Home Top Ad

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தயார் என மத்திய அரசு தெரிவித்ததை அடுத்து, திருத்தப்பட்ட வரைவு திட்டத்த...

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தயார் என மத்திய அரசு தெரிவித்ததை அடுத்து, திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை நாளை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டத்தை, கடந்த 14ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய அரசு, காவிரி அமைப்பின் தலைமையகம் பெங்களூரில் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக, தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரள அரசுகள் பதிலளிக்க, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கு, இன்று மீண்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசின் காவிரி வரைவு திட்டத்தை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.

ஆனால், அணைகளில் உள்ள நீரை பயன்படுத்த, காவிரி அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும் என்ற ஷரத்து ஏற்புடையதல்ல என்று கூறிய அவர், மத்திய அரசின் வரைவு திட்டத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார்.

மேலும், கர்நாடகாவில் தற்போது, புதிய அரசு இன்னும் பொறுப்பேற்கவில்லை என்பதால், வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும், அதன் தலைமையகத்தை பெங்களூருக்குப் பதிலாக டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

மேலும், காவிரி நதிநீர் பங்கீடு அமைப்புக்கு ஓய்வுபெற்ற நீதிபதியை தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கோரியிருந்தது. இந்த கோரிக்கைகளை நிராகரித்த உச்சநீதிமன்றம், காவிரி நதிநீர் பங்கீட்டு அமைப்புக்கான பெயரை மத்திய அரசே முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

அப்போது ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், காவிரி நதிநீர் பங்கீட்டுக்கு குழுவுக்கு, காவிரி மேலாண்மை வாரியம் என பெயரிட ஆட்சேபனை இல்லை என கூறினார்.இதையடுத்து, திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை நாளை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், வாரியத்தின் அனுமதியின்றி காவிரியின் குறுக்கே தமிழகமோ, கர்நாடகமோ அணைக் கட்டக் கூடாது என்றும், நதிநீர் பங்கீட்டில் பிரச்சனை ஏற்பட்டால் மத்திய அரசிடம் முறையிடலாம் என்ற அம்சத்தை ஏற்க முடியாது எனக் கூறிய உச்சநீதிமன்றம், காவிரி அமைப்புக்கு முழு அதிகாரம் வழங்கும் வகையில் வரைவுத் திட்டத்தில் திருத்தம் செய்யவும் உத்தரவிட்டது.

இதையடுத்து, கேரளா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவிரி நீரில் கேரளாவுக்கு 4 சதவீத நீர் மட்டுமே வழங்க உத்தரவிடப்பட்ட நிலையில், காவிரி அமைப்புக்கான செலவில் 15 சதவீதத்தை ஏற்க முடியாது என்றும் வாதிட்டார். இது தொடர்பாகவும் பதிலளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.

குமாரசாமி டிசம்பர் 16, 1969ம் ஆண்டு பிறந்தவர். இவர் தான் இன்று கர்நாடகா அரசியலின் தலைமையை நிர்ணயிக்கும் இடத்தில் உள்ளார். சரி அதை ஏன் நம்...

குமாரசாமி டிசம்பர் 16, 1969ம் ஆண்டு பிறந்தவர். இவர் தான் இன்று கர்நாடகா அரசியலின் தலைமையை நிர்ணயிக்கும் இடத்தில் உள்ளார்.

சரி அதை ஏன் நம் பக்கத்தில் சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. இந்த குமாரசாமி பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

இவர் ஏற்கனவே அனிதா என்பவரை திருமணம் செய்திருந்தார், பிறகு கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து இருந்தனர்.

அந்த பிரிவிற்கு முக்கிய காரணம் பிரபல நடிகை குட்டி ராதிகா தான், ராதிகா இயற்கை படத்தில் ஹீரோயினாக நடித்தவர்.

இவருக்கும் குமாரசாமிக்கும் பல மாதங்களாக காதல் என்று கன்னட மீடியாக்கள் கோஷமிட, ஆம், நாங்கள் காதலித்தோம், தற்போது திருமணம் செய்துக்கொள்ள போகிறோம் என தைரியமான குட்டி ராதிகாவை திருமணம் செய்துக்கொண்டவர்.

காதலிக்கு ஒண்ணுன்னா கத்திய தூக்குற ஆண்களெல்லாம் அவசியம் பார்க்க வேண்டிய படம். நல்லவேளை… காதலர்கள் சேஃப்! ஒரு வீடியோ கேம்க்குள் நாமே உட்கார்...

காதலிக்கு ஒண்ணுன்னா கத்திய தூக்குற ஆண்களெல்லாம் அவசியம் பார்க்க வேண்டிய படம். நல்லவேளை… காதலர்கள் சேஃப்! ஒரு வீடியோ கேம்க்குள் நாமே உட்கார்ந்து கொள்கிற மாதிரி, நமது மூளைக்கு செம வேலை கொடுக்கிறார் அறிமுக இயக்குனர் மு.மாறன். சற்றே குனிந்து நிமிர்ந்தால் கூட, திரையில் யார் யாரை கொன்று விட்டு தப்பினார்கள் என்கிற துரத்தல் கை நழுவக்கூடும். எனவே ஷார்ப்பா லுக்கணும் பாஸ்!

ஹோம் சர்வீஸ் நர்ஸ்சாக பணியாற்றும் மகிமா நம்பியாருக்கும், கால் டாக்ஸி ஓட்டுனர் அருள்நிதிக்கும் லவ். வழக்கமாக ஒரே காரில் பயணிக்கும் மகிமா ஒரு நாள் வேறொரு டாக்சியில் கிளம்ப, அடப்பாவி… அந்த ஓட்டுனன் ஒரு பொறுக்கி. ஸ்பாட்டில் ஓடிவந்து காப்பாற்றும் அஜ்மல், அடப்பாவி… அவரும்தான்! இப்படி சீனுக்கு சீன் திரைக்குள் வரும் அத்தனை பேரும் ஏதோ ஒரு விதத்தில் பொறுக்கிகளாக இருக்க, நடக்கும் கொலைக்கு இவர்தான் காரணம் என துரத்தப்படுகிறார் அருள்நிதி.

கடைசியில் யார் யாரை கொன்றார்கள்? அருள்நிதிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பது எப்படி தெரியவந்தது? இதெல்லாம்தான் க்ளைமாக்ஸ்.

ஒரு ராஜேஷ்குமார் நாவலை ஒரே மூச்சில் படித்தது போல ஒரு நிறைவு ஏற்பட்டாலும், முடிஞ்சுதுடா என்கிற மூச்சிரைப்பும் வராமல் இல்லை. சற்றே அயற்சி ஏற்படுத்துகிற ஓட்டம் என்பதும் மைனஸ்தான்.

அருள்நிதிக்கு ஏற்ற ரோல். மனிதர் ஓடிக் கொண்டே இருக்கிறார். கைக்கு வாகாக அமைகிற சண்டைக் காட்சிகளில் எல்லாம் பொளந்து கட்டுகிறார். சற்றே குறும்பு தோய்ந்த அந்த முகத்திற்கு, இன்னும் கொஞ்சம் காமெடி கலந்த ரோல்களை தேர்ந்தெடுத்தால் வெற்றி நிச்சயம்.

மகிமா… புது மழையில் நனைந்த சாமந்தியாக ஜொலிக்கிறார். அவ்வளவு கவலையிலும் அந்த முகத்தில் தெரியும் லட்சணம், முன்னணி இடத்திற்கு கொண்டு செல்லும். நோ டவுட்மா!

இந்த அஜ்மலை பார்த்துதான் எத்தனை வருஷமாச்சு? பேட்டரி போட்ட பம்பரம் போல துள்ளுகிறார் மனுஷன். சோஷியல் மீடியாவில் துணை தேடும் பெருசுகளை குறி வைத்து பணம் பறிக்கும் சிலரை, அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார்.

இதற்கு முன் சிற்சில படங்களில் நடித்த வித்யாவுக்கு இதில் வில்லி வேஷம். அந்த நல்ல முகத்திற்கு பொருந்தணுமே? ம்ஹூம். அப்புறம் சுஜா, சாயாசிங், லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் விஜய் என்று நீள்கிறது பட்டியல். கொடுத்த டயலாக்கை உணர்ச்சியை குழைத்து படித்துவிட்டு போயிருக்கிறார்கள்.

இதுபோன்ற க்ரைம் த்ரில்லர் படங்களுக்கு எது ரொம்ப முக்கியம்? பின்னணி இசையும் ஒளிப்பதிவும். தன் 100 சதவீத உழைப்பை அள்ளிக் கொட்டியிருக்கிறார்கள் இருவரும். முறையோ சாம் சி.எஸ், அரவிந்த்சிங் ஆகியோருக்கு முழு பாராட்டுகள்.

எடிட்டர் சான் லோகேஷ், உடைந்த முறுக்கை ஒட்ட வைத்தது போல மிக சிரமப்பட்டுதான் இந்த கதையை கோர்த்திருக்கிறார். அதற்காகவும் ஒரு அப்ளாஸ்.

இரவு மிக நீளமாக இருப்பதை போல ஒரு பீலிங்ஸ். அதை மட்டும் தயவு பண்ணி குறைத்திருக்கலாம்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் அரசியல் களத்தில் முக்கிய எதிரிகளாக இருப்பார்கள் என அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். ...

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் அரசியல் களத்தில் முக்கிய எதிரிகளாக இருப்பார்கள் என அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால் ரஜினி இன்னும் அரசியல் கட்சியே துவங்காத நிலையில், இருவரும் ஒருவரை பற்றி ஒருவர் இதுவரை விமர்சனங்கள் எதுவும் முன்வைக்கவில்லை.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் ரஜினியை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். காவிரி பிரச்சனைக்காக தான் நடத்தவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என அழைக்கவே கமல் போன் செய்துள்ளார்.

நேற்று மாலை கமல் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவி யின் செல்லப்பிள்ளை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ தற்போது மிகவும் பிரபலமாகிவருகிறது. அந்தளவு தனது திறமையால் நிகழ...

விஜய் டிவி யின் செல்லப்பிள்ளை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ தற்போது மிகவும் பிரபலமாகிவருகிறது.

அந்தளவு தனது திறமையால் நிகழ்ச்சியையே கலகலப்பூட்டுபவர். திருமணம் செய்து பின்னர் கசந்து போனதால் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டு மீண்டும் சின்னத்திரையில் கலக்கத்தொடங்கி விட்டார் என்று தான் சொல்லவேண்டும்.

தனது உடலழகை மேலும் மெருகேற்றி, புதுப்பொலிவுடன் விஜய் டிவியில் ஷோ ஹோஸ்ட் பண்ணி வருகிறார்.

சமீபத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் திவ்யதர்ஷினியை விஜய் டிவி தொகுப்பாளர் ரியோ தூக்கி இடுப்பில் வைத்து பாடலுக்கு ஆடும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதேவேளை, கோபிநாத் மற்றும் மா.கா.பா.ஆனந்தை பாட்டு பாட சொல்லி, பாட வைத்து அதை வீடியோவாக எடுத்து டிடி, டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். குறித்த காட்சி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

பள்ளி, கல்லூரிகளுக்கு இது கோடை விடுமுறை. அதனாலேயே பலரும் குடும்பம் குடும்பமாகப் பல சுற்றுலாத் தலங்களுக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கும் போய் ...

பள்ளி, கல்லூரிகளுக்கு இது கோடை விடுமுறை. அதனாலேயே பலரும் குடும்பம் குடும்பமாகப் பல சுற்றுலாத் தலங்களுக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கும் போய் வருகிறார்கள். அப்படிப் பலர் விரும்பிப் போகுமிடங்களில் திருப்பதியும் ஒன்று. ஆனாலும், அவசரப்பட்டுப் போய்விடுவார்களேயொழிய சுவாமி தரிசனம் செய்ய 18 மணி நேரம், 24 மணி நேரம் காத்திருக்க வேண்டும். அதற்கான பிரத்யேகக் கூண்டுகளில் அடைப்பட்டுக் கிடக்க வேண்டும். `ஏன்டா சுவாமியைக் கும்பிட வந்தோம்' எனப் பலரும் நம் காதுபட பேசக் கேட்டிருப்போம்.

ஆனால், அந்தச் சிரமம் இனி இல்லை. 'ஆதார் அட்டை', 'வாக்காளர் அடையாள அட்டை' இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு சென்றால் போதும். நீங்கள் சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நேரத்தைக் குறித்துத் தந்துவிடுவார்கள். குறிப்பிட்ட நேரத்தில் 'நாராயணகிரி கார்டன் நுழைவு வாயிலு'க்குச் சென்றால் போதும்... அதிகபட்சம் மூன்று மணி நேரத்தில் பெருமாளை தரிசனம் செய்துவிட்டுத் திரும்பிவிடலாம்.

இந்த இலவச சர்வ தரிசன டோக்கன் முறை கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. திருப்பதி ரயில் நிலையம் அருகிலுள்ள விஷ்ணு நிவாசம், கோவிந்தராஜ சுவாமிசத்திரம், ஸ்ரீனிவாசம் காம்ப்ளக்ஸ், ஆர்.டி.சி பஸ் ஸ்டாண்டு, அலிபிரி ஆகிய இடங்களில் இதற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றன.

நமக்கான  தரிசன நேரம் வரும்வரை, கீழ்த் திருப்பதியில் ஸ்ரீனிவாச மங்காபுரம், அலமேலு மங்காபுரம், கோவிந்தராஜ பெருமாள் கோயில் ஆகிய பகுதிகளுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வரலாம். மேல் திருப்பதியில் பாபநாசம், விஷ்ணுபாதம், ஜபாலி, ஆகாஷ் கங்கா ஆகிய பகுதிகளுக்குச் சென்று திருமலையின் முக்கிய இடங்களைப் பார்த்து வரலாம். அடையாள அட்டையைக் கொண்டு வராதவர்கள் வழக்கம்போல் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். இந்த வழிமுறையைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது.

நாகினி சீரியல் இன்றும் மற்ற தொடர்களுடன் ஒப்பிடும் போது உச்சத்தில் தான் இருக்கிறது. ஹிந்தியிலிருந்து டப்பிங் செய்யப்பட்டு தமிழில் பெரும் வரவ...

நாகினி சீரியல் இன்றும் மற்ற தொடர்களுடன் ஒப்பிடும் போது உச்சத்தில் தான் இருக்கிறது. ஹிந்தியிலிருந்து டப்பிங் செய்யப்பட்டு தமிழில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதில் ஹிந்தியில் 3வது சீசனை நெருங்கிவிட்டது. நாகினி சீரியலில் முக்கிய ரோலில் நடித்தவர் நடிகை அடா கான். சமூகவலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவரின் சமூகவலைதள பக்கத்தில் தற்கொலை மனப்பான்மையில் இருக்கும் படியான பதிவுகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இது பலரையும் அதிர்ச்சியாக்கியது.

அண்மையில் அவர் ஒரு விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது மனம் திறந்து பேசினார். அப்போது அவர் தன் நண்பன் Ankit Gera தன்னை மூன்று முறை ஏமாற்றிவிட்டதாக கூறி அழுதார்.

மேலும் அவரின் பதிவுக்கு காரணம் அவர் தான் என சொல்லப்படுகிறது.