Home Top Ad

ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதுதான் விவேக்கின் டார்க்கெட். அதில் 30 லட்சம் வரைக்கும் நட்டுவிட்டார் அவர்.  இதில் பாதி முளைத்திருக்கும். மீதியை ...

ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதுதான் விவேக்கின் டார்க்கெட். அதில் 30 லட்சம் வரைக்கும் நட்டுவிட்டார் அவர்.  இதில் பாதி முளைத்திருக்கும். மீதியை மாடோ, ஆடோ புல் மீல்ஸ் கட்டியிருக்கும். இருந்தாலும் ‘நட்டதுதான் கணக்கு. லஞ்ச் ஆனதெல்லாம் நமக்கெதுக்கு?’ என்று சாந்தியும் சமாதானமும் அடைந்திருப்பார் அவர். இது ஒருபுறம் இருக்கட்டும்… விவேக்கின் மரம் நடும் சந்தோஷத்தின் மகோனத தருணம் ஒன்று அண்மையில் நடந்திருக்கிறது.

பாப்பாபட்டி என்ற கிராமத்தில் ஒரு கோவில். அங்கு அரிய வகை கடம்ப மரம் ஸ்தல விருட்டமாக இருந்திருக்கிறது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக பட்டுப் போய் கிட்டதட்ட உயிரே போய்விட்டது அதற்கு. இதை கண்டு வாடிய அந்த ஊர் கிராம மக்கள் எவ்வளவோ முயன்றும் நோ சான்ஸ். மரம் தழைக்கவே இல்லை. யாரோ ஒருவர் விவேக்கிடம் சொல்லி பார்ப்போம். அவர் ஏதாவது முயற்சி எடுப்பார் என்று கூற, கிராமமே சேர்ந்து அவருக்கு கடிதம் எழுதியதாம்.

அதற்கப்புறம் ஆக்ஷனில் குதித்தார் விவேக். மதுரையிலிருக்கும் தனது ‘பாட்டனி’ பார்ட்னர்களை, பசுமை விஞ்ஞானிகளை பாப்பாபட்டிக்கு அனுப்பி வைத்தாராம். அதற்கப்புறம் நடந்தது அதிசயம். நெய், பருத்தி, வேப்பம் கொட்டை உள்ளிட்டவற்றுடன் சில மூலிகைகளையும் கலந்து மை போல அரைத்தவர்கள், அந்த மையை மரத்தை சுற்றி பூசியிருக்கிறார்கள். அதன் மேல் ஒரு சாக்கை கட்டி, எந்நேரமும் ஈரம் இருப்பதை போல சொட்டுநீர் பாசனத்தையும் அதன் மீது செலுத்தியிருக்கிறார்கள். இந்த வித்தையை செய்தால் எந்த மரமும் துளிர்க்கும் என்பது நம்மாழ்வார் தியரி.

சுமார் இரண்டு மாதங்களாக எந்த அறிகுறியும் இல்லை. மவுன சாமியாராகிவிட்டதே மரம்? என்று கவலையில் கண்ணீர் வடித்தார்கள் ஊர் மக்கள். ஆனால் 61 வது நாள் அத்தனை கவலையும் பறந்தது. மரத்திலிருந்து ஒரு இலை மட்டும் தலை நீட்டி, என்னா பெருசுகளா… சவுக்யமா? என்று கேட்க… ஆனந்த கூத்தாடிவிட்டது ஊர். கெட்டி மேளம், கரகம் என்று மரத்தை சுற்றி சுற்றி வந்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

சென்னையிலிருக்கும் விவேக்கும் தகவல் சொல்லப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் பாப்பாப்பட்டிக்கு விசிட் அடிக்கப் போகிறார் விவேக். எந்த ராசா வச்ச மரமோ? பட்டுப்போனதை மீட்டுவிட்டார் விவேக். அவருக்கும் அவரது வில்லேஜ் விஞ்ஞானிகளுக்கும் நன்றி சொல்ல வேண்டிய நேரமிது!

ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் தற்போது பேட்ட படம் தயாராகி வருகின்றது. இந்நிலையில் அடுத்த சூ...

ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் தற்போது பேட்ட படம் தயாராகி வருகின்றது.

இந்நிலையில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பஞ்சாயத்து பல வருடங்களாக நடந்து வர, இன்றும் சூப்பர் ஸ்டார் நான் தான் என படத்திற்கு படம் நிரூபித்து வருகின்றார்.

சில வருடங்களுக்கு முன் ரஜினிகாந்தே ஒரு நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில் அவர் பேசுகையில் ‘சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது ஒரு ஸ்டேஷன் மாஸ்டர் மாதிரி தான், அவர் ஓய்வு பெற்றால் அந்த இடத்திற்கு வேறு ஒருவர் வந்து தான் ஆகவேண்டும்.

நான் மட்டும் நிரந்தரம் இல்லை, இன்று நான், நாளை வேறு ஒருவர் அந்த இடத்திற்கு வந்து தான் ஆகவேண்டும், அந்த இடத்திலேயே ஒருவன் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு’ என கூறியுள்ளார்.

கதை: சென்னை, வேளாச்சேரி பாலத்தில் சட்டத்திற்கு புறம்பாக, சென்டர் மீடியன் கற்களை நகர்த்தி வைத்துவிட்டு "யு டர்ன்" எடுப்பவர்களால் ஏ...

கதை: சென்னை, வேளாச்சேரி பாலத்தில் சட்டத்திற்கு புறம்பாக, சென்டர் மீடியன் கற்களை நகர்த்தி வைத்துவிட்டு "யு டர்ன்" எடுப்பவர்களால் ஏகப்பட்டவிபத்துகள் ஏற்படுகிறது. விபத்துகளில் ஏகப்பட்டோர் உயிர் இழக்க அது பற்றிபிரபல ஆங்கில நாளிதழான "டைம்ஸ் ஆப் இந்தியா" பத்திரிகையில் புதிய நிருபராக பணியில் சேர்ந்திருக்கும்சமந்தா, ஒரு கட்டுரை எழுத ஆய்வில் இறங்குகிறார்.



இந்நிலையில் சென்டர் மீடியன் கற்களை நகர்த்தி விட்டு தினமும் "யுடர்ன்" போடும் பத்துக்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து மர்மமாக மரணமடைகின்றனர். அவர்களது மரணத்திற்கு எல்லாம் காரணம். சமந்தா தான் என சந்தேகிக்கும் "ஆடுகளம்" நரேன் தலைமையிலான போலீஸ் அவரையும், அவருக்கு உதவுபவர்களையும்அழைத்துப் போய் விசாரிக்கிறது. ஆனால், அந்த போலீஸ் டீமில் இருக்கும் ஆதி மட்டும் சமந்தா குற்றமற்றவர் என தீர்மானமாக நம்பி அவருக்கு உதவுகிறார்.



சமந்தா குற்றமற்றவரா? தொடர் கொலைகளுக்கு காரணம் யார்? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடை சொல்கிறது "யுடர்ன் ( UTURN )" படத்தின் மீதிக் கதையும், களமும்!



காட்சிப்படுத்தல்: சமந்தா அக்கினேனி, ஆதி பினி செட்டி, ராகுல் ரவீந்திரன், நரேன், "ஆடுகளம்" நரேன், பூமிகா சாவ்லா உள்ளிட்டோர் நடிக்க பவண்குமார் இயக்கத்தில் ஸ்ரீனிவாச சித்தூரி, ராம்பாபு பண்டாரு தயாரிப்பில் கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் & டிஸ்டிபியூட்டர்ஸ் கோ. தனஞ்செயன் வெளியீடு செய்ய க்ரைம், த்ரில்லர் & ஹாரர் படமாக வெளிவந்திருக்கும் "யுடர்ன் ( UTURN )" படத்தில் சஸ்பென்ஸ் காட்சிகளும், ஹாரர் காட்சிகளும்காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் சூப்பர்ப் மிரட்டல் இது தமிழ் சினிமா வுக்கு முற்றிலும் புதிய கோணம் என்பது கவனிக்கப்பட வேண்டியது.



கதையின் நாயகி : சமூக அக்கறையுடன் கூடிய பரபரப்பு கட்டுரைகளுக்காகஅலைந்து திரியும் பிரபல ஆங்கில நாளிதழான "டைம்ஸ் ஆப் இந்தியா" பத்திரிகையின் இளம் பெண் நிருபராக , கதையின் நாயகியாக .சமந்தா அக்கினேனி , அதாங்க நம்ம சமந்தா பொண்ணு செம சமத்தாக ,சதா சர்வ நேரமும் முகத்தில் கலவரத்துடனும் , உடம்பு முழுக்க தனக்கே உரியகவர்ச்சியுடனும் படத்திற்கும் தான் ஏற்று நடித்திருக்கும் பாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். வாழ்த்துக்கள் சமந்தா!



கதை நாயகர்கள் : சமந்தாவுக்கு உதவும் போலீஸ் அதிகாரியாக, முதல் நாயகர் "மிருகம் "ஆதி பினிசெட்டி , மிரட்டியிருக்கிறார் மிரட்டி.


சமந்தாவிடம் காதலை சொல்லாதகாதலராக, மற்றொரு நாயகராகஅவர் வேலை பார்க்கும் அதே "டைம்ஸ் ஆப் இந்தியா" பத்திரிகையில் சீனியர் க்ரைம் நிருபராக வேலை பார்க்கும் ராகுல் ரவீந்திரனின் நடிப்பும், துடிப்பும் கூட ரசனை.



பிற நட்சத்திரங்கள் : தன் குடும்பம் விபத்தில் பலியாகதானே காரணமான நரேன், எப்பேற்பட்ட வழக்கையும், எப்படியாவது முடித்து வைக்க முயலும் போலீஸ் அதிகாரியாக "ஆடுகளம்" நரேன், மகளை அநியாயமாக விபத்தில்இழந்த பூமிகா சாவ்லா உள்ளிட்ட எல்லோரும் கனமான பாத்திரங்களில் கவனமாக நடித்து அசத்தியுள்ளனர்.



தொழில்நுட்பகலைஞர்கள் : கவின் பாலாவின் வசனவரிகள் , சுரேஷ் ஆறுமுகத்தின் பின் பாதி ஷார்ப் -படத்தொகுப்பு , நிக்கேத் பொம்மி ரெட்டியின் அழகிய கதைக்கு தேவையான லைட்டிங்குடன் கூடிய ஒளிப்பதிவு, பூர்ண சந்திர தேஜஸ்வியின் மிரட்டல் இசை ... உள்ளிட்டவை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கின்றன.



பலம் : இப்பட நாயகி சமந்தாவும் , இப்படத்தின் வெளியீட்டை "பாப்டா புளு ஒசியன் பிலிம் & டெலி விஷன் அக்கடமியின் உரிமை யாளரும் , கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் & டிஸ்டிபியூட்டர்ஸ் நிர்வாகியுமானகோ.தனஞ்செயன் சிறப்பாக செய்து வருவதும் பெரும் பலம்.



பலவீனம் : முன் பாதி கதைக்கு தேவை இல்லாத நீளம் சற்றே பலவீனம்.



இயக்கம் : பவண்குமார் இயக்கத்தில் ., முதல் பாதி கொஞ்சம் இழுவையாக தெரிந்தாலும் ., இரண்டாம் பாதி , கதையிலும்எதிர்பாராத எக்கச்சக்க "யுடர்ன் ( UTURN ) " களுடன் ., க்ரைம் , த்ரில்லர் , ஹாரர் ரசிகர்களை செமயாக கவரும் படி படமாக்கப்பட்டு ரசிகர்களை சீட்டோடு கட்டிப்போட்டு விடுகிறது என்பது பெரிய ப்ளஸ்!



அதே மாதிரி , "அப்பாவை ஒன்னும் பண்ண வேணாமா...." என தங்கள் சாவுக்கு காரணமான தந்தையை ., தன் தாய் மாயா - பூமிகாவின் ஆவியிடம் காப்பாற்ற உருகும் மகள் ஆர்னாவின் ஆவி., மெய்சிலிர்க்க வைத்து விடுகிறது. அதே மாதிரி 13வது மாடியில் இருந்து .... மனைவியும் , மகளும் சாக காரணமாகி விட்டோமே .... என தற்கொலை செய்யும் முடிவோடு விழும் நரேனையும் உயிர் பிழைக்க வைக்கும் ஆவி பூமிகாவும்
இயக்குனரின் திறமைக்கு கட்டியம் கூறுகின்றனர்.



பைனல்" பன்ச் " : மொத்தத்தில் ., க்ரைம் , த்ரில்லர் , ஹாரர் , சஸ்பென்ஸ் ...படங்களை பிடிக்கும்ரசிகர்களை "யுடர்ன் ( UTURN ) ' திரைப்படம் -திரும்ப திரும்ப, தியேட்டருக்கு " யு டர்ன் ( UTURN ) 'அடிக்க வைக்கும்!"

தமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே தொட்டதெல்லாம் வெற்றியாகும். அப்படி தொடர்ந்து வெற்றியை மட்டுமே ருசித்து வரும் சிவகார்த்திகேயன், ஹாட்ர...

தமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே தொட்டதெல்லாம் வெற்றியாகும். அப்படி தொடர்ந்து வெற்றியை மட்டுமே ருசித்து வரும் சிவகார்த்திகேயன், ஹாட்ரிக் கூட்டணியாக பொன்ராமுடன் சீமராஜாவை களத்தில் இறக்கியுள்ளார், இந்த படமும் சிவகார்த்திகேயனின் வெற்றி மகுடத்தில் இணைந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

ராஜா வம்சத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் வழக்கம் போல் வேலை இல்லாமல் சுற்றினாலும் ஊரே மதிக்கின்றது. அவரும் பல நிகழ்வுகளுக்கு சிறப்பு விருந்தினராக செல்கின்றார், அப்போது சமந்தாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகின்றார்.

அதை தொடர்ந்து சமந்தா புலியம்பட்டியை சார்ந்தவர், சிவகார்த்திகேயன் சிங்கம்பட்டியை சார்ந்தவர் இந்த இரண்டு ஊருக்கும் ஒரு மார்க்கெட் தான் பஞ்சாயத்து. அது மட்டுமின்றி சில விவசாய நிலங்களை லால் மிரட்டி பறித்துள்ளார்.

முதலில் மார்கெட்டை அடைய லால்,சிம்ரனும் மற்றும் சிவகார்த்திகேயனும் மோத யாருக்கு மார்க்கெட் என்பதற்காக ஒரு மல்யுத்த போட்டி நடக்கின்றது.

அதில் சிவகார்த்திகேயன் வெற்றிபெற பிறகு தான் தெரிய வருகின்றது சமந்தா லாலின் முதல் மனைவி மகள் என்பது. பிறகு என்ன இவர்கள் காதல் இணைந்ததா? சீமராஜா, லாலின் அதிகாரத்தை அடக்கினாரா? மக்களின் நிலத்தை மீட்டாரா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

சீமராஜாவாக சிவகார்த்திகேயன் தன்னால் எவ்வளவு உழைப்பை கொடுக்க முடியுமோ, அதாவது காமெடி, ஆடல், பாடல் தாண்டி ராஜா வேஷத்திலும் மிரட்டியுள்ளார், ஒரு முழு கமர்ஷியல் ஹீரோவாகவே மாறிவிட்டார், மாஸ் இண்ட்ரோ, பன்ச் வசனம் என ரஜினி, விஜய்க்கு அடுத்த இடத்தை இப்போது பிடிக்க ரெடியாகிவிட்டார், இதில் அரசியலுக்கு போய்டலாம் வா என்று சூரி சிவகார்த்திகேயனை கூப்பிடுவது போல கூட வசனம் உள்ளது, சரி ஏதோ ப்ளானில் இருக்கிறார் SK.

படத்தின் மிகப்பெரும் பலம் எல்லோரும் எதிர்ப்பார்த்த சிவகார்த்திகேயன், சூரி காம்போ தான், ஒரு இடத்தில் கூட நம்மை ஏமாற்றவில்லை, காமெடியில் அசத்துகின்றனர், அதிலும் சிறுத்தையிடம் மாட்டிக்கொண்டு சூரி அடிக்கும் கலாட்டா, இப்போது எல்லாம் படம் பார்க்க தானே லாப்டாப் வச்சுருக்காங்க என கொடுக்கும் கவுண்டர் என எப்போதும் போல் இந்த கூட்டணி பாஸ்மார்க்.

இதை தவிர படத்தில் எந்த ஒரு கதாபாத்திரமும் மனதில் நிற்கவில்லை, சிம்ரனுக்கும் அவருடைய டப்பிங் குரலுக்கும் கொஞ்சம் கூட மேட்ச் ஆகவில்லை, சமந்தா படத்தில் கொடுக்கும் ரியாக்ஸனை விரல் விட்டு எண்ணிவிடலாம், சிறுத்தை வந்தால் கூட நிதானமாக ‘சிறுத்தை வந்துடுச்சுனு’ ரியாக்ஸன் காட்டாமல் நிற்கின்றார்.

லால், நெப்போலியன் என பலரும் ஏமாற்றமே, காமெடியா, கதையா என்ற இடத்தில் பொன்ராம் மிகவும் தடுமாறியுள்ளார், காமெடியை வைத்து கதையை நகர்த்திய முதல் பாதி ஓரளவிற்கு ஓகே என்றாலும், இரண்டாம் பாதி தொடங்கியதுமே ராஜா கதைக்கு சென்று, சிவகார்த்திகேயன் களத்தில் இறங்கியிருந்தால் சூடுப்பிடித்திருக்கும்.

ஆனால், படம் எப்போது முடியும் என்ற மனநிலையில் ராஜா கதை வருகின்றது, சிஜி வேலைகள் உண்மையாகவே சூப்பர், இந்த பட்ஜெட்டில் மிரட்டியுள்ளனர், அப்படியிருந்தும் அந்த காட்சிகள் வந்த இடம் தான் கொஞ்சம் பொறுமையை சோதித்தது.

டி.இமானின் இசையில் பாடல்கள் ஓகே, ஆனால் பின்னணி ஏன் சார் இவ்வளவு ரிப்பீட் டியூன்ஸ், ஒளிப்பதிவு கலக்கல், அதிலும் ராஜா போஷன் சூப்பர்.

க்ளாப்ஸ்

படத்தின் முதல் பாதி.

சிவகார்த்திகேயன், சூரி காம்போ சிரிப்பிற்கு கேரண்டி.

பல்ப்ஸ்

வலுவே இல்லாத திரைக்கதை, அதிலும் இரண்டாம் பாதி பொறுமையை சோதிக்கின்றது.

நெகட்டிவ் கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் கூட அழுத்தமாக இருந்திருக்கலாம், கடைசி வரை எந்த ஒரு இடத்திலும் நமக்கு அவர்களை வில்லனாக பார்க்க முடியவில்லை.

மொத்தத்தில் ராஜா பேமிலி ஆடியன்ஸை டார்கெட் செய்தி திருப்திப்படுத்துகின்றார்.

ரஜினிகாந்த் நடிப்பில் மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் 2.0. இப்படத்தின் பட்ஜெட் சுமார் ரூ 400 கோடி இருக்கும் என கூறப்படுகின்றது....

ரஜினிகாந்த் நடிப்பில் மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் 2.0. இப்படத்தின் பட்ஜெட் சுமார் ரூ 400 கோடி இருக்கும் என கூறப்படுகின்றது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் தேதி பலரும் எதிர்ப்பார்க்க, அதை ஷங்கரே தெரிவித்துள்ளார், 2.0 டீசர் செப்டம்பர் 13ம் தேதி வரவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார், இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதர்வா, நயன்தாரா ஆகியோர் நடித்துள்ள இமைக்கா நொடிகள் படம் சென்ற வாரம் ரிலீஸ் ஆனது. முதல் நாளில் சில சிக்கல்களால் பல காட்சிகள் ரத்தாகி இரவு க...

அதர்வா, நயன்தாரா ஆகியோர் நடித்துள்ள இமைக்கா நொடிகள் படம் சென்ற வாரம் ரிலீஸ் ஆனது. முதல் நாளில் சில சிக்கல்களால் பல காட்சிகள் ரத்தாகி இரவு காட்சிகள் மட்டும் ஓடியது.

நல்ல விமர்சனம் பெற்றதால் இமைக்கா நொடிகள் நல்ல வசூல் ஈட்டிவருகிறது. தற்போது படம் 360 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருவதாக இன்று நடந்த நன்றி தெரிவிக்கும் விழாவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் 7 நாட்களில் 16 கோடி ருபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் மேடையிலேயே அறிவித்துள்ளார்.

செக்கச்சிவந்த வானம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கவிஞா் வைரமுத்து, முன்னாள் முதல்வா் ஜெயலலிதா விரும்பி கேட்ட பாடல் குறித்த...

செக்கச்சிவந்த வானம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கவிஞா் வைரமுத்து, முன்னாள் முதல்வா் ஜெயலலிதா விரும்பி கேட்ட பாடல் குறித்த தகவலை ரசிகா்களுடன் பகிா்ந்து கொண்டா்ா.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் செக்கச்சிவந்த வானம். இப்படத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனா்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா புதன் கிழமை சென்னையில் நடைபெற்றது. விழாவில் இசைப்புயல் ஏ.ஆா்.ரகுமான் பாடல்களை பாடி ரசிகா்களை உற்சாகப்படுத்தினாா். இதனைத் தொடா்ந்து அரவிந்த் சாமி, அருண் விஜய், அதிதி ராவ், ஐஸ்வா்யா ராஜேஷ் உள்ளிட்டோா் படம் குறித்தும், படக் குழு குறித்தும் பேசினா்.

இதனைத் தொடா்ந்து கவிஞா் வைரமுத்து பேசுகையில், மணிரத்னம் இயக்கத்தில் எனது பாடல் வரிகள் ஏ.ஆா்.ரகுமான் இசையமைத்த பாடல்களில் எனக்கு பிடித்தது பம்பாய் படத்தில் இடம் பெற்ற “கண்ணாலனே” என்ற பாடல் தான். இந்த பாடல் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அவா்களால் ஏ.ஆா்.ரகுமான் ஸ்டுடியோவிற்கு வந்து ரசித்து கேட்ட பாடல் என்று கூறினாா்.