திருமணம் நடப்பதில் சிக்கல்: கிராமத்தின் பெயரை மாற்றிய மக்கள்

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருமணம் நடைபெறாததை கண்டு, அந்த கிராமத்தின் பெயரை அங்குள்ள மக்கள் ம...

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருமணம் நடைபெறாததை கண்டு, அந்த கிராமத்தின் பெயரை அங்குள்ள மக்கள் மாற்றியுள்ள சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மெர் மாவட்டத்தின் மியான் கா பாரா கிராமத்தின் பெயர், மகேஷ் நகர் என மாற்றப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் வீடு எனப் பொருள்படும் மியான் கா பாரா கிராமத்தில் உள்ள 2000 குடும்பத்தில், வெகு சிலரே இஸ்லாமியர்கள்.

ஆனால், இந்தப் பெயரைப் பார்த்ததுமே இங்குள்ளவர்களைத் திருமணம் செய்ய யாருமே முன்வருவதில்லை.


இதனால் கடும் அதிருப்தியடைந்த இப்பகுதி மக்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை முன்வைத்தனர். இதனையடுத்து தற்போது இந்த கிராமத்திற்கு மகேஷ் நகர் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

ஆனால், ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் வரவிருப்பதால் மக்களை பிளவுப்படுத்தும் நோக்கில் அங்கு ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி செயல்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அந்த மாநிலத்தில் இஸ்லாமியப் பெயர்களைப்போல உள்ள கிராமங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுவருகின்றன. அந்த வகையில், ஜூஞ்ஹூனா மாவட்டத்தின் இஸ்மாயில்பூர் கிராமம் தற்போது, பிச்சான்வா குர்த் என மாற்றப்பட்டது.

அத்துடன், ஜலோர் மாவட்டத்தின் நார்பாரா என்ற கிராமத்தின் பெயர், நார்புரா என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் நாடு முழுவதும் உள்ள 27 கிராமங்களின் பெயர்களை மாற்ற மத்திய உள்விவகார அமைச்சகம் பரிசீலித்துவருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் பல...

0 comments

Blog Archive