Home Top Ad

காதலை சொல்லும் எத்தனையோ படங்கள் வந்து போகின்றன. ஆனால் அதில் சில படங்கள் தான் மக்கள் மனதில் இடம் பெறுகின்றன. ரசிகர்களை ஈர்த்து விடுகின்றன. அ...

96 திரை விமர்சனம் - அனைவரையும் மீண்டும் காதலை தேடவைக்கும். உங்களுக்கு எப்படியோ....


காதலை சொல்லும் எத்தனையோ படங்கள் வந்து போகின்றன. ஆனால் அதில் சில படங்கள் தான் மக்கள் மனதில் இடம் பெறுகின்றன. ரசிகர்களை ஈர்த்து விடுகின்றன. அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் 96 படம் வெளிவந்துள்ளது. இப்படம் சொல்லும் காதல் ஆழம் தானா என 96க்குள் போய் பார்ப்போம்.

கதைக்களம்

படத்தில் ஹீரோவாக வரும் விஜய் சேதுபதி ஒரு சாதாரண குடும்ப பின்னணி கொண்டவர். ஹீரோயின் திரிஷா. இருவரும் பள்ளிக்கூடத்தில் ஒன்றாக படித்தவர்கள். இவர்களின் தோழர்களாக ஆடுகளம் முருகதாஸும், தேவதர்ஷினியும். எப்போதும் கூட்டணியாக தான் இருப்பார்கள் இவர்கள்.

விஜய் சேதுபதி, திரிஷா ஆகிய இவர்களுக்குள் எப்போதும் இணை பிரியாத பாசம். கடைசியில் அது காதலாக துளிர்விடுகிறது. சொல்லத்துடிக்கும் நேரத்தில் சொல்ல முடியாமல் ஒரு நிகழ்வு அரங்கேறுகிறது.

ஒரு கட்டத்தில் இருவரும் சந்திக்க முற்படுகையில் என்னென்னவோ நடந்து போகிறது. பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? காதலை சொன்னார்களா? பிரிவின் காரணம் என்ன என்பதை பின்னோக்கி நம்மை அழைத்துச்சென்று சொல்வதே இந்த 96.

படத்தை பற்றிய அலசல்

விஜய் சேதுபதி தான் நடிப்பில் எப்போதும் மாஸ் காட்டுவாரே. கதைகளையும் நன்றாக தேர்ந்தேடுப்பாரே என சொல்வோருக்கு இப்படம் ஒன் மோர் கிரெடிட் என சொல்லலாம். இப்படத்தில் அவர் ஒரு புகைப்படக்கலைஞர். அதிலும் நுட்பத்துடன் கலையையும் ரசிக்கும் வகையில் அவர் செய்கையுடன், சொல்லும் டையலாக்கும் நம்மை அந்த கலைஞராக்கிவிடும்.

திரிஷாவுக்கு காதல் சப்ஜெக்ட் சோ க்யூட் என சொன்னால் அதுவும் இங்கேயும் சாத்தியமே. விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார். வழக்கம் போல மரத்தை சுற்றி டூயட் ஆடாமல் இம்முறை ஒரு புதிய முயற்சி. மீண்டும் அவர் தனக்கான இடத்தை ஸ்கோர் செய்துவிட்டார்.

ஹீரோவின் இளம் பருவ தோற்றமாக பிரபல நடிகர் எம்.எஸ். பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் நடித்துள்ளார். இவருக்கான காட்சிகள் போதுமானது என்றாலும் மனதிற்கு நிறைவானதாக நடித்திருக்கிறார். அடுத்தடுத்து வாய்ப்புகள் வரும் ஃப்ரோ.

அதே போல திரிஷாவாக கௌரி என்ற பெண் நடித்துள்ளார். இவரை இப்போது தான் பார்க்கிறோம் என்றாலும் அனுபவம் வாய்ந்தவர் போல நடித்திருக்கிறார். இவர்களின் வெகுளியான அன்பும், காதலும் நம்மை அந்த வருடத்திற்கே அழைத்து சென்றுவிடும். மீண்டும் ஸ்கூல் யூனிஃபார்ம் போட சொல்லும்.

இவர்களின் நட்பு வட்டாரமாக வரும் ஆடுகளம் முருகதாஸும், தேவ தர்ஷினியும் படத்திற்கு போதுமான காமெடி தருகிறார்கள். அதே வேளையில் விஜய் சேதுபதியின் ரியாக்‌ஷன் கூட சில இடங்களில் நம்மை சிரிக்க வைத்து விடுகிறது. மீண்டும் பிரபல நடிகர் ஜனகராஜை திரையில் பார்த்தது பலருக்கும் மகிழ்ச்சி. ஆனால் வயதாகிவிட்டதல்லவா. அந்த இளமையான குரல் கொஞ்சம் தளர்ந்து விட்டது வருத்தம் தான்.

படத்தின் இயக்குனர் பிரேம் குமார் சிம்பிளான கதையாக இருந்தாலும் மிகவும் அழகாக காண்பித்திருக்கிறார். காதலின் இயற்கை கதையோடு ஆழமாக பயணமாகிறது. ஒரு வசனத்தை மனப்பாடம் செய்து பேசலாம். ஆனால் கடந்த காலத்தை அதிலும் குறிப்பிட்ட அந்த வருடங்களை நம் உணர்வுகளால் கொண்டு வருவது சாத்தியம் என சொல்லியிருக்கிறீர்கள். சலாம் சார்.

ஒளிப்பதிவு சரியான நகர்வு. திட்டமிட்டு காட்சிகளை நகர்த்தி நம்மையும் படத்துடன் பயணிக்க வைத்திருக்கிறார். இசைக்கு கோவிந்த மேனன். அந்த ஒரே ஒரு Lead போதும் சார். இன்னும் பலமுறை கேட்க வேண்டும் போலிருக்கிறது.

சின்மயி குரல் சமந்தாவுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை மாற்றி திரிஷாவுக்கும் பொருந்தும் என காண்பித்து விட்டார். கார்த்திக் நேதா, உமா தேவியின் பாடல் வரிகளில் பாடகர் பிரதீப், சின்மயி பாடிய பாடல்கள் இனிமை.

கிளாப்ஸ்

விஜய் சேதுபதி, திரிஷாவின் ரியாக்‌ஷன் ஃபீல் குட் ஃபிளாஷ் பேக் மெம்மரிஸ்.

இயக்குனர் கதை சொன்ன விதம், காட்சிகளை கோர்த்தது பொருத்தம்.

பாடல்களும், பின்னணியும் இசையும் நம்மை உணர்ச்சி வசமாக்குவது உறுதி.

பல்ப்ஸ்

படம் முழுக்க ஹீரோ ஹீரோயினை கொஞ்சம் வேறு காஸ்ட்டுயூமிலும் காட்டியிருக்கலாமே.

மொத்ததில் 96 அனைவரையும் மீண்டும் காதலை தேடவைக்கும். உங்களுக்கு எப்படியோ....

0 coment�rios: