சமாளிக்க முடியாத கடனால் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்த முதல் பிரபலம்!.. யார் தெரியுமா?

சமாளிக்க முடியாத அளவிற்கு கடன் தொல்லை நெருக்கும்போது மஞ்சள் நோட்டீஸ் கொப்பது(திவால் நோட்டீஸ்) கொடுப்பது வழக்கம். அதாவது என்னால் உங்கள் கடனை...

சமாளிக்க முடியாத அளவிற்கு கடன் தொல்லை நெருக்கும்போது மஞ்சள் நோட்டீஸ் கொப்பது(திவால் நோட்டீஸ்) கொடுப்பது வழக்கம். அதாவது என்னால் உங்கள் கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை என் சொத்துக்களை பிரித்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று இதன் பொருள். அப்படி ஒரு நோட்டீசை கொடுத்த முதல் ஹீரோ டி.ஆர்.மகாலிங்கம்.

மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்தவர் டி.ஆர்.மகாலிங்கம். பாடும் திறமை கொண்ட மகாலிங்கம் நாடகத்தில் நடித்து வந்தார். பின்னர் நந்தகுமார் படத்தில் பாலகிருஷ்ணனாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

1945ம் ஆண்டு மகாலிங்கம் நடித்த ஸ்ரீவள்ளி படம் பெரும் வெற்றி பெறவே பெரிய ஹீரோ ஆனார். அதன் பின்பு இவர் நடித்த நாம் இருவர், ஞானசவுந்தரி, வேதாள உலகம், ஆதித்யன் கனவு, பவளக்கொடி, லைலா மஜ்னு உட்பட பல படங்கள் பெரும் வெற்றி பெற்றது.

நல்ல வசதியுடன் சொகுசாக வாழ்ந்தார். பட வாய்ப்புகள் குறைந்ததும் தன் மகன் பெயரில் சுகுமார் புரொடக்ஷன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி மச்சரேகை படத்தை தயாரித்தார். அது பெரும் தோல்வி அடைந்தது. அதில் இழந்த பணத்தை மீட்க விளையாட்டு பொம்மை படத்தை தயாரித்தார். அதுவும் தோல்வி அடைந்தது. இரண்டு படங்களிலும் பெரும் நஷ்டத்தை சந்தித்த டி.ஆர்.மகாலிங்கம், கடன்காரர்களை சமாளிக்க மஞ்சள் நோட்டீஸ் கொடுத்தார்.

அதன்பின்பு கவியரசர் கண்ணதாசன் டி.ஆர்.மகாலிங்கத்துக்கு உதவுவதற்காக மாலையிட்ட மங்கை படத்தை தயாரித்து அதில் டி.ஆர்.மகாலிங்கத்தை மீண்டும் நடிக்க வைத்தார். அந்தப் படம் வெற்றி பெற்றதும் மேலும் சில படங்களில் நடித்தும், நாடகம் நடத்தியும் தன் கடன்களை அடைத்தார் டி.ஆர்.மகாலிங்கம்.

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog