Home Top Ad

 சர்க்கரை நோயாளிகள் பிரியாணி சாப்பிடலாமா அல்லது சாப்பிட்டால் என்னவாகும் என்பது குறித்து இங்கு காண்போம். அனைத்து தரப்பு அசைவ உணவு பிரியர்க...

சர்க்கரை நோயாளிகள் பிரியாணி சாப்பிடலாமா?

 சர்க்கரை நோயாளிகள் பிரியாணி சாப்பிடலாமா அல்லது சாப்பிட்டால் என்னவாகும் என்பது குறித்து இங்கு காண்போம்.

அனைத்து தரப்பு அசைவ உணவு பிரியர்களுக்கும் பிரதானமான உணவு என்றால் அது பிரியாணி தான். பிரியாணியில் சிக்கன், மட்டன், இறால், பீஃப், காடை, மீன், முட்டை என பல வகைகள் உள்ளன.

இவற்றில் பெரும்பாலானோர்களின் முதல் தேர்வு சிக்கன் பிரியாணி தான். ஏனெனில், இதன் சுவை மற்றும் குறைவான விலையும் தான் இதற்கு காரணம்.
சிக்கன் பிரியாணி

ஆனால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்ததா என்றால் சரி என்பது தான் பதிலாகும். சிக்கன் பிரியாணி பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.

கலோரிகள் 739.46 அளவும், புரதசத்து 28.89 கிராமும், சோடியம் 1190.58 மில்லி கிராம், பொட்டாசியம் 507.99 மில்லி கிராமும், இரும்புச்சத்து 2.58 மில்லி கிராமும், கால்சியம் 44.37 மில்லி கிராமும், ஜின்க் 2.75 மில்லி கிராமும், நிறையுற்ற கொழுப்புகள் 5.95 கிராமும், கொழுப்புகள் 32.64 கிராமும் சிக்கன் பிரியாணியில் சத்துகள் நிறைந்துள்ளன.

சர்க்கரை நோயாளிகள் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதில் மிகுந்த கவனம் கொள்வதும் அவசியம். முதலில் அந்த பிரியாணி நாட்டுக்கோழி கொண்டு செய்யப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அத்துடன் அது நன்கு வேக வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த பிரியாணியை அளவாக தான் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டும். சிக்கனில் உள்ள செலினியம் உடலுக்கு நன்மைதான். எனினும் அளவாகவே இந்த பிரியாணியை சாப்பிட வேண்டும்.

எண்ணெய்யை குறைந்த அளவு உபயோகித்து இதனை சமைத்து சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. கொலெஸ்ட்ரால் குறைவான எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

இந்த பிரியாணியை பழுப்பு பாஸ்மதி அரிசியைக் கொண்டே தயார் செய்ய வேண்டும். இதுதான் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்ததாக இருக்கும். பிரியாணி சாப்பிட்டதும் ஒரு மூலிகை டீ குடிக்கலாம்.
மட்டன் பிரியாணி

சிக்கனை விட மட்டன் பிரியாணி இன்னும் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்ததாகும். ஏனெனில் இதில் வைட்டமின் பி12, ரோபோபிளவின், பாஸ்பரஸ், ஜின்க், இரும்புச்சத்து போன்றவை உள்ளன.

எனவே, இதனை இரண்டு வாரத்திற்கு ஒருமுறை குறைந்த அளவு சாப்பிடுவது உடலுக்கு நல்லது. எனினும், பதப்படுத்தப்பட்ட இறைச்சியை இதற்கு பயன்படுத்த வேண்டும். மேலும் செரிமானம் ஆகக்கூடிய மசாலா பொருட்களையும் இதில் பயன்படுத்த வேண்டும். அத்துடன் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக் கொள்வது நல்லது.

0 coment�rios: