Home Top Ad

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மெரினா கடற்கரையில் இன்று காலை கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்தினார். வயது மூப்ப...

மறைந்த கலைஞர் எழுதிவைத்துச் சென்ற 3 உயில்கள்: வைரமுத்து மேல் கொந்தளிப்பில் ஸ்டாலின் குடும்பம்!

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மெரினா கடற்கரையில் இன்று காலை கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்தினார்.

வயது மூப்பின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதியன்று மாலை அவர் அனுமதிக்கப்பட்டிருந்த காவேரி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இவரின் மரணம் அவரின் குடும்பத்தார் மற்றும் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

அப்போது அங்கு வந்திருந்த கவிஞர் வைரமுத்து கருணாநிதியின் உடலுக்கு அருகில் நின்று கதறி அழுதபடி அஞ்சலி செலுத்தினார். அவரின் தாங்கமுடியாத துக்கத்தை அழுகையின் மூலம் வெளிப்படுத்தினார். இந்தக் காட்சியைப் பார்த்த அனைவரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இதற்கு முன்னதாக கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு கோபாலபுரம் வீட்டில் இருந்தபோதும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் வைரமுத்து அடிக்கடி வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகில் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு இன்று காலையிலேயே தன் மகன்களுடன் வந்த வைரமுத்து, கருணாநிதியின் சமாதியில் மலர் தூவி பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சூரியன் இல்லாமல் ஒரு விடியல் வருமா. அதேபோன்று கருணாநிதி இல்லாத தமிழகத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. என் தந்தைக்குச் செய்யவேண்டிய இறுதி மரியாதையை செய்யவே நான் இங்கு வந்தேன். தமிழக மக்கள் நன்றியுள்ளவர்கள் என நான் நம்புகிறேன்.

கருணாநிதியின் லட்சியங்கள், கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வது நம் கடமை. அவர் இலக்கியங்கள், சொற்பொழிவு, செயல் ஆகியவற்றில் என்றும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார். அவரின் போர் குணத்தை இந்த கால இளைஞர் கற்றுக்கொள்ள வேண்டும்.

கருணாநிதியை எதிரி என நினைத்தவர்கள் கூட அவரின் போர்குணத்தைக் கண்டு வியந்துள்ளனர். கருணாநிதி நம் சமூகத்துக்கு எழுதி வைத்துச் சென்றுள்ள மிகப்பெரிய உயில் சுயமரியாதை, தமிழ், இன அடையாளம் ஆகியவை. இவற்றைக் கட்டிக்காப்பாற்ற வேண்டியது தமிழர்களின் பெரும் கடமை எனக் கூறினார்.


மேலும், இன்று அதிகாலை முதல் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்துக்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

இது ஒரு புறமிருக்க, வைரமுத்து கலைஞர் சமாதிக்கு பாலூற்றி வழிபட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது, பொதுவாக ஒருவர் இறந்து விட்டால் மூன்றாம் நாள் காலையில் இறந்தவரின் குடும்பத்தினர் மட்டுமே சமாதியில் பாலூற்றி வழிபடுவார்கள்.

ஆனால் ஸ்டாலின், அழகிரி என கருணாநிதியின் மகன்களை கலந்தாலோசிக்காமல் வைரமுத்து பாலூற்றி வணங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்காக கவிஞர் வைரமுத்து மேல் கருணாநிதி குடும்பத்தினர் அதிருப்தியிலும், கோபத்திலும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 coment�rios: