Home Top Ad

பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை காலமானதை தொடர்ந்து அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. ஆனால் அவருக்குள் பல கஷ்டங்கள் இருந்திருப்பது...

ஸ்ரீதேவி இத்தனை கஷ்டங்களா! மனதை உருக்கும் சம்பவங்கள்

பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை காலமானதை தொடர்ந்து அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. ஆனால் அவருக்குள் பல கஷ்டங்கள் இருந்திருப்பது இப்போது தெரியவருகிறது.

சிறு வயது முதலே அவர் சந்தித்த இன்னல்களை என்ன சொல்ல? அவரின் அப்பா தான் சம்பாதித்த பணத்தை மற்றவர்களிடம் கொடுத்து வைத்துள்ளார். பின் அவர் இறந்து போக அந்த பணம் கிடைக்கவில்லை.

அதன்பின் சிலகாலம் கழித்து அவரின் தாய் மூளை பிரச்சனையால் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்தபோது மருத்துவர்கள் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்து இறந்து போனது பெரும் அதிர்ச்சியானது.

அதே நேரத்தில் அவரது அம்மாவும் சில நிறுவனங்கள் மீது பணத்தை முதலீடு செய்துள்ளார். அதுவும் போய்விட்டது. முன்பே அவரது அம்மா மொத்த சொத்தையும் ஸ்ரீதேவியின் பேருக்கே பின்னால் எழுதிவைத்துவிட்டு இறந்துள்ளார்.

அமெரிக்கா சிகிச்சை விசயத்தில் ஸ்ரீதேவி கோர்ட் கேஸ் என பல செலவு செய்துள்ளார். அதே நேரத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட அவரின் தங்கை ஸ்ரீலதா தன் அம்மா புத்திசுவாதினமில்லை என சொத்து கேட்டு ஸ்ரீதேவி மீது வழக்கு தொடர்ந்து பாதியை பிடுங்கிக்கொண்டாராம்.

இது போக அவருக்கு அழகின் மீது மிகுந்த அக்கறையாம். இதற்காக பல அறுவை சிகிச்சைகள். நடிகைகளுக்கான சர்ச்சைகள், பட வாய்ப்பு சிக்கல், போனி கபூரின் கடன் என பல இன்னல்களை அனுபவித்துள்ளார்.

இதனால் சென்னையில் உள்ள சில சொத்துக்களை கூட விற்றுவிட்டாராம். மேலும் தனக்கு கிடைத்த புகழ், அந்தஸ்து, வாய்ப்புகள் தன் மகளுக்கும் கிடைக்க வேண்டும் என கவலையும் கூட.

0 coment�rios: