட்ட பாடல் குறித்த தகவலை ரசிகா்களுடன் பகிா்ந்து கொண்டா்ா.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் செக்கச்சிவந்த வானம். இப்படத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனா்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா புதன் கிழமை சென்னையில் நடைபெற்றது. விழாவில் இசைப்புயல் ஏ.ஆா்.ரகுமான் பாடல்களை பாடி ரசிகா்களை உற்சாகப்படுத்தினாா். இதனைத் தொடா்ந்து அரவிந்த் சாமி, அருண் விஜய், அதிதி ராவ், ஐஸ்வா்யா ராஜேஷ் உள்ளிட்டோா் படம் குறித்தும், படக் குழு குறித்தும் பேசினா்.

இதனைத் தொடா்ந்து கவிஞா் வைரமுத்து பேசுகையில், மணிரத்னம் இயக்கத்தில் எனது பாடல் வரிகள் ஏ.ஆா்.ரகுமான் இசையமைத்த பாடல்களில் எனக்கு பிடித்தது பம்பாய் படத்தில் இடம் பெற்ற “கண்ணாலனே” என்ற பாடல் தான். இந்த பாடல் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அவா்களால் ஏ.ஆா்.ரகுமான் ஸ்டுடியோவிற்கு வந்து ரசித்து கேட்ட பாடல் என்று கூறினாா்.

டிமாண்டி காலனி என்ற வித்தியாசமான பேய் படத்தை கொடுத்து அசத்தியவர் அஜய் ஞானமுத்து. இவரின் இரண்டாவது படம் என்னவாக இருக்கும் என்று நீண்ட நாள் எ...

டிமாண்டி காலனி என்ற வித்தியாசமான பேய் படத்தை கொடுத்து அசத்தியவர் அஜய் ஞானமுத்து. இவரின் இரண்டாவது படம் என்னவாக இருக்கும் என்று நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வர, இரண்டாவது படத்திலேயே நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யூப் என பல நட்சத்திரங்களை வைத்து பிரமாண்ட படைப்பை கொடுத்துள்ளார், இதிலும் அஜய் தேர்ச்சி பெற்றாரா? பார்ப்போம்.

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே கொலை நடக்கின்றது, கொலையும் செய்துவிட்டு பணத்தையும் கேட்டு மிரட்டுகின்றார் அனுராக் காஷ்யப். நயன்தாரா CBI-யில் வேலைப்பார்க்கின்றார்.

இந்த விஷயம் தெரிந்து பணத்தை கொடுக்காதீர்கள் என்று நயன்தாரா சொல்லியும் அவர்கள் கொடுக்க, வழக்கம் போல் பிணம் தான் அவர்கள் வீட்டிற்கு செல்கின்றது.

இதை தொடர்ந்து இந்த கேஸின் தீவிரத்தை அறிந்து நயன்தாரா களத்தில் இறங்க, இதற்குள் அதர்வா எப்படி சிக்குகின்றார், அனுராக் யார்? எதற்காக இப்படியெல்லாம் செய்கின்றார்? என்பதன் சுவாரஸ்ய திரைக்கதையே இந்த இமைக்கா நொடிகள்.

படத்தை பற்றிய அலசல்

நயன்தாரா வாரம் வாரம் இவரை திரையில் பார்த்துவிடலாம் போல, அந்த அளவிற்கு பல படங்கள் வருகின்றது, அதிலும் தரமான கதையாக தேர்ந்தெடுத்து நடிக்கின்றார், இதிலும் அப்படியே CBI ஆபிஸராக மிரட்டியுள்ளார், அதே நேரத்தில் விஜய் சேதுபதியுடனான காதல் காட்சியிலும் மெய் மறக்க வைக்கின்றார், இனி தைரியமாக அடுத்தப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்றே டைட்டில் கார்டே போடலாம்.

அனுராக் காஷ்யப் தமிழில் முதன் முறையாக காலடி எடுத்து வைத்துள்ளார், பாலிவுட்டில் மிகச்சிறந்த இயக்குனராக இருக்கும் இவர் நடிப்பிலும் தனி முத்திரை பதித்துள்ளார், அதிலும் வித்தியாசமாக இரத்தம் உறையாமல் அவர் கொலை செய்வது நமக்கே பகீர் என்று இருக்கின்றது.

அதர்வா-ராஷி கண்ணா திரையில் நன்றாக இருந்தாலும், படத்திற்கு இவர்கள் காதல் கதை பெரிதும் ஒன்றவில்லை, படத்திற்கு இவ்வளவு நேரம் காதல் காட்சிகள் தேவையா? என்பது போல் தான் தோன்றுகின்றது.

படத்தின் இரண்டாம் பாதியில் வரும் டுவிஸ்ட் காட்சிகள் நம்மை சீட்டின் நுனிக்கு வர வைக்கின்றது, நாம் யூகிக்கும் எந்த டுவிஸ்டும் படத்தில் இல்லை, நம்மை அசர வைக்கும்படி தான் டுவிஸ்ட் காட்சிகள் உள்ளது.

பாடல்களில் பெரிதும் ஸ்கோர் செய்யாத ஹிப்ஹாப் ஆதி பின்னணியில் மிரட்டி எடுத்துள்ளார், ஒரு விறுவிறுப்பான திரைக்கதைக்கு ஏற்ற பின்னணியை கொடுத்து அசத்தியுள்ளார், அதே நேரம் ராஜசேகரின் ஒளிப்பதிவும் பக்க பலமாக உள்ளது.

க்ளாப்ஸ்

படத்தின் திரைக்கதை, இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து வரும் டுவிஸ்ட் காட்சிகள்.

அனுராஜ், நயன்தாராவிற்கான Cat and mouse போன்ற காட்சிகள் விறுவிறுப்பை ஏற்படுத்துகின்றது.

படத்தின் பின்னணி இசை, ஒளிப்பதிவு மற்றும் டெக்னிக்கல் விஷயங்கள்.

பல்ப்ஸ்

படத்தின் அதர்வா-ராஷி கண்ணா காதல் காட்சிகள், 2.50 மணி நேரம் ஓடும் இப்படத்தில் இவர்கள் வரும் காட்சிகள் கொஞ்சம் பொறுமையை சோதிக்கின்றது. நேரத்தையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

மொத்தத்தில் உங்களை கண் இமைக்காமல் பார்க்க வைக்கும் இந்த இமைக்கா நொடிகள்.

இந்தியா முழுவதும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ‘வாட்ஸ் அப்’பிற்கு போட்டியாக பாபா ராம் தேவ் கடந்த மே மாதம் ‘கிம்போ ஆப்’பை அறிமுகப்படுத்த...

இந்தியா முழுவதும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ‘வாட்ஸ் அப்’பிற்கு போட்டியாக பாபா ராம் தேவ் கடந்த மே மாதம் ‘கிம்போ ஆப்’பை அறிமுகப்படுத்தினார். ஆனால் சில கோளாறுகள் காரணமாக அந்த அப் மறு நாளே திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கிம்போ ஆப் வருகிற 27ம் தேதி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

பதஞ்சலி நிறுவனத்தின் செய்தி தொடா்பாளா் திஜாரவாலா கிம்போ ஆப்பை யோகா குரு ராம்தேவ் வருகிற 27ம் தேதி மீண்டும் அறிமுகப்படுத்துவார் என்று தெரிவித்துள்ளார்.

கிம்போ என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு “என்ன நடக்கிறது, என்ன செய்தி” என்று பொருளாம்.

இந்த ஆப்பில் வீடியோ, ஆடியோ, ஸ்டிக்கா், டூடுள், ஜிஃப் பைல் என அனைத்து வகையான தொழில்நுட்பங்களையும் பிறருக்கு அனுப்ப முடியும்.

இதில் வீடியோ கால், குரூப் கால், வீடியோ குரூப் கால் போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளன.

நாம் இருக்கும் இடத்தின் முகவரியை இந்த ஆப் மூலம் நமது நண்பா்களுக்கு எளிதில் பகிர்ந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆப் மூலம் ஒரு தகவலை அனுப்புபவரும், பெறுபவரும் மட்டுமே அந்த தகவலை பார்க்க முடியும். மூன்றாவது நபரால் அந்த தகவலை பார்க்க முடியாது என்று தெரிவித்துள்ளனா்.

கிம்போ ஆப்பில் ஒரு தகவல் பறிமாறப்பட்ட பின்னா் அந்த தகவல் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னா் தானாகவே அழிந்து விடும் தன்மை கொண்டது.

கிம்போ ஆப்பில் வாட்ஸ் அப்பில் இருப்பது போன்று போட்டோ அனுப்புதல், தொலைபேசி எண், வீடியோ உள்ளிட்ட பதிவுகளை எளிதில் பரிமாறிக்கொள்ள முடியும்.

கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆப் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 24 மணி நேரத்திற்குள் திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வருகிற 27ம் தேதி கிம்போ ஆப் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

கரு: பழைய பெருமையில் வாழும் இறந்த கால தாதாவுக்கும், கஞ்சா கடத்தல்… என சிட்டியை கைக்குள் வைத்திருக்கும் நிகழ்கால தாதாவுக்கும், அண்ணன் விட்டத...

கரு: பழைய பெருமையில் வாழும் இறந்த கால தாதாவுக்கும், கஞ்சா கடத்தல்… என சிட்டியை கைக்குள் வைத்திருக்கும் நிகழ்கால தாதாவுக்கும், அண்ணன் விட்டதை பிடிக்க நினைக்கும் வருங்கால தாதாவான தம்பி, இவர்கள் மூவருக்கும் இடையிலான ஈகோ மோதலில் சிக்கித் தவிக்கும் நாயகர் மற்றும் நண்பர்களே ஓடு ராஜா ஓடு படக்கரு.

கதை: சென்னையில் சினிமா கதாசிரியராக வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார் நாயகன் குருசோமசுந்தரம். இவரது மனைவி லட்சுமி பிரியா மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். தங்கள் திருமண நாளில் வீட்டில் செட்-அப் பாக்ஸ் வாங்கி வைத்து புருஷனுடன் படம் பார்க்க ஆசைப்படுகிறார் லட்சுமிபிரியா. இதற்காக குருசோம சுந்தரத்திடம் பணம் கொடுத்து செட்-அப் பாக்ஸ் வாங்கி வரச் சொல்லுகிறார்.

அந்த பகுதியில் கஞ்சா விற்று வரும் தனது நண்பருடன் சேர்ந்து செட்-அப் பாக்ஸ் வாங்க செல்லுகிறார் குரு சோமசுந்தரம். அங்கு எதிர்பாராத விதமாக மனைவி கொடுத்த பணத்தை இழக்கிறார். மேலும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். இது ஒரு பக்கம் நடக்க, மற்றொரு பக்கம் அந்தப் பகுதியில் பெரிய தாதாவாக இருக்கும் சாருஹாசன், கவலைக்கிடமான நிலையில், இனிமேல் ரவுடி தொழில் செய்யக் கூடாது என்று அவரது மகன் நாசரிடம் சத்தியம் வாங்கி விட்டு இறந்து போகிறார். ஆனால், நாசரின் தம்பி ரவீந்திர விஜய்யோ நாசரை கொன்று விட்டு, தாதாவாக முயற்சி செய்கிறார். இச்சூழலில் நாசரால் ஏமாற்றப்பட்ட மற்றொரு நாயகர் ஆனந்தசாமி 5 வருடம் சிறை தண்டனை பெற்று வெளியில் வருகிறார். நாசரை கடத்தி அவரிடம் பணம் பறிக்க முயற்சி செய்கிறார்.

அதே பகுதியில் ஆதரவற்ற சிறுவர்கள், சிறு சிறு திருட்டு தொழில்கள் செய்து வருகிறார்கள். இவர்கள் எல்லோரும் ஒரு அசாதாரண சூழலில் சந்திக்கிறார்கள். இறுதியில் என்ன ஆனது? குருசோம சுந்தரம் செட்-அப் பாக்ஸ் வாங்கினாரா? நாசர் ஆனந்தசாமி, ரவீந்திர விஜயால் கொல்லப்பட்டாரா? இல்லையா...? இப்படத்தில், சிம்ரன் அவரது கணவர் திபக்பாஹா ஆகியோரின் ரோல் என்ன...? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடை சொல்கிறது... "ஓடு ராஜா ஓடு" படத்தின் மீதிக்கதையும், களமும்!

காட்சிப்படுத்தல்: விஜய் மூலன் டாக்கிஸ் வழங்கும் கேன்டல் லைட் புரொடக்சன்ஸின் தயாரிப்பில் "ஜோக்கர்" குருசோமசுந்தரம், ஆனந்தசாமி, ப்ரியா சந்திரமெளலி, ஆஷிகா செல்வம், நாசர், சிம்ரன்,தீபக் பாஹா, சோனா ஹைடன், ரவீந்திர விஜய், மெல்வின் எம்.ரஞ்சன், அபிஷேக் கே.எஸ் வெங்கடேஷ், ஹரிநாத், வினுஜான், அருண்மொழி சிவப்பிரகாசம், அமுதன், பேபி ஆர். ஹரணி, மாஸ்டர் ஏ.ராகுல் உள்ளிட்ட ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த தெரியாத, ரசிகர்கள் அறிந்த அறியாத ஒரு பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்க டோஷ் நந்தாவின் இசையில், நிஷாந்த் ரவீந்திரன் மற்றும் ஜத்தின் ஷங்கர் ராஜ் இருவரது இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் "ஒடு ராஜா ஓடு." படத்தில், "எவ்ளோ பெரிய வாயி...", " 500 ரூபாக்கு உன் வாயில தான் வைப்பேன்... துப்பாக்கிய...", "காலையில நான் டெய்லி எழுந்ததும் பயப்படுற விஷயம் ஒண்ணே ஒன்னு தான் வேற யார் கூடயும் என் பொண்டாட்டி ஒடிப்போயிடுவாளோங்கற பயம் தான், அது..." , "இம்ரான் நீ எங்க வந்த? இதுல ப்ரண்ட்லியா பண்ண என்ன இருக்கு?"ரொம்ப நாள் ஆச்சு இப்படி நடந்து இன்னொரு ரவுண்ட் போலாமா? "என் ஜாவ உடைச்சுட்டான்...." "ஹெல்ப் தானடா பண்ண சொன்னேன்... " , "நீங்க 2 பேரும் எனக்கு ஒண்னு தான் ... " என்பது உள்ளிட்ட டபுள், ட்ரிபிள் மீனிங் வசனங்களை நடிகைசோனா உள்ளிட்ட இப்படப் பாத்திரங்கள் ஆங்காங்கே பேசியிருக்கும் காட்சிகளை விரசமில்லாமல் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் இப்படத்திற்கு கூடுதல் பலம்.

கதாநாயகர்: படத்தின் முதல் நாயகனாக நடித்திருக்கும் குருசோம சுந்தரம் யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். கதாசிரியராக கிளைமாக்ஸ் கிடைக்காமல் தவிப்பது, நண்பருடன் சேர்ந்து செட்-அப் பாக்ஸ் பணத்தை இழந்து தவிப்பது. அதை மீட்க போராடுவது, மனைவிக்கு பயப்படுவது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மொத்தத்தில், சினிமா டைரக்ஷன் லட்சியத்தில், மனைவி சம்பாத்யத்தில்வீட்டோட புருஷனாக இருக்கும் மனோகராக "ஜோக்கர்" குருசோமசுந்தரம், அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

அவரை மாதிரியே அண்ணன் நாசர் கைவிட்ட, தாதாயிஸத்தை கையிலெடுக்கத் துடிக்கும் நாசரின் தம்பி செல்லமுத்து - ரவீந்திர விஜய்யும். ரவீந்திர விஜய் செய்த கொலைக்காக, தான் செய்யாத கொலைக்கு சிறை சென்று, காதலியை நண்பனிடம் பங்கு வைத்த ஆனந்தசாமியும்.... கூட அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

கதாநாயகியர் ப்ரியா சந்திரமெளலி, ஆஷிகா செல்வம், இருவரில் குருசோமசுந்தரத்திற்கு மனைவியாக வரும் பிரியா சந்திரமெளலி, புருஷனை அதிகம் கடிந்து கொள்ளும் பாசக்கார மனைவியாக அசத்தியிருக்கிறார் என்றால், ஆஷிகா செல்வம் காதலர் ஜெயிலுக்கு போனதால் அவரது நண்பருடன் சல்லாபிக்கும் நாயகியாக நன்றாகவே நடித்திருக்கிறார்.

பிற நட்சத்திரங்கள்: கஞ்சா கஜபதியாக வரும் மெல்வின் எம்ரஞ்சன், மெல்வினின் பாஸ் நிகழ்கால தாதா தீபக் பாஹா (நிஜத்தில் மாஜி நாயகி சிம்ரனின் வீட்டுக்காரர்...) இவர்கள் எல்லோருக்கும் முன்னாள் தாதா இறந்த கால தாதா காளிமுத்து - நாசர். குருவின் கஞ்சா பொட்டல நண்பர் பீட்டர், பீட்டருக்கு பொட்டலம் சப்ளை செய்யும் கஞ்சா ஹோல்சேல் கஜபதி - மெல்வின் எம் .ரஞ்சன் மற்றும் அபிஷேக் கே.எஸ் வெங்கடேஷ், ஹரிநாத், வினுஜான், அருண்மொழி சிவப்பிரகாசம், துப்பாக்கி சப்ளை செய்யும் மாற்றுத்திறனாளி அமுதன், குப்பத்து பிக்பாக்கெட் பொடிசுகள்...சிறுமி மலர் - பேபி ஆர். ஹரணி, சிறுவன் சத்யா - மாஸ்டர் ஏ. ராகுல்… அவர்களுக்கு உதவும் லயன் - கால பைரவியாக வரும் சிம்ரன், நாசரின் ஆசை மனைவி சோனா ஹைடன், உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.

தொழில் நுட்பகலைஞர்கள்: இப்பட இரட்டை இயக்குனர்களில் ஒருவரான நிஷாந்த் ரவீந்திரனின் திரைக்கதை மற்றும் படத்தொகுப்பாகட்டும், மற்றொரு இயக்குனரான ஜித்தின் ஷங்கர் ராஜ் மற்றும், சுனில் சி.கே.வின் ஒளிப்பதிவாகட்டும் இவை மூன்றிலும் பெரிய குறையேதுமில்லை. டோஷ் நந்தாவின் இசையில், "ம்பளக்கடி ஜும்பா... ஹேப்பி லைப்பு செம ஹேப்பி....","தமாசு தமாசு வேடிக்கை நீ பாரடா. "உள்ளிட்ட பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பெரும் பலம்.

பலம்: டார்க் காமெடி ஸ்டைலில் இப் படத்தை இயக்கி இருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்கள் ஜத்தின் மற்றும் நிஷாந்த். படம் ஆரம்பத்தில் வெவ்வேறு கதைகளுடன் அங்கும் இங்குமாக அலை பாயும் திரைக்கதையாகஅமைந்தாலும், பிற்பாதியில் சரியாக ஒன்று சேர்த்திருக்கிறார்கள். பல இடங்களில் டார்க் காமெடி செமயாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. ஒரு செட்-அப் பாக்சில் ஆரம்பித்து அதை வாங்குவதற்கு இடையே நடக்கும் பல சிக்கல்களை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்கள்....என்பது பெரும் பலம்.

பலவீனம்: பல இடங்களில் ‘ஓடு ராஜா ஓடு படத்தில் சில இடங்களில்தேவையில்லாத ஓட்டம் சற்றே இழுவையாக ஜாஸ்தியாக தெரிவது பெரும் பலவீனம்.

இயக்கம்: நிஷாந்த் ரவீந்திரன் மற்றும் ஜித்தின் ஷங்கர் ராஜ் இருவரதுஇயக்கத்தில், ஒரு டயலாக் ஒரு இடத்தில் முடியும் சொல்லில் அடுத்த காட்சி வேறொரு இடத்தில் ஆரம்பமாகும் புதுமை மற்றும் , "அடுப்புக்கு பயந்து நெருப்பில் விழுந்த கதை... " பழமொழிகள் ,ஜப்பான் காரன் டொயாட்டோ கார் மொக்க ஜோக் கு, "எங்க கிட்டேயும் இருக்குபெருசு பெருசா .. கன்னு" , என்பது உள்ளிட்ட காம நெடி டயலாக்குகள் எல்லாவற்றிலும் இப்படம் திரும்பி பார்க்க வைக்கிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேல், "ஒப்புக்கு சப்பான்ஸ் கொசுறு" , "அன்புள்ள அரிப்பு" , "ஏ 2 இசட் கல பொறுக்கி" , "நகுல் - கட்டத்துல சனி" , "மேரி ஆசை நாயகி" , "இம்ரான் துணை காதலன்" , "இறந்த கால தாதா" ,"நிகழ்கால தாதா", "வருங்கால தாதா, "கீழ்பாக்கம் அங்கம்மாள் போதை மாமி மேரி" , " பேன்ட் சட்டை கேங்கு" , "மொரட்டு பீஸ் பேன்ட் சர்ட் கேங்” , "கொலைகாரன் பேட்டையின் வேறிடத்தில்...."உள்ளிட்ட ஒவ்வொரு பாத்திர அறிமுகத்திற்காக திரையில் மிளிரும் சப்-டைட்டில்கள் இந்த இரட்டையர்களின் இயக்கத்தில் செம புதுசாக இருக்கிறது. வாவ்!

பைனல் "பன்ச்": ஆக மொத்தத்தில், ஒரு சில, லாஜிக் மீறல்கள், தேவையில்லாத ஓட்டங்கள் உள்ளிட்டவற்றை இன்னும் சற்றே குறைத்திருக்கலாம்... என்றாலும், நவீன காமெடி, சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் படமாகவந்திருக்கும் "ஒடு ராஜா ஓடு' - நிச்சயம், 'தியேட்டரில் சக்கை போடு போடுகிறதோ, இல்லையோ., ஓரளவிற்கு ஓடும்... என நம்பலாம்!"