"கலைமாமணி" "நகைச்சுவை தென்றல்" திண்டுக்கல் ஐ. லியோனியின் "நகைச்சுவை குதிரையில் என் சிந்தனை பயணம்"நூல் வெளியீட்டு விழா! திரைப்பட நடிகரும், பட்டிமன்றநடுவரும், மேடைபேச்சாளருமான திண்டுக்கல் ஐ. லியோனி ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.
1992ஆம் ஆண்டு வத்தலக்குண்டு அருகே உள்ள காளி அம்மன் கோவில் மேடையில் முதன் முதலில் நகைச்சுவை பேச்சாளராக அறிமுகமானார்.பின்னர் 1996 ஆம் ஆண்டு முதல் தொலைக்காட்சிகளிலும், வெளிநாடுகளிலும் சுமார் 5000 க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி இருக்கிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக கலைஞர் தொலைக்காட்சிஇவரை நடுவராக்கி "நல்லா பேசுங்க நல்லதையே பேசுங்க" என்ற பேச்சரங்க நிகழ்ச்சியை 250 வாரங்களாக ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் இவர் பேசிய நகைச்சுவை ததும்பிய கருத்துக்களை தொகுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள "அசசி" பதிப்பகத்தார் புத்தகமாக கொண்டு வந்துள்ளனர். இந்த புத்தகத்திற்கு திமுக. செயல் தலைவரும், சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவருமான மாண்புமிகு மு. க. ஸ்டாலின், பேராசிரியர் சுப. வீரபாண்டியன், வித்தக கவிஞர் பா. விஜய், உணர்ச்சிக்கவிஞர் யுகபாரதி ஆகியோர் அணிந்துரை வழங்கி உள்ளனர்.
லியோனி எழுதிய அந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் தேனாம்பேட்டையில் உள்ள அன்பகம் அரங்கத்தில்திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் புத்தகத்தை வெளியிட திரைப்பட இயக்குநர் சீனுராமசாமி பெற்றுக் கொண்டார். சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன், கவிஞர்கள் பா. விஜய், யுகபாரதி குமரிஆதவன் வாழ்த்தி பேசினார்கள்.
திண்டுக்கல் ஐ. லியோனி தனது ஏற்புரையில், "கங்கா கவுரி படத்துல அருண்குமார், வடிவேல் இருவருக்கும் தந்தை யாக நடித்தேன். ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். பின்னர் நான் பட்டிமன்றம், மேடைபேச்சு, தொலைக்காட்சி ஆகியவைகளில் பிஸியாக இருந்ததால் சினிமாவில் கவனம் செலுத்த முடியவில்லை.
ரஜினி நடிச்ச" சிவாஜி " படத்துல பட்டிமன்ற பேச்சாளர் ராஜா நடிச்ச கேரக்டர் ல நடிக்க என்னைதான் முதல்ல கேட்டாங்க. அப்ப நேரம் இல்ல. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேல் என்னிடம், நாம மறுபடியும் ஒருபடத்தில் சேர்ந்து நடிக்கலாம் என்று கூறினார். அப்புறம் டைரக்டர் சீனுராமசாமியும் அவரோட படத்துல நடிக்க கேட்டு இருக்கிறார். மறுபடியும் நான் சினிமாவுல நடிக்க அடுத்த ரவுண்டுக்கு தயாராயிட்டேன்.
தொடர்ந்து சினிமா, அரசியல்னு ட்ராவல் பண்ண ரெடியாயிட்டேன். " இவ்வாறு பேசினார்.

0 coment�rios: